Trending

Monday 31 December 2012

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?

சமூக புரட்சியா இல்லை சமூக கற்பழிப்பா?
  - நன்றி: மூன்றாம் கோணம் 


சமீபத்தில் நடந்த தர்மபுரி சம்பவம், ரொம்ப நாள் அமுங்கி கிடந்த ஒரு முக்கியமான பிரச்சினையை மிகவும் பகிரங்கமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது. அதுதான் ஜாதி விட்டு ஜாதி காதல் பிரச்சின. வன்னியர் சமூகம், தன் சமூகப் பெண்ணை அருந்ததியர் சமூக ஆண் கவர்ந்து சென்றதை, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. 

இது வெறும் கலப்பு மணம் அல்ல. திட்டமிட்டு இளம் பெண்களை திருமாவளவன் கட்சி இளைஞர்கள் கவர்ந்து செல்லும் ஒரு களவு என்கிறார் பா..க தலைவர் ராமதாசும், காடுவெட்டி குருவும். இதைப் பற்றி பி.பி.சி வானொலிக்கு அவர்கள் அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்கள். பள்ளிக்கூட பெண்ணை காதல் வயப்படுத்தி திருமணம் செய்து, 6 மாதத்தில் திருப்பி அனுப்பினால், அப்பெண்ணின் அண்ணனோ தந்தையோ என்ன செய்வார் என்று கேள்வி எழுப்புகிறார். நியாயமான கேள்வி! கடலூரில் மட்டும் 2000 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.

இதற்கு முன்பு, கொங்கு மண்டலத்தில்,பொங்கலூர் மணிகண்டன், சாதி மறுப்பு உறுதிமொழி ஏற்பு கூட்டத்தை நடத்தியது, தமிழ்நாட்டில் பலரை திரும்பி பார்க்க வைத்திருந்தது. இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், விவசாய சமூகமான கொங்கு வெள்ளாளரின் சொத்தை குறி வைத்தே அந்த சமூகத்தின் இளம்பெண்களை மயக்கி திருமணம் செய்கிறார்கள் என்கிறார்.

சாதியை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு சென்று அதை ஒழிக்கும் ஒரு புரட்சிகர ஹீரோ ரேஞ்சுக்கு தன்னை தானே உயர்த்தக் கொண்ட திராவிட கட்சிகளுக்கு, இது ஒரு மிகப்பெரும் பேரிடியாக இறங்கியிருக்கிறது. இதுவரை யாரும் அவர்களை சித்தாந்த ரீதியாக இப்படி எதிர்த்திருக்க வில்லை. முதல் முறையாக பல சாதிகள் சேர்ந்து இவர்களை எதிர்த்து பொது மேடையில் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

திராவிட கழகத்தின் சவக்குழி உறுதியாகிவிட்டதையே இது காட்டுகிறது. முன்பு திராவிடர் கழகம் வளர்ந்தது, வெள்ளாளர், முதலியார், செட்டியார் போன்ற சாதிகளின் ஆதரவினால்தான்.. ஆனால், தன்னை ஆதரித்த சாதிகளையே அழிக்க துடிக்கும்பொழுது, அந்த சாதிகள் இன்று எதிர்த்து நிற்கிறது என்பதுதான் நிஜம். தாங்கள் செய்த முட்டாள்தனத்தை இந்த சாதிகள் இப்பொழுது உணர்ந்துள்ளது.

சமீபத்தில் முன்னாள் MLA NS.பழனிச்சாமி கலப்பு மண எதிர்ப்பு கூட்டத்தில் பேசியதை கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=28GgYS10mcA

இவ்வளவு எதிர்ப்புகள் வந்தும், இந்த திராவிட கட்சிகள், இந்த மாதிரி கலப்பு மணத்தை ஒரு சமூக புரட்சி என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொல்வது மாதிரி உண்மமையிலேயே இது ஒரு சமூக புரட்சியா என்று பார்ப்போம்.

அதற்கு சாதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

1.
சாதிகளை பற்றிய கண்ணோட்டம்:

சாதி என்றாலேயே அடக்குமுறை என்ற ஒரு பிரச்சார வலையை திறம்பட திராவிட கட்சிகளும் கம்யுனிச கட்சிகளும் நிறுவியிருக்கிறார்கள். அதனால், சாதி பற்றிய உண்மையான புரிதல் பெரும்பாலானோர்க்கு இல்லை. இதைப்பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

சாதிகள் என்பது ஆயிரக்கணக்கான வருஷமாக வாழ்ந்து வரும் ஒரு சமூக குழு. ஒவ்வொரு சாதிக்கும் தனித் தெய்வங்கள் இருக்கிறது. குல தெய்வம் என்று சொல்லப்படும் அந்த தெய்வத்தை வைத்தே அவர்களின் கலாசாரமும் பாரம்பரியமும் ஏற்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு சாதியும் கோத்திரம் என்ற பிரிவுகளால ஆனது. கோத்திரம் என்பது ஒரு தகப்பன் வழி வந்த ஆண் வாரிசுகளின் குடும்பங்களால் ஆனது. அதனால் ஒரே கோத்திரத்த்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகள். அதனால் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்யமாட்டார்கள். அதே சாதிக்குள் இருக்கும் இன்னொரு கோத்திரத்தில்தான் திருமணம் செய்வார்கள். இது தலித் சாதி உட்பட எல்லா சாதிக்கும் பொருந்தும். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தனியாக குல தெய்வ கோயில் இருக்கும்.திருமணம் என்று வரும்பொழுது, அத்தை பிள்ளை மாமன் பிள்ளையையே கல்யாணம் செய்வார்கள். இது தென்னிந்தியா முழுதும் இருக்கும் வழக்கம்.
ஒரே சாதி மக்கள் பல பகுதிகளில் இருந்தாலும், அந்தந்த பகுதியில் இருக்கும் மாமன் மச்சினன் கோத்திரத்துக்குள்ளேயே கல்யாணம் செய்வார்கள். காரணம் தூரத்தில் திருமணம் செய்தால் குடும்ப விசேஷங்களுக்கு சொந்த பந்தங்கள் வர முடியாது என்பதுதான். சில சாதிகளில் கோத்திரத்திற்கு பெயர் இருக்கும். சில சாதிகளில், பெயர் இருக்காது. ஆனால் அவர்களின் குல தெய்வ கோயில்களை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஊட்டியில் இருக்கும் படுகா சாதியில், ஊரை வைத்து மாமன் மச்சினனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

முன்காலத்தில், மக்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு குடியேறும்பொழுது, மாம்ன் மச்சினன் குடும்பத்துடனே இடம்பெயர்வார்கள். அதனால், அவர்கள் வேறு ஜாதியில் திருமணம் செய்யும் வாய்ப்பு அரிது.

ஆக சாதிகள் என்பது உறவுமுறைகளால் ஆன ஒரு சமூக கட்டமைப்பு. ஒவ்வொரு மக்களும் தன் சாதியுடன் கலாச்சார ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளார்கள. 

2.
கலப்பு மணம் சமூக புரட்சியா?

இன்று தமிழ்நாட்டில், பெரும்பான்மையான சாதிகளான வன்னியர்கள், கொங்கு வெள்ளாளர்கள், செட்டியார்கள், முக்குலத்தோர், பள்ளர்கள், நாடார்கள், பிள்ளைமார்கள் போன்ற சாதிகள் அனைத்தும் இந்த சாதிக் கலப்பு திருமணத்தை ஆரம்பம் முதற்கொண்டே எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட வேண்டியது, பள்ளர்களை பட்டியல் வகுப்பு என்று அரசாங்கம் வகைப்படுத்தியிருக்கிறது. (இதை அவர்கள் விரும்பவில்லை என்பது வேறு கதை). சமீபத்தில், கொங்கு அருந்ததியர் என்னும் இன்னொரு பட்டியல் வகுப்பு சமூகமும், பொதுக் கூட்டம் கூட்டி, இந்த சாதி அழிப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. (பத்திரிக்கையிலோ அல்லது மீடியாவிலோ வெளிவரவில்லை என்பது தனிக்கதை).

இப்படி, கலப்பு திருமணத்தை எதிர்க்கும் மேலே சொன்ன சாதிகள் அனைத்தும், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 95 சதவிகிதம் ஆவார்கள். ஆக பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்ற ஒரு விஷயம் எப்படி சமூக புரட்சியாகும். இது ஒரு சமூக அடக்குமுறை என்பதே உண்மை. 

எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள், மற்றூம் சித்தாந்த ரீதியிலான அமைப்பில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பெரும்பான்மையான மக்களை சட்டத்தின் 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates