Trending

Monday 31 December 2012

வேலையின்மை - கொங்கு மக்கள் சவால்


போலி வன்கொடுமை வழக்குகள்


கொங்கு வரலாற்றில் கன்ன குலம்

கன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், கோட்டை கொத்தளம், 34 தலைமுறை தொடர்ந்து ராஜ்ய பரிபாலனம் என கொங்கதேசத்தின் மிக நீண்ட ஆட்சியை நடத்திய கன்ன குலத்தின் பெரியோர் சிலரை பற்றிய பதிவு.

கன்னிவாடி மும்முடி மன்றாடியார்:
-------------------------------------------------------
மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலானது அக்காலத்தில் மிக பிரசித்தம். கொங்கு மக்கள் அனைவரும் பொதுவாக வணங்கும் தெய்வமாகும் (அனைத்து கொங்கு மக்களுக்கும் ஆதி காணி என்பாரும் உண்டு. இதர (சோழிய/பாண்டிய/வீரக்கொடி) வேளாளரும் இங்கு வந்து வணங்குவர். அண்ணன்மார் கதை மூலமும் அறியலாம். கோவில் விழா மூவேந்தர்களும் வந்திருந்து சிறப்பு செய்யும் வண்ணம் விமரிசையாக கொண்டாடப்படும். அப்படி ஒரு சிறப்புமிக்க விழா காலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கன்னிவாடி வந்த குடியானவர் கன்னிவாடி காணிக்குரிய கன்னகுல கந்தசாமி கவுண்டர் மகன் நல்லதம்பி கவுண்டரும் சென்றிருந்தார். 

விழாவின் போக்கில் இணக்கத்தோடு இருந்த மூவேந்தருக்கும் கோவிலின் மேல் உள்ள அதிகாரம் குறித்து எல்லை தகராறு ஏற்பட்டது. ஆனால் அதை தீர்த்து வைக்க துணிவோ, திறமையோ எவருக்கும் ஏற்படவில்லை. மூன்றில் ஒரு அரசனுக்கு பாதகமாக பேசிவிட்டாலும் தலை தப்பாது என்ற பயம். பஞ்சாயத்து செய்வதில் வல்லவரான நல்லதம்பி கவுண்டர் முன் வந்தார். மூவேந்தரையும் தீர்ப்புக்கு கட்டுப்படும் உறுதியை வாங்கிக்கொண்டு, வாதங்களையும் பிரதிவாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் புதிய யோசனையாக மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலையே மையமாக வைத்து மூன்று கூறாக வேந்தர்களின் எல்லைகளை வகுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான தீர்ப்பை கூறினார். அக மகிழ்ந்து போன மூவேந்தர்களும் நல்லதம்பி கவுண்டரின் திறமையை கொண்டாடி அவருக்கு “மும்முடி மன்றாடியார்” என்னும் பட்டத்தோடு கன்னிவாடி ராஜ்ஜிய அதிகாரத்தையும் வழங்கினர். கொங்கு நாட்டின் பட்டகாரர்களில் மூவேந்தர்களும் முதன்முதலில் சூட்டிய மும்முடி பட்டம் கன்ன குலத்திற்கே ஆகும். பின்னர் அவர் வழி வந்த ஆட்சியாளர்களுக்கும் மூவேந்தர்ரின் குலகுருக்கள் வந்து முடிசூட்டி வைப்பார்கள். மூவேந்தருக்கும் நாட்டமையாக இருந்த நல்லதம்பி கவுண்டர் கன்ன குலத்தின் முதல் பட்டக்காரர்.




இவ்வளவு பெருமை மிகு ராஜ்ஜியத்தை, கன்ன குல பெண்ணின் சவாலுக்காக கலப்பு மணத்தை எதிர்த்து ராஜ்ஜியம் துறந்து வெளியேறிய மாண்பும் இதே கன்ன குலத்திற்கு சேர்ந்தது. 

ஒரு நாள் ஒரு அழிசாதி பெண்ணுக்கும் கன்ன குல பெண்ணிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அழிசாதிபெண் “உன்னை என் அண்ணனுக்கு கட்டி வைக்கிறேன” என்று சபதமிட, “எங்க வீட்டு கருநாயை உன் அண்ணனுக்கு கட்டி வைப்பேன்” என்று எதிர்சபதமிட்டார் கன்ன குல பெண். அரசனின் படையே அழிசாதிகளுக்கு சாதகமாக இருந்தும் தன் உறவினர்கள், வேட்டுவர், குடிவண்ணான், நாவிதர், தோட்டி துணையோடு பள்ளி மணமகனுக்கு கருநாயை கட்டிவைத்துவிட்டு, சபதத்தை நிறைவேற்றி, கன்னிவாடியை துறந்து வெளியேறினர் கன்ன குலத்தார். அப்போது பின்தொடர்ந்த படையை திசை திருப்ப பொற்காசுகளை சிதறி விட்டனர். அதை பொறுக்கி கொண்டு படை திசை மாறியது. அந்த இடமே இன்றைய (தாராபுரம் அருகே) பொன்பரப்பி. தங்கள் இன பெண்ணின் சபததிற்காகவும், குல மானதிற்காகவும்-பெரும் படையையும் எதிர்த்து, செயல் முடித்து, முடி துறந்த மாண்பை கொண்டாடியே தீர வேண்டும். இன்றுள்ள கன்னன்-கன்னந்தை, மோரூர்-மொளசி சர்டிபிகேட் நாட்டுகவுண்டர்கள் அனைவரும் இந்த நல்லதம்பி மன்றாடியாரின் வழித்தோன்றல்களே.

சூர்ய காங்கேயன்:
----------------------------
கன்னிவாடியை விட்டு வெளியேறிய நல்லதம்பி மன்றாடியார் தலைமையிலான கன்ன குலத்தார் பல்வேறு காணிகளில் குடியமர்ந்தனர். ஆதி கன்னன், ஆதி கன்னந்தை, ஆதி நாட்டார் என்று மூன்று பிரிவாக பிரிந்திருந்த கன்ன கூட்டத்தில் ஆதி நாட்டார் பிரிவு கண்ணபுரம் என்ற ஊர் உருவாக்கி குடியேறிவிட்டார்கள். நாட்டார் பிரிவல்லாதவர்கள் பட்டக்காரர் தலைமையில் வேறு இடங்களுக்கு சென்றனர். அங்கே ஆதி கன்ன கூட்ட குடியானவர் குடும்பத்தில், புங்கங்குடிசையில் ஒரு விடியற்காலை பொழுதில் இளம்சூரியனை போல் ஆண்மகவு பிறந்தது. சூர்யகவுண்டன் என்று பெயரிட்டனர். (காடை குல பட்டயத்தில் சூரிய காங்கேயன் ஆதி கன்னன் கூட்டம் என்றே குறிக்கப்படுகிறார்). சூர்யகவுண்டன் பெண் கட்டியது மோரூர் காணியாளர்களான ஆந்தை கூட்டத்தில் (மோரூர்-தற்போதைய திருச்செங்கோடு) கீழ்கரை பூந்துறை நாட்டு ஆந்தை குலத்தோர். நல்லதம்பி மன்றாடியாரும் திருச்செங்கோடு பகுதியில் குடியமர்ந்தார். (இன்றும் கன்ன குலத்தாரின் குல கோவில்களை கவனித்தால் கன்னிவாடியில் இருந்து திருச்செங்கோடு வரை வரிசையாக பல கோவில்கள் இருக்கும்). இப்படியாக கன்ன கூட்ட குடியானவர்கள் நாடோடிகளாக வந்து தங்களுக்கு உரிமையற்ற பூமியில் பிழைக்க நேர்ந்தது.

வளர்ந்த சூர்யகாங்கேயன் மக்கள் தனது அப்பிச்சிமாரின் அவைக்கு சென்று தனக்கென ஒரு நிலம் வேண்டுமென கேட்டார்கள். அவரின் உறவுகள் அனைவரும் பார்க்க சபைநடுவே “மூவேந்தர் சூட்டி கொடுத்த ராஜ்ஜியத்தையே தொலைத்த உங்களுக்கு காணி ஒரு கேடா..! பறைச்சேரி தான் உங்களுக்கு காணி..” என்று வார்த்தைகளால் சுட்டார். கூனி குறுகிப்போன சூர்யகவுண்டர் ஆங்காரமும் ஆற்றாமையும் தூக்கத்தை தொலைக்க, அங்கிருக்க முடியாது, வீரபாண்டிய மன்னனின் படையில் சேர்ந்தார். என்ன செய்வது கெட்டாலும் மேன்மக்கள் அல்லவா..! இளம் வயதிலேயே தனது வீரம்-அறிவுதிறத்தால் வெகு விரைவில் தலைமை பொறுப்புக்கு வந்தார். அந்த சமயத்தில் பாண்டியனாலும் வீழ்த்த முடியாதவாரு வானாதிராயன் என்னும் மன்னன் (இன்றைய ஆத்தூர்) பகுதியில் கோட்டை கொத்தளத்தொடு விளங்கினான். மன்னன் தொடர் தோல்வியால் மனம் உடைந்து வெதும்பி போய் இருந்தார்.

இதை சவாலாக ஏற்று சிறிய படையோடு கொங்குச்சிங்கம் கிளம்பியது. கோட்டையை நன்கு நோட்டம் விட்டார். பின்னர் பண்டிகை நாளில் கோட்டையின் தளபதிகள் வெளியே வந்தபோது ஒரு குழு உட்புகுந்து கோட்டையையும் ஒரு குழு வெளியில் இருந்த வீரர்களையும் கொரில்லா போர் முறையால் அழித்தது. வானாதிராயனை உயிரோடு பிடித்து வந்து வீரபாண்டியன் முன் நிறுத்தினார். சேகுவேரா, சத்ரபதி சிவாஜி, தீரனார், மாசேதுங், ஹோசிமின் போன்றோருக்கு முன்னரே சூர்யகவுண்டர் கொரில்லா யுத்த முறையை கச்சிதமாக பயன்படுத்தியது நினைவில் வைக்க வேண்டியது. 



இவ்வெற்றியால் சூரியகவுண்டருக்கு காங்கேயன் என்ற பட்டப்பேர் கிடைத்தது. வெற்றி மகிழ்ச்சி மனதை நிறைத்து விழியை நிரப்ப, பாண்டிய மன்னன் சூர்யகாங்கேயனின் வீரத்துக்கும் அறிவுக்கும் ரசிகனானான். “என்ன வேண்டுமோ, கேள் சூர்யகாங்கேயா” என கேட்க, தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை கொட்டினார். பாண்டிய மன்னனும் ‘இம்முடி காங்கேய மன்றாடி’ என்று பெயரிட்டு மோரூர் நாட்டின் பட்டத்தை சூர்யகாங்கேயனுக்கு அளித்தான்.

மோரூர் காணியில் கூனி குறுகி வெளியேறியவர் அதே காணி உட்பட நாட்டிற்கே பட்டக்காரராக திரும்பினார். மனதின் தீ பிரளயமாக மாற மோரூர் ரத்தகாடானாது. பைரவ உக்கிரத்தோடு ருத்திர தாண்டவம் ஆடினார் சூர்யகாங்கேயன். மாமன்மார்களின் பண்ணை, வீடு,மடம்,கோவில் என அனைத்தயும் உடைத்து அழித்து சர்வ நிர்மூலமாக்கி கோர தாண்டவம் ஆடினார். பதறியும் சிதறியும் தங்களின் தவறை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறினர். மோரூர் நாட்டை ஆண்ட சூர்யகாங்கேயன் தம்பி முத்துசாமி கவுண்டர் பின்னாளில் தனது முன்னோரின் கன்னிவாடி ராஜ்ஜியத்தையும் மீட்டு அங்கு திரும்பினார். அவரின் வழிவந்தவர்கள் மோரூர் நாட்டின் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தார்கள். மோரூரில் இருந்து முளசி நாடும் முளசி கன்னர்களும் பின்னாளில் கிளைத்தார்கள். மோரூர் காங்கேயர்கள் 34 தலைமுறைகளாக ஆட்சி செய்தனர். கொங்கு நாட்டின் மிக நீண்ட பட்டம் மோரூர் பட்டம்தான். திருசெங்கோட்டு மலை கோவிலுக்கு பெரும்பணிகள் செய்தார்கள்.

(சூர்யகாங்கேயனின் வாழ்க்கையை வரலாற்று நாவலாக எழுகரை சூர்யகாங்கேயன் என்னும் பெயரில் எடப்பாடி அமுதன் விரிவாக எழுதியுள்ளார். எண்: +91 94873 23457)



நாட்டு கவுண்டர் என்பது நிர்வாக பொறுப்பின் பேர்;அது ஜாதியில்ல. சூரிய காங்கேயன் இதை அன்றே உணர்த்தியவர். பண்டாரதுக்கு எழுதிக் கொடுத்த பட்டயத்தில், பிற காணிகளில் வாழ்ந்த தனது பங்காளிகளான காளமங்கலம் கன்னன், கண்ணபுரம் கன்னன், சித்தளந்தூர் கன்னன் போன்ற அனைவரையும் சேர்த்து "நாங்கள் 60 காங்கயர்களும்" என்று குறிப்பிடுகிறார். பட்டக்காரன் என்ற அகங்காரத்தால் தன் பங்காளிகள்-சொந்தபந்தங்களை அவமதிக்கும் துர்க்குணம் சூரிய காங்கேயருக்கு இல்லை. இது இன்றுள்ள கன்ன கூட்டத்தினர் மட்டுமல்ல, அனைத்து கவுண்டர்களும், பட்டக்காரர்களும் உணர வேண்டிய விஷயம். இதுபோன்ற நல்ல குணங்களால் தான் கன்னகூட்டம் இன்றளவும் சிறப்பாக பெருகி வருகிறார்கள்.

மோரூர் கன்னகுல காங்கேயர்கள் ஏராளமான சமயப் பணிகளையும், இலக்கியங்களையும் செயவித்துள்ளார்கள். தக்கை ராமாயணம், சிலப்பதிகார உரை போன்றவை குறிப்பிடத்தக்கன.



மொளசி அன்னத்தியாகி வேலப்ப கவுண்டர் 
-------------------------------------------------------------------
மோரூர் நாட்டின் கிளை நாடு முளசி நாடு. காலமங்கள கன்ன கூட்டத்து குடியானவர்கள் மொலசியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்களே பிற்காலத்தில் மொளசி நாடு பெற்று மொளசி கன்னன் கூட்டமாகினர்; கொளாநல்லி கன்னன் அண்ணார் வகையறா என்றும் காலமங்கள கன்னன் தம்பி என்றும் குறிப்பிடுவர். இன்றும் மொளசி இளையபெருமாள் கோயில் முதல் மண்டப கட்டளை அண்ணார் கட்டளை என்று கொளாநல்லி கன்னன் கூட்டத்துக்கு மரியாதை செய்யபப்டுகிறது. மொளசி கன்னன் கூட்டத்தார் மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள். மதுரையில் பஞ்சம் வந்த காலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை முளசிக்கு அனுப்பினான். அந்த படைக்கு குறைவின்றி சோறு போட்ட வேலைப்ப கவுண்டரின் பெருமையை உணர்ந்து, பின்னாளில் அதனை நினைவு கூர்ந்து பாண்டியன் அன்னத்தியாகி என்ற விருது கொடுத்து மரியாதை செய்வித்தான்.

முத்துசாமி கவுண்டர்: 
----------------------------------
மோரூரில் வாழ்ந்த ஆதிகன்ன குல குடும்பத்தில் தொன்றியவர் முத்துசாமி கவுண்டர். அவரை தூக்கிச் சென்று கண்ணிவாடியில் வளர்த்து பட்டக்காரராக்கியவர் நல்லதம்பி பண்டாரம். கவுண்டருக்கு மூன்று மனைவிகள். அவர் உயிர் நீத்த போது பதிவிரதைகள் மூவரும் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவரையும் ஓர் உருவாக வீரமாத்தி அம்மனாக கொங்கு மக்கள் வழிபடுகிறார்கள்.முத்துசாமி கவுண்டருக்கு விசுவாசமாக இருந்த பண்டாரம், நாவிதர், தோட்டி முதலியோரும் பட்டக்காரரோடு சேர்ந்து தீக்குளி இறங்கினர். பிற ஜாதியினரை அரவணைத்து காப்பதில் கன்ன கூட்டத்தினர் சிறப்புடையவர்கள்.

மணலூர் செல்லாண்டியம்மன் கோட்டைகரையம்மன் 


கொங்கு நாட்டின் தோற்றம்

கொங்கு நாட்டின் தோற்றம்

கொங்கதேசம் உருவான விதம மற்றும் நாம் குடியமர்ந்தமை வரலாற்று ஆவணங்கள் மூலமாக மூன்று கட்டங்களாக நமக்கு தெரிகிறது. கரிகாலனுக்கும் அவன் 'காதலிக்கும்' பிறந்த ஆதொண்டுக்கு தொண்டை தேசம் பிரித்து கொடுத்த பின்னர், அவன் தனது தகுதியை உயர்த்திக் கொள்ள வெள்ளாளரிடம் பெண் கேட்க, அவர்கள் மறுத்துவிட்டு கருநாயை கட்டிவைத்துவிட்டு தேசம் விட்டு கிளம்பியபோது சேரமன்னர் தடுத்து தனது தேசத்தில் வர சொல்லியதன் பொருட்டு சென்றது முதல்முறை. அப்போது கொங்கதேசம் மலைகள் சூழ்ந்த காடாக இருந்தது. இரண்டாவது குடியமர்வு கிராதகாதி சாதிகளை வெட்டி முடுக்கிவிட சேரர் எண்ணத்தின் பொருட்டு வந்தமை. மூன்றாவது கரிகாலன் மகள் சோழ நாட்டின் இளவரசி ஆட்டனத்தி சேரனுக்கு மணமுடிக்கபட்டபோது சோழ இளவரசியோடு சேர நாட்டுக்கு அனுப்பப்பட்டமை. அக்காலத்தில் பொன், பொருள், ஆநிரை, குதிரை, யானை போன்ற சீதனன்களோடு பெண்ணுக்கு ஆதரவாக குடிகளையும் அனுப்புவது வழக்கம். அது அந்த பெண்ணுக்கு ஒரு தாய்வீட்டு ஆதரவு கரமாகவும், ராஜ்யத்தில் ஆதரவு கோஷ்டியாகவும் செயல்பட நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டும் கூட.


அப்படி வந்த சமயத்தில் கொங்கு நாடு என்பது காடுகளும் மேடுக்களுமாக கிடந்த பூமி. காடுகளை சீர்படுத்தி, புதர்களையும் பாறைகளையும் அகற்றி, பாத்திகள் பிடித்து, நீர்வழிகள் உருவாக்கி விவசாய பூமிகளாக  மாற்றினார்கள். தங்கள் பூமி மட்டும் இல்லாது ஒவ்வொரு ஊருக்குமான நீராதார குளங்களையும் ஏரிகளையும் வாய்க்கால்களையும் உண்டாக்கினார்கள். காலப்போக்கில் பல்கி பெருகி கிளைத்து இனக்குழுக்களாக வளர்ந்தார்கள். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கூட்ட வழக்கங்ககளை உருவாக்கினார்கள். தங்களுக்கென்று உணவு, உடை, கட்டுமானம், கலை, விலங்கினங்கள் என்பன மட்டும் இன்றி பண்பாடுகளையும், நியதிகளையும், நிகழ்ச்சிகளையும்  வளர்த்தெடுத்தார்கள். பின்னர் ஒவ்வொரு குலமும் தங்களுக்கென குலதெய்வம், கோவில், காணி, குலகுரு என்று பரிணமித்தார்கள். அவ்வாறு வகுக்கப்பட்டவை அறம் சார்ந்து காலகாலதிற்க்கும் பொருந்தும்படி எளியவரும் பின்பற்றும்படியாக உருவாக்கபட்டது. இவ்வாறான சிறந்த வழக்கங்களால் தன்னிறைவடைந்த தற்சார்பு நிலையை எட்டினர்.

கொங்கு நாட்டில் பின்னர் பஞ்சம் பிழைக்கவும் நாடோடிகளாகவும் வந்த மக்களையும் அரவணைத்து அவர்களுக்கென்று வசிக்க இடம், உணவு, உடை, பாதுகாப்பு எல்லாம் தந்து தங்கள் வீட்டு விசெசங்களிலும் பங்கெடுக்கும் வண்ணம் அவர்களுக்கும் சில சடங்கு பொறுப்புக்களை கொடுத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியையும் ஒதுக்கி தந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வண்ணார், நாவிதர், பண்டாரம், குயவர், சாணார், தோட்டி, சக்கிலியர் முதலானோர் ஆவர். இதிலும் கொங்கு செட்டியார் என்னும் மரபினர் சோழ நாட்டில் அவர்கள் இன பெண்ணின் கொலைக்காக  போர் தொடுத்து பின் கொங்கு மக்களுடன் கொங்கு நாட்டுக்கே அடைக்கலம் கொடுத்து வரப்பட்டவர்கள் .குடும்ப குழுக்களாக இருந்தவர்கள் பின் சமூக அமைப்பாக வாழ துவங்கினர்.

இடையில் வேட்டை தொழிலைகொண்ட இன குழுக்களோடும் வேறு சில இன குளுக்கலோடும் வேளாண் தொழில் செய்தவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் வீரத்தாலும் ஒழுக்கத்தாலும் வென்ரெடுத்து ஆட்சியை நிலை நாட்டினர்.
24 நாடுகளாகவும் கிளை காநிகலாகவும் 60 மேற்பட்ட கூட்டங்கலாகவும் பிரித்து, நாட்டுக்கு ஒரு பட்டக்காரன், காநிக்கொரு பெரியதனகாரன், ஊருக்கு ஒரு கொத்துகாரன், சீருக்கு ஒரு அருமைக்காரன் என தங்களுக்கென ஒரு ஆட்சி-நிர்வாக முறைகளை வகுத்து கொங்கு நாட்டுக்கென தனி கலாசாரம், பண்பாடு, போர்முறைகள், ஆயுதங்கள், கோட்டை கொத்தளங்கள், கொடி, முத்திரை என்று அரசு நிர்வாகமும் கைவந்த கலையானது. பல்வேறு காலகட்டங்களில் கொங்கு நாடு சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியானாலும் கொங்கு நாட்டு ஆட்சியாளர்கள் என்றும் மரியாதைக்குரியவர்களாக நடத்தபட்டார்கள். சில காலங்களில் யாருக்கும் கட்டுப்படாத சுயராஜ்யமாகவும் இருந்தது.

எனவே கொங்கு நாடு என்பது கவுண்டர்கள் வரவுக்கு முன் வெறும் காடு கவுண்டர்கள் வரவுக்கு பின் கொங்கு நாடு, அவ்வளவே. கொங்கு நாட்டுக்கென ஆதியில் இருந்து அந்தம் வரை- பிறப்பிலிருந்து இறப்பு வரை, பண்பாடு நாகரீகம் வரை அனைத்தையும் வளர்த்தெடுத்த கொங்கு வேளாள கவுண்டர்களே மண்ணின் மைந்தர்கள்.



சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?
  - நன்றி: மூன்றாம் கோணம் 


சமீபத்தில் நடந்த தர்மபுரி சம்பவம், ரொம்ப நாள் அமுங்கி கிடந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது. அதுதான் ஜாதி விட்டு ஜாதி காதல் பிரச்சின. வன்னியர் சமூகம், தன் சமூகப் பெண்ணை அருந்ததியர் சமூக ஆண் கவர்ந்து சென்றதை, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. 

இது வெறும் கலப்பு மணம் அல்ல. திட்டமிட்டு இளம் பெண்களை திருமாவளவன் கட்சி இளைஞர்கள் கவர்ந்து செல்லும் ஒரு களவு என்கிறார் பா..க தலைவர் ராமதாசும், காடுவெட்டி குருவும். இதைப் பற்றி பி.பி.சி வானொலிக்கு அவர்கள் அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்கள். பள்ளிக்கூட பெண்ணை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதத்தில் திருப்பி அனுப்பினால், அப்பெண்ணின் அண்ணனோ தந்தையோ என்ன செய்வார் என்று கேள்வி எழுப்புகிறார். நியாயமான கேள்வி! கடலூரில் மட்டும் 2000 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.

இதற்கு முன்பு, கொங்கு மண்டலத்தில்,பொங்கலூர் மணிகண்டன், சாதி மறுப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தை நடத்தியது, தமிழ்நாட்டில் பலரை திரும்பி பார்க்க வைத்திருந்தது. இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், விவசாய சமூகமான கொங்கு வெள்ளாளரின் சொத்தை குறி வைத்தே அந்த சமூகத்தின் இளம்பெண்களை மயக்கி திருமணம் செய்கிறார்கள் என்கிறார்.

சாதியை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு சென்று அதை ஒழிக்கும் ஒரு புரட்சிகர ஹீரோ ரேஞ்சுக்கு தன்னை தானே உயர்த்தக் கொண்ட திராவிட கட்சிகளுக்கு, இது ஒரு மிகப்பெரும் பேரிடியாக இறங்கியிருக்கிறது. இதுவரை யாரும் அவர்களை சித்தாந்த ரீதியாக இப்படி எதிர்த்திருக்க வில்லை. முதல் முறையாக பல சாதிகள் சேர்ந்து இவர்களை எதிர்த்து பொது மேடையில் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

திராவிட கழகத்தின் சவக்குழி உறுதியாகிவிட்டதையே இது காட்டுகிறது. முன்பு திராவிடர் கழகம் வளர்ந்தது, வெள்ளாளர், முதலியார், செட்டியார் போன்ற சாதிகளின் ஆதரவினால்தான்.. ஆனால், தன்னை ஆதரித்த சாதிகளையே அழிக்க துடிக்கும்பொழுது, அந்த சாதிகள் இன்று எதிர்த்து நிற்கிறது என்பதுதான் நிஜம். தாங்கள் செய்த முட்டாள்தனத்தை இந்த சாதிகள் இப்பொழுது உணர்ந்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் MLA NS.பழனிச்சாமி கலப்பு மண எதிர்ப்பு கூட்டத்தில் பேசியதை கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=28GgYS10mcA

இவ்வளவு எதிர்ப்புகள் வந்தும், இந்த திராவிட கட்சிகள், இந்த மாதிரி கலப்பு மணத்தை ஒரு சமூக புரட்சி என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்வது மாதிரி உண்மமையிலேயே இது ஒரு சமூக புரட்சியா என்று பார்ப்போம்.

அதற்கு சாதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

1.
சாதிகளை பற்றிய கண்ணோட்டம்:

சாதி என்றாலேயே அடக்குமுறை என்ற ஒரு பிரச்சார வலையை திறம்பட திராவிட கட்சிகளும் கம்யுனிச கட்சிகளும் நிறுவியிருக்கிறார்கள். அதனால், சாதி பற்றிய உண்மையான புரிதல் பெரும்பாலானோர்க்கு இல்லை. இதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

சாதிகள் என்பது ஆயிரக்கணக்கான வருஷமாக வாழ்ந்து வரும் ஒரு சமூக குழு. ஒவ்வொரு சாதிக்கும் தனித் தெய்வங்கள் இருக்கிறது. குல தெய்வம் என்று சொல்லப்படும் அந்த தெய்வத்தை வைத்தே அவர்களின் கலாசாரமும் பாரம்பரியமும் ஏற்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு சாதியும் கோத்திரம் என்ற பிரிவுகளால ஆனது. கோத்திரம் என்பது ஒரு தகப்பன் வழி வந்த ஆண் வாரிசுகளின் குடும்பங்களால் ஆனது. அதனால் ஒரே கோத்திரத்த்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகள். அதனால் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்யமாட்டார்கள். அதே சாதிக்குள் இருக்கும் இன்னொரு கோத்திரத்தில்தான் திருமணம் செய்வார்கள். இது தலித் சாதி உட்பட எல்லா சாதிக்கும் பொருந்தும். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தனியாக குல தெய்வ கோயில் இருக்கும்.திருமணம் என்று வரும்பொழுது, அத்தை பிள்ளை மாமன் பிள்ளையையே கல்யாணம் செய்வார்கள். இது தென்னிந்தியா முழுதும் இருக்கும் வழக்கம்.
ஒரே சாதி மக்கள் பல பகுதிகளில் இருந்தாலும், அந்தந்த பகுதியில் இருக்கும் மாமன் மச்சினன் கோத்திரத்துக்குள்ளேயே கல்யாணம் செய்வார்கள். காரணம் தூரத்தில் திருமணம் செய்தால் குடும்ப விசேஷங்களுக்கு சொந்த பந்தங்கள் வர முடியாது என்பதுதான். சில சாதிகளில் கோத்திரத்திற்கு பெயர் இருக்கும். சில சாதிகளில், பெயர் இருக்காது. ஆனால் அவர்களின் குல தெய்வ கோயில்களை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஊட்டியில் இருக்கும் படுகா சாதியில், ஊரை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

முன்காலத்தில், மக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு குடியேறும்பொழுது, மாம்ன் மச்சினன் குடும்பத்துடனே இடம்பெயர்வார்கள். அதனால், அவர்கள் வேறு ஜாதியில் திருமணம் செய்யும் வாய்ப்பு அரிது.

ஆக சாதிகள் என்பது உறவுமுறைகளால் ஆன ஒரு சமூக கட்டமைப்பு. ஒவ்வொரு மக்களும் தன் சாதியுடன் கலாச்சார ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளார்கள. 

2.
கலப்பு மணம் சமூக புரட்சியா?

இன்று தமிழ்நாட்டில், பெரும்பான்மையான சாதிகளான வன்னியர்கள், கொங்கு வெள்ளாளர்கள், செட்டியார்கள், முக்குலத்தோர், பள்ளர்கள், நாடார்கள், பிள்ளைமார்கள் போன்ற சாதிகள் அனைத்தும் இந்த சாதிக் கலப்பு திருமணத்தை ஆரம்பம் முதற்கொண்டே எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட வேண்டியது, பள்ளர்களை பட்டியல் வகுப்பு என்று அரசாங்கம் வகைப்படுத்தியிருக்கிறது. (இதை அவர்கள் விரும்பவில்லை என்பது வேறு கதை). சமீபத்தில், கொங்கு அருந்ததியர் என்னும் இன்னொரு பட்டியல் வகுப்பு சமூகமும், பொதுக் கூட்டம் கூட்டி, இந்த சாதி அழிப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. (பத்திரிக்கையிலோ அல்லது மீடியாவிலோ வெளிவரவில்லை என்பது தனிக்கதை).

இப்படி, கலப்பு திருமணத்தை எதிர்க்கும் மேலே சொன்ன சாதிகள் அனைத்தும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 95 சதவிகிதம் ஆவார்கள். ஆக பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்ற ஒரு விஷயம் எப்படி சமூக புரட்சியாகும். இது ஒரு சமூக அடக்குமுறை என்பதே உண்மை. 

எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள், மற்றூம் சித்தாந்த ரீதியிலான அமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பெரும்பான்மையான மக்களை சட்டத்தின் 

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates