Trending

Monday 31 December 2012

தாலி அணியாத மணமான பெண்கள்


தாலி அணியாத மணமான பெண்கள்

ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய மண அடையாளமாக மஞ்சள் கயிறு இருந்தது. எளியவர்களை மனதில் நிறுத்தி சமூக விழாக்களை அமைத்த மரபை உணர்த்தும் மிக சிறந்த உதாரணம் நமது தாலி கயிறு. ஆனால் தற்காலங்களில் தாலி கயிறை நகர பெண்கள் அணியாது திரிகிறார்கள். தாலியை செயினில் கோர்த்து போடுபவர்களும் மாங்கல்யத்தை மறைத்து போடுகிறார்கள். 

இதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கும் தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு குறைவதாக பெண்கள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை.

இதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது..? ஆண்கள்தான் மெட்டி அணிய வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் மெட்டியை ஆண்களிடம் கொடுத்துவிட்டு தாலி கயிரை அணியவேண்டியதுதானே.

என் அக்கா தாலிகயிறு அணியாமல் ஒரு விசேசதுக்கு வந்தபோது வீட்டுக்குள் விடாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டேன். அதை பார்த்த என் சித்திகள் இருவரும் அடுத்தநாளே தாலிக்கயிறு அணிந்து விட்டனர். கணவனையே மதிக்காதவள் சகவாசம் நமக்கு எதற்கு என்பதே என் எண்ணம்.

என் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே  மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம்  இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம். நியாயமான வார்த்தை!



No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates