Trending

Monday 31 December 2012

பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன?


ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாணம் 
இன்று நம் சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சனைகளின் மூல காரணங்களில் ஒன்றாக பருவம் தவறிய கல்யாணங்கள் அமைகின்றன. “பருவத்தே பயிர் செய்” என்ற கோட்பாட்டிற்கு இணங்க நம் முன்னோர்கள் பருவத்தில் கல்யாணம் செய்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர். வெள்ளையர்களின் சூழ்ச்சிகளுக்கு ஏற்ற சமூக, அரசியல் சித்தாந்தங்கள் உலா வரும் நம் நாட்டில் அல்வேறு முகமூடிகளால் பருத்தில் கல்யாணம் செய்வதை கெடுத்துவிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, வெளிநாடுகள் நம் நாட்டிற்கு கடன் வழங்கையில் நிபந்தனையாக கல்விப் பருவத்தினை நீட்டிக்க வேண்டும் என்றும் அதனால் கல்யாண வயது உயர்ந்து சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார்கள்! (யாருடைய சமூகத்துக்கு என்பதுதான் புரியவில்லை). இன்றும் பருவத்தில் கல்யாணம் செய்யும் சாதிகளைப் பார்த்தால் அவர்கள் நல்ல சமூக, குடும்ப அமைப்பை உடையவர்களாகவும், ஆரோக்கியமான குழந்தைகள், மகிழ்ச்சியான மனது, பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டவர்களாகவும் இருக்கிறார்கள். சராசரியைவிட மிகக் குறைந்த அளவு விவாகரத்து, கள்ள உறவுகள், கலப்பு கல்யாணம் போன்ற சீர்கேடுகளில் பாதிக்கப்படாமலும் இருக்கிறார்கள். பருவத்தில் கல்யாணம் செய்வது ஏன் அவசியம் என்பதை கீழே ஒவ்வொன்றாக பாப்போம்.

1.தர்ம சாஸ்திரங்கள்- ஒரு பெண் பருவமடைந்தவுடன் அவளுக்கு கல்யாணம் செய்து வைப்பது அவள் தகப்பனின் கடமையாகும். அப்படி செய்து வைக்காத போது, ஒவ்வொரு மாதமும் அந்த பெண் வீட்டுக்கு விலக்காகும் போது, ஒரு குழந்தையை கொன்ற தோஷத்திற்கு அப்பெண்ணின் தந்தை ஆளாவான் (சிசுஹத்தி தோஷம்).

ஒரு பெண் பருவமடைந்து மூன்று வருடத்திற்குள் கல்யாணம் செய்துவைக்க வேண்டும். அப்படியில்லையேல் அந்த பெண் தன் விருப்பப்படி மாப்பிள்ளையை தேர்வு செய்ய தகுதியுடையவளாகிறாள். (தற்கால சூழலில் 18-19 குள் என்று எடுத்துக் கொள்ளலாம்.)

ஒரு பெண் தன் பருவத் தேவையால் (கல்யாண ஏக்கம்/ஆசை) விடும் பெருமூச்சு உலகை பொசுக்கும்.

(கற்பு என்ற அச்சாணியால் தான் குடும்பம், தர்மம் என்று அனைத்தும் சுழல்கிறது; பருவத்தில் கல்யானமாகாவிட்டால் கற்புநெறி சாத்தியமற்றதாகி விடும்)

2.சமூக ஒழுங்கை-கற்பு நெறி-இயற்கை உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்-இயற்கையே உண்டாக்கும் காம உணர்வுகளை குற்றமென்று நினைக்கலாகாது. மாறாக, பருவத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு முறையான வடிகாலை உண்டாக்கி தருவது பெற்றோர் மற்றும் சமூகத்தின் கடமை. பருவத்தில் கல்யாணம் செய்யாமல் விட்டு இயற்கை உணர்வுகளை அடக்குவதாலும், குற்றமென்று நினைப்பதாலும், உடல்-மன உளவியல் சிக்கல்கள் ஏற்படுகிறது. சிலர் காம வேட்கையால் தவறான பழக்கங்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டு உடம்பை குடும்ப வாழ்வுக்கு தகுதியற்றதாக்கிக் கொள்கிறார்கள். காம வேட்கையுடைய ஜனத்தொகை பெருகுவதால் கள்ள உறவுகள் வளர்ந்து குடும்ப அமைப்பும், சமூக அமைப்பும் சீர்கெட்டு அனைத்தும் நாசமாகிறது. சிலர் சொல்லலாம், கல்யாணமானவர்கள் மட்டும் ஒழுங்கா அவர்க்களும்தானே தவறுகளில் ஈடுபடுகிறார்கள் என்று, அதற்கு காரணம் சமூகத்தில் பெரும்பான்மை இளவயதினர் பருவத்தில் கல்யானமாகாமல் திரிவதே கல்யானமானவர்கள் தவறு செய்ய வழி ஏற்படுத்துகிறது என்பதே முதல் காரணம். அவனவனுக்கு வீட்டில் உணவு கிடைத்தால் வெளியில் ஏன் அலைகிறான்?. மேலும் தவறான உணவு முறை, ஹார்மோன் சீர்கேட்டை தூண்டும் பால், சக்கரை, எண்ணெய், துரித-வெளிநாட்டு-அசைவ உணவுகள், அவசர வாழ்க்கை முறை எப்போதும் காம இச்சையை பரப்புவதே வேலையாக இருக்கும் சினிமாக்கள், இன்டர்நெட் என்று இருக்கையில் கற்பிற்கும் நல்ல குடும்பம் அமையவும் வேண்டுமானால் பருவத்தில் கல்யாணம் அவசியம்.

தங்கள் வாழ்நாள் உழைப்பையும் போட்டு, எவ்வளவோ தெய்வங்கள், பெரியவர்கள், தேவர்கள் போன்றோரை வணங்கி முன்னிறுத்தி, ஜாதகங்கள் சகுனங்கள் பார்த்து, சாங்கியங்கள் செய்து என்று பார்த்து பார்த்து, சமூகம் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைக்கிறது. ஆனால் ரொம்பவும் அசால்ட்டாக அடுத்தவர் கணவன்/மனைவியை இன்பத்துக்காக, மனதை கெடுத்து, அந்த குடும்பத்தையும் கெடுத்து அத்தனை தெய்வங்களையும், தேவர்களையும், பெரியவர்களையும் கோமாளியாக்குவது நியாயமா..??

பருவத்தில் கல்யாணம் செய்தால் இந்த இயற்கை உபாதையில் இருந்து மீண்டு நம் கல்வியோ, தொழிலோ எதிலும் கவனச் சிதறல் இன்றி ஈடுபட முடியும். தற்காலத்தில் நம் இளைஞர்களின் மூளைசக்தி தங்கள் காம உணர்வுகளை கட்டுப்படுத்துவதிலேயே செலவாகிறது. கவனச் சிதரலும் கூட. அப்படி அந்த கட்டுப்பாடு உடையும்போது அதீத குற்ற உணர்வால் மனச்சோர்வு அடைந்துவிடுகிறார்கள். உடல்ரீதியான பிரச்சனைகள் தனி. இதே நம் முன்னோர்கள் காலத்திலும் சரி, நவீன கல்விமுறை துவங்கிய பிரிட்டிஷ் காலத்திலும் சரி மாபெரும் மேதைகள் உட்பட அனைவருமே பருவத்தில் கல்யாணம் செய்த பின்னரும் படித்து உழைத்து முன்னேறியவர்கள் தான். கல்யாணம் வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு தடை என்பது பச்சை முட்டாள்த்தனம்.

3.அதிகரிக்கும் விவாகரத்து- நம் அனைவருக்குமே நாம் விரும்பியபடி பெற்றோர்/சகோதரர் அமைவதில்லை. ஆனாலும் மிகப்பெரும்பான்மையாக அனைவருமே நம் குடும்பத்தினரின் இயல்பை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தகுந்தமாதிரி நம்மை வளைத்துப் பழகிவிட்டோம். நம் இயல்பு/குணத்திற்கு வேறுபட்டிருந்தாலும் அவர்கள் இன்றி நம் வாழ்க்கை பூரணமில்லை என்னுமளவு அவர்கள் மீது பாசமும் வைத்துள்ளோம். இதற்கு காரணம், ‘தான்’ என்ற எண்ணமும், சுய அடையாளமும், முதிற்ச்சியும்  ஏற்படும் முன்னரே நமக்கு இந்த உறவுகள் அறிமுகமாகிவிடுவதால்தான். அப்படியான உறவுகள் தான் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இன்னும் சொல்வதானால் நம் குழந்தைப்பருவ நண்பர்கள, பள்ளி நண்பர்களிடம் இருக்கும் பிடிப்பு பின்னர் வந்த நண்பர்களிடம் இருக்காது. எனவே மனதின் முதிர்ச்சி என்பது ஒரு விதத்தில் உறவுகளின் பிடிப்புக்கு எதிரி என்றே சொல்லலாம். இந்த பிடிப்பின்மையும், வளையும் தன்மை இல்லாமையும்தான் கணவன்/மனைவிக்குள் விட்டுக் கொடுக்காத குணத்தை வளர்த்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. சிலர் சொல்வார்கள், “முதிர்ச்சி இன்றி கல்யாணம் செய்வது நல்லதில்லை என்று..”. முதிர்ச்சி என்பது ஆளுக்கு ஆள், அவர்கள் வாழ்ந்த சூழலைப் பொறுத்து, அனுபவத்தைப் பொறுத்து மாறும். பொதுமைப்படுத்த முடியாது. சிலருக்கு என்பது வயதானாலும் பக்குவமே இருக்காது. ஆணையோ/பெண்ணையோ புரிந்துகொள்ளும் முதிர்ச்சி மணவாழ்வின் அனுபவத்தால் ஏற்படவேண்டியதாகும். வயதானால் வருமென்று இருப்பது மூடத்தனமே. முதிர்ச்சியை பயிற்றுவிக்கும் பள்ளியும் கிடையாது, அதை அளக்கும் தேர்வுகளோ/கருவிகளோ இல்லை என்பதால் இந்த மொண்ணை வாதத்தை ஓரமாக வைத்துவிட்டு எதார்த்தத்தைப் பாப்போம். நம் சமூகத்தில் பருவ கல்யாணம் குறைந்து முதிர்வயது கல்யாணம் பெருக துவங்கிய பிறகுதான் நம் சமூகத்தில் விவாகரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

“கல்யாண வெப்சைட் ஒன்றின் புள்ளிவிவரம். கவுண்டர் சாதி பெண்களில் விவாகரத்து பெற்றவர்களில் 60% சாப்டுவேர் வேலையில் இருப்பவர்கள். அடுத்த நிலையில் இருப்பவர்கள் ஆசிரியர் வேலை மற்றும் மருத்துவர்கள். விவாகரத்து பெற்றவர்கள் 90% பெண்கள் வேலைக்கு செல்பவர்கள். 10% தான் வேலைக்கு செல்லாதவர்கள். கிராமத்தில் வளர்ந்தவர்கள், பருவத்தில் கல்யானமானவர்கள், கல்யாணம் செய்த பின் வேலைக்கு செல்பவர்கள் போன்றவர்களில் விவாகரத்து மிக மிக குறைவாக இருக்கிறது.”

4.ஆரோக்கியம்-பருவத்தில் கல்யாணம் செய்தால் இயற்கையான முறையில் கருத்தரித்து, சுகப்பிரசவத்துக்கு மிக அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது. வயதாவதாலும், தற்போதுள்ள சமூக-உணவு-இயற்கை சூழலாலும் ஹார்மோன் தறிகெட்டு ஓடி, இயற்கையான கருத்தரிப்பு வாய்ப்பில்லாத நிலை ஏற்படுகிறது. அப்படியே கருத்தரித்தாலும் பால் சுரப்பின்மை, மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு என்று எண்ணற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது. வயதாகும்போது இடுப்பெலும்புகள் சுகப் பிரசவத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே சிசெரியனுக்கே அதிக வாய்ப்புகள் அமைந்துவிடுகிறது.

ஆண்களுக்கு வயதாக வயதாக பாலியல் செயல்பாடுகள் குறைந்து போகிறது. உயிரணுக்கள் எண்ணிக்கை, வீரியம் எல்லாமே இறங்குமுகத்தில் இருக்கும் என்பதாலும், பருவம் தாண்டிப் போனதால் தவறான பழக்கங்கள் மற்றும் கால சூழலால் ஆண்மைக் குறைவின் எதோ ஒரு கட்டத்தைத் தொட்டுவிடுகிறார்கள். ஆக, குடும்ப வாழ்வு பிள்ளைப்பேறு என்று வரும் பட்சத்திலும் பருவ கல்யாணமே சிறந்தது.

இவ்வளவு சிக்கல்களால் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொகொள்ளும் வாய்ப்பின்றி போவதால் ஒற்றைக் குழந்தை சாபமேற்பட்டு அந்த குழந்தையின் எதிர்காலம் மற்றும் வம்சம் அழிய விதையாகிவிடுகிறது.

பருவத்தில் கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் வீரியத்துடன் இருக்கும். அதனால்தான் அக்காலம்தொட்டு குழந்தைகளில் மூத்தவருக்கு பொறுப்பும், உரிமையும் அதிகம் தரப்படுகிறது. பசுக்களில் கூட தலைஈத்துக்கு மதிப்புண்டு.

5.காதல் என்று ஓடிப்போவதை தடுக்க-இளம்பருவத்தினர் எல்லாருக்குமே தங்கள் எதிர்பாலினத்தை உடல்-மன-உளவியல் ரீதியாக அறியவும் உணரவும் வேண்டும் என்ற தவிப்பு நிச்சயம் ஏற்படும். கல்யாணமாகாததாலும், சீர்கெட்ட சமூக சூழல்கள், பள்ளி கல்லூரி பணியிடம் போன்றவற்றில் அந்தர சாதியினருடனும் பழகித் தொலையவேண்டிய நிர்பந்தம் இருப்பதாலும், கொங்கு இளைஞர்கள் கட்டுப்பாடுகளையும், தொழில் காரணங்களிலுமே மூழ்கிக் கிடப்பதாலும், பிற சாதியினருடன் காதல் வந்து கலப்பு கல்யாண சீர்கேடுகள் அரங்கேற வாய்ப்பேற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானாலும் பருவத்தில் கல்யாணம் செய்வது அவசியமாகிறது.

கள்ள திருமணம் பற்றிய விழிப்புணர்வு 

6.பெண் கிடைக்காத பிரச்னை-தற்காலத்தில் பெண் கிடைக்காமைக்கு பெண் குழந்தைகள் குறைவு என்று மட்டுமே எல்லாரும் நினைக்கிறார்கள். அது தவறானது. முன்பு ஆணின் கல்யாண வயது 18-25 இருந்தது; ஆண்களுக்கு தற்போதும 25ல் கல்யாண வேலை துவங்கி விடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு 18-21 என்று இருந்தது தற்போது 25-32 என்று திடீரென உயர்ந்ததே காரணமாகும். இதிலும் சில பெற்றோர் பெண்ணின் படிப்பு செலவையும் கல்யாண செலவையும் அவள் சம்பளத்திலேயே எடுத்துவிட வேண்டும் என்ற வணிகக் கணக்கு போடுவதால் கல்யாண வயது தப்பிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறி நம் சமூகம் தழைக்க வேண்டுமானால் மீண்டும் பருவத்தில் கல்யாணம் செய்யத் துவங்க வேண்டும்.

7.பருவத்தில் செட்டில் ஆக – அடுத்த தலைமுறைக்கு தாத்தா பாட்டி பாதுகாப்பில் வளர:
நாம் பருவத்தில் கல்யாணம் செய்தால் நம் கடமைகளை பருவத்தில் செய்து விரைவில் செட்டிலாகலாம். நம் பிள்ளைகள் கல்யாணம் வாழ்க்கை என்று வருகையில் நாம் ஊக்கத்துடன் இருந்து துனையிருக்கலாம். நாம் லேட்டாக கல்யாணம் செய்தால் பிள்ளைகளின் வாழ்வின் முக்கியத்தருனங்களில் அவர்களுக்கு துணை நிற்க நம் உடல் கூட ஒத்துழைக்காது. 

நாம் பருவத்தில் கல்யாணம் செய்யும்போது நம் பிள்ளைகளை நம் பெற்றோர் கவனிப்பில் சிறப்பாக வளர்த்துத் தருவார்கள். வளர்ப்பிலேயே அன்பும், பண்பும் கிடைத்துவிடும். காலம் தப்பி கல்யாணம் செய்தால் பிள்ளைகளையும் சரி, பெற்றோரையும்சரி நாமே கவனிக்க வேண்டியதாகிவிடும்.



மேலும் சில செய்திகள்..
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் குற்றங்களும், அதை சார்ந்த கொலைகளும் பெருகி வருகிறது இதை தடுக்க, பல்வேறு மாநிலங்களில் பருவத்தில் திருமணம் செய்வதை பரவலாக செயல்படுத்திவருகிறார்கள்.

செய்திகளில் வந்தவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்,

ஹரியானா: நாட்டில் அதிக கற்பழிப்புகள் நடந்த மாநிலத்தில், தற்போது பதினாறு வயதில் திருமணம் செய்வதை கிராம சபைகளில் முடிவு செய்துள்ளார்கள். அதோடு, பெண்களின் உடை விசயத்திலும், அரசு சார்பில் சுற்றரிக்கையே வந்துள்ளது. அலுவல் பணியின்போது பெண்கள் கண்ணியமான ஆடைகளை உடுத்த வேண்டும், ஜீன்ஸ் போன்ற உடற்பாகங்களை காட்டும் ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லி உள்ளார்கள்.

ராஜஸ்தான்: பருவ வயதில் திருமணம் செய்வதை இங்கேயும் நடைமுறைபடுத்த துவங்கி விட்டனர்.

தமிழ்நாடு: இஸ்லாமியர்கள் திருமணத்தில் போலீசார் புகுந்து திருமணத்தை தடுக்கிறார்கள் என்று ம.ம.க எம் எல் ஏ சட்ட சபையில் பேசியபோது, 18 குறைவான வயதாக இருந்தால் அனுமதிக்க முடியாது என்று பதில் வந்தது. அதற்க்கு 16 வயது திருமண வயதுதான், அதில் தப்பில்லை என்றே கூறிவிட்டார். பெரிய எதிர்ப்பு எதுவும் வரவில்லை!!

கொங்கு சமூகத்தில்: 22 வயது தாண்டியும் பெண்ணை  படிக்க வைக்கிறேன் வேலைக்கு அனுப்பறேன் என்று திருமணம் செய்து வைக்காமல் பெண்ணை வாட விடும் அப்பாக்கள் உள்ளவரை நம் சமூக கலப்பு திருமனகளை குறைப்பது கடினம். 

18 வயது தாண்டிய பெண்ணை வைத்திருந்தால் அந்த பெண்ணுக்கு திருமணம் முடியும் வரை அவள் தகப்பன் எந்த பெண்ணையும் (மனைவி உட்பட) தொட கூடாது என்னும் சட்டம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்..!

மேலும் படிக்க,

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates