Trending

Wednesday 23 August 2017

சிவகிரி வண்ணார கருப்பண்ண சாமி

சிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டுவரின் காணியுரிமையையும் சேர்த்து வாங்கினர். பின்னரும் கோயில் உரிமையில் விற்றவர்கள் சிலர் தலையிட்டனர், எதிர்த்தனர். நோம்பியில் சுவாமி ஊர்வலத்தில் ஊஞ்ச மரத்தால் தாக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.

Tuesday 22 August 2017

சென்னிமலை நிலத்தம்பிரான் செங்கத்துறை ஐயன்

சென்னிமலை ஆண்டவனுக்கு கோயில் கட்டிய செங்கத்துறையான்!செங்கத்துறை ஐயன் என்றும் நிலத்தம்பிரான் என்றும் அழைக்கப்படும் முருகனருள் பெற்ற அடியார் வாழ்க்கை நிகழ்வுகள். சென்னிமலையில் வாழ்ந்து முக்தியடைந்தவர். செங்கத்துறை ஐயன் அருளால்  கனவிலும் நனவிலும், ஏழேழு ஜென்மத்திலும், வம்ச பரம்பரையிலும் சென்னியாண்டவர் திருப்பாதம் மறவாத பக்தியும், சென்னியாண்டவர் அருளும் கிடைக்க பிரார்த்திப்போம்.

Thursday 20 July 2017

சேரனின் சிற்றரசர்கள் சிலர்

சேரர் காலத்தில் கொங்கின் ஆட்சியாளர்களாக இருந்தனர் சிலர்.. பின்னால் வந்த சோழர், பாண்டியர், நாயக்கர், சுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில்.. ஒவ்வொரு ஆட்சியின்போதும் சிலர் பதவி பெற்றனர் சிலர் பதவி இழந்தனர்.. கல்வெட்டு மற்றும் செப்பேடு ஆவணங்கள் மூலம் அறியப்படும் சில சேரர் கால கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆட்சியாளர்கள்..

Tuesday 11 July 2017

பழ நாகம்பள்ளி

ஆதி அந்துவன் சாத்தந்தை பூச்சந்தை கூட்டத்தவர்களின் ஆதி காணியாச்சி அம்மன் கரூர் நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டியம்மன். இவ்வூர் பழநாகம்பள்ளி என்று வழங்கப்படுவது அதன் தொன்மையை உணர்த்தும். கொங்கு இருபத்தி நான்கு நாடுகளில் வெங்கால நாட்டைச் சேர்ந்தது நாகம்பள்ளி காணி. நாகம்பள்ளி கவுண்டர்கள் மைசூர் ஆட்சி காலத்தில் கூட மூன்று நாட்டு பிரச்சனையை விசாரித்து பஞ்சாயத்து செய்யுமளவு செல்வாக்குப் பெற்றிருந்துள்ளனர். இங்கிருந்து கொங்கின் பல பகுதிகளுக்கு குடியேறி சென்ற குடியானவர்கள், சென்ற இடங்களில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்ந்துள்ளனர்.

Wednesday 5 July 2017

அமரர் பெரியசாமி தூரன்

போன நூற்றாண்டைச் சேர்ந்த நம் கொங்கு குடியானவர் தமிழறிஞர் ஸ்ரீமான் பெரியசாமி தூரன். மொடக்குறிச்சி கிராம. கொங்கில் சேரனின் ஆட்சி நிலைபெறச் செய்து கொங்கு குடியானவர்களின் ஆட்சிக்கு அடிகோளிய தூரன் கூட்டத்தைச் சேர்ந்தவர். மொழி, குழந்தை இலக்கியம், இசை என்று மூன்று பெரும் தளங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்து, இன்றுவரை அவர் இடத்தை நிரப்ப இயலாத அளவு பெரும்பணி செய்தவர். அவர் வாழ்ந்தபோதும், மறைந்தபோதும் சர்க்கார் மற்றும் தமிழறிஞர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரைப் பற்றி கவுண்டர்கள் அறிந்துகொள்வது அவசியம். அமரர்.பெரியசாமி தூரன் பற்றி மாற்று சமூகத்தவரும், தற்கால இலக்கிய ஜாம்பவானுமான திரு.ஜெயமோகன் எழுதிய புகழுரை, கீழே.

Monday 19 June 2017

தெய்வ நிலை தேவேந்திர கூட்டம்

தேவேந்திரன் கூட்டம் - உண்மையில் தேவந்தை கூட்டம் என்பதே பெயராகும். இந்த கூட்டத்தாரின் 800 ஆண்டுகள் பழம் கல்வெட்டுகள் அனைத்தும் தேவந்தை கூட்டம் என்றே சொல்கின்றன. அதன்பின் சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட செப்பேடுகள்  இலக்கியங்கள் தேவேந்திரன் கூட்டம் என்று கூறுகின்றன. தெய்வீக பேருடைய கூட்டம்.

Friday 9 June 2017

வாழ்க்கை சுலபம் -உலகப்பிரசித்தி உரை (தமிழில்)

ஜோன் ஜண்டை - தாய்லாந்து இயற்கை விவசாயி, விதை சேமிப்பாளார், இயற்கை வீடுகள் கட்டுமானர், எளிய வாழ்வு பிரசாரகர். தனது வாழ்வும், கற்றலும் பற்று சுவையாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் புரியும்படி பேசிய இந்த உரை உலகப்பிரசித்தி பெற்றது. அதை நம் சொந்தங்களுக்கு கிட்ட தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். தற்கால சூழலில் நம் சமுதாயத்துக்கு கொஞ்சம் அவசியமான உரைதான்.இவர் கூறுவதை அவரவர் சூழலுக்கேற்ப இயன்றவரை பின்பற்ற முயலலாம். எளிமை என்பது ஆரோக்கியம், செல்வம், உறவுகள், அன்பு என அனைத்தையும் தரக்கூடியது.

Friday 12 May 2017

அன்னதாதா - கொங்குமக்களின் அன்னதான சிறப்பு

ஊட்டுக்கு ஊடு திண்ண.. ஊருக்கு ஊர் சாவடி.. பட்டணத்துல சத்திரம். கொங்க தேசத்துல, நம்ப ஊர் வழியா பயணம் போறவங்க கூட கஷ்ட பட கூடாதுன்னு கட்டி வச்சதுதான் திண்ண, சாவடி, சத்திரம் எல்லாம். ஊர் சாவடில யாராவது வெளியூர்க்காரன் இருக்கானா னு பார்த்து, அவனுக்கும் சோறு போட்டுட்டு தான் குடியானவங்க சாப்புடுவாங்க. தன்னோட எல்லைல ஒருத்தனும் பசியோட தூங்கக்கூடாதுன்னு நெனைக்கற புண்ணியவான் தான் குடியானவன். வயிற்றுக்கு சோறு கேட்கும் பிச்சைக்காரன் முதல் நாட்டை ஆளும் பட்டக்காரன் வரை அனைவருக்கும் வரிசையாகப் படியளக்கும் பரமசிவன், கொழுமுனை பிடித்து உழுதுண்டு வாழும் காராள வம்ச குடியானவன். ஏர் எழுபது.

Thursday 2 March 2017

விளக்கெண்ணெய்

தேங்கெண்ணெய் தாய்ப்பாலுக்கு நிகர் - நவீன அறிஞர்கள் 
விளக்கெண்ணெய் தாய்க்கு நிகர் - அகத்தியர்

ஆமணக்கு, கொட்டமுத்து போன்ற பெயர்களால் அழைக்கப்படும் புஞ்சை பயிரான, எண்ணெய் வித்து  நமது மண்ணின் மரபிலும் மருத்துவத்திலும் தனியிடம் பெற்றது. விளக்கெண்ணெய் என்று திட்டும்படி நையாண்டி காட்சிகளில் பயன்படுத்தி சினிமாவாலும், செயற்கை மருத்துவர்களாலும் நாம் புறக்கணித்துவிட்ட விளக்கெண்ணெய் பற்றி விரிவாகக் காண்போம்.

Wednesday 22 February 2017

சாந்தமிளிர் தூரன் கூட்டம்

தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், சாந்த மிளிர் தூரர் என்று இலக்கியங்களில் புகழப்படுகிறார்கள்.

Tuesday 24 January 2017

ஜல்லிக்கட்டு - இடதுசாரிகள்

கேட்டினும் உண்டோ உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

என்ற குறளுக்கு ஜல்லிக்கட்டு விவகாரம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

இந்திய தேசியம் குட்டுகிறது, குடைகிறது எனவே தனி நாடு வேண்டும் என்று ஜல்லிக்கட்டு இளைஞர் எழுச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதிகள் எல்லாம் தமிழ்த்தேசியவாதி முகமூடியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும் தி.க. விஷம் ஏறியவர்களும் தான். இவர்கள் கேட்பதுபோல ஒருவேளை தனி நாடு கொடுத்தால் அதைக் கொண்டாடவே பசுவைக் கொலை செய்து பிரியாணி போடுவார்கள்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates