Trending

Sunday 30 December 2012

சமூக ஆளுமை


சமூக ஆளுமை

ஒவ்வொரு சமூகமும் முன்னேறவும் ஆளுமை (அரசியல்/பொருளாதாரம்) பெறவும் இருக்க வேண்டிய விஷயங்கள் என சிலவற்றை நாம் வரலாறு மூலம் அறியலாம்.

௧. உயர்ந்த சமூகம் தாழ்ந்த சமூகம் என்றில்லை. ஆளும் சமூகம் உயர்ந்ததாகவும், மற்றவை ஆள்பவர்களின் அடக்குமுறைக்கும்,அழிவுக்கும் ஆட்படுத்தபடும் சமூகங்களாகவும் இருக்கும். அதில் இருந்து தப்ப அரசியல்/பொருளாதார/நில ஆளுமை அவசியம்.

௨. மக்கள் தொகை – அதிகம் தேவை (தற்போது கொங்கு சமூகம் மக்கள் தொகையில் மிக வேகமாக வீழ்ச்சிகண்டு வருகிறது)

௩. ஒற்றுமை – இருக்கும் மக்களில் ஒற்றுமை.

௩. வீரம் விவேகம் – இருக்கும் மக்கள் தொகையில் துணிவும் விவேகமும் உள்ள மக்கள் வேண்டும் தலைமைக்கு.

௪. கலாச்சார கட்டமைப்பு – மேற்கூறிய யாவும் ஒரு நிலையை அடைய உதவும். கலாச்சார கட்டமைப்புதான் அந்த ஆளுமையை நிலை நிறுத்தும்.
வரலாற்றில் சில காலங்களில் கொங்கு நாட்டில் பிற சமூகத்தினர் பலர் மக்கள் தொகையில் கொங்கு சமூகத்தை மிஞ்சி இருந்தார்கள். அப்போது நம்மவர்களின் சமூக கட்டமைப்பும், ஒற்றுமையும் தான் நம்மை காப்பாற்றியது. நம் கலாச்சார கட்டமைப்பையும் ஒற்றுமையும் தூண்டும் ஆணிவேர்கள் தான் நம் குலதெய்வ கோவில்கள்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates