Trending

Friday 28 November 2014

எளிமையின் இன்றைய அவசியம்

எளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செல்வம், போட்டி-பொறாமை அற்ற திருப்தியான-ஆரோக்கியமான சமூக உறவுகள், ஆணவமின்மை மற்றும் எல்லாருக்கும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் குற்றங்கள் செய்யாத மக்கள் மொத்தத்தில் அனைவருக்குமே பூரணமான வாழ்வு என்று உலகமே பாரம்பரிய சமூகம் போல அழகாக மாறிவிடும். இன்றைய சூழலில் குடியானவர்களுக்கு அவசியம் தேவை எளிமையான வாழ்க்கை முறையே.முன்னோர்கள் ஒழுக்கத்தோடும், செல்வச் செழிப்போடும் கொங்க தேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்று பார்த்தோம். தற்காலத்திலும் நம்மவர்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நம்மவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் இன்றளவும் பின்பற்றிய சத்திய நெறி, விவசாயப் பின்புலம், நாட்டுப்பசுக்கள், எளிய வாழ்க்கைமுறை போன்றவையே. நம்மவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எந்தெந்த செலவுகளை தவிர்த்திருந்தார்கள்; நாம் என்னென்ன வகைகளில் தற்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஆடம்பர வீடுகள்

வீடுகள் கட்டுவதால் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் செல்வம் பெருமளவு கரைகிறது. முதலீட்டு நோக்கில் வீடு கட்டுவது; காம்லெக்க்ஸ் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உதாரணமாக ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்; ரண்டு ரூபா வட்டின்னாலும் மாதம் அறுபதனாயிரம் ரூபாய் வருமானம் வீணாகிறது.

ஒரு வீட்டின் ஆயுள் ஐம்பது வருஷம் என்றே எடுத்துக் கொண்டாலும், வட்டியும் முதலுமாக நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று பாருங்கள். இது வெறும் பேங்க் வட்டிதான். இவ்வளவு நஷ்டப்பட்டு வீடு தேவையா?

நம் முன்னோர்கள் பெரும் கோயில்களை கட்டினார்கள்; மடங்களை, சத்திரங்களை கட்டி வைத்தனர்; பெரும் கோட்டைகளைக் கட்டி வைத்தனர்; ஆனால் தங்களுக்கென்று வீடுகளை மிக எளிமையாக மட்டுமே கட்டினர். எந்த அகழ்வாராய்ச்சியிலும் நாம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டி கூத்தடிக்கவில்லை. பட்டக்காரர்களின் அரண்மனைகள் சாமானியர்கள் வீடுகளை விட கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்கூட எளிமையாகவே இருக்கும். கட்டிய வீடுகள் எல்லாம் இயற்கையான பொருள்களைக் கொண்டு  கட்டுவர். பனையோலைகள், நாட்டு ஓடுகள், சுண்ணாம்பு சாந்து போன்ற இயற்கை கட்டுமான நுட்பங்கள் ஏராளம். இவற்றில் குடியிருந்தால் பல நோய்கள தீரும்.இடித்து தள்ளினால் ஒரு மாதத்தில் மண்ணோடு கலந்துவிடும். இன்று நாம் கட்டும் வீடுகளில் கட்டுமானப் பொருட்கள் மலைகளை நொறுக்கி, இயற்கையை சீரழித்து கடும் புகை வெப்பம் மின்சாரம் என்று சுற்றுச்சூழலை பெரிதும் கெடுத்து தயாரிக்கப்படுகிறது. நவீன வீடுகளில்
பெயின்ட், வார்னிஷ், பளபள கற்களால் பல்வேறு நோய்கள விபத்துக்கள் என்று வீட்டு புனியார்ச்சனை அன்றே உயிரை விட்ட கதை வரை உண்டு. இதற்காக வீடே வேண்டாம் என்று சொல்லவில்லை; எளிமையாக கட்டினால் போதும் என்று சொல்கிறோம்.

அதோட, ஒரு வீட்டின் ஆயுள் அதிகபட்சம் ஐம்பது வருஷம். ஐம்பது வருஷத்தில் முதல் முப்பது லட்சமும், வட்டி வருமானம் ரூ.3 கோடி 60 லட்சம், ஆகமொத்தம் எளிதாக பார்த்தாலும் நான்கு கோடி நஷ்டமாகிறது. எந்த ஊரில் எங்கே வாடகைக்கு விட்டாலும் வாடகை வருமானம், முதலீட்டுக்கு 25 பைசா வட்டியை கூட தராது.


                                 

கல்விச் செலவுகள் 
இன்று உள்ள செலவுகளிலேயே மிக அதிகமானது கல்விச் செலவுதான். மாதாமாதம் ஒவ்வொரு குடும்பமும் பல ஆயிரம் செலவு. பள்ளியின்-கல்வியின்-கவுரவத்தின் தரத்தை பள்ளி கட்டணம் கொண்டு தீர்மானிப்பது முட்டாள்தனம். CBSE யில் படிக்கும் குழந்தைகளுக்கும் பிற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அறிவீர்களா..?? இன்று இந்த கட்டண கொள்ளை பள்ளிகளில் படிப்பதால் ஒரே ஒரு நன்மையுண்டு. என்னவென்றால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாத கம்யூனிச, பிற சாதி மக்களின் குழந்தைகள் பெரிய பள்ளிகளுக்கு வருவதில்லை என்பதால் பள்ளிக் காதலில் பிற சாதிகள் தலையீடு கொஞ்சம் மட்டுப்படுகிறது.

குழந்தைகள் எதிர்காலம் அவர்கள் சிந்திக்கும் திறனில் இருக்கிறது
பள்ளிகளில் அல்ல..

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கவுண்டர்கள் ஒன்றிணைந்து தங்கள் பிள்ளைகளை ஒரே பள்ளியில் சேர்த்தால் பள்ளிக்கட்டணம் முதல் பிரச்சனைகள் வரை நிர்வாகத்தை தலையசைக்க செய்ய முடியும்; அதோடு ஒரே பள்ளியில் குழந்தைகள் போகும் போது உள்ளூர் கொங்கு சொந்தங்கள் அறிமுகமாவதுடன் ஒரு பிள்ளை பிற சாதியினர் தொந்தரவுக்கு ஆளானால் நாடக காதலில் சிக்கினால் பிற பிள்ளைகள் காக்கும்.

அதிக கட்டணம் கட்டி படித்தால்தான் நல்ல வாழ்க்கை என்பது வெறும் மாயை என்பதை பெரிய பள்ளிகளில் படித்த குழந்தைகளின் வாழ்க்கையை ஆய்ந்து பார்க்கவும். இன்றைய சூழலில் மதிப்பெண் பொறுத்து வேலை அமைவது இல்லை; (இந்த மதிப்பெண்-வேலை எல்லாமே நம்மை மீண்டும் நகர சாக்கடை வாழ்க்கைக்குள் தான் தள்ளிவிடும் என்பது வேறு கதை) பணக்கார குழந்தைகள் அந்த பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குடும்ப சொத்தின் காரணமாக வாழ்க்கைத்தரத்தை சமன்செய்கிரார்களே ஒழிய அவர்கள் அறிவுவளத்தால் அல்ல. மேலும் பள்ளிகளில் மெக்காலே கல்வி என்ற உளுத்துப்போன கல்வி முறைதான் கற்பிக்கப்படுகிறது. இன்று நம் குழந்தைகள் கல்விக்கு செலவிடும் பணத்தை வட்டியோடு கணக்கு வைத்து பாருங்கள், அவர்கள் வேலைக்கு சேர்ந்தால் அவர்கள் பள்ளிக் கல்வி முதல் கல்விக்கு செலவிட்ட தொகைக்கு வட்டி கட்டக் கூட அவர்கள் சம்பளம் வாங்க மாட்டார்கள்! இந்த லட்சனத்துக்கு, கல்வி செலவுகளை பேங்கில் பாதுகாத்து வைத்திருந்தால் வீட்டில் படுத்துக் கொண்டே உங்கள் பிள்ளை சம்பாதிப்பானே? பேருக்கு எதோ  ஒரயு சிறிய பள்ளியில் படித்திருந்தால் போதாது?

கிராமங்களில் நம் சமூக குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை கொடுக்க வேண்டும். நம் சமூக வரலாறுகள் நம் கொங்கதேச இலக்கியங்கள்,  நம் குலத்தொழிலான விவசாயம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். பகுதிநேரமாக பள்ளி காலத்தில் இருந்தே தொழிற்பயிற்சி அவசியம் தர வேண்டும். அந்த குழந்தைகள் தான் உருப்படும். இயற்கையாகவே நாட்டுக் கோழி போல அறிவும் வீரமும் உள்ள நம் பிள்ளைகளை, பணத்தை கொடுத்து பண்ணைக் கோழிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள் என்பவை இன்றைய சூழலில் சமூக அழுத்தம் காரணமாகவே அவசியம் என்றாகிறதே தவிர அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் நிஜம். நல்ல கல்வியை நம் ஊரில்-கோயிலில் கொடுக்க முடியும். ஏற்கனவே பலர் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி அறிந்து செயல்படுத்த விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்க.

ஆடம்பர கல்யாணம்
நம் சாதியின் தற்கால சாபக்கேடு இந்த ஆடம்பர கல்யாணங்கள் தான். நம் முன்னோர்கள (ஏன் தற்காலத்திலும் கூட கிராமங்களில் காணலாம்) எளிமையாக பாரம்பரிய முறையில் பெண் வீட்டில் கல்யாணம் செய்வார்கள். நெருங்கிய உறவினர்கள் உள்ளூர்காரர்கள் என்று நூறு இருநூறு பேருக்கு மேல் தாண்டாது. சொந்தங்களே சமைப்பார்கள் (கண்டவர்களை விட்டு சமைக்க கூடாது!), அருமைகாரர் முன்னின்று எல்லா சீர்களும் செய்து குலதெய்வ-முன்னோர் ஆசியுடன் ஒழுங்காக நடந்தது. அந்த கல்யாணமுறை இன்று செய்தாலும் இரண்டு லட்சத்தை தாண்டாது. அப்படி செய்த கல்யானன்களால் சொந்தளுக்குள் அன்பும், பிடிப்பும் வளர்ந்தது.



ஆனால் இன்றோ ஐயாயிரம் பேரை அழைத்து கிறிஸ்தவர்கள் போல கோயில்களில் கல்யாணம் (அவர்கள் சர்ச்), கோட்டு சூட்டு, பந்திபோட்டு பரிமாராமல் பப்பே என்று கையில் தட்டை கொடுத்து பிச்சை சோறு, லட்சங்களில் மண்டப வாடகை, அலங்காரங்கள் என்று கணக்கின்றி பணம் கரைகிறது. இந்த செலவுகளால் நம் செல்வம் கரைவது மட்டுமின்றி உறவுகளுக்குள் வெறுப்புணர்வு, போட்டி, பொறாமை, வருபவர்களை சரியாக கவனிக்க முடியாமை மட்டுமின்றி சீர்கள் செய்யாமல் கல்யாணம் செய்து கடும் பாவத்தையும் முன்னோர்களின் சாபத்தையும் வாங்கி கொடுக்கிறோம். இதில் தமிழ் முறை என்ற பேரில் சில கோமாளிகளை கொண்டு வந்து புதிய சீரழிவுகள் வேறு. காட்டை விற்று கல்யாணம் செய்யும் வெட்கக் கேடு அருவருப்பானது.


குறைந்தபட்சம் கல்யாணத்தை முறையாக வீட்டில் செய்து, ரிசப்சன் என்று வைத்து எங்கெல்லாம் நீங்கள் தின்று வந்தீர்களோ அவர்களுக்கு சோற்றை போட்டு கடனை கட்டுங்கள். இதன்மூலம் முறையான சீர் கல்யாணங்கள் செய்யும் வழக்கம் உருவாகட்டும் பணக்கார கவுண்டர்களே. உங்கள் குழந்தைகள் உருப்படியாக வாழ்வார்கள்.


(மேலும் விரிவான தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகள்,
மரபுக் கல்யாணமா-ஆடம்பரக் கல்யாணமா?ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது? , கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்கிறிஸ்தவ மயமாகும் கொங்கு கல்யாணங்கள், பப்பே உணவு முறை, கல்யாணத்தில் கோட்-சூட்)

அளவற்ற வண்டிகள்
வாகனங்கள் என்பன நமது பயண தேவைக்குத்தான் அவை கவுரவ சின்னங்களாக பார்ப்பது தவறு. ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள், நான்கைந்து பைக்கள் போன்றவை எதற்காக? வண்டிகளுக்காக கவுண்டர்கள் குடும்பம் சராசரியாக இரண்டு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்கிறார்கள். அதிகபட்சதிற்கு அளவே இல்லை!

தேவைக்கு வண்டி வாங்குங்கள், கவுரவதிற்கு ஆசைக்கு வாங்காதீர்கள். ஆசைக்கு அளவில்லை. நம்மவர்கள் கல்யாணம் செய்யும்போது அருகாமையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலேயே பெண் எடுப்பார்கள். கலாசார வேறுபாடுகள் குறைவாகவும் பாசப்பினைப்புகள் மற்றும் உதவிகள் உடனே கிட்டின. உள்ளூர் தெய்வங்களையே வணங்குவார்கள். கோயில் உரிமைகள் பறிபோகாமல் வரலாறு-பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது. உள்ளூரில் விளைந்தவற்றையே உண்பார்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது. இன்று எதற்கெடுத்தாலும் வெளியே; இன்று தவறாக வெளி மாவட்டங்கள் தாண்டி பெண் எடுப்பது, வெளியூர்-வெளிநாட்டு உணவுகள், தூரதேச பொழுதுபோக்கு-ஆன்மீக பயணங்களால் தேவையற்ற போக்குவரத்து தேவைகள் ஏற்படுகின்றது.

தேவைக்கு மீறிய வாகனங்கள் ஏன், எதற்கு என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மருத்துவ செலவுகள்
தவறான உணவு முறை, சீமை மாடுகள், அசைவ உணவுகள், பாரம்பரிய உணவுகள்-விதைகள் இழப்பு, செயற்கை விவசாயம், நீர் காற்று மாசு என நகரமாய-நவீன சாக்கடையில் விழுந்து பணப்பேய் பிடித்து அலைந்து நம் உடல்நிலையையும் மண நிலையையும் கடுமையாக கெடுத்து வைத்துள்ளோம். இந்த மாற்றங்களால் உண்டல் மூலமாக கலாசார சீர்கேடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்புகளை ஜீன் வழியாக அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கிறோம். அதனால்  கணக்கற்ற நோய்கள், உபத்திரவங்கள் இவற்றால் பொருள் இழப்ப்பு ஏற்படுகிறது. முதலில் நாம் எப்படி அன்றாட நம் வாழ்க்கை முறைகளை-உண்ணுவது, உறங்குவது, குளிப்பது முதல் நோய்கள என்றால் என்ன நோய்கள வராமல் எப்படி காத்துக் கொள்ள வேண்டும், வந்தால் எப்படி மருந்தில்லாமல் இயற்கை வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை நாம் மறந்துள்ளோம்-மறக்கடிக்கப்பட்டுள்ளோம். நினைத்தால் கடை சோறு, நினைத்தால் கறி என்று போனால் சொத்தை ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

(நாம் மறந்த பெரும்பாலான விஷயங்களை அறியவும் சர்க்கரை உட்பட பல கொடிய  நோய்களில் இருந்து விடுபடவும் பல வழிமுறைகளை இந்த லிங்கில் உள்ள வீடியோவில் பார்க்கவும். http://anatomictherapy.org/tvideos.php . உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் போட்டுக் காட்டவும்.)



தேவைக்கு மீறிய உடைகள்&அழகு சாதனங்கள்
ஒரு வீட்டு பீரோவில் பார்த்தால் ஒரு துணிக்கடை அளவு துணிகள். முன்பு நல்ல நாள் விசேஷம் என்றால் துணி எடுப்பார்கள்; இப்போது பொழுது போகாவிட்டால் துணி எடுக்க கிளம்பிவிடுகிறார்கள். "ஷாப்பிங்ங்ங்" போறாங்களாம். ஒருத்தருக்கு ஒரு விசேஷத்துக்கு மூணு நாலு துணி தேவையா?? அதேபோல பெண்கள் அழகு சாதனப்பொருட்கள் னு மாட்டு ரத்தம், பன்றிக் கொழுப்பு, மாட்டு எலும்பு கலந்த ஏராளமான ரசாயன கிரீம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு பேய் போல நிற்கிறார்கள். கொங்கு கவுண்டர்கள் சுத்த சைவம்; இப்போது மாறி கெட்டு கிடந்தாலும், குறைந்தபட்சம் கல்யாண நேரத்தில் நாம் அசைவத்தை தவிர்க்கிறோம். ஏனெனில் மங்களியத்துக்கு கொடுத்த பின் ரொம்ப சுத்தபத்தமா இருக்கோணும். ஆனா மேக் அப் ங்கற பேர்ல ரத்தம் கொழுப்பு எல்லாத்தையும் அப்பிக்கிட்டு நிக்கறது அசிங்கமா இல்லை?

இதுபோன்ற உடை மோகம், மேக் அப் மோகம் தேவையா? நம் முன்னோர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், இயற்கை ரசாயனம் கொண்டு சாயமிடப்பட்டு பயன்படுத்தினார்கள். அதனால் இயற்கை பாதிக்கவில்லை. இப்போது திருப்பூர் சாய விஷம் நொய்யல், பவானி காவேரி என்று எல்லாத்தையும் கெடுத்தது மட்டுமின்றி தாய்பால் வரை விஷம் பரவியிருக்கு. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க நாலாயிரம் லிட்டர் தண்ணி விஷமாகுது. இந்த துணி மோகத்தோட தீவிரத்த புரிஞ்சிக்கனும்.

நவீன மேக்-அப்களின் விஷத்தன்மையும், பாரம்பரிய மேக் அப் வழிமுறைகளும் 
http://www.karikkuruvi.com/2014/09/blog-post_9.html

வீண் பயணங்கள் 
பாகவதத்தில் ஸ்ரீ விஷ்ணு சொல்வார், கலியுகத்தில் மக்களுக்கு உள்ளூர் தெய்வங்கள் மீது நம்பிக்கை இராது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஊர் ஊராக சுற்றுவார்கள் என்பார். இன்று ஊரை கடந்து நாடு நாடாக சுற்றுலா செல்கிறார்கள். இதுவும் சந்தோசம் என்பதை தாண்டி பெருமைக்கு பரதேசிகளாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டு பயணத்துக்கு லட்ச ரூபாய் சர்வ சாதாரணமாக செலவாகிறது. அதுமட்டுமின்றி நினைத்தால் மாதம்தோறும்  பழனி, திருப்பதி எல்லாம் தேவையற்றது. நம் முன்னோர்கள் ஆயுளில் ஓரிரு முறையே தீர்த்த யாத்திரை-வேண்டுதல் என்று வெளியூர் கோயில்களுக்கு சென்று வருவார்கள். ஒரு வேளை தீபம் ஏற்றக் கூட வசதியற்ற கோயில்கள் (ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்)  கொங்கதேசத்தில் இருக்க திருப்பதியில் லட்சக்கணக்கில் கொட்டுவது சரியா? திருப்பதியில் அதிக பணம் போவது தமிழகத்தை பொறுத்தவரை கொங்கதேசத்தில் இருந்துதான்.

ஆடம்பர வீடுகளுக்கும், கார்களுக்கும் கிரானைட், ஆற்று மணல், சிமண்டிற்கு அலுமினியம், நிலக்கரி, இரும்புத்தாது, என்று கணக்கற்ற வகைகளில் இயற்கை வளங்கள் நாசமடைகின்றன. இவற்றை தயாரிக்கும்போதும், போக்குவரத்தின்போதும் காற்றும் நீரும் கடுமையாக கேட்டுப் போகிறது. இவை திரும்ப சரி செய்ய முடியாத இழப்பாகும். நோய்களும் வந்து பணத்தை கரைக்கும். மழைப் பொழிவை கெடுத்து விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.

நாம் ஆடம்பர செலவுகள் செய்வதால் நமக்கு யாரும் சிலை வைக்க போவதில்லை; மாறாக பகையையும், பொறாமையும், பீடையையும் தான் சம்பாரிக்கிறோம்; அதுமட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கு தவறான பாடத்தையும் சொந்தங்களற்ற நிலையையும் உண்டு பண்ணுகிறோம். எளிமையாக கல்யாணம் செய்தாலோ வீடு கட்டினாலோ சில பொறம்போக்கு மடையர்கள் கேவலம் பேசுவார்கள் என்றென்ன வேண்டாம்-எவ்வளவு நாள் பேசுவார்கள்? பின்னர் மறந்துபோவார்கள்.

ஆக்கப்பூர்வமான வழிகளில் உங்கள் பணத்தை செலவிடுங்கள்; காடுகள் வாங்குங்கள்; தங்கம் வாங்குங்கள்; நம் மரபுகளை மீட்கவும், குடிபடைகள் பசுக்கள் போன்றவற்றிற்கு செலவிடுங்கள். நம் முன்னோர்கள எப்போதும் பெருகுகின்ற விஷயங்களில் தான் முதலீடு செய்வார்களே ஒழிய வீடுகள் கார்கள் போன்ற அழிவுறும் (Depreciating) பொருட்களில் முதலீடு செய்ய மாட்டார்கள்.

நம்மை ஆசிர்வதிக்கும்போது என்ன சொல்கிறார்கள், "தான்யம் தானம் பசு பஹுபுத்திர லாபம் சதசம்வத்சரம் தீர்க்கமாயுஹூ" என்கிறார்கள். இவைதான் உண்மையான செல்வங்கள். ஆடம்பர வீடு, கல்யாணம், கார், ஷேர் போன்றவை செல்வங்கள் அல்ல.

தானியம்-விதை தானியங்கள், ஒன்று ஆயிரமாக பெருகும்.
தனம்-நீர்வளம் உள்ள பூமி, இதில் போடும் முதலீடுகள் தலைமுறைகளுக்கும் பெருகிக் கொண்டே இருக்கும்.
பசு-தன் ஆயுளில் பதினெட்டு கன்றுகள் வரை பெருக்கி பால் நெய் விளைச்சல் ஆரோக்கியம் என்று வளத்தை பெருக்கிக் கொண்டே இருக்கும் தெய்வம்.
பஹுபுத்ர-ஒன்றுக்கு மேற்பட்ட புத்திரர்கள். சந்தான பாக்கியம். வம்ச விருத்தி.

இந்த மாற்றங்களை உடனே செய்ய சிறிது சிரமம் என்றாலும் சிறிது சிறிதாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்போ செய்ய வேண்டும். 

  • பணத்தை அர்த்தத்தோடு செலவு செய்யுங்கள்; ஆசைக்கு கவுரவதிற்கு என்று செலவு செய்தல் வேண்டாம் 
  • ஆடம்பரத்தில் கவுரவம் இல்லை; அது அசிங்கம் 
  • நீங்கள் செய்யும் செலவுகளால் இயற்கைக்கு என்ன பாதிப்பு; சுற்றியுள்ள உறவுகள்-சமூகத்தில் என்ன தாக்கம்; உங்கள் வருங்கால சந்ததிக்கு என்ன செய்தி போகிறது என்பதை உணர்க 

இன்றைய சூழலில் கவுண்டர்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; தேவையற்ற செலவுகளை குறைத்துவிட்டாலே போதும் இருபது ஆண்டுகளில் கவுண்டர்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன் தான்.

Monday 24 November 2014

கற்பின் மகத்துவம்

நம் வேதசாஸ்திரங்கள், முன்னோர்கள் மற்றும் ஞானியர், ஆண்களுக்கு பல நியமங்களையும் கடமைகளையும் விதித்துள்ளனர். அவை,

“மாத்ரு தேவோ பவ: பிதுர் தேவோ பவ:
ஆச்சார்யா தேவோ பவ: அதிதி தேவோ பவ:”

தாய், தந்தை, குரு, நம்மை நாடி வந்த விருந்தினர் போன்றோர் தெய்வங்களுக்கு ஒப்பாவர். அவர்களை காப்பது ஆணின தர்மமாகும். அதேபோல, பூதக்கடன், முனிக்கடன், பித்ருக்கடன், தேவக்கடன் என செய்யவேண்டிய கடமைகளும் ஏராளம். பிரம்மச்சாரி, சம்சாரி, வனப்ரஸ்தன், சந்நியாசி என ஒவ்வொரு நிலையிலும் பொறுப்புகள் உண்டு.  ஒருவன் நற்கதியடைய இந்த  கடமைகளும் நியமங்களும் தவறாது வாழ்வது அவசியமாகும். ஆனால், பெண்களுக்கோ சொல்லப்பட்டது ஒன்றே ஒன்றுதான்.

“பதி தேவோ பவ”

பெண்ணுக்கு கணவன் மட்டுமே தெய்வம் எனவும், பதியின் சேவை மட்டுமே நியமம் கடமை எனவும் சொல்லப்படுகிறது. வேறு தெய்வங்களோ கடமையோ பெண்ணுக்கு கிடையாது. எல்லா கடமைகளையும் சரிவர செய்த ஆணைவிட தனது ஒரு கடமையை சரியாக செய்யும் பெண் உயர்ந்தவள். ஆணைவிட என்பதைவிட, ஒரு கற்பரசி, சித்தர்களையும், தேவர்களையும் தெய்வங்களையும் விட சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கப்படுவார். மகாலக்ஷ்மியே தினந்தோறும் தனது கணவருக்கு பாதங்கள் பிடித்துவிட்டு பதிசேவை செய்துவருகிறார் என்பதன் மூலம் பதிசேவையின் மகத்துவத்தை உணரலாம். தினமும் உறங்கப் போகும்முன் பக்திப்பூர்வமாக உள்ளன்போடு பதிக்கு பாத சேவையும், விழித்து எழும்போது பாத நமஸ்காரமும் செய்யும் பெண் அளவிலா சக்தி பெறுவாள். தெய்வங்களும் அப்பேற்பட்ட பெண்ணின் சக்திக்கு தலைவணங்கும். அந்த பெண் உள்ள குடும்பத்தின் அனைத்து வித கிரக தோஷங்களும், பரம்பரை சாபங்களும், கர்ம வினைகளும், சிறிது சிறிதாக கரைந்து குடும்பம் லக்ஷ்மி கடாட்சத்தோடு, செழித்து வளரும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் சத்தியமான உண்மை. அதனாலேயே நம் முன்னோர்கள் அன்றாடம் தன் கணவருக்கு பாதசெவை, பாத நமஸ்காரம், மாங்கல்ய நமஸ்காரம் என்பதை ஒரு நாளின் முதல் வேலையாகவும், கடைசி வேலையாகவும் வைத்திருந்தனர்.



ஒரு பத்தினியின் கோபத்துக்கு தெய்வங்களும் நடுங்கும். வள்ளுவரும் கூட இதையே பின்வருமாறு கூறுகிறார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்
பொருள்: கற்பு என்னும் வலிமை இருந்தால் பெண்ணைவிட பெரிய சக்தி எது?

உதாரண நிகழ்ச்சிகள்:

அனுசுயா:கற்பின் வலிமையால் சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கியவர். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என தேவியர் மூவராலும் வணங்கப்பட்டவர்! இவரின் பதிபக்தியின் பொருட்டு கங்கையே உலகின் பஞ்சத்தை தீர்த்த வரலாறு உண்டு.



சாவித்ரி: கணவன் சத்யவானின் மேல் கொண்ட பக்தியை மெச்சி எமதர்மராஜா, பல முறை வரம் கொடுத்தார். அதையும் சாதுர்யமாக கொண்டு கணவன் உயிரை மீட்டவர்.



சந்திரமதி: சத்யசீலர் ஸ்ரீ ஹரிச்சந்திர மகாராஜாவின் பத்தினி. எவ்வளவோ இன்னல்களுக்கு இடையேயும் கடைசி வரை கற்புநெறி பிறழாது வாழ்ந்தவர். இவர் தாலி கணவரான ஹரிச்சந்திர மகாராஜாவுக்கு மட்டுமே தெரியும்.

ஸ்ரீ சீதா மாதா: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தர்ம பத்தினி, கற்பின் வலிமையால் ஆஞ்சநேயருக்கு சிரஞ்சீவி வரமளித்தவர்.



நளாயினி: இவரின் கற்பின் சக்திக்கும், ஆணைக்கும் சூரிய தேவனே கட்டுப்பட்டு உதிக்காமல் நின்றார்!

கண்ணகி: கற்பின் வலிமையால் மதுரையை எரித்தவர்.

தாமரை நாச்சியார்: குன்னுடையா கவுண்டரின் தர்ம பத்தினி தாமரை நாச்சியார். குன்னுடையா கவுண்டர் சந்தித்த ஏராளமான இன்னல்களை இவரது கற்பின் சக்தியால் கரைத்தார். 



வெள்ளையம்மா: காங்கயநாடு முழுக்காதன்குலத்தாய் வெள்ளையம்மா, கற்புநெறி பிறழாமையால், தனது கணவன் மரணத்தின் பின்னர் வந்த சூது வென்று நாடமைத்து பெருவாழ்வு வாழ்ந்தார். இன்றளவும், அவரின் வம்சாவழியினர் காங்கயம் பகுதி பட்டக்காரராக வாழ்ந்து வருகிறார்கள்.



தனது பார்வையாலேயே கொக்கை எரித்த கொங்கணசித்தரின் கோபப்பார்வை கற்பரசி   ஒருவர் முன் பலிக்கவில்லை. அந்த புண்ணியவதி சித்தரை நோக்கி “கொக்கேன்றா நினைத்தாய் கொங்கணவா?” என்று கேட்டார். அத்தாயின் அடிபணிந்து சக்தியின் காரணம் கேட்ட சித்தருக்கு, கணவனை தெய்வமாக பூசிக்கும் பெண்ணுக்கு சர்வ வல்லமையும் உண்டாகும் அதுவே என் சக்திக்கும் காரணமாகும் என்றார். இன்னும் ஏராளமான சம்பவங்கள் கற்பின் மகத்துவத்தை உணர்த்தும். சேரதேசமாகிய கொங்கதேசம் கற்புநெறி வாழ்ந்த பெண்களுக்கு புகழ் பெற்றது. கணவன்மேல் கொண்ட பற்றால் சுயவிருப்பத்தின் பேரில் உடன்கட்டை ஏறியோர் கணக்கில் அடங்கார். வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், புடவைகாரியம்மன் என்னும் பேரில் உள்ள தெய்வங்கள் இவ்வகையே.



பகவத் கீதை சொல்லும் செய்தி:

குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸநாதநா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா:

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

தொல்காப்பியம்:
தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியம் நூல் கற்பிற்கு தரும் விளக்கம், ஆண்-பெண் இருவீட்டாரும் சம்மதித்து சீர்மரபுகளோடு முறைப்படி நடத்தப்படும் கல்யாணம் முடித்து வாழும் ஒழுக்கமான இல்லற வாழ்வே கற்பு என்கிறது.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே'

எனவே, காதல் கன்றாவி எல்லாம் முன்னோர் பின்பற்றவில்லை. சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் முன்னோர் வாழ்ந்தகாலத்தில், காதல் இருந்தது; அது நம் மரபு, என்பது கேலிக்கூத்து. சிலப்பதிகாரத்தில் கண்ணகி திருமணத்தின்போது அவரின் வயது   பன்னிரண்டு என்பதை நினைவில் கொள்ளவும்!. திராவிட-முற்போக்கு-கம்யுனிஸவாதிகள் தங்கள் விஷ சித்தாந்தத்தை பரப்ப குடும்பங்கள் அழிந்தாலும் பெண்கள் கெட்டாலும் பொருட்படுத்தாது காதலெனும் பேரால் முறையற்ற கல்யாணங்களை வளர்த்தும், கற்பு நெறியை தூஷித்தும் பரப்புரை செய்கிறார்கள். இவர்கள் சொல்லும் வாழ்க்கை முறையில் வாழும் அமெரிக்க குடும்பங்களும், நாட்டின் பொருளாதாரமும் தெருவில் நிற்கின்றன என்பது உலகம் அறிந்த உண்மை!



நாட்டு பசுவின் பால் பொருட்கள்,பருவத்தில் திருமணம்,சரியான உணவுப்பழக்கம், பண்பாட்டு ஒழுக்கக்கல்வி, வரலாறு அறிதல் இறையருள் போன்றவை, கற்புநெறிப்படி வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாம். பாக்கியம் வேண்டும்!

பெண்களை தெய்வமாக வணங்கும் பாரத - கொங்கதேச பாரம்பரியம் போற்றுவோம். கற்பொழுக்கத்தின் மகத்துவம் அறிந்து மரபுநெறி நீங்காது வாழ்வோம்!

யத்ர நார்ய: து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
(எங்கு பெண்கள் வணங்கப்படுகிறார்களோ அங்கு இறைவன் உறைகிறான்)

-- திருமதி.பாவாத்தாள் கவுண்ட்சி


Tuesday 11 November 2014

ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது?


  • நம் காணியாச்சி கோவில் எங்கு உள்ளதோ அங்குதான் நம் முன்னோர்கள் இருந்தனர்.. அதாவது சொந்த காணியில்... அருகிலேயே கோவிலை வைத்துக்கொண்டு ஏன் நம் முன்னோர் கோவிலில் திருமணம் செய்யவில்லை, மாறாக கல்யாண படி என்று திருமணத்தின் பின் கோவிலுக்கு போய்வருவார்கள், அது ஏன் சிந்திக்க வேண்டும்.

  • நம் கொங்கு திருமணங்களில் நம் 18 கொங்க குடிகளுக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கும்.. ஆனால் அதில் சிலர் நம் கோவில்களுக்குள் அனுமதியற்றவர்களாக இருப்பர்..

  • நம் திருமண சடங்குகளில் சவரம் செய்யபடுவது உண்டு.. அது கோவிலில் நடக்க கூடாது (முடிகாணிக்கை கடவுளுக்காக; சவரம் சுய அழகு, மருத்துவம், 'சாங்கியம்' வேண்டி)

  • கோவிலுக்குள் கடவுளுக்கும் இறை பணிக்குமே முன்னுரிமை முக்கியத்துவம் மாலை மரியாதை எல்லாம் இருக்க வேண்டும்.. மனிதர்களுக்கு அல்ல..

  • வீட்டில் நடந்த கல்யாணங்கள் சொந்தம் மட்டும் வைத்து நடக்கும். மூன்று நாள் நடந்தாலும் செலவு தெரியாது. சொந்த, பந்தம் பார்த்துக்கொள்ளும். இடைக்காலத்தில் நண்பர்கள் வட்டாரம் அதிகமான போதும மண்டபத்தில் கல்யாணம் வைக்கும் பழக்கம் வந்தது. மண்டப வாடகை, ஆர்கெஸ்ரா, மூன்று நாள் சாப்பாடு செலவு, கூலி ஆள் செலவு என்று கல்யாணம் செய்வது என்பது கடினமானது. சீர் செய்யாம கல்யாணம் செய்யறத கேவலமா முன்னர் பேசுவாங்க..... ஏழ்மையில் உள்ள சிலரால் மூன்று நாள் மண்டபத்தில் வைத்து இதனை முழுமையாக செய்ய இயலாது..செலவு கூடுதலாகும். பெருமைக்காக மண்டபங்களில் கல்யாணம் வைத்து செய்தவர்கள் கடனாளி ஆன காலம் உண்டு. இதனை பயன்படுத்தி சில கிறித்துவ கும்பல் கோயிலில் (சர்ச் மேரேஜ் போல ) கல்யாணம் செய்யும் கலாச்சாரத்தை முதலில் அறநிலையதுறை கோயில்களில் அறிமுகபடுத்தினார். பின்னர் டிகேட் போட்டு பிரபலபடுத்தினர். நம்மூரில் உள்ள சில பல பிரபலங்கள் (கவுண்டர் ஐகான்ஸ் ) இந்த கோயில் கல்யாணங்களை செய்து கிறித்துவ முறையில் ரிசப்சன் (வரவேற்பு) வைத்தார்கள். அதன் பிறகு நகர கவுண்டர்கள் , இதனை பிடித்துக்கொண்டனர். வசதி இருந்தும் சீர் செய்யாமல் கல்யாணம் செய்தனர். இதனால், நம்மூர் வண்ணான், நாவிதர், கொசவர், பறையர், மாதாரியர், கைகொளர், அருமைக்காரர், பங்காளிகள் என அனைவரும் ஒதுக்கப்பட்டனர். இந்த முறை கல்யாணம் காலத்தை சேமிப்பதாக நினைத்தனர், செலவை குறைப்பதாக நினைத்தனர், ஊர் சமுதாய உறவுகளை புறந்தள்ளினர். கோயிலிலும், வருமானம் வருவதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை வரவேற்றனர். மேலும், அரசு சோறு கல்யாணம், ஆயிரம் ஜோடிகளுக்கு கல்யாணம் என்று கோயிலில் கல்யாணம் செய்யும் பிரச்சாரத்தை பிரபலபடுத்தியது. ஆனால், உண்மையில் வீட்டில் சடங்குகளுடன் நடந்த கல்யாணங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்கள் பாரம்பரியத்தின் மேல் உள்ள பிடிப்புகள் உடையும், காலப்போக்கில் மறையும். இதுவே, அரசின் எண்ணமாக இருக்கிறது.

  • மேலும், கோயிலுக்குள் இருந்த கட்டுபாடுகளை குறைத்து கோயிலில் எப்படி வேண்டுமானாலும் போய் வரலாம் (சர்ச் போல) என்று மனப்பான்மையை வளர்க்க இந்த கல்யாணங்கள் உதவின. இன்றைய இளசுகள் கோயிலுக்குள் வரைமுறை இல்லாமல் போய் வருகின்றனர். பெரிசுகள் கோயிலை எப்படி திருப்பணி செய்ய வேண்டும் என்று தெரியாமல் இடிக்கின்றனர். இதெல்லாம் கோயிலின் மீது நமக்கு இருந்த பக்தியை, நாம் நம்மை ஆத்மார்த்தமாக வழிபடும் முறையை குறைத்துள்ளது.

  • கோயிலுக்குள் சக மனிதர் ஒருவரை கும்பிடகூடா கூடாது. அய்யரை கூட கும்பிடக்கூடாது. அங்கு அந்த தெய்வத்திற்கு மட்டும்தான் மரியாதை. தெய்வ சிந்தனை இருக்கும் இடத்தி ல்வேறேதுவுனம் இருக்ககூடாது. ஆனால், கோயிலுக்குள் இருவருக்கு கல்யாணம் என்றால் அவர்களுக்குள் என்ன சிந்தனை வரும். இறை சிந்தனை மட்டுமே இருக்குமா?

  • கோயிலுக்குள் கல்யாணத்தன்று பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் எப்படி கோயிலுக்குள் வர முடியும். கல்யாணத்திற்கு வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் அவர்கள் எப்படி கோயிலுக்குள் வருவார்கள்.

  • காளியம்மன், செல்லாண்டியம்மன், சிவாலயம் போன்றவை சுடுகாட்டில் இருப்பவை. (முற்காலத்தில் சுடுகாடு இருந்த இடத்தில் தான் சிவன்-காளி கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும்) சுடுகாட்டிற்குள் சென்று கல்யாணம் செய்யகூடாது.

  • அவரவர் இல்லத்தில் கல்யாணம் (பெண் வீடு) செய்ய வேண்டும். கோவின் இல்லத்தில் (கோயில்) அல்ல. வீடுகளில் வசதி இல்லை என்றால் பெண் வீட்டு பங்காளிகளின் வீடுகளில் பெரிய வீடு இருந்தால் அங்கே கல்யாணம் செய்யலாம். நண்பர் வட்டங்களை கல்யாணத்திற்கு அழைக்காமல் வீட்டில் இருநூறு பேரை வைத்து சீர் சடங்குகளுடன் கல்யாணம் செய்வது முடியாத காரியமல்ல. மனம் வேண்டும். இன்றும் செட்டியார்கள் சில அய்யர்கள் முன்பு போல நெருங்கின பங்காளிகள், சொந்தங்கள் வைத்து மட்டுமே கல்யாணம் செய்கின்றனர். நண்பர்களை கல்யாணம் முடிந்து சில நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆசி கூரச்சொல்லலாம். அவர்களது அலுவலும் பாதிக்காது இழவு வீட்டில் கூட கூட்டம் அதிகமானால் இடம் போறாது. அதற்காக பிணத்தை மண்டபத்தில் வைத்து அனைவரையும் கூப்பிடுவதில்லையே. நெருங்கிய பங்காளிகள் பிணம் தூக்க அன்றே வந்து விடுவர். கருமாதி வரை இருப்பர். தெரிந்தவர்கள், நண்பர் வட்டங்கள், பக்கத்துக்கு ஊர் காரர்கள் மூன்று நாள் கழித்து ஒவ்வொருவராக வந்து செல்வர். இழவை வசதி குறைந்த சிறிய வீட்டில் சமாளிக்கும் போது கல்யாணத்தையும் சிறிய வீட்டில் வைக்க முடியும்.
  • வீட்டில் கல்யாணம், திரட்டி, எழுதீங்கள், காதுகுத்து, மங்கள காரியங்களும் நடைபெற வேண்டும். இழவை மட்டும் வீட்டில் வைத்து மங்கள காரியங்களை காசை விரயம் செய்து மண்டபங்களில் வைக்ககூடாது.

கல்யாணம் நடைபெறுவது பெற்றோர்களின் பிறவி பயன் மற்றும் செய்துகொள்பவரின் வாழ்க்கையின் முதல்படி. எனவே இவர்களின் ஆத்ம திருப்திக்கும், சந்தோசத்திற்கும் நடைபெறுவது . மாமன் ,மச்சான் ,பங்காளிகள் ஆகியோர் ஒன்றிணைந்து திருமண வேலைகள் செய்து திருமணத்தை நடத்தி அவர்களை மகிழ்விப்பது. ஆனால் , இங்கு திருமணம் நடப்பது தமது பகட்டு வாழ்க்கையை இந்த சமுதாயத்துக்கு காண்பிப்பதற்கும், உன்னைவிட நான் பெரியவன் என்ற அகந்தையை காட்டுவதற்கும்மான ஓட்ட பந்தையமாக நடகின்றது. இதில் தமது சமுதாய மற்றும் குடும்ப சொந்தங்களை ஒதுக்கிவிட்டு மேல்தட்டு மக்களை முன் நிறுத்தி அவர்கள் சௌகரியத்துக்காக கிராமத்தை விட்டுவிட்டு நக[நரக]ரத்திற்கு ஓடி பணத்தை இறைத்து மண்டபத்திலோ அல்லது கோவிலிலோ நடத்தும் நிலையுள்ளது. இதனால் தமது சந்தோஷதையும் தொலைத்து, போட்டி பொறாமை வளர்த்து, செல்வத்தை அழித்து, எதிர்கால சந்ததிகளையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட திருமணத்திற்கு செல்வதற்கு தயக்கமாக உள்ளது.

நன்றி: கொங்கு கல்யாணம்

தொடர்புடைய பதிவுகள்,

மரபு திருமணமா-விளம்பர திருமணமா ?

Monday 10 November 2014

கத்தி-சினிமா

"கத்தி.. வெவசாய படம், நீ கண்டுசுனா பார்க்கணும்."

"பாக்க மாண்டன்"

"நீ அனுப்பற லிங்க்லாம் நானும் படிக்க மாண்டன்"

"ஏ பாக்க மாட்டங்கரவன புடுச்சு ஒவுத்தினியம் பண்ற..?"

"இல்ல,நீ ஒருக்கா பாரு"

"பாக்கறன், பாத்து தொலைக்கரன்" 

"படம் எப்பிடி?? இப்பென்ன சொல்ற?"



"நம்மூரு காவேரி ஆத்துல தோல்சாப் வெசத்தண்ணி, சாயத்தண்ணி உடரான்ள மில்லுக்காரன், அவனுங்க அத்தனபேரும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், ஜேசீஸ் கிளப் னு ஏதாவது கிளப்ல மெம்பரா இருக்கறவனுங்க தான்.. இந்த கிளபெல்லாம் பல நாட்ல இருக்கற இதே மாதர பணக்காரங்கள ஒன்னா சேக்கற சங்கிலி.. இவங்க ஒரு கம்பெனிக்காரன எதுத்து சண்ட போடறத ஆதரிக்கவா போறாங்க..? இல்லை அவங்களை ஏன் ஆதரிக்கற மாதிரி காட்டோனும்?? 

கெராமங்கள் அழியோணும்னு சொன்ன ஈவெரா பெரிய கெராமிய போராளியாட்ட யென வச்சு பேசறது நல்ல கூத்து... தெரேசாவோட வண்டவாளத்ததான், வெள்ளைக்காரன்ல இருந்து ராஜீவ் தீட்சித் அஜீத் வடக்கில் வரைக்கும் கிழிச்சு தொங்க உட்டுட்டாங்களே.. அப்பறம் என்ன முட்டு குடுக்கற வேல??

அப்பறம் கம்யூனிசம்.. அதப்பத்தி நா உனக்கு புதுசா சொல்லோனுமா.. வெள்ளைக்கார போனாப்புடுச்சு, நாட்டுப்புற-காட்டுப்புற சனத்த தாயமுருட்டர பசவ.. சொதந்தர போராட்டத்துல சண்டை போட்டவீல வெள்ளைக்காரங்கிட்ட காட்டிக் குடுத்தவணுவ.. உண்டுனா திண்ணா அடுத்தவன் சோறாமா, மெட்ராசுல ரோட்டுமேலயே செவப்பேனு ஒரு அடுக்குமாடி கட்டடம்.. இதென்ன கொக்ககோலா கம்புனி ஆபீசா னு கேட்டன்.. இல்லீங்க இது கம்முனிஸ்ட் ஆபீஸ்ங்கறா.. இதுதா இவனுங்க மொவரகட்ட.. இவனுங்கதான் வந்து வெவசாயத்த காப்பாத்தரானுங்கலாமா.. அத நாம நம்போனுமாமா..

2-G பத்தி பேசுனது, நீயா நானா வ கொஞ்சம் சொரண்டியுட்டது லாம் சரிதான்.. மீடியாவுல வேல செய்யறவங்க மனநில பத்தி காட்னுது சரி.. இதே மீடியா ல வேல செய்யறவங்க லாபி இருக்குதே, அதெல்லாம் இதுல வராதா..?

இன்னொரு விசியம்.. இந்த படத்துக்குன்னு இல்ல.. இப்ப வர்ர டிவி, செய்தி, சினிமா எல்லாத்திலயும் வெவசாயினாலே நட்ட பொலப்பு, கஷ்ட ஜீவனம்,  வேர்வ,  தாடி,  கோமணம்,  தற்கொல,  அழுவாச்சி,  ஓரியாட்டம்.. இதேதானா? பாக்கற எவனாவது வெவசாயம் பண்ண நெனப்பானா..? வறண்ட பூமி வெவசாயிங்க பத்தி காட்டனும்-காட்டறது சரி.. அதேமாதர பண்ணயம் பண்டி நல்லா பொலைக்கரவனையும் காட்டோனுமில்ல..இப்பிடி வெவசாயம்னாலே  பஞ்சப்பாட்டு னு பேர் பண்ணி வச்சதுனாலதான் வெவசாயம் பண்றவனுக்கு பொண்ணு கெடைக்கரதில்ல.. காடுதோட்டம் இருக்கறவன் கூட வேற வேலைக்கு ஒடீர்றான் இல்ல முடுக்கியுட்றாங்க...

எப்புடியோ, கொஞ்சொமாவுது தண்ணி பத்தி நெனப்பு வந்து கொளங்குட்ட பத்தி நெனச்சா செரி.. படத்துக்காவ சண்டை போடற மவராசணுவ அந்த படம் ஓடற தேட்டர்ல கொக்ககோலா குடிக்காம, விக்க உடாம சண்ட போட்டுருந்தா.. ஏரி கொளங் குட்டைய காப்பாத்த வந்திருந்தா.. அந்த படத்துல காட்டுன மாதர கலர்சோடா, தோல், சாய கம்புனிகாரங்கோட எசிளிக்கு நின்னுருந்தா தேவுல"


சினிமாலாம் சனத்த முட்டாளாக்கற வேல.. இந்த சினிமா மூனுமணிநேரம் நம்ம மூளைய மழுங்க - மயங்க வைக்கற ஒரு உளவியல் ஆயுதம்.. நமக்கு தெரியாமையே நம்ம ஆழ்மனசுல வெஸ கருத்துக்கள வெதச்சிருவாங்க.. இந்த கத்தி சினிமா கூட ஒரு நல்ல உதாரனந்தான். எப்புடி கண்டதையெல்லாம் நமக்கு நல்லது னு காட்டறான் பாத்தீங்களா..?? சினிமாவ காட்டி காட்டித்தான் நம்மள கெடுக்கறது. எவன் நல்லவனாகோனும், எவன் கேட்டவனாகோனும், எதெது நல்ல/கெட்ட பழக்கம்னு சூதுகாரனுங்க சினிமா மூலமா நம்முளுக்கு சொல்லிக்குடுபானுங்க.. புள்ளைக ஓட சொல்லிதறதும் இதேதான.. நம்ம பாட்டன் பூட்டன எல்லாம் கிராமத்தான் ஒண்ணுந்தெரியாதவன்னு நம்ப வச்சதும் இவனுங்க தான்.. திராவிட வெஸம் ஆட்சிய புடுச்சது இந்த சினிமாவாலதான. டிவி சினிமா பாக்காத வளந்த கொழந்தைக நிகழ்காலத்துல வாழும். புத்தி கூர்மையா இருக்கும். அவ்வளவு சீக்கரம் மூளைசலவை செய்ய முடியாது.

Sunday 9 November 2014

பழனி முருகனும் கொங்கப்பசுக்களும்

ஞான சொருபமாக, அன்பே வடிவாக, அருளை பொழியும் அப்பன் முருகனின் பேரருள் ஆற்றலை பெற உடலையும் மனதையும் ஆத்ம சுத்தியையும் நல்கும் அற்புத விரதமான கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் ஆறாம் நாள் இன்று. ஒரு பழம்பெரும் முருக பக்தர், அருளாற்றல் தேஜஸ் வெளிப்படும் ஞானமுள்ள யோகி பகிர்ந்த செய்திகள் கீழே,

பெற்றவர்களை விட்டு தண்டபாணியாக நின்ற முருகன் நாட்டுப்பசுக்களை மேய்த்து, அதன் பால் பொருட்கள் மூலம் பஞ்சாமிர்தம் செய்து உண்டுவந்தார். (பஞ்சாமிர்தம் என்றால் நாட்டுப்பசும்பால் (5 பங்கு), நாட்டுப்பசுவின் தயிர் (4 பங்கு), பனங்கல்கண்டு (3 பங்கு), பஞ்சீகரண சுத்தி மூலம் செய்த நாட்டுப்பசுவின் நெய் (2 பங்கு), தேன் (1 பங்கு) முதலான ஐந்து பொருட்கள் கொண்டு செய்யப்படுவதே.). இந்த பஞ்சாமிர்தத்தை பழநி மூலவர் சிலை மீது அபிஷேகம் செய்வதால் ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பிரசாதம் கிட்டும்).


அதன் சாணத்தை எரித்து திருநீறாக்கி உடம்பில் பூசி வெயில், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொண்டார். திருநீறு என்பது நாட்டுப்பசுவின் சாம்பல் முறையாக எடுத்து எரிக்கப்பட்ட பஸ்பமே (அதில் ஜவ்வாது வாசனைகள் இருக்கவேண்டிய அவசியமில்லை). கையில் இருக்கும் தண்டமே பசுவை மேய்ப்பதற்காக பயன்படுத்தியதுதான். இதனால் தான் பழநி ஸ்தலத்தை "திரு'ஆ'வினன் குடி" என்று சொல்கிறோம். பழநியாண்டவருக்கு மட்டுமல்ல எந்த ஒரு தெய்வத்துக்கும் அபிஷேக பால், தயிர், நெய் விளக்கு, விபூதி ஆகியவற்றிற்கு நாட்டுப்பசுவின் சாண பஸ்பம் (திருநீறு), பால், தயிர் நெய்தான் பயன்படுத்தணும். அவை பல நோய்களைத் தடுக்கக்கூடிய மருந்துகள். சீமை மாடுகளின் பொருட்களைப் பயன்படுத்துவது பெரும்தோஷம். ஏனென்றால் நம் சாஸ்திரங்கள், புராணங்கள், சித்த ஆயுர்வேத புஸ்தகங்களில் சொல்லியுள்ள பசுக்கள் என்பன நம் நாட்டுப்பசுக்களே, அக்காலத்தில் சீமை மாடுகள் இங்கே இல்லை. சீமை மாடுகளின் பால் தீமையானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய நெருப்புச் சுடர்களை கங்கை தாங்கியதால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயரும் உண்டு. தற்போது உள்ள காங்கேயம் இன கொங்கப்பசுக்கள் கங்கைக் கரையில் இருந்து முருகனால் தென்னாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வர்க்கம் என்பர். (காங்கேயன்-கங்கையால் தாங்கப் பட்டவன்; கங்கையின் மைந்தன்) நாட்டுப்பசுக்கள் உள்ள இடம்தான் கோயில். அதனால்தான் ஒவ்வொரு கோயிலிலும் நாட்டுப்பசுவை வைத்து கோயில் பசு என வளர்த்தார்கள். அதற்காக கோசாலை மற்றும் மேய்ச்சல் நிலங்களை மானியமாக விட்டனர். பழநி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் செய்யவும், திருநீறு தயாரிக்கவும் வேண்டி மன்னர்கள் காலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர நிலங்களை மானியமாக விட்டுள்ளனர். அத்தகைய நாட்டுபசுவின் மகத்துவத்தையும் பெருமையையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

(சுத்தமான திருநீறு, நாட்டுப்பசுவின் நெய் வேண்டுவோர் +91 88837 40013 அழைக்கவும். நாட்டுப்பசுவின் பொருட்கள், கோசாலை தகவல்கள் கூட தருவார்கள்)

Thursday 6 November 2014

நிலங்களின் பூர்வீகம்

நிலங்கள் வாங்கும்போது ஏராளமான விஷயங்களை பார்க்கிறோம். ஆனால் அந்த நிலம் நம் குடும்பத்துக்கு நல்லது செய்யுமா, காலாகாலத்துக்கும் நிலைக்குமா என்பதை பார்ப்பதில்லை. சில நிலங்கள் வாங்கியபின்னர், அந்த குடும்பத்தில் தொடர்ந்து கெட்ட சம்பவங்கள் நடக்கும். அது உடனே தெரியாவிட்டாலும், ஒன்றிரண்டு தலைமுறைகளில் தொடர் மரணம், வாரிசுகள் வேறு சாதியோடு ஓடிப்போய் கல்யாணம் செய்வது,  பெண்கள் ஒழுக்கம் தவறுவது,கல்யாணமாகாமல் வம்சம் அழிவது, கல்யாணமானவர்கள் குழந்தைகளின்றி போவது, தொடர்ந்து நஷ்டங்கள் அவமானங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும்.

Wednesday 5 November 2014

களையிழந்து போன எங்கள் ஏரிக்கருப்ராயன் கோவில்

பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஏரிக்கருப்ரராயன் சாமி கோவிலில் முன்னர் இருந்த ஒரு பத்தி பரவசம் இப்போது இல்லை... சின்ன வயசுல இருந்தே என் அம்மா கூட புதன்கிழமை தோரும் சென்று வழிபட்டு வந்தேன்....


அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்தில் சுடு மண் சிற்ப குதிரை, மனித உருவங்கள், ஆடு, மாடு போன்ற சிலைகள் வேண்டுதலின் பெயரில் வைக்கப்பட்டிருந்தது, ஒரு ஆயிரம் பேருக்கு நடுவே சென்றது போல இருக்கும், மேலும் இங்கு கருப்பராயன் சுயம்புவாக எழுந்தவர் எனவே மிகுந்த சக்தி படைத்தவர், மேலும் இங்கு முக்கிய சிறப்பு முன் மண்டபத்தில் இருபுறமும் இருக்கும் பெரிய மினி (கருப்பராயன்), அன்னாந்து பார்க்கும் போது ஒரு நிமிடம் எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் பயமாக இருக்கும் அவ்வளவு கோவமாக உக்கிரம் அந்த சிற்பக்கலையில் வெளிப்பட்டது...



பண்டிகை காலங்களில் கிடா வெட்டி அந்த இடமே ரத்த வெள்ளத்தில் மிதக்கும், பலியிட வீட்டுக்கு ஒரு கிடா வளர்த்த காலங்கள் உண்டு... அப்பேற்பட்ட கோவிலில் பெரிதாக செய்கிறேன் பேர்வழி என்று பழைய கோவிலை தரைமட்டமாக இடித்து சுயம்பு மூர்த்தி தவிர அனைத்தும் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட முன் மண்டப மினி பெரிய சைஸ் ஆனால் பழைய பய உணர்வு வரவில்லை மேலும் உள்ளே பலிடும் கருப்பராயன் சிலைகள் கோவிலுக்கு வெளியே தனியாக மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது, ரத்தக்கறை ஆகாமல் இருக்க வேண்டி, கோவிலை சுத்தமாக வைக்கிறார்களாமா,..
அந்த இரண்டு மினியையும் மறைத்து விட்டு இது என்ன கோவில் என்று கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியாது அவ்வளவு மாற்றம் உள்ளே இருந்த வேண்டுதல் சுடுமண் சிற்பங்களை வைத்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இடித்து தரைமட்டமாக்கினர்...

மேலும் முன் மண்டப மினி சிலைகளையும் இடிக்க வேண்டாம் மறுபடியும் அவ்வாறு அமையாது என்று கூறியும், பெரிதாக கட்டுகிறோம் என்ற பெயரில் இடித்து தள்ளினார்கள்... இப்பொழுது தன் பொழிவை இழந்து டைல்ஸ் கஸ் கொண்டு பளபளக்கும் இடமாக மாற்றியது தான் மிச்சம்...

சுத்தம் சோரு போடும் ஆனால் என்னாளும் பக்தியை தராது...

இன்று பொங்கள் திருவிழாவிற்கு சென்ற போது மனசு கேட்கவில்லை...என் தெய்வத்திற்கே சோதனையா எங்கு சென்று முறையிடுவேன்...எனக்குள் இருக்கும் ஆதங்கம் எங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் சாமியை தன் நினைவு தெரிந்த நாளில் இருந்து வழிபட்டவர்களுக்கும் உள்ளது... மதில் சுவர் கோபுரம் பழையது இடியும் நிலையில் உள்ளது அதை இடித்து கட்ட போரோம் என்று கூறினார்கள், ஆனால் உள்ளே உள்ள சிலைகள் அகற்றப்படும் என்று எவரும் சொல்லவில்லை, என் அம்மா மற்றும் அவரது வழி சொந்தங்கள் அனைவரும் சாமி ஆடி அருள் செல்பவர்கள் அவர்கள் கோவிலில் நடந்த இந்த மாற்றத்தில் கோவிலுக்கே வருவதில்லை, அவர்களின் அருள்வாக்கு படி ஏற்கனவே நிறைய முறை இடித்து கட்டும் பணி தடைபட்டது.. கடைசியாக கும்பாபிஷேகம் செய்யும் போது தான் தெரிந்தது... எனக்கும் என் அம்மாவிற்கும் நேற்று கோவிலில் மனசே இல்லாமல் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்....

-Sathiya Rasu

தொடர்புடைய பதிவுகள்:
கோயில் புனரமைப்பு முறை: http://www.karikkuruvi.com/2014/08/blog-post_18.html
புராதன கோயில்கள் திட்டமிட்டு சிதைப்பு: http://www.karikkuruvi.com/2013/10/blog-post_21.html
ஆலய வழிபடுவோர் சங்கம்: http://www.karikkuruvi.com/2014/08/blog-post_13.html
அறநிலையத்துறை அக்கிரமம்: http://www.karikkuruvi.com/2014/04/blog-post_3811.html

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates