Trending

Monday 31 December 2012

சுப.வீரபாண்டியனுக்கு எனது பதிலும் எதிர்கேள்விகளு


சுப.வீரபாண்டியனுக்கு எனது பதிலும் எதிர்கேள்விகளும்..



மக்களுக்காக நிகழ்ச்சியில் சுபவீ அவர்களின் பல்வேறு வாதங்களுக்காக ஒரு பார்வையாளனாக எனது பதிலும் எதிர்கேள்விகளும்.

http://www.youtube.com/watch?v=m2G47cdm0OM&feature=youtu.be

பதில்கள்:
1.       காதல் இயற்கையில் வருகிறது என்கிற வாதம் வைக்கும் சுபவீக்கு ஏவி விடப்படும் தலித் அமைப்புக்கள்-இளைஞர்கள் குறித்து அறியாமல் இருப்பது விநோதமானது. செயற்கையாக ஏவி விடபடுவதும் திநிக்கபடுவதும் தெரியாதா..? வன்கொடுமை வழக்குகள் பதியாமல் இருக்கா பேரம் பேசுவதும், பதிந்தவை 90% மேல் போலியானது என்பதும்  தெரியாதா?? தூங்குவது போல் நடிக்க வேண்டாம்!
2.       தமிழ் கலாச்சாரமா..?? எங்கே இருந்தது தமிழ் கலாச்சாரம். தமிழ் கலாச்சாரம் என்று சொல்லப்படும் அனைத்தும் பல்வேறு பண்பட்ட சாதிகளின் குடும்ப வழக்கங்கள் தான. சங்க காலத்தில் தமிழன் யார..? சேரன்-சோழன்-பாண்டியன் இருந்தான் பல்வேறு இனக்குழுக்கள் இருந்தன. தமிழன் என்ற பகுப்பே கிடையாது. ஆட்சியை பிடிக்க, அரசியல் பிழைப்பு நடத்த, கூட்டம் சேர்க்க கண்டுபிடித்த சொல் தமிழன். சங்க காலத்தில் தமிழன் என்பவன் தமிழ் பேசுபவன் என்று மட்டுமே அறியபட்டான்.
3.       பேருந்தில் அந்தணராகவே இருந்தாலும் சுகாதாரம் நாகரீகம் கருதி ஒட்டாமல் அமருவதுதான் பண்பாடு. பண்பட்டவர்களுக்கு புரியும்.
4.       சாதி என்பது எங்கள் தொழில், கலாசார அடையாளம். ஏர் எழுபதில் கம்பர் “சாதிவளம் படைத்த காராளர் என்றே குறிப்பிடுகிறார். இங்கு சாதி என்பது பண்பாடு கலாச்சார வளம் என்று பொருள்படும். நீங்கள் சொன்னது போல் எந்த ஒரு நல்ல விசயத்திலும் சில குறைகள் விலக்குகள் இருக்கத்தான் செய்யும்; அதுபோல சாதி கலாச்சாரத்தில் வன்கொடுமை புகுந்தது பிழைதான். அதற்காக? பூகம்பதுக்கு பயந்து வீதிகளில் குடியிருக்க சொல்வதுபோல-உங்கள் வாதம் சாதியி ஒழிக்க சொல்வதில் உள்ளது.

எதிர்கேள்விகள்:
1.       திராவிடர் ஆரியர் என்று மக்கள் பாகுபாட்டையும் வளர்த்து கண்மூடித்தனமாக, ‘பிராமணர்களை கொல் என்று சொன்ன இயக்கம் தி.க. இவர்களுக்கு கலாச்சார பாகுபாடான சாதியை எதிர்க்க-சமத்துவத்தை பற்றி பேச என்ன உரிமை உள்ளது..?

2.       இளவரசனும் திவ்யாவும் காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டார்கள். இப்போது ஜாதி ஒழிந்து விட்டதா..?? லட்சம் மடங்கு பெருகி உள்ளது!
3.       பாமக கொமுகவை சாடிவிட்டு கலைஞருக்கு கண்மூடி கண் திறந்தால் ஜால்ரா அடிக்கும் சுபவீ: திமுக சாதீய மதவாத கட்சிகளோடு கூட்டணி வைத்தபோது எங்கே போனார்..? பிராமணரான பிரணாப்பை குடியரசு தலைவர் ஆக்க ஆதரித்த போது சுபவீ ஊமையானதன் காரணம் என்ன?
4.       எல்லா விஷயங்களிலும் சில பிழைகள் இருக்கசெய்யும்! அடடா கண்டுபிடிப்பு!! – கலப்பு திருமணங்கள் 75% தோல்வியில் முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் உண்மை. இதுதான் ‘சில பிழைகளா?? இதனால் ஏற்படும் உயிர் இழப்பு; வாழ்க்கை இழப்பு இவற்றிற்கு என்ன பதில்??

5.       சாதி மறுப்பு திருமணம் என்னும் நாமகரணம் வேடிக்கையானது. சாதியை மறுக்க வேண்டும் என்ற ‘உயர்ந்த குறிக்கோளுக்காக காதலிப்பது போல் பேசக்கூடாது. அப்படி சாதி ஒழிக்க காதலிக்கிறவர்கள் காரணத்தை சொல்லி காதலை வெளிபடுத்துவார்களா..? பருவ கோளாறு-கெட்ட நேரம்-அறியாமை போன்றவற்றால் நிகழும் விபத்து. பெற்றோருக்கு தெரியாமல் நடப்பதால் திருட்டு கல்யாணம் எனவும், சொத்துக்காக ஏவிவிடபட்டு நடப்பதால் நாடக கல்யாணம்-போலி கல்யாணம் எனவும் சொல்லலாம்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates