Trending

Sunday 30 December 2012

கரிக்குருவியும் காராள வம்சமும்

விடியற்காலையில் கிராமங்களில் அந்நாளில் கரிக்குருவி வீட்டுமுன் வந்து கத்துமாம். அதன் சத்தம் "ஏர்பூட்! ஏர்பூட்!" என்பது போல் இருக்குமாம். அதாவது விடியற்காலையில் ஏர்பூட்ட நேரம் ஆகிவிட்டது என்பதை நினைவூட்டி எழுப்புமாம்.

காராள வம்சத்தார் (கொங்கு வெள்ளாளர்) கடமை தவறாது கரிக்குருவி வரும் முன்னரே வயலுக்கு சென்று விடுவார்களாம். அதனால் அக்குருவிக்கு தெரியுமாம், கவுண்டர் வீட்டில் தனக்கு வேலை இருக்காது என்று. அதனால்,

                     "காராள வம்சமிது; கரிக்குருவி நாடாது"

என்று பெருமையோடு சொல்லுவர். இன்று நம்மில் எத்தனை பேர் விடியற்காலையில் எழுகிறோம்..?



நாட்டமைப் பட பாடலில் கூட இந்த வரி வரும்..


1 comment:

  1. பொன்னர் - சங்கரின் மரணத்திற்குப் பின்னர் பாடப்படும் ஒப்பாரி பாடலில் வரும் வரிகள்:

    காகம் பறக்காது, கரிக்குருவி நாடாது, சிட்டு பறக்காது, சிவக்குருவி நாடாது'.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates