Trending

Monday 19 June 2017

தெய்வ நிலை தேவேந்திர கூட்டம்

தேவேந்திரன் கூட்டம் - உண்மையில் தேவந்தை கூட்டம் என்பதே பெயராகும். இந்த கூட்டத்தாரின் 800 ஆண்டுகள் பழம் கல்வெட்டுகள் அனைத்தும் தேவந்தை கூட்டம் என்றே சொல்கின்றன. அதன்பின் சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட செப்பேடுகள்  இலக்கியங்கள் தேவேந்திரன் கூட்டம் என்று கூறுகின்றன. தெய்வீக பேருடைய கூட்டம்.


தற்போது தேவேந்திரன் கூட்டத்தார் காங்கயம் கீரனூர், பெருங்குறிச்சி (திருச்செங்கோடு அருகே), மொஞ்சனூர், சேமூர் போன்ற ஊர்களில் காணி கொண்டு வாழ்கிறார்கள். 


முற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு காணிப்பாடலில் தென்னிலை, ஈசானமங்களம், வேம்பத்தி, மன்னரை, பெருங்குறிச்சி, முருங்கம், மங்களம், கீரனூர், காகம், விளக்கேத்தி, ஆரியூர்,வேளாம்பூண்டி, மொஞ்சனுர் ஆகிய ஊர்களை தேவேந்திரன் கூட்டத்தார் காணிகளாக தொகுத்துக் கூறுகிறது. இப்பாடல் மொஞ்சனுர் தேவேந்திரன் கூட்டத்து காராளன் ஜெக மண்டலாதிபதி குமார சின்னைய கவுண்டர் மீது பாடப்பட்டதாகும். இவர் மொஞ்சனுர் சிவாலய திருப்பணிகள் செய்தவர். மொஞ்சனுர் தேவேந்திரன் கூட்டத்தார் முத்துசாமி என்ற தங்கள் குல முன்னோரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் (சுமார் கிபி 1272, காளிங்கராயன் வாய்க்கால் வெட்டிய காலம்), தேவந்திரன் கூட்டத்து சிறியா கவுண்டர் ஜெயங்கொண்ட சோழக் காமிண்டன் என்ற விருதுப் பேரோடு விளங்கியுள்ளார். வீரபாண்டியனின் அரசியல் அதிகாரியாக இருந்தவர். பேரின் அமைப்புப் படி, சோழனை போரில் வென்றதால் கொடுக்கப்பட்ட விருதுப் பெயர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் பெருமாநல்லூர் சோழீஸ்வரர் கோயில் தர்மம் பற்றிய கல்வெட்டுள்ளது. இவரது மகன் பிள்ளா கவுண்டரும் இதேபோல தர்மம் அளித்துள்ளார். குன்றத்தூர் கோயிலிலும் தேவேந்திரன் கூட்டத்தார் தர்மமளித்துள்ளனர். சிவன்மலைக் கோவிலுக்கு தினசரி பூஜைகளுக்கும் கும்பாபிஷேகங்களுக்கும் பல தர்மங்களை அளித்துள்ளனர். 

பெருங்குறிச்சியில் கவுண்டச்சியம்மன் கவுண்டியண்ணன் என்ற முன்னோர் தெய்வங்களையும் வணங்கி வருகிறார்கள். தேவேந்திரன் கூட்டத்தார் அனைவரும் ஒன்றாக கூடி சமயப் பணிக்காக குலமாணிக்கி நியமனம் செய்த செப்பேடு இன்றுமுள்ளது. பெருங்குறிச்சி தேவேந்திரன் கூட்டத்தார் இன்று திருச்செங்கோடு ரிக் தொழில், விவசாயம், வாகன போக்குவரத்து போன்றவற்றில் பெரும் செல்வாக்கோடு திகழ்கிறார்கள். சேலத்து பெரியவர் செங்கோட கவுண்டர் பல நல்ல காரியங்களை முன்னின்று செய்தவர். இக்கோயில் சேர்ந்த அரங்க துரைராஜ் அவர்கள் அரசுபணியிலும், பெங்களுர் காராளர் சங்கத்திலும், கோயில் நிர்வாகத்திலும், பெரிய அளவில் விவசாய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் சாதித்து வருபவர்.  

அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் தல வரலாறு

அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் வரலாறு அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோயில் வரலாறு பண்டை கொங்கு நாட்டில் பல தலைமுறைகளுக்கு முன்னால் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. மக்களுக்கும், கால்நடைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வமயம் சிவனும், சக்தியும் தங்களின் மனித அவதாரத்தின் மகிமையை மக்கள் அறியும் வண்ணம் செய்யவும், மனிதபிறவி தெய்வமாகும் நிலையை நிலைநாட்டவும் மனிதபிறவியாக கொல்லிமலைப்பகுதியில் காராளவம்ச வேளாளா் குலத்தில் கவுண்டச்சியும் கவுண்டருமாக அவதாித்தனா். கொல்லிமலைபகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்த காலத்தில் மழை பொய்த்து விட்டபடியால் பஞ்சம் ஏற்பட கவுண்டிச்சியும், கவுண்டரும் கொல்லிமலையிலிருந்து பிழைப்பைத் தேடி நாமக்கல் வழியாக தாங்கள் தெய்வமாகப் போகும் புண்ணிய புமியான திருச்செங்கோட்டிக்கு பக்கத்திலிருக்கும் சுள்ளிப்பாளையத்திற்கு கால்நடையாக வந்ததனால் மிகவும் சோா்வடைந்து களைப்புடன் வந்து சோ்ந்தனா். சற்று நேரம் இளைப்பாற கோவிலுக்கருகிலுள்ள தொரட்டி மரநிழலில் அமா்கின்றனா். பலநாள் நடந்துவந்த களைப்பாலும், பசியாலும், தாகத்தாலும் கவுண்டா் மயக்கம் அடைகிறாா். கவுண்டிச்சி அருகிலுள்ள அருள்மிகு பேச்சிஅம்மன் கோவில் குளத்தில் நீா் மொண்டு வந்து கவுண்டாின் முகத்தில் தெளிக்க தாகசாந்தி செய்கிறாா்.


அக்கனமே கவுண்டா் தன் அவதார நோக்கம் நிறைவேறும் பொருட்டு இவ்வுலகை விட்டு விண்ணுலகம் சென்றடைகிறாா். கவுண்டிச்சி அருள்மிகு பேச்சிஅம்மன் கோவிலுக்குச் சென்று தெய்வத் தொண்டாற்றி அங்கு வரும் பக்தா்களுக்கு அருளாசி செய்து வருகிறாா். சில காலம் கழித்து அவரும் முக்தி அடைகிறாா். கவுண்டிச்சி முக்தி அடைந்த இடத்தில் ஓா் புற்றுக்கண் உருவாகி வளா்ந்தது. சிலகாலம் சென்றபின் சுள்ளிப்பாளையத்தில் தோ்வேந்தா் குலப் பண்ணையாா் ஒருவா் பண்ணையில் உள்ள காராம்பசு ஒன்று தினமும் மாலை வேளையில் அப்புற்றிற்கு சென்று பாலை புற்றின்கண் சுரந்துவிட்டுச் சென்றுது. திருமலை, பட்டீஸ்வரம், மாதேஷ்வரன் மலை முதலிய ஸ்தலங்களில் புற்றுக்கண்ணில் எழுந்தருளிய பகவானுக்கு பசுமாடு தினசாி பால்சுரந்து வழிபட்டு வந்ததைப் போல் இக்காராம்பசுவும் வழிபட்டு வந்தது. பசுவின் எஜமான் ஒரு நாள் பசுவின் மடியில் பால் இல்லாது இருப்பதைக் கண்டு அதன் பின்னே சென்று கண்காணிக்கும் போது காராம்பசு வழக்கம்போல் கவுண்டச்சி முக்தியடைந்த இடததுப்புற்றுக்கண் மேல் பால்சுரப்பதைக் கண்டு கோபமடைந்து ஒரு பொிய கல்லை எடுத்து பசுமீது அடிக்க காராம்பசு சுருண்டு விழுந்து தன் பிராணனைவிட்டு விடுகிறது. அப்போது அங்கே பசுமாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த சிறுமிக்கு தெய்வ அருள் ஏற்பட்டு “கவுண்டச்சி ஆகிய நான்தான் அப்புற்றில் குடி கொண்டு இருக்கிறேன். இந்த காராம்பசு என் மீதுதான் பால்சுரந்து என்னை வழிபட்டு வந்தது.

அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்
பசுவுக்கு சிலையும் - கவுண்டய்யன் சந்நிதியும் 
அக்காராம் பசுவை ஒரு காராளன் கொன்றது மாபெரும் பாவமே காராம் பசுவைக் கொன்றபாவம் அவனது வம்சத்துக்கே பாவமாகும். “என அருள்வாக்கில் கவுண்டிச்சி கூற, காரம்பசுவின் எஜமான் “கவுண்டிச்சிஅம்மன் தாயே மதிமயக்கத்தில் நான் செய்த தவறை மன்னித்தருள வேண்டும் புற்றின்கண் குடிகொண்டிருக்கும் கவுண்டிச்சிஅம்மன் தாயே நான் செய்த பாவச்செயலைப் போக்கி, என்னால் ஏற்பட்ட என்குல வம்சத்து பாவத்தையும் போக்கி அருள் புாிய வேண்டும் தாயே என்னை மனித்து அருள் புாிய வேண்டும் தாயே என வேண்டி கவுண்டிச்சிஅம்மன் அருள்வாக்கு சொன்ன சிறிமியின் காலில் விழுந்து வேண்டினான். காராம் பசுவின் எஜமானுக்கு கவுண்டிச்சிஅம்மனே நோpல் காட்சியளித்து” அப்பனே உம்மை மன்னித்தோம். உம் காராம்பசுவையும் உயிா்பித்து உம்மிடமே ஒப்படைத்தோம் அருள்மிகு பேச்சிஅம்மன் கோவில் அருகிலே நான் குடி கொண்டு உன்குலத்து மக்களுக்கு அருள்பாலித்து காக்க வந்துள்ளேன்” என கூறி மறைந்தாள். கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குலமக்கள் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலயத்திற்கு அருகில் அருள்மிகு கவுண்டிச்சிஅம்மனை ஸ்தாபித்து கோவில் எழுப்பி தோ்வேந்தா் குலமக்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக தொரட்டி மரம் இருந்து வருகிறது

kongu kula vralaru

கீரனூர் செல்வநாயகியம்மன் கோயில், கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ் பெற்ற கோயில். அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்திலும் செல்வாக்கு பெற்றவர்கள் இக்கோயில் காணியாளர்கள். கீரனூரில் இருந்து ஈரோட்டில் வந்து காணிபெற்றவர்கள், சேமூர் கொத்துக்காரர்களாக தேவேந்திரன் கூட்டத்தார் இருக்கிறார்கள். தாராபுரம் நொச்சிக்காட்டுவலசு கீரனூர் தேவேந்திரன் கூட்ட பெரியசாமி கவுண்டர் தாராபுரம் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் (1952-1957). சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர். கீரனூர் கோயில்கள்  திருப்பணிகளுக்கு ஆறு கூட்டத்தாரோடு தேவேந்திரன் கூட்டத்தாரும் திருப்பணிகள் செய்துள்ளனர்.

அருள்மிகு செல்வநாயகி அம்மன், கீரனூர், காங்கேயம்


மொஞ்சனுர் மற்றும் பெருங்குறிச்சி தேவேந்திரன் கூட்டத்தார் ஐயம்பாளையம் மடத்துக்கும், கீரனூர் தேவேந்திரன் கூட்டத்தார் கீரனூர் மடத்துக்கும் குலகுரு தரிசனத்துக்கு செல்கிறார்கள். அய்யம்பாளையம் மட ஆச்சார்ய அபிஷேகத்தில் தேவேந்திரன் கூட்டத்தார் முன்னின்று நிர்வாகப் பணிகளில் பங்கெடுத்தனர்.

தேவேந்திரன் கூட்டத்தார் மிகவும் தண்மையானவர்கள், அளவான பண்பான பேச்சும், புத்திக்கூர்மையும், சுற்றி நடப்பதை கிரகிப்பதிலும், ஆக்கபூர்வ செயல்பாடும் கொண்டவர்கள். ஜாக்கிரதை உணர்வு அதிகம், என்பது இவர்கள் பலமும் பலவீனமும் என்று கூறலாம்.

தேவேந்திரன் கூட்டத்துப் பெண்கள் பொறுமைசாலிகள் கடும் உழைப்பாளிகள். குடும்பப்பற்று மிக்கவர்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு கூற்று உண்டு. "தேவேந்திரன் கூட்டத்துப் பெண்ணைக் கட்டியவன் மண்ணாக இருந்தாலும் மன்னனா பொழைப்பான்" என்று. யதார்த்தத்திலும் உண்மையாகவே இருக்கிறது. 

நன்றி: 
சித்ரமேழி தர்ம சபை
கொங்கு வேளாளர் குல வரலாறு - புலவர் ராசு 
கொங்கு வேளாளர் புராண வரலாறு - சின்னசாமி கவுண்டர் 
கொங்கு தேர்வேந்தர் வலைத்தளம் 

5 comments:

  1. Pannai kootam varalaaru kidaikuma

    ReplyDelete
  2. இதன் மூலம் தேவேந்திரன் என்பது கொங்கு வெள்ளாள கவுண்டரின் ஒரு குலம்தான்

    ReplyDelete
  3. சித்திரமேழி சபை என்பது எது பற்றியது? யாரால் நிர்வகிக்கப் படுகிறது

    ReplyDelete
  4. நான் வெண்டுவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்.தேவேந்திரன், தேவந்தை, தேர்வேந்தர் , இவற்றுள் எந்தப் பெயர் சரி?. கூட்டம், குலம், இவற்றுள் எது சரி?.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates