Trending

Wednesday 12 October 2016

கொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி

குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் காலகாலமாக வாழ்ந்துவரும் கொங்க நாவிதர் பற்றி விரிவாக காண்போம். நாவிதர் என்போர் சவரத் தொழில் செய்வோர் என்ற பிம்பம்தான் மனதில் உள்ளது. ஆனால் கொங்கு சமுதாயத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாழ்வில் நாவிதர்களுக்கு தனிப்பெரும் சிறப்பும், பொறுப்பும் உள்ளது.

பெயர்காரணம்: கவுண்டர் மகன்கள் தனிவம்சமாக உருவானதாலும், குடிக்கே மகன் என்பதாலும் குடிமகன் என்று கூறுவர் (இது கொங்கதேச சிறப்புப் பெயர்). சக்கரை என்பது அணுக்கமானவன், தளபதி என்ற அர்த்தம் தரும்; கவுண்டர்களுக்கு துணைக்குத் துணையாக இருப்பதோடு, பிரியமுடன் கத்தி எடுத்து சவரம் செய்வதால் சக்கரக்கத்தி (இது கொங்கதேச சிறப்புப் பெயர்). பழையகோட்டை பட்டக்காரர்களுக்கும் சக்கரை (சிறந்த தளபதி என்ற பொருளில்) என்று அடைமொழி உள்ளது ஒப்பு நோக்கத்தக்கது. மங்கள ரிஷியின் வம்சமாக உருவாகி வந்தவர்கள் என்ற நோக்கிலும், தீட்டு பாதிக்காதவர்கள்* என்பதால் மங்களன் என்று கூறுவர். மும்மூர்த்திகளின் நெற்றியில் இருந்து தோன்றியவர்கள் என்ற கூற்றும் உண்டு. உலகில் சவர/மருத்துவ தொழிலுக்கு மக்கள் தேவை என்று சிவபெருமான் தந்து தொப்புள் (நாபியில்) இருந்து நாகங்கள் தலைவனான வாசுகியை அழைத்து உருவாக்கினாராம். சிவபெருமான் நாபியில் இருந்து தோன்றியதால் நாபிதர்-நாவிதர் என்றாகினர். சிலர் இறைவனின் நாசியில் இருந்து பிறந்ததால் நாசுவன் என்றும் கூறுவர். மருத்துவம் பார்ப்பதால் மருத்துவன் என்றும் மருத்துவத்துக்கு பண்டுதம் பார்த்தல் (பண்டிதம்) என்ற வட்டார வழக்கின்படி பண்டிதன் என்றும்  கூறுவர். மருத்துவ சாஸ்திரங்களில் பண்டிதர்களாக இருப்பதாலும் பண்டிதன் என்ற பேர் நிலைபெற்றிருக்கலாம்.

கொங்கதேசத்தைப் பொறுத்தவரை நாவிதர்களில் முக்கியமான மூன்று பிரிவினர்கள் உள்ளனர், கொங்க நாவிதர், வேட்டுவ நாவிதர் மற்றும் பள்ளி நாவிதர். மற்ற பிரிவினருக்கு இல்லாத சிறப்பு கொங்க நாவிதர்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வாரிசுகளால் பிரிந்து உருவாக்கப்பட்ட சாதியாவர். கொங்கு குடியானவர்கள் குடிக்கே மகனாக பாவிக்கப்படுபவர்கள். இதன் மூலத்தை அறிய வாலிபுல்லா கவுண்டர் வரலாற்றை அறிய வேண்டும்.

வாலிபுல்லாகவுண்டர் கதை நாவிதர்தம் குருக்கள் ஏட்டில் இருப்பதாக செய்தி.

முற்காலத்தில் பெருங்குடி கூட்ட கவுண்டராகிய வாலிபுல்லா கவுண்டருக்கு நாவிதன் சவரம் செய்துகொண்டிருக்கும்போது அவ்வழியே சென்ற ஒரு வேட்டுவரைக் கண்டதும் நாவிதன் வணக்கம் சொல்லவே 'வாப்பா' என்று பதில் மரியாதைக்கு சொல்லிவிட்டு சென்றுவிட்டார் வேட்டுவர். வாப்பா என்றதை பிழையாக புரிந்துகொண்ட நாவிதர் வாலிபுல்லா கவுண்டர் சவரத்தை பாதியில் விட்டு வேட்டுவர் பின்னாலே அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்ற வேட்டுவர் நாவிதனை திட்டி அனுப்பிவிட, அவன் வருவதற்குள் கோபப்பட்ட கவுண்டர் தனது மகனையே தனக்கு சவரம் செய்யச் சொல்லிவிட்டார். வந்து பார்த்த நாவிதனிடம் இனி எங்களுக்கு நீ வேண்டாம் என்று விரட்டிவிட்டார். பஞ்சாயத்து கூடியது. வாலிபுல்லா கவுண்டர் இருபத்திநான்கு நாட்டிலிருந்தும் கவுண்டர்கள் பிரதிநிதிகளை வரச் செய்தார்.  எங்கள் சமுதாயத்துக்கு இனி இந்த நாவிதன் வேண்டாம், எங்கள் மக்களையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூற, அப்படியானால் உன் மகனையே எனக்கும் சவரம் செய்யச் சொல் என்று வேட்டுவர் கேலிபேச, "என் வீட்டு நாய்கூட உன் வீட்டில் உங்காது, என் மகன் உனக்கு சவரம் செய்வதா?" என்று கூற, பேச்சு முற்றி "என் படையலை உமது நாய் தின்றுவிட்டால் உன் மகனை எனக்கு சவரம் செய்ய ஒப்புக்கொள்கிறீரா?" என்று கேட்கவே கவுண்டரும் சம்மதிக்கிறார். படையல் போட்டு வைக்க, கவுண்டர் விநாயகரையும், குலதெய்வத்தையும் வேண்டி நாயை அவிழ்த்துவிட அது எல்லா இலையையும் முகர்ந்து பார்த்துவிட்டு கடைசி இலையில் சிறுநீர் கழித்துச் சென்றுவிட்டது. இனி கொங்கு மொத்த சமுதாயத்துக்கும் வாலிபுல்லா கவுண்டரின் இரு வாரிசுகள் மட்டும் போதாது எனவே, இந்த பணிக்கு முன்வந்த பல்வேறு ஊரைச் சேர்ந்தவர்களையும் கொங்கு சமுதாயத்துக்கு குடிமகன்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு பெண் கொடுக்க கொங்கு செட்டியார் முன்வந்தனர். அதாவது அரச வம்ச ஆணும், வைசிய வம்ச பெண்ணும் சேர்ந்து உருவான குடி. அவர்கள் வம்சாவழி கொங்கநாவிதர் என்று அறியப்படுகிறார்கள். இன்றளவும் கொங்க நாவிதர்கள் வேட்டுவர் மற்றும் வேட்டுவ நாவிதர் வீட்டில் அன்னம் தண்ணி புழங்குவதில்லை.

கொங்க நாவிதர்கள் தங்கள் சாதி உட்பிரிவுகளை கொங்கதேசத்தின் நாட்டுக் கணக்குகளை வைத்து குறிப்பிடுகிறார்கள். பூந்துறை நாடு, காங்கய நாடு போன்று. மேலும் அவர்களுக்குள் கவுண்டர்களைப் போல கூட்டப் பிரிவும் இருக்கிறது.

இதனால்தான் கொங்கு நாவிதர்கள் கவுண்டர்களுக்கு மகன் முறைமையாவர். அவர்கள் பெயர்களும் முற்காலங்களில் 'பையன்' என்ற அடைமொழியோடு இருப்பதை காணலாம்.  ஐந்து வயது கவுண்டர் வீட்டு சிறுவன் என்றாலும், ஐம்பது வயது நாவிதருக்கு அந்த கவுண்ட சிறுவன் தகப்பனே ஆவான். அதேபோல, கொங்கு செட்டியார் வீடு கொங்க நாவிதர்களுக்கு அப்புச்சி வீட்டு முறைமையாவர். கொங்க நாவிதர் வீட்டு கல்யாணங்களுக்கு கவுண்டர் மற்றும் கொங்க செட்டியார் வீட்டு சீதனங்கள் சென்றுள்ளது. இன்றும் கவுண்டர் மற்றும் செட்டியார்கள் தவிர மற்ற சாதியினருக்கு கொங்க நாவிதர்கள் சவரம் செய்வதில்லை. சலூன்கடை வைப்பதுமில்லை. இதை பெருமையாக கருதும் நாவிதப்பெருமக்கள் நம் சமுதாய சொத்துக்களாவர்.

சவரம் செய்தல், மருத்துவம் பார்த்தல், அனைத்து கொங்கு குடும்ப சீர், சடங்குகள் செய்தல், தூது/தகவல் செல்லல் போன்றவை கொங்க நாவிதரின் தலையாய கடமைகளாகும்.

மகன் என்ற உரிமை இருப்பதால்தான் நாவிதர் எப்போது வீட்டுக்கு வந்தாலும் தவறாது உணவிட்டு உணவு கொடுத்தனுப்பி வைப்பது. கவுண்டர்கள் வீட்டுக் கல்யாணத்தின்போது, கவுண்டரின் பிரதிநிதியாக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கவும், தூது செல்லவும் நம்பகமானவராக இருப்பவர் நாவிதனாவார். 

நாவிதர்கள் மருத்துவத்தில் நிபுணர்கள். அக்காலம் தொட்டு இக்காலம் வரையில் இதைக் கிராமங்களில் பார்க்கலாம். நாவிதர்கள் வைத்தியர்களாகவும், நாவிதப் பெண்கள் மருத்துவச்சிகளாக பிள்ளைப்பேறு பார்ப்பவர்களாகவும் விளங்கியுள்ளனர். இதனாலேயே நாவிதர்களுக்கு மருத்துவன் என்ற பேரும் உண்டு. ஒரு நாவிதப் பெண்ணின் மருத்துவ நிபுணத்துவம் கொங்குமண்டல சதகத்தில் பதிவாகியுள்ளது.

92.குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொருநல் 
லிறைமக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர் 
துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றிவளர் 
மறைவழி தேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே.

(க-ரை) நிறைந்த வெள்ளமுற்ற ஆற்றினை அடுத்த ஸ்காந்தபுரத்தை (தாராபுரம்) ஆளும் வேந்தன், பெண் கருப்ப வேதனையுற்றுக் கருவுயிர்த்தற்கியலாது துன்புறுவதைக் கண்டு வயற்றைப் பீறிக் குழந்தையை 
எடுத்துச் சந்தோஷமுறச் செய்த மருத்துவி பிறந்து வளர்ந்த நறையூர் நாடு 
சூழ்ந்தது கொங்குமண்டலம் என்பதாம்.

வரலாறு :- நீர்ச் செழிப்புற்ற நதியை அடுத்துள்ள ஸ்காந்தபுரத்திலிருந்து இக்கொங்கு நாட்டை ஆண்டுவந்த வேந்தனது செல்வ மகள் கருப்பமுற்றாள். சூன்முதிர்ந்து, மகப்பெறு வயற்றுவலி கண்டது. அருமைவாய்ந்த பல மருத்துவச்சிகள் வந்தார்கள். தலை திரும்பிவிட்டது என்றார்கள். பொறுக்க முடியாது செல்வி வருந்துவதை அரசனும் மற்றையோரும் தெரிந்து மனமயர்ந்தார்கள். பிண்டத்துக்குத் தலை சற்றுப்பெரிதாக இருக்கிறது, சாதாரணமாக வெளிவராது, குழந்தையுந் தாயாரும் இவ்வாபத்தினின்று மீள்வது அரிது என்று சிலர் சொன்னார்கள். சிசுவை மாய்த்து எடுத்துச் செல்வியைச் தப்புவிக்கிலாமென்று சிலர் சொன்னார்கள். 

கற்பத்துள்ள குழந்தையையும் கற்பிணியான என் மகளாரையும் பிழைக்கச்செய்வார் உளரேல் அவர்கள் விரும்பியவாறு பரிசளிப்பேன் என்று அரசன் கூறினான். ஒருவரும் முன்வரவில்லை; என்றாலும் நறையூர் நாட்டினளான ஒரு மங்கலை (கொங்கு நாவிதச்சி) ஆயுள் வேதத்திற் கைதேர்ந்தவள். 

அதிலும் பிரசவ நூலில் மிகுந்த அநுபவமுள்ளவள் முன் வந்தாள். வயற்றிற்பிண்டமிருக்க ஒருத்தி மரணமுற்றால் வயற்றைப் பீறிக் குழந்தையை எடுத்துத்தான் இடுகாட்டில் (கனனம்) அல்லது சுடுகாட்டில் (தகனம்) இடுதல் மரபு. ஆதலின் கடைசிவரையில் இப்பிரசவத்தைப் பாருங்கள் ஒருவராலும் முடியாது என்ற தீர்மானத்தில் நான் பார்க்கிறேன். அதாவது அடிவயிற்றைப் பீறி வழி கண்டு சிசுவை எடுத்து ஈருயிர்களையும் வாழ்விக்கிறேன், என்றனள். கடைசியில் சம்மதித்தார்கள். இம்மருத்துவி பிரசவ வேதனைப்படும் ராஜகுமாரியைப் பக்குவமாகக் கிடத்திச், சொற்ப நேரத்தில் அடிவயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்துக்கொடுத்து பீறியவாயை மூடித்தன்னிடத்துள்ள மருந்தைத் தடவினாள். மற்று ஏற்ற சிகிச்சை செய்ய அரசமங்கை நினைவுற்றாள் அரசன் மகிழ்ந்து காங்கேய நாட்டில் "மங்களப்பட்டி" என்னும் ஊரை இறையிலியாகக் கொடுத்தான் என்பர்.

முற்காலத்து சாஸ்திர வித்தையிற்றேர்ந்த மருத்துவ மாதர்களிருந்தார்களென்பதை இதனாலறியக் கிடக்கின்றனது. இப்போதைய மேலைத்தேச மருத்துவ சாஸ்திரிகளும் இவ்விதம் வயிற்றைப் பீறி எடுத்துச் சிசுவையும் கருவுற்றாளையுங் காப்பாற்றுகிறார்கள்.

இந்த மருத்துவச்சியை நறையூர் நாட்டினள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாராபுரமுஞ் சில ஊர்களுஞ் சூழ்ந்த பாகத்தை நறையூர் நாடு என்று வழங்கி வந்திருக்கிறார்கள்.

போரின்போது மூக்கறுக்கப்பட்டவர்களின் மூக்கை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ததன் மூலம் இதைக் கண்டு பிடித்தது நாவித சமூகமே என்று கூற்றுண்டு.

மருத்துவம் என்று மட்டுமின்றி, வாரமொருமுறை வந்து கவுண்டர்கள் உடற்பரிசோதனை செய்து பேதி தருவது, எண்ணெய் குளியலுக்கு எண்ணெய் தேய்த்து விடுவது, சுளுக்கு மற்றும் நரம்பு பிடிப்புகளை தளர்த்துவது, எனிமா (புளிக்கரைசல்) தருவது என்று கவுண்டர்களின் நலம்பேணுபவர்களாக இருந்துள்ளனர். 

மருத்துவர்கள் மட்டுமின்றி, குடிக்கே மகன் என்ற உரிமையோடு உள்ளதால் நாவிதர்களுக்கு கவுண்டர்களை நிர்வாணமகப் பார்க்க அனுமதிக்கபடுவார்கள்; நாவிதப்பெண்கள் கவுண்டர் இன பெண்களின் பிள்ளைப்பேறு மருத்துவம் போன்ற காலங்களில் நிர்வாணமாகப் பார்ப்பது தவறெனக்கொள்ளப் படுவதில்லை.

கவுண்டர்கள் கல்யாணத்தில் அருமைகாரருக்கு உதவியாகவும், அனைத்து சீர்களையும் செய்துவைப்பதிலும் நாவிதரின் பங்கு முக்கியமானது. நாவிதன் குடிக்கு மகன் என்ற உரிமை இருப்பதாலும் மருத்துவத்தில் தேர்ந்தவர் என்பதாலும் கல்யாணத்தின் போது பிரம்மச்சரியம் கழிக்கும் சீர் செய்யப்படுகிறது. நாவிதரால் மணமகன் உடல்ரோமங்கள் மழிக்கப்படும்ப்போதே மணமகன் கல்யாணத்துக்கு ஏற்றவர் தானா என்பதை பெண்வீட்டு நாவிதர் பார்த்து உறுதிசெய்தல் கல்யாணத்துக்கு அடிப்படையான விஷயமாகும். டீஜன்ட் காரணமாக மணமகன்கள் இதைத் தவிர்க்க செய்து இப்போது சாங்கியத்துக்காக சிறிதளவு கையிலும் காலிலும் ரோமநீக்கம் செய்யப்படுகிறது. கவுண்டர்கள் கல்யாணத்தில் கம்பர் எழுதித்தந்த மங்கள வாழ்த்து நாவிதராலேயே பாடப்படும். கல்யாண சீர்களின்போது நாவிதரின்றி நடைபெறும் சாங்கியம் என்று அரிதாகவே இருக்கும். 

நாவிதர்களாலேயே பாடப்பட்டாலும் மங்கள வாழ்த்தில் கூட இருமுறை நாவிதர்கள் குறிக்கப்படுகிறார்கள்.

மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து

மங்கள வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்

செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்



சீர் சாங்கியம் இல்லாமல் நடக்கும் கல்யாணம் சீரழிந்த கல்யாணம் என்பார்கள் பெரியவர்கள். அவ்வாறாயின், நாவிதர் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை உணரலாம். கல்யாணம் மட்டுமல்ல, திரட்டி சீர், எழுதிங்கள் சீர் (மழு காய்ச்சி மோரூற்றுதல்), அருமைகாரர் அருமை எடுக்கும் சீர் (பிறை மண் பிசைந்து வைத்தல்) என அனைத்திலும் நாவிதர்களின் பங்கு மிக முக்கியமானது.

கவுண்டர் வீட்டில் ஒரு இறப்பின்போது, சவத்துக்கு விளக்கெண்ணெய் தேய்த்துவிடும் சீர் முடிந்ததும் கொங்க நாவிதர்கள் தான்அரப்பு தேய்த்து குளிப்பாட்டிக் காசு வைப்பர். கோடி கொண்டு வருவதும், சுடும்முன் பானை பொத்து விடுவதும், பின்னர் மறுநாள் நவதானியம் தூவி சாமி கும்பிட்டு அஸ்தி எடுத்து வருதலும் என அனைத்தும் நாவிதர்களே முன்னின்று செய்வார்கள். இறப்பு கவுண்டர் வீட்டிலோ நாவிதர் வீட்டிலோ நடந்தாலும், நாவிதர்கள் உள்ளங்கை மேல்நோக்கியும், கவுண்டர்கள் கை அதை மேலிருந்து கீழாக மூடும் வண்ணமும் வைத்து இழவு காண்பது வழக்கம். நான் இருக்கிறேன் கவலை கொள்ளாதே என்று கவுண்டர்கள் ஆதரவளிக்கும் பாங்கில் செய்யப்படுவது.

ஒவ்வொரு கிராமத்திலும் நாவிதர்களுக்கு பூமிகள் விடப்பட்டிருக்கும். இன்றளவும் கிராமங்களில் நாசுவன்காடு, நாவிதம்பாளித் தோட்டம், மங்களக்காடு என்ற பேர்களில் பூமிகள் இருப்பதை அறியலாம். சில ஊர்கள் பேரே நாசுவம்பாளையம், நாசுசம்பட்டி போன்ற பேர்களில் இருப்பதைப் பார்க்கலாம். இவை நாவிதர்களுக்கு பரிசாகவோ, தானமாகவோ, வரிநீக்கம் செய்யப்பட்டோ, ஒதுக்கியோ கொடுத்த பூமிகளாக இருக்கலாம். கவுண்டர்கள் தோட்டத்தில் வெள்ளாமை அறுவடை முடிந்ததும் வருஷக் கூலியென நெல், கம்பு என்று விளைச்சலில் ஒரு பகுதியை அளந்து கொடுப்பார்கள். மேலும், பணமாக வருஷக்கூலியும் தற்காலங்களில் தரப்பட்டாலும், சவரங்களுக்கு தனி கூலி தரப்படுகிறது. முன்னர் போல் வருஷக்கூலி மற்றும் விசேஷங்களில் தானியம் மற்றும் கூலிப்பணம் என்பது மட்டுமின்றி தற்போது பிறப்பு, இறப்பு, சீர் சாங்யங்கள், பத்திரிகை கொண்டுசெல்லல் என்று அனைத்துக்கும் தனியே பணம் கொடுக்கபடுகிறது. முற்காலங்களில் நாவிதர்கள் தனியே சமைக்கவே தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு கவுண்டர் வீட்டுக்கும் உரிமையோடு சென்று உணவருந்தி வருவார்கள். 

கவுண்டர்கள் வீட்டில் உணவருந்துவதை "ஊர்ச்சோறு" என்பார்கள். சமூக விரோதத்தை தூண்டும் முற்போக்கு எழுத்தாளர்கள், இந்த ஊர்ச்சோறு என்பதை பிச்சை போன்று கேவலப்படுத்தும் விதமாக திரித்து எழுதுவார்கள். உண்மையில் கவுண்டர்கள் வீட்டில் உண்பது நாவிதர்கள் வறுமையால் அல்ல. நாவிதர்கள் நாள்தோறும், வருஷம் முழுக்கவே இன்ன இடம் என்று இல்லாமல் ஏதேனும் ஒரு இடத்திலோ பயணத்திலோ இருப்பார்கள். கல்யாணம், பெரிய காரியம், சவரம் செய்ய செல்வது, அழைப்புக்கு செல்வது என்று. எனவே ஒவ்வொரு வேளைக்கும் வீட்டுக்கு வந்து உணவருந்தி செல்ல இயலாது. மேலும், மகன்களான நாவிதர்களுக்கு கவுண்டர்கள் வீட்டில் உணவு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவு உரிமையுண்டு.

கொங்கநாவிதர்கள் கல்யாணங்களும், சீர் காரியங்களும் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் சீர் சடங்குகளை ஒத்துதான் இருக்கும். அருமைக்காரர்களே அவர்களுக்கும் கல்யாணம் செய்து வைப்பார்கள்.

வீரமாத்தி வழிபாடு - கொங்கநாவிதர் மரபில் வீரமாத்தி இறங்கும் விரதத்தை கடைபிடித்த கற்புநெறியில் நின்று வாழ்ந்த மகளிர் அவதரித்துள்ளனர். அவர்களுக்கு வீரமாத்தி வழிபாடுகள் செய்துவருகிறார்கள்.

பட்டய செய்திகள்:

காடையூர் பட்டயம்
நாயக்கர் காலத்தில் காடையூர் பட்டம் பெத்தாங்காங்கேய மன்றாடியார் வேட்டுவர்கோப்பண கவுண்டரிடம் வெற்றி கொண்டு அடைந்த திருப்பூர் கோட்டையை ஆளும் நாளில் இருப்புலியைச் சேர்ந்த நாவிதன் குமரன் திருப்பூருக்கு வெள்ளாள நாவிதனாக தருவிக்கப்படுகிறான். போர் விஷயங்களை உடனிருந்து கவனித்து வந்துள்ளான் குமரன். அச்சமயம் வேட்டுவர் கோப்பண கவுண்டர் மீண்டும் கோட்டையை பிடிக்கவே அவர்களை வென்று அற குமரன் முன்வருகிறான். ஜெயித்து வந்தால் ஏழு கிராமம் அரசுரிமை தருகிறோம் என்ற வாக்கிற்கிணங்க சென்று ஜெயித்து வருகிறான். எதிரிகள் அவனை வஞ்சகமாக கொன்று விடுகிறார்கள். அதனால் சாகப்போன குமரன் மனைவியை தடுத்துக் காத்து வாழ உதவிகள் செய்து அவன் குழந்தைக்கு கல்வி கற்கவும், வீர விளையாட்டுகள் பழகவும், குலத்தொழில் கற்கவும் செய்து குமரனை விட பராக்கிரமசாலியாக மாற்றுகிறார்கள்.

இந்த செய்தியும், முன்னர் சொன்ன கொங்குமண்டல சதக  மருத்துவச்சி சம்பவமும் சொல்வது என்னவாயின், அக்காலம்தொட்டே நாவிதர்களுக்கு கல்வி கற்க வகை செய்யப்பட்டு இருந்தது என்பதே. அவர்கள் முறையான கல்வியும், தங்கள் குலத்தொழில், மருத்துவம் போன்றவற்றில் சாஸ்திரங்கள் கற்றவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதே. இவை கிறிஸ்தவ பிரிட்டிஷ் ஆட்சியின்போது கல்விமுறைகள் சீரழிக்கப்பட்டது.

கன்னிவாடி பட்டயம்
கன்னிவாடிப் பட்டயத்தின் மூலம், கன்ன குல வரலாற்றில் மானமிகு கன்னகுலவிளக்கு நல்லம்மாள், தன்னை கல்யாணம் செய்ய நினைத்த பள்ளியரிடம் போட்ட சபதத்தில் வெல்ல கன்ன குலத்தாருக்கு உற்ற துணையாக இருந்த மக்களுள் நாவித நல்லானும் ஒருவர். பின்னர் முத்துசாமி கவுண்டரை எடுத்து வந்து தலைய நாட்டை மீட்டு ஆட்சியில் அமர செய்ததிலும் நாவிதர் நல்லானின் பங்கு அளப்பரியது. இறுதியில் முத்துசாமி கவுண்டர் இறந்தபோது, அவருடைய மனைவியர் தீக்குளி இறங்கினர். அப்போது, எங்க கவுண்டர் போனப்புறம் நாங்க மட்டும் உயிரோடு இருப்பதென்ன என்று அவருடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றி வாழ்ந்த குடிபடைகளுடன், நாவித நல்லானும் அவர் மனைவியும் சேர்ந்து தீக்குளி இறங்கினர். இன்றும் படைக்கலப் பூசை நடைபெற்று வருகிறது.



மதுக்கரைப் பட்டயத்தில் இறப்பின்போது முதல் எடுத்தவுடன் எல்லா காரியங்களும் முன்னின்று நாவிதர் செய்யவும் என்று வாசகம் வருகிறது. இவை மட்டுமின்றி, பல்வேறு பட்டயங்களில் சாட்சியமாக நாவிதர்கள் இருந்துள்ளனர். எந்த காணியோ, நாடோ விற்கப்படும்போது அங்குள்ள குடிசாதியினர் உரிமைகள் பாதிக்காதவண்ணம் விற்பனை நடக்கும்; அதாவது ஆங்குப்வர் நிலத்தை மட்டுமின்றி அங்குள்ள குடிகளின் உரிமைகள், கொடிகள் அனைத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டும். இவை கொங்கு சமுதாய முக்கிய நிகழ்வுகளில் நாவிதர்களை உடனிறுத்தி, அவர்களை மனதில் வைத்து முடிவெடுத்தமை புலனாகிறது.

காளிங்கராயர் வரலாற்றில் வாய்க்கால் வெட்டாமல் முகச்சவரம் செய்வதில்லை என்றிருந்த  காளிங்கராயர் வாய்க்கால் வெட்டிய மறுநாள் விடிகாலை அயர்ந்து தூங்கிய நிலையில் அவர் உணரா வண்ணம் முகத்தை அழகாக சவரம் செய்து வைத்திருந்தாராம் அவருடைய நாவிதன். மகிழ்ந்து உனக்கென்ன வேண்டும் என்று கேட்க, என் பேர் நிலைக்கும்படி செய்யச் சொன்னதன்பொருட்டு, அந்த ஊருக்கு நாவிதம்பாளையம் என்று பேர் வைத்தாராம்.

இறுதியாக கம்பர் நாவிதர் பெருமையை உணர்த்தும் வண்ணமாக அவர்கள் மருத்துவச் சிறப்பையும் சவரத் தொழிலையும் ஒருங்கே சிறப்பித்துக் கூறிய தனிப்பாடல்..

"ஆரார் தலைவணங்கார் ஆரார்தாங் கையெடார்
ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும்
தென்புலியூர் மேவுஞ் சிவனருள்சேர் அம்பட்டத்
தம்பிபுகான் வாசலிலே தான்."
-கம்பர்

கொங்க நாவிதர்களுக்கு கவுண்டர்கள் செய்ய வேண்டியது,


  1. கொங்க நாவிதர்கள் தற்கால சூழலில் தங்கள் குலத்தொழிலான மருத்துவம், சீர் காரியங்கள், சவரம் போன்றவற்றை செய்ய வசதியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  2. கொங்க நாவிதர்களுக்கு அவர்கள் பாரம்பரியக் கல்வியான மருத்துவத்தைப் பயில இன்னும் அம்முறைகளை அறிந்திருக்கும் அவர்கள் சமூக பெரியவர்களைக் கொண்டு கற்பிக்கப்பட வேண்டும். நாவிதர் சமூக பெண்களுக்கு குழந்தை மற்றும் மகளிர் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மேற்கொண்டு அவற்றைச் செம்மைப் படுத்த இயற்கையான சித்த-ஆயுர்வேத மருத்துவக் கல்வியினை முறைப்படி கற்பிக்க உதவ வேண்டும். ஊர்களில் எதற்கெடுத்தாலும் ஆஸ்பத்திரி செல்வதை நிறுத்திவிட்டு நம் நாவிதர்களை முதலில் நாட வேண்டும். இதன்மூலம் நாவிதர்கள் வாழ்வாதாரம் மேம்படுவதொடு கிராம மக்களுக்கும் ஆரோக்கியம் மேம்படும்.
  3. கொங்கு நாவிதர் சமுதாய இளைஞர்களுக்கு சீர் சடங்குகள் செய்யவும், மங்கள வாழ்த்துப் பாடவும் கற்பிக்கப்பட வேண்டும். கவுண்டர்கள் எல்லா குடும்ப விஷேசங்களையும் கொங்கு முறைப்படி அருமைகாரர் கொண்டு சீர் செய்து கல்யாணம் செய்ய வேண்டும். திரட்டிசீர், எழுதிங்கள், வளைகாப்பு, இறப்பு என்று அனைத்தும் பாரம்பரிய முறைப்படி நடக்க வேண்டும்.
  4. கொங்கு நாவிதர் இல்ல கல்யாணங்களுக்கு முறைப்படி கவுண்டர்கள் உதவி செல்ல வேண்டும். 
  5. நாவிதர்கள் நம் இல்லங்களுக்கு வரும்போது உணவ்ரைந்தாமல் செல்ல அனுமதிக்ககூடாது. இன்றும் நம் நாவிதர்கள் நம்மோடு மிக இணக்கமாகவும் பற்றுடனும் உள்ளனர். சிற்சில இடங்களில் மணவேரோபடு ஏற்பட்டாலும் அதை சுமூகமாக தீர்க்க வேண்டும். அவர்கள் வம்ச பரம்பரையாக நம்முடன் வாழ்ந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது. அவர்கள் மனம்வருந்தும்படி பேசுதல் கூடாது. விவசாயம் செய்யும் கவுண்டர் எப்படி மதிக்கப்பட வேண்டுமோ, அதுபோல தன் குலத்தொழிலை முறைப்படி செய்யும் கொங்க நாவிதர்கள் மரியாதை பெற வேண்டும்.
  6. திராவிட கம்யூனிச முற்போக்கு கும்பல்கள், கொங்கு குடி சாதியினர் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொங்கு சமுதாய ஒற்றுமையை குலைக்க பல ஆண்டுகளாக மேற்கொள்ளும் முயற்சிகளை அறிய வைக்க வேண்டும்.
  7. நம் கிராம குலதெய்வ மற்றும் நம் சமுதாய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முடிகாணிக்கை செலுத்தும்போது அதற்கான பணிகள் டெண்டர்கள் மற்றும் அதன் வருமானங்கள் அனைத்தும் நாவிதர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.


நம் சமுதாய உறவாகவும், மகனாகவும், அன்பைப் பொழிந்து, நம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நம் சீர் சடங்குகளை காலம் காலமாக முன்னின்று நடத்தி நமக்காகவே வாழ்ந்து வந்த நம்ம கொங்கு நாவிதர்களை என்றும் மறவாமலும் பல்லாயிரம் ஆண்டு சீர்முறைகள் பாரம்பரியங்களை கைவிடாமலும் இருப்பது ஒவ்வொரு கொங்கு குடியானவரின் கடமையாகும்.


12 comments:

  1. This is highly unethical article I ever seen and i can't tolerate this kind of caste discrimination ever.,

    In this particular article intensely you mention that particular caste people should not move ahead they should be do their job what they doing in ancient days .,

    How that caste people can accept that statement no one can't pull the society must be like., this is a democratic country every one having a rights to live their own life on their way.,

    ReplyDelete
  2. Dheeran chinnamalai padai thalapatii karupa servai navithar thanyaaa

    ReplyDelete
  3. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
    🔯🙏🙏🙏🙏🙏✔️

    ReplyDelete
  4. Man made this division.not by god.even today also these people are not treated respectful in interior villages of tamilnadu

    ReplyDelete
  5. உண்மை தான்.ஆனால் இன்றைய காலத்தில் கொங்கு வெள்ளாள நாவிதர்களை கவுண்டர்களே இழிவு படுத்துகின்றனர்.அதே போல கவுண்டர்களில் சில அறிஞர்கள் கொங்கு மற்ற சாதிகளை முன்னிருத்தி நாவிதரை அடிமைகளாக நடத்தி வருகின்றனர்.கொங்கு கவுண்டர்களுக்கு சீர் செய்ய ஒரு நாவிதன் தேவை ஆனால் நாவிதனுக்கு கவுண்டர்களின் தேவை முக்கியமல்ல,ஆனால் இதனை இன்றைய கால கொங்கு கவுண்டர்கள் புரிந்து கொள்வதில்லை. என் தாத்தா 96 வயதில் காலமானார்.என் தந்தையார் 90வயதில் காலமானார்.என் தந்தைக்கு நான் 9வது மகன்.எதற்காக கூறுகிறேன் என்றால் என் தாத்தாவும் தந்தையாரும் கொங்கு கவுண்டர் வீடுகளில் ஒரு வேளை உணவு கூட அவர்கள் வாழ்ந்த காலங்களில் கை நனைத்தது இல்லை.ஏனெனில் என் தந்தையார் கூறிய கூற்று வேளாளர் விளக்கெறிந்த வீட்டில் எல்லாம் உண்பர் நாம் அவ்வாறு உண்ணுதல் கூடாது சீர் மரபு பொய்த்துவிடும் என்று கூறுவர்.இவ்வாறு இன்றளவும் கொங்கின் பாரம்பரியத்தை சுமக்கும் ஒரே இனம் கொங்கு நாவிதர் இனம் ஆகும்.ஏன் இன்றைய காலத்தில் கீழான இன சாதி மக்கள் கூட எவர்க்கும் எதற்க்கும் அடிபணிந்து நடப்பது இல்லை மற்ற கொங்கு சாதிகளுக்கு அது எந்த சாதியாக இருப்பினும் சீர் மரபுகளுக்கு கொங்கு வெள்ளாள நாவிதர் செல்வதில்லை. மங்கள வாழ்த்து பாடி திருமணம் செய்யும் முறை கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மற்றும் கொங்கு வெள்ளாள நாவிதர்கள் இனத்தில் மட்டுமே உண்டு.

    ReplyDelete
  6. Ithu oru pothum marathu

    ReplyDelete
  7. இது எல்லாம் உண்மைதான் நம்ம ஆட்கள் இன்னும் கொஞ்சம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  8. All Maruthuvar and navigator and panhandler parents must given good education to you child boy and girl choice of education medicine(MBBS,BDS) Engineering Chartered Accountant and Central and State Govt post if doing well after 50 years the community is being well in advance in all field. Need not be depending any community for financial and livelihood support.
    Do not open saloon shop and practice it and don't sent your child to it.In chennai district more than 70 percent maruthuvar cast children became engineering and medicine and teaching line. all the salone shop operated by other states (Madurai and Thirunelveli etc) not Oriss and Bihar barber ran the salon shop in Chennai. Chennai navithar gone out for professional due to higher education. same as in Tamil Nadu all maruthvar and navithar Barber children study well in education in all field after 50 year one one live in the name of barber.only other poor state people done this work. think work do.success for yourself. the slaw system automatically abolished.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates