Trending

Wednesday 22 February 2017

சாந்தமிளிர் தூரன் கூட்டம்

தூரன் கூட்டத்தவர்கள். கொங்கதேச தொல்குடிகளுள் மிக முக்கியமானவர்கள். உத்தம குண நிபுண தூரர், நாடுபுகழ் தூரர், நீதித் தூரர், சீர்கொண்ட தூரர், சாந்த மிளிர் தூரர் என்று இலக்கியங்களில் புகழப்படுகிறார்கள்.




ஆதியில் ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகையில் இருந்து கங்கை சமவெளி சென்று பின்பு அங்கிருந்து கொங்கதேசம் வந்தவர்கள் என்று தூரன் அம்மானை நூல் குறிப்பிடுகிறது.

முன்பு சேரன் காலத்தில் கொங்கில் நாம் குடியமர்ந்த காலகட்டத்தில் வேட்டுவர் ஆதரவு பெற்ற பாண்டியர்களுக்கும்  சேரனுக்கும் போர் மூண்டது. போரில் சேரன் மாந்தரஞ்சேரலுக்கு துணையாக வேளிர்கள் துணை நின்றோம். நம்மில் தூரர் மந்திரியாக இருந்து சேரனுக்கு துணை நின்று போர் நடத்தி வெற்றி தேடித் தந்தார். அந்த போரின் வெற்றிக்குப் பிறகே கொங்கில் வேளிர்கள் காலூன்றி நின்றோம். 



அந்த வகையில் கொங்கதேசத்தில் கொங்கு குடியானவர்கள் காலூன்றி பட்டக்காரர்களாகவும், சிற்றரசுகளாகவும் நிற்க அடித்தளம் அமைத்ததே மதியூகிகள் தூரன் கூட்டத்தினர்தான். மந்திரிகளாக மட்டுமின்றி பெரும்படையையும் கொடுத்துதவியுள்ளனர். இன்றுள்ள பட்டக்காரர்கள், முதல் பணக்காரர்கள் வரை அனைத்து கவுண்டர்கள் வாழ்வும், வளமும் தூரன் கூட்டத்தாரின் கொடை என்றால் மிகையல்ல. கொங்கு வேளிர் அனைவருமே நன்றிக்கடன் பட்டுளோம். கொங்கதேசாதிபதி சேரனின் நேரடி மந்திரி, படை கொடுத்தோர், போர் நடத்தியோர் என்னும் நோக்கில் காணும்போது கொங்கதேசத்தில் தூரன் கூட்டத்தினருக்கு உள்ள உரிமையும், அதிகாரமும் விளங்க வேண்டும்.

மீண்டும், கொங்கதேசம் பாண்டியர் ஆட்சிவசமானபோது "பாண்டியரையர்" (பாண்டியராயர்) என்ற பட்டம் தாங்கி ஆட்சி பொறுப்பு வகித்துள்ளனர். குமாரமங்கலம் சிவாலயமும் 'பாண்டீஸ்வரர் கோயில்'என்றே அழைக்கப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் சோழன் மற்றும் விஜயநகர ஆட்சிகாலத்தில் ஆட்சிப்பொறுப்புகளில் பின்னடைவு ஏற்பட்டது.



மைசூர் ஆட்சி காலத்தின் போது மீண்டும் குமாரமங்கலம் பகுதியில் வெங்கம்பூரில் இருந்து குடியேறிய தூரன் கூட்டத்தார் தங்கள் மதியூகத்தால் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றினர். அதன் பின் கொங்கின் கிழக்குபகுதியும் கொங்கின் சரிபாதியான மழகொங்கம் (அன்றைய சேலம், நாமக்கல்) முழுதையுமே ஆட்சி செலுத்துமளவு அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினர்.

கொங்கதேசத்தின் மிக தொன்மையான காணிகளான காங்கயம், திருச்செங்கோடு, தூரன்பாடி, கொத்தனூர் போன்ற ஊர்களில் காணியுரிமை பெற்றதைக் கொண்டு தூரன் கூட்டத்தார் தொன்மையை யூகிக்கலாம்.

தூரன் கூட்டத்தின் ஆதி காணி தூரம்பாடியா, குமாரமங்கலமா என்பதில் மாற்றுக்கருத்து இருந்தாலும், அனைவருமே இரண்டு காணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். தூரன்பாடியின் முதல் காணியாளர்கள் தூரன் கூட்டம். தூரர்கள் உருவாக்கிய ஊர்.

"ஆதி குமாரமங்கலம் அடுத்து சீராப்பள்ளி"

"ஆதி குமாரமங்கலம் அடுத்து மோழிப்பள்ளி 
நீதி வெங்கம்பூர் நிலைத்திருக்கும் தூரன் குலம்"

போன்றவை இன்றும் சொல்லப்படும் சொற்றொடர்கள்.


குமாரமங்கலம் தூரன் கூட்ட முன்னோர் சிற்பங்கள் 

நிதான குணம் நன்றாக வாய்க்கப்பெற்ற தூரன் கூட்டம் ("சாந்த மிளிர் தூரர்") செல்லும் இடமெல்லாம் வேர்விட்டு வளர்ந்துவருகிறார்கள். குமாரமங்கலம் தூரன் கூட்டத்தினர் தேசிய அளவில் அசைக்க முடியாத அதிகார சக்தியாக சுமார் இருநூறு ஆண்டுகளாக உள்ளனர். குமாரமங்கலம் தூரன் கூட்டத்தில் ஐந்து கரைகள் பிரிவுகளாக இருப்பதாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

இன்றும் திருசெங்கோட்டின் பல முக்கிய பதவிகளில் தூரன் கூட்டத்தாரே இருக்கிறார்கள். கீழ்க்கரை பூந்துறை நாடு, ராசிபுரம், சேலம், பூவானிய நாடு, கீகரை அரைய நாடு வரை அதிகாரம் செலுத்தியுள்ளனர். புதுசத்திரம் என்ற பெரிய ஊரே தூரன் கூட்டம் நடத்திய அன்னதான சத்திரத்தின் பேரால் வந்ததே. திருச்செங்கோடு காந்தி ஆசிரமும் தூரன் கூட்டத்தினர் கொடையே. குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோயிலுக்கு முத்தாஞ்செட்டி மிட்டாவை எழுதி வைத்தனர்.

திருசெங்கோட்டு மலையில் ஏராளமான தர்ம காரியங்கள் நடத்தியுள்ளனர். மண்டப கட்டளைகள் உண்டு. ஒரு காலத்தில் திருப்பணி கல்வெட்டுகள் சில சக்திகளால் அழிக்கப்பட்டன. அதில் தூரன் கூட்ட கல்வெட்டுகளும் அடங்கும். திருசெங்கோட்டு மலை ராஜகோபுர பணி தூரன் கூட்ட நாகமலை கவுண்டர் மகன் சடையப்ப கவுண்டர் உபயத்தால் நடந்த கல்வெட்டு இன்றும் உள்ளது. அடிவாரத்தில் முற்காலத்தில் புகழோடு இருந்த தூரன் கூட்ட மண்டபம் இன்று இல்லை.

"கொங்கு எழுகரை நாடதிபன் பூந்துறை நாடன் 
கூறும் குமாரமங்கைத் தூரர் தன்குலன் 
செங்கோட்டாரைத் தினமும் சிந்தைசெயும் சடையன் "

என்று எழுகரை நாட்டிற்கே அதிபதி தூரன் கூட்ட சடையப்ப கவுண்டர் சிறப்பிக்கப்படுகிறார்.

திருசெங்கோட்டு மலைப்படியில் ஏழாவதாக இருக்கும்
குமாரமங்கலம் தூரன் கூட்ட செட்டியாகவுண்டர் மண்டபம் 
தூரன் கூட்ட செட்டியா கவுண்டர் நிலத்தம்பிரான் கோயில் தாண்டவ குறடு, மலை விநாயகர் குறடு, நடராசர் குறடு, மலைப்படிகள் கொத்தியமை, சிவதீர்த்த நூறு படிகள், வயிரவ தீர்த்தத்துக்கு தென்மேற்கே இளைப்பாற்றி மண்டபம் போன்றவற்றையும், தினந்தோறும் திருச்செங்கோட்டில் அன்னதானமும் பெரிய அளவில் நடத்தியுள்ளர். செட்டியாகவுண்டர் தலைமையில் ஐந்துகரை தூரரும் குமாரமங்கலம் பொன்காளியம்மன் ஆலயத்தில் மண்டப திருப்பணிகள் செய்துள்ளனர்.

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள், மண்டபங்கள், குளம் போன்றவற்றை செய்தவர்கள் தூரன் கூட்டத்தார். திருசெங்கோட்டு வரலாற்று ஆசிரியர் முத்துசாமி கோனாருக்கு விவேக திவாகரன் பத்திரிகை "சுப்புராய கவுண்டர் அச்சகம்" துவக்கித் தந்து ஏராளமான வரலாற்று, இலக்கிய, ஆன்மீக நூல்கள் அச்சாக உதவியவர்கள் தூரன் கூட்டத்தார்.

கீழ்க்கரை பூந்துறை நாட்டு சபை இருந்ததையும் அதில் 32 ஊராரும் கூடி முடிவெடுப்பதையும் குமாரமங்கலம் தூரன் கூட்டத்தார் பங்கேடுத்ததையும் நாட்டு கல்வெட்டு குறித்துள்ளது. நாட்டாட்சி அதிகாரம் பற்றிய முக்கிய தகவலாகும்.



மோழிப்பள்ளி அண்ணன்மார் அருள்பெற்ற பூமி. அங்கே சின்னண்ணன் சங்கரின் பாதச்சுவடு இன்றும் உள்ளது. (தரிசிக்காத தூரன் கூட்டம் அடுத்தமுறை மோழிப்பள்ளி செல்லும்போது விளக்கு வைத்து வரவும்).

வெங்கம்பூர் தூரன் கூட்டம் குமாரமங்கலத்தில் இருந்து அக்கரை வெங்கம்பூர் சென்று குடியமர்ந்தவர்கள். அங்கே பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துகளையும் அண்ணன்மார் சக்தியால் வென்று கடைசியில் அங்கே காணியாட்சி அதிகாரத்தையும் வாங்கினர். காரி கூட்டத்தார ஆதரவோடு மொடக்குறிச்சியில் குடியேறி காணியாட்சி கொண்டுள்ள மொடக்குறிச்சி தூரன் கூட்டத்தினர் இன்றும் தங்கள் ஆதி காணி குமாரமங்கலத்துக்கு சென்று வருகிறார்கள். மொடக்குறிச்சி தூரன் கூட்ட ஆவுடையா கவுண்டர் மேல்கரை பூந்துறை நாட்டு சபையில் பங்கெடுத்துள்ள நாட்டாராவார். மொடக்குறிச்சி தூரன் கூட்ட அத்தப்ப கவுண்டர் மன்றாடியார் என்ற பட்டம் தரித்து வழங்கப்படுகிறார். மேல்க்கரை பூந்துறை நாட்டில் வலுவான சக்தியாக இருந்தமைக்கு சிறந்த ஆதாரமாகும். நஞ்சை டையாறு ராசா கோயிலிலும், திருவாச்சியிலும் முதல் காணியாளர்கள் தூரன் கூட்டத்தினரே. 

தும்மங்குறிச்சியில் பண்ணை கூட்டத்தாருடன் காணியுரிமை கொண்ட தூரன் கூட்டத்தினர் இன்று பெருகி சுமார் இரண்டாயிரம் குடிகள் இருக்கிறார்கள். சீராப்பள்ளியில் கன்னிக்குடி காமாட்சிகுடி என்று இரு பிரிவுகளாக தூரன் கூட்டத்தார் வாழ்ந்து வருகிறார்கள். பாலமேட்டில் பனையன் கூட்டத்தாரோடு காணியாட்சி கொண்டுள்ளனர். 1932 ல் பாலமேடு பெருமாள் கோயிலை புதுப்பித்துக் கட்டியவர் பொன்காளிகவுண்டர் மகன் காகத்தலை கவுண்டர். பல வருஷங்களாக தேர்த்திருவிழாவும் நடத்தியவர். கலியாணியில் பொங்காளியம்மன் கோயிலில் பண்ணை கூட்டத்தாரோடு காணியாட்சி அதிகாரம் கொண்டுள்ளனர்.






கலியாணி காணியின் காணியாளர் தூரன் கூட்ட நஞ்சைய கவுண்டர் சேர்ந்த தூரன் கூட்ட காணியூர்களை தொகுத்துக் கூறும் "கட்டி மகிபன் பள்ளு" நூலின் பகுதி

எல்லா நாட்டு தூரன் கூட்டத்தாரும் ஒருமுறை திருச்செங்கோட்டில் ஒன்று கூடி தங்கள் கூட்டதிற்கென சமய காரியத்துக்காக தேவரடியார் நியமனம் செய்தனர். அந்த செப்பேடு இன்றும் அய்யம்பாளையம் மடத்தில் இருக்கிறது. கீழ்க்கரை பூந்துறை நாட்டின் குலகுரு மடமான ஐயம்பாளையம் மடத்தில் பல திருப்பணிகளும், முந்தைய குலகுரு பட்டாபிஷேகமும் தூரன் கூட்டத்தார் தலைமையில் நடந்துள்ளது.இன்றும் மடத்தில் எல்லா விசேஷங்களிலும் தூரன் கூட்டத்தார் முன்னணியில் வந்து பங்கெடுத்துக் கொண்டு சிறப்ப்பிக்கிறார்கள்.

தூரன் குல செப்பேடு 


மொடக்குறிச்சி காணியாளர்கள் கடிதம், 1910

குமாரமங்கலத்தில் இருந்து குலகுருவுக்கு கடிதம்,  1918
குறுப்பு நாடு முகுந்தனூர் காணியாளர் தூர கூட்ட முத்துகவுண்டர், செல்ல குல செம்பிரிச்சி கவுண்டருக்கு வேட்டுவருடனான போரில் உதவி செய்தவர். அதன்காரணமாக செம்பிரிசி கவுண்டர் மரம்பிடுங்கிப் பட்டக்காரர் என்று பட்டம் பெறுகிறார்.

திருசெங்கோட்டில் இருந்து பொங்கலூர் நாடு சென்று குடியமர்ந்த தூரன் கூட்டம் இன்றும் குமாரமங்கலம் வந்து குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள். அங்கிருக்கும் சில கிராமங்களில் தூரன் கூட்ட குடியானவர்கள் கொடுவாய் ஓதாள கூட்டத்தினருடன் சுமார் முன்னூறு வருஷமாக கல்யாண உறவு கொண்டுள்ளனர். இந்த வழியில் பார்த்தால் தீரன் சின்னமலை குடும்பத்திற்கு சகலைகள் என்றே தூரன் கூட்டத்தவர்களை சொல்லலாம். இன்றும் அவர்கள் வம்சாவளியினர் சுமார் நானூறு குடும்பங்கள் இருக்கிறார்கள்.




6 comments:

  1. தேடிக்கெண்டிருந்த நிறைய தகவல்கள் கிடைத்தது.. நன்றி....

    ReplyDelete
  2. நிரைய தகவல்கள் தெரிந்து தூரன் கூட்டத்தில் பிறந்தது மிக்க மகிழ்ச்சி தான் எனக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. நம்ம கவுண்டர் இனத்தின் தலைவர்கள் மன்னர்கள் பெயரை பதிவிடவும் நமது இளைஞர் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. குமாரமங்கலம் பொன்காளியம்மன் ஆலயத்தில் முன்னுரிமை அதவாது "முப்பாடு" பாண்டியவேட்டுவருக்கு தான் அதுயன்ன வரலாறு பின் அந்த தூரன் குல செப்பேடு சாட்சிகையெழுத்து வைத்த வாளரச மனவளரஂ பாணஂடி௧வுணஂடரஂ அவரஂ யாரஂ

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates