Trending

Friday 28 November 2014

எளிமையின் இன்றைய அவசியம்

எளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செல்வம், போட்டி-பொறாமை அற்ற திருப்தியான-ஆரோக்கியமான சமூக உறவுகள், ஆணவமின்மை மற்றும் எல்லாருக்கும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் குற்றங்கள் செய்யாத மக்கள் மொத்தத்தில் அனைவருக்குமே பூரணமான வாழ்வு என்று உலகமே பாரம்பரிய சமூகம் போல அழகாக மாறிவிடும். இன்றைய சூழலில் குடியானவர்களுக்கு அவசியம் தேவை எளிமையான வாழ்க்கை முறையே.முன்னோர்கள் ஒழுக்கத்தோடும், செல்வச் செழிப்போடும் கொங்க தேசத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்று பார்த்தோம். தற்காலத்திலும் நம்மவர்கள் செல்வச்செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நம்மவர்கள் மற்றும் நம் முன்னோர்கள் இன்றளவும் பின்பற்றிய சத்திய நெறி, விவசாயப் பின்புலம், நாட்டுப்பசுக்கள், எளிய வாழ்க்கைமுறை போன்றவையே. நம்மவர்கள் எத்தகைய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எந்தெந்த செலவுகளை தவிர்த்திருந்தார்கள்; நாம் என்னென்ன வகைகளில் தற்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஆடம்பர வீடுகள்

வீடுகள் கட்டுவதால் கொங்க வெள்ளாள கவுண்டர்கள் செல்வம் பெருமளவு கரைகிறது. முதலீட்டு நோக்கில் வீடு கட்டுவது; காம்லெக்க்ஸ் கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உதாரணமாக ஒரு வீடு கட்ட முப்பது லட்சம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம்; ரண்டு ரூபா வட்டின்னாலும் மாதம் அறுபதனாயிரம் ரூபாய் வருமானம் வீணாகிறது.

ஒரு வீட்டின் ஆயுள் ஐம்பது வருஷம் என்றே எடுத்துக் கொண்டாலும், வட்டியும் முதலுமாக நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று பாருங்கள். இது வெறும் பேங்க் வட்டிதான். இவ்வளவு நஷ்டப்பட்டு வீடு தேவையா?

நம் முன்னோர்கள் பெரும் கோயில்களை கட்டினார்கள்; மடங்களை, சத்திரங்களை கட்டி வைத்தனர்; பெரும் கோட்டைகளைக் கட்டி வைத்தனர்; ஆனால் தங்களுக்கென்று வீடுகளை மிக எளிமையாக மட்டுமே கட்டினர். எந்த அகழ்வாராய்ச்சியிலும் நாம் ஆடம்பர மாளிகைகளைக் கட்டி கூத்தடிக்கவில்லை. பட்டக்காரர்களின் அரண்மனைகள் சாமானியர்கள் வீடுகளை விட கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்கூட எளிமையாகவே இருக்கும். கட்டிய வீடுகள் எல்லாம் இயற்கையான பொருள்களைக் கொண்டு  கட்டுவர். பனையோலைகள், நாட்டு ஓடுகள், சுண்ணாம்பு சாந்து போன்ற இயற்கை கட்டுமான நுட்பங்கள் ஏராளம். இவற்றில் குடியிருந்தால் பல நோய்கள தீரும்.இடித்து தள்ளினால் ஒரு மாதத்தில் மண்ணோடு கலந்துவிடும். இன்று நாம் கட்டும் வீடுகளில் கட்டுமானப் பொருட்கள் மலைகளை நொறுக்கி, இயற்கையை சீரழித்து கடும் புகை வெப்பம் மின்சாரம் என்று சுற்றுச்சூழலை பெரிதும் கெடுத்து தயாரிக்கப்படுகிறது. நவீன வீடுகளில்
பெயின்ட், வார்னிஷ், பளபள கற்களால் பல்வேறு நோய்கள விபத்துக்கள் என்று வீட்டு புனியார்ச்சனை அன்றே உயிரை விட்ட கதை வரை உண்டு. இதற்காக வீடே வேண்டாம் என்று சொல்லவில்லை; எளிமையாக கட்டினால் போதும் என்று சொல்கிறோம்.

அதோட, ஒரு வீட்டின் ஆயுள் அதிகபட்சம் ஐம்பது வருஷம். ஐம்பது வருஷத்தில் முதல் முப்பது லட்சமும், வட்டி வருமானம் ரூ.3 கோடி 60 லட்சம், ஆகமொத்தம் எளிதாக பார்த்தாலும் நான்கு கோடி நஷ்டமாகிறது. எந்த ஊரில் எங்கே வாடகைக்கு விட்டாலும் வாடகை வருமானம், முதலீட்டுக்கு 25 பைசா வட்டியை கூட தராது.


                                 

கல்விச் செலவுகள் 
இன்று உள்ள செலவுகளிலேயே மிக அதிகமானது கல்விச் செலவுதான். மாதாமாதம் ஒவ்வொரு குடும்பமும் பல ஆயிரம் செலவு. பள்ளியின்-கல்வியின்-கவுரவத்தின் தரத்தை பள்ளி கட்டணம் கொண்டு தீர்மானிப்பது முட்டாள்தனம். CBSE யில் படிக்கும் குழந்தைகளுக்கும் பிற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அறிவீர்களா..?? இன்று இந்த கட்டண கொள்ளை பள்ளிகளில் படிப்பதால் ஒரே ஒரு நன்மையுண்டு. என்னவென்றால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாத கம்யூனிச, பிற சாதி மக்களின் குழந்தைகள் பெரிய பள்ளிகளுக்கு வருவதில்லை என்பதால் பள்ளிக் காதலில் பிற சாதிகள் தலையீடு கொஞ்சம் மட்டுப்படுகிறது.

குழந்தைகள் எதிர்காலம் அவர்கள் சிந்திக்கும் திறனில் இருக்கிறது
பள்ளிகளில் அல்ல..

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கவுண்டர்கள் ஒன்றிணைந்து தங்கள் பிள்ளைகளை ஒரே பள்ளியில் சேர்த்தால் பள்ளிக்கட்டணம் முதல் பிரச்சனைகள் வரை நிர்வாகத்தை தலையசைக்க செய்ய முடியும்; அதோடு ஒரே பள்ளியில் குழந்தைகள் போகும் போது உள்ளூர் கொங்கு சொந்தங்கள் அறிமுகமாவதுடன் ஒரு பிள்ளை பிற சாதியினர் தொந்தரவுக்கு ஆளானால் நாடக காதலில் சிக்கினால் பிற பிள்ளைகள் காக்கும்.

அதிக கட்டணம் கட்டி படித்தால்தான் நல்ல வாழ்க்கை என்பது வெறும் மாயை என்பதை பெரிய பள்ளிகளில் படித்த குழந்தைகளின் வாழ்க்கையை ஆய்ந்து பார்க்கவும். இன்றைய சூழலில் மதிப்பெண் பொறுத்து வேலை அமைவது இல்லை; (இந்த மதிப்பெண்-வேலை எல்லாமே நம்மை மீண்டும் நகர சாக்கடை வாழ்க்கைக்குள் தான் தள்ளிவிடும் என்பது வேறு கதை) பணக்கார குழந்தைகள் அந்த பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குடும்ப சொத்தின் காரணமாக வாழ்க்கைத்தரத்தை சமன்செய்கிரார்களே ஒழிய அவர்கள் அறிவுவளத்தால் அல்ல. மேலும் பள்ளிகளில் மெக்காலே கல்வி என்ற உளுத்துப்போன கல்வி முறைதான் கற்பிக்கப்படுகிறது. இன்று நம் குழந்தைகள் கல்விக்கு செலவிடும் பணத்தை வட்டியோடு கணக்கு வைத்து பாருங்கள், அவர்கள் வேலைக்கு சேர்ந்தால் அவர்கள் பள்ளிக் கல்வி முதல் கல்விக்கு செலவிட்ட தொகைக்கு வட்டி கட்டக் கூட அவர்கள் சம்பளம் வாங்க மாட்டார்கள்! இந்த லட்சனத்துக்கு, கல்வி செலவுகளை பேங்கில் பாதுகாத்து வைத்திருந்தால் வீட்டில் படுத்துக் கொண்டே உங்கள் பிள்ளை சம்பாதிப்பானே? பேருக்கு எதோ  ஒரயு சிறிய பள்ளியில் படித்திருந்தால் போதாது?

கிராமங்களில் நம் சமூக குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை கொடுக்க வேண்டும். நம் சமூக வரலாறுகள் நம் கொங்கதேச இலக்கியங்கள்,  நம் குலத்தொழிலான விவசாயம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். பகுதிநேரமாக பள்ளி காலத்தில் இருந்தே தொழிற்பயிற்சி அவசியம் தர வேண்டும். அந்த குழந்தைகள் தான் உருப்படும். இயற்கையாகவே நாட்டுக் கோழி போல அறிவும் வீரமும் உள்ள நம் பிள்ளைகளை, பணத்தை கொடுத்து பண்ணைக் கோழிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள் என்பவை இன்றைய சூழலில் சமூக அழுத்தம் காரணமாகவே அவசியம் என்றாகிறதே தவிர அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுதான் நிஜம். நல்ல கல்வியை நம் ஊரில்-கோயிலில் கொடுக்க முடியும். ஏற்கனவே பலர் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி அறிந்து செயல்படுத்த விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்க.

ஆடம்பர கல்யாணம்
நம் சாதியின் தற்கால சாபக்கேடு இந்த ஆடம்பர கல்யாணங்கள் தான். நம் முன்னோர்கள (ஏன் தற்காலத்திலும் கூட கிராமங்களில் காணலாம்) எளிமையாக பாரம்பரிய முறையில் பெண் வீட்டில் கல்யாணம் செய்வார்கள். நெருங்கிய உறவினர்கள் உள்ளூர்காரர்கள் என்று நூறு இருநூறு பேருக்கு மேல் தாண்டாது. சொந்தங்களே சமைப்பார்கள் (கண்டவர்களை விட்டு சமைக்க கூடாது!), அருமைகாரர் முன்னின்று எல்லா சீர்களும் செய்து குலதெய்வ-முன்னோர் ஆசியுடன் ஒழுங்காக நடந்தது. அந்த கல்யாணமுறை இன்று செய்தாலும் இரண்டு லட்சத்தை தாண்டாது. அப்படி செய்த கல்யானன்களால் சொந்தளுக்குள் அன்பும், பிடிப்பும் வளர்ந்தது.



ஆனால் இன்றோ ஐயாயிரம் பேரை அழைத்து கிறிஸ்தவர்கள் போல கோயில்களில் கல்யாணம் (அவர்கள் சர்ச்), கோட்டு சூட்டு, பந்திபோட்டு பரிமாராமல் பப்பே என்று கையில் தட்டை கொடுத்து பிச்சை சோறு, லட்சங்களில் மண்டப வாடகை, அலங்காரங்கள் என்று கணக்கின்றி பணம் கரைகிறது. இந்த செலவுகளால் நம் செல்வம் கரைவது மட்டுமின்றி உறவுகளுக்குள் வெறுப்புணர்வு, போட்டி, பொறாமை, வருபவர்களை சரியாக கவனிக்க முடியாமை மட்டுமின்றி சீர்கள் செய்யாமல் கல்யாணம் செய்து கடும் பாவத்தையும் முன்னோர்களின் சாபத்தையும் வாங்கி கொடுக்கிறோம். இதில் தமிழ் முறை என்ற பேரில் சில கோமாளிகளை கொண்டு வந்து புதிய சீரழிவுகள் வேறு. காட்டை விற்று கல்யாணம் செய்யும் வெட்கக் கேடு அருவருப்பானது.


குறைந்தபட்சம் கல்யாணத்தை முறையாக வீட்டில் செய்து, ரிசப்சன் என்று வைத்து எங்கெல்லாம் நீங்கள் தின்று வந்தீர்களோ அவர்களுக்கு சோற்றை போட்டு கடனை கட்டுங்கள். இதன்மூலம் முறையான சீர் கல்யாணங்கள் செய்யும் வழக்கம் உருவாகட்டும் பணக்கார கவுண்டர்களே. உங்கள் குழந்தைகள் உருப்படியாக வாழ்வார்கள்.


(மேலும் விரிவான தகவல்களுக்கு தொடர்புடைய பதிவுகள்,
மரபுக் கல்யாணமா-ஆடம்பரக் கல்யாணமா?ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது? , கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்கிறிஸ்தவ மயமாகும் கொங்கு கல்யாணங்கள், பப்பே உணவு முறை, கல்யாணத்தில் கோட்-சூட்)

அளவற்ற வண்டிகள்
வாகனங்கள் என்பன நமது பயண தேவைக்குத்தான் அவை கவுரவ சின்னங்களாக பார்ப்பது தவறு. ஒரு வீட்டில் இரண்டு மூன்று கார்கள், நான்கைந்து பைக்கள் போன்றவை எதற்காக? வண்டிகளுக்காக கவுண்டர்கள் குடும்பம் சராசரியாக இரண்டு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்கிறார்கள். அதிகபட்சதிற்கு அளவே இல்லை!

தேவைக்கு வண்டி வாங்குங்கள், கவுரவதிற்கு ஆசைக்கு வாங்காதீர்கள். ஆசைக்கு அளவில்லை. நம்மவர்கள் கல்யாணம் செய்யும்போது அருகாமையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலேயே பெண் எடுப்பார்கள். கலாசார வேறுபாடுகள் குறைவாகவும் பாசப்பினைப்புகள் மற்றும் உதவிகள் உடனே கிட்டின. உள்ளூர் தெய்வங்களையே வணங்குவார்கள். கோயில் உரிமைகள் பறிபோகாமல் வரலாறு-பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டது. உள்ளூரில் விளைந்தவற்றையே உண்பார்கள். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது. இன்று எதற்கெடுத்தாலும் வெளியே; இன்று தவறாக வெளி மாவட்டங்கள் தாண்டி பெண் எடுப்பது, வெளியூர்-வெளிநாட்டு உணவுகள், தூரதேச பொழுதுபோக்கு-ஆன்மீக பயணங்களால் தேவையற்ற போக்குவரத்து தேவைகள் ஏற்படுகின்றது.

தேவைக்கு மீறிய வாகனங்கள் ஏன், எதற்கு என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

மருத்துவ செலவுகள்
தவறான உணவு முறை, சீமை மாடுகள், அசைவ உணவுகள், பாரம்பரிய உணவுகள்-விதைகள் இழப்பு, செயற்கை விவசாயம், நீர் காற்று மாசு என நகரமாய-நவீன சாக்கடையில் விழுந்து பணப்பேய் பிடித்து அலைந்து நம் உடல்நிலையையும் மண நிலையையும் கடுமையாக கெடுத்து வைத்துள்ளோம். இந்த மாற்றங்களால் உண்டல் மூலமாக கலாசார சீர்கேடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்புகளை ஜீன் வழியாக அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கிறோம். அதனால்  கணக்கற்ற நோய்கள், உபத்திரவங்கள் இவற்றால் பொருள் இழப்ப்பு ஏற்படுகிறது. முதலில் நாம் எப்படி அன்றாட நம் வாழ்க்கை முறைகளை-உண்ணுவது, உறங்குவது, குளிப்பது முதல் நோய்கள என்றால் என்ன நோய்கள வராமல் எப்படி காத்துக் கொள்ள வேண்டும், வந்தால் எப்படி மருந்தில்லாமல் இயற்கை வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை நாம் மறந்துள்ளோம்-மறக்கடிக்கப்பட்டுள்ளோம். நினைத்தால் கடை சோறு, நினைத்தால் கறி என்று போனால் சொத்தை ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

(நாம் மறந்த பெரும்பாலான விஷயங்களை அறியவும் சர்க்கரை உட்பட பல கொடிய  நோய்களில் இருந்து விடுபடவும் பல வழிமுறைகளை இந்த லிங்கில் உள்ள வீடியோவில் பார்க்கவும். http://anatomictherapy.org/tvideos.php . உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் போட்டுக் காட்டவும்.)



தேவைக்கு மீறிய உடைகள்&அழகு சாதனங்கள்
ஒரு வீட்டு பீரோவில் பார்த்தால் ஒரு துணிக்கடை அளவு துணிகள். முன்பு நல்ல நாள் விசேஷம் என்றால் துணி எடுப்பார்கள்; இப்போது பொழுது போகாவிட்டால் துணி எடுக்க கிளம்பிவிடுகிறார்கள். "ஷாப்பிங்ங்ங்" போறாங்களாம். ஒருத்தருக்கு ஒரு விசேஷத்துக்கு மூணு நாலு துணி தேவையா?? அதேபோல பெண்கள் அழகு சாதனப்பொருட்கள் னு மாட்டு ரத்தம், பன்றிக் கொழுப்பு, மாட்டு எலும்பு கலந்த ஏராளமான ரசாயன கிரீம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு பேய் போல நிற்கிறார்கள். கொங்கு கவுண்டர்கள் சுத்த சைவம்; இப்போது மாறி கெட்டு கிடந்தாலும், குறைந்தபட்சம் கல்யாண நேரத்தில் நாம் அசைவத்தை தவிர்க்கிறோம். ஏனெனில் மங்களியத்துக்கு கொடுத்த பின் ரொம்ப சுத்தபத்தமா இருக்கோணும். ஆனா மேக் அப் ங்கற பேர்ல ரத்தம் கொழுப்பு எல்லாத்தையும் அப்பிக்கிட்டு நிக்கறது அசிங்கமா இல்லை?

இதுபோன்ற உடை மோகம், மேக் அப் மோகம் தேவையா? நம் முன்னோர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், இயற்கை ரசாயனம் கொண்டு சாயமிடப்பட்டு பயன்படுத்தினார்கள். அதனால் இயற்கை பாதிக்கவில்லை. இப்போது திருப்பூர் சாய விஷம் நொய்யல், பவானி காவேரி என்று எல்லாத்தையும் கெடுத்தது மட்டுமின்றி தாய்பால் வரை விஷம் பரவியிருக்கு. ஒரு ஜீன்ஸ் தயாரிக்க நாலாயிரம் லிட்டர் தண்ணி விஷமாகுது. இந்த துணி மோகத்தோட தீவிரத்த புரிஞ்சிக்கனும்.

நவீன மேக்-அப்களின் விஷத்தன்மையும், பாரம்பரிய மேக் அப் வழிமுறைகளும் 
http://www.karikkuruvi.com/2014/09/blog-post_9.html

வீண் பயணங்கள் 
பாகவதத்தில் ஸ்ரீ விஷ்ணு சொல்வார், கலியுகத்தில் மக்களுக்கு உள்ளூர் தெய்வங்கள் மீது நம்பிக்கை இராது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஊர் ஊராக சுற்றுவார்கள் என்பார். இன்று ஊரை கடந்து நாடு நாடாக சுற்றுலா செல்கிறார்கள். இதுவும் சந்தோசம் என்பதை தாண்டி பெருமைக்கு பரதேசிகளாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டு பயணத்துக்கு லட்ச ரூபாய் சர்வ சாதாரணமாக செலவாகிறது. அதுமட்டுமின்றி நினைத்தால் மாதம்தோறும்  பழனி, திருப்பதி எல்லாம் தேவையற்றது. நம் முன்னோர்கள் ஆயுளில் ஓரிரு முறையே தீர்த்த யாத்திரை-வேண்டுதல் என்று வெளியூர் கோயில்களுக்கு சென்று வருவார்கள். ஒரு வேளை தீபம் ஏற்றக் கூட வசதியற்ற கோயில்கள் (ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்)  கொங்கதேசத்தில் இருக்க திருப்பதியில் லட்சக்கணக்கில் கொட்டுவது சரியா? திருப்பதியில் அதிக பணம் போவது தமிழகத்தை பொறுத்தவரை கொங்கதேசத்தில் இருந்துதான்.

ஆடம்பர வீடுகளுக்கும், கார்களுக்கும் கிரானைட், ஆற்று மணல், சிமண்டிற்கு அலுமினியம், நிலக்கரி, இரும்புத்தாது, என்று கணக்கற்ற வகைகளில் இயற்கை வளங்கள் நாசமடைகின்றன. இவற்றை தயாரிக்கும்போதும், போக்குவரத்தின்போதும் காற்றும் நீரும் கடுமையாக கேட்டுப் போகிறது. இவை திரும்ப சரி செய்ய முடியாத இழப்பாகும். நோய்களும் வந்து பணத்தை கரைக்கும். மழைப் பொழிவை கெடுத்து விவசாயத்தை கேள்விக்குறியாக்கும்.

நாம் ஆடம்பர செலவுகள் செய்வதால் நமக்கு யாரும் சிலை வைக்க போவதில்லை; மாறாக பகையையும், பொறாமையும், பீடையையும் தான் சம்பாரிக்கிறோம்; அதுமட்டுமின்றி வருங்கால தலைமுறைக்கு தவறான பாடத்தையும் சொந்தங்களற்ற நிலையையும் உண்டு பண்ணுகிறோம். எளிமையாக கல்யாணம் செய்தாலோ வீடு கட்டினாலோ சில பொறம்போக்கு மடையர்கள் கேவலம் பேசுவார்கள் என்றென்ன வேண்டாம்-எவ்வளவு நாள் பேசுவார்கள்? பின்னர் மறந்துபோவார்கள்.

ஆக்கப்பூர்வமான வழிகளில் உங்கள் பணத்தை செலவிடுங்கள்; காடுகள் வாங்குங்கள்; தங்கம் வாங்குங்கள்; நம் மரபுகளை மீட்கவும், குடிபடைகள் பசுக்கள் போன்றவற்றிற்கு செலவிடுங்கள். நம் முன்னோர்கள எப்போதும் பெருகுகின்ற விஷயங்களில் தான் முதலீடு செய்வார்களே ஒழிய வீடுகள் கார்கள் போன்ற அழிவுறும் (Depreciating) பொருட்களில் முதலீடு செய்ய மாட்டார்கள்.

நம்மை ஆசிர்வதிக்கும்போது என்ன சொல்கிறார்கள், "தான்யம் தானம் பசு பஹுபுத்திர லாபம் சதசம்வத்சரம் தீர்க்கமாயுஹூ" என்கிறார்கள். இவைதான் உண்மையான செல்வங்கள். ஆடம்பர வீடு, கல்யாணம், கார், ஷேர் போன்றவை செல்வங்கள் அல்ல.

தானியம்-விதை தானியங்கள், ஒன்று ஆயிரமாக பெருகும்.
தனம்-நீர்வளம் உள்ள பூமி, இதில் போடும் முதலீடுகள் தலைமுறைகளுக்கும் பெருகிக் கொண்டே இருக்கும்.
பசு-தன் ஆயுளில் பதினெட்டு கன்றுகள் வரை பெருக்கி பால் நெய் விளைச்சல் ஆரோக்கியம் என்று வளத்தை பெருக்கிக் கொண்டே இருக்கும் தெய்வம்.
பஹுபுத்ர-ஒன்றுக்கு மேற்பட்ட புத்திரர்கள். சந்தான பாக்கியம். வம்ச விருத்தி.

இந்த மாற்றங்களை உடனே செய்ய சிறிது சிரமம் என்றாலும் சிறிது சிறிதாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்போ செய்ய வேண்டும். 

  • பணத்தை அர்த்தத்தோடு செலவு செய்யுங்கள்; ஆசைக்கு கவுரவதிற்கு என்று செலவு செய்தல் வேண்டாம் 
  • ஆடம்பரத்தில் கவுரவம் இல்லை; அது அசிங்கம் 
  • நீங்கள் செய்யும் செலவுகளால் இயற்கைக்கு என்ன பாதிப்பு; சுற்றியுள்ள உறவுகள்-சமூகத்தில் என்ன தாக்கம்; உங்கள் வருங்கால சந்ததிக்கு என்ன செய்தி போகிறது என்பதை உணர்க 

இன்றைய சூழலில் கவுண்டர்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; தேவையற்ற செலவுகளை குறைத்துவிட்டாலே போதும் இருபது ஆண்டுகளில் கவுண்டர்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரன் தான்.

8 comments:

  1. அருமையாகச் சொன்னீங்க.!

    ReplyDelete
  2. எங்கள் பரம்பரையில் நடந்த சம்பவம் ஒன்று எனக்கு நல்ல படிப்பினையாக அமைந்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகிறேன் . . .

    எனது அப்பாவின் தாத்தன் திரு. காளியண்ண கவுண்டர் ஒரு பெரும் நிலக்கிழார் . செல்வம் நிறைய இருந்ததால் அவர் விளையாட்டு பிள்ளையாக இருந்தார் . சாராய வியாபாரம் செய்து வந்த அவருக்கு நிறைய வைப்பாட்டிகளும் இருந்தனர் .
    மரகதம் என்ற செட்டிநாட்டு நாட்டிய காரியின் நாடகம் எங்கள் ஊரில் நடந்தது , அவளை அடைய இவரும் ஒரு வேட்டுவனுக்கும் இடையே போட்டி நடந்தது அது சண்டையாக மாறி ஆத்திரத்தில் அவனை அதே இடத்தில் இவர் வெட்டிக் கொன்றார் . . . அதனால் எங்கள் பரம்பரைக்கு கொலக்கார கவண்டமூடு என்ற பட்டப்பெயரும் வந்தது . . .

    இப்படி ஆட்டம் போட்டு தன் சொத்துக்களில் பெரும்பகுதியை அழித்து விட்டு மறைந்தார், பின்னால் வந்த எனது பாட்டனும் அய்யன்களும் வறுமையில் உழன்றனர் பின் அவர்கள் உழைத்து பாடுபட்டு இழந்த நிலங்களை ஓரளவு மீட்டனர் . . .
    எனக்கு எனது வீட்டில் சொல்லிக் கொடுத்த பாடம் யாதெனில்
    ஒழுக்கமும் எளிமையுமே சிறந்த சொத்து
    ஆணவம் மற்றும் பணத்திமிர் வறுமைக்கு வழி வகுக்கும்
    மது மாது சூது மூன்றும் குலத்தையே நாசம் செய்யும் என்பதே .

    ReplyDelete
  3. துரை ராமசாமி3 November 2015 at 17:39

    மனைவியே ஆனாலும், பலர் பார்க்க முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்ற வேலையெல்லாம் செய்யக்கூடாது.. கிறிஸ்தவத்தில் தான் அந்த கருமமேல்லாம் உண்டு.. சினிமா கூத்தாடிகளைப் பார்த்து கொங்கு கல்யாணத்தில் சிலர் ஹீரோயிசமாக நினைத்து செய்கிறார்கள்.. சிலர் கல்யாண ஆல்பத்துக்காக இப்படி செய்கிறார்கள்.. இதெல்லாம் அசிங்கம்... இந்த நாய்சேட்டைகளை செய்ய நாம் பலபற்றை ஜாதி இல்லை... நாம் குடியானவர்கள்... மனதில் நிறுத்துங்கள்..

    ReplyDelete
  4. சிங்கபூர் கொங்கு நண்பர்களின் பொங்கல் விழாவில், சுமார் 120 பேர் கலந்து கொண்டார்கள். எல்லாருக்கும் பாரம்பரிய முறையில் சம்மணமிட்டு அமரச் செய்து இலை போட்டு நம் சொந்தங்களாலேயே பந்தி பரிமாறப்பட்டது.
    இயலாத பெரியவர்களுக்கு மட்டும் தனியே டேபிளில் உணவு பரிமாறப்பட்டது.
    எந்த உணவும் கடையில் ஆர்டர் செய்யவில்லை. நம் சொந்தங்களே ஆளுக்கொரு உணவுப்பண்டம் அவரவர் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்தனர்.. கண்டவர்களை விட்டு சமைக்க செய்யவில்லை. சிங்கபூர் பணி சூழலிலும் சமைக்க நேரமிருக்கிறது; காரணம் அதுதான் மரியாதை என்ற எண்ணமும் இருக்கிறது..
    நாகரீகம் என்று எண்ணிக் கொண்டு நம் சொந்தங்கள் கையில் தட்டை கொடுத்து பிச்சை எடுக்க செய்யவில்லை.. பப்பே போடுவதுதான் நாகரீகம் என்ற முட்டாள் சிந்தனை வரவே இல்லை..
    பப்பேவில் சோறு போட பிற சாதிக்காரர்களை நிற்க வைத்து அவர்களிடம் நம் சொந்தங்களையும் பெரியவர்களையும் கையேந்தி வாங்கி உண்ண செய்து அவமதிக்கவில்லை..
    சிங்கப்பூரில் சாத்தியமென்றால் நம் ஊரில் அதிலும் குறைந்தபட்சம் நம் குடும்ப விசேஷங்களில் நிச்சயம் சாத்தியமே..
    சொந்தங்கள் சிந்திக்கவும்..

    ReplyDelete
  5. லக்ஷ்மணன்6 March 2016 at 20:33

    CBSE மோகம்..
    எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
    நண்பர்களிடம், உறவினர்களிடம் "உங்கள் குழந்தை என்ன படிக்கிறாள்/ன்" என்று கேட்டால் அவர்களின் பதில்..
    "First standard CBSE SYLLABUS" என்று syllabusஐயும் சேர்த்து அழுத்தி சொல்வார்கள். இதில் அவர்களுக்கு பெருமை.
    ஆனால் cbse syllabusல், குழந்தைகளுக்கு தரும் burdenஐ பற்றி யோசித்துள்ளீர்களா????
    CBSE SYLLABUSல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வு எழுத பயந்துகொண்டு அவன் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
    முன்பெல்லாம் தேர்வில் தோல்வியுற்றால்தான் தற்கொலை செய்து கொள்வார்கள். இப்பொவெல்லாம் தேர்வு எழுத பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் மாணவர்கள்.
    ஏன் CBSE?? என்று கேட்டால்..
    குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் இங்கு பெற்றோர்களின் பதிலாக இருக்கும். குழந்தைகளின் நிகழ்காலத்தை தொலைத்துதான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமா??
    இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்.. பெருமைக்காக cbseல் குழந்தைகளை சேர்த்து விட வேண்டியது. பிறகு பள்ளியில் கொடுக்கும் ஹோம்-வொர்க்கையும் ப்ராஜக்ட்-வொர்க்கையும் இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் ப்ராஜக்ட் எதுவுமே குழந்தைகள் செய்வது போல் இருக்காது. பெற்றோர்கள்தான் விடிய விடிய உட்கார்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அதை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இப்படி ப்ராஜக்ட் கொடுக்கறாங்கன்னு பெருமை கலந்த சளிப்புடன் பதிவு வேறு இடுவார்கள். அந்த பதிவிலும் கூட CBSE SYLLABUS என்ற குறிப்பு கட்டாயம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்ற வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்(cbse அல்ல) 95.9% மாணவியரும், 90.5% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
    எப்படி சாத்தியம்?!!!
    எங்கள் உறவினர் ஒருவரிடம் இதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்.. "இந்த சமச்சீர் வந்தவுடன் கல்விக்கான தகுதியே போயிடுச்சு. இந்த மாதிரி கல்விமுறை இருந்தா இப்படித்தான் எல்லா பயலும் நல்லா மார்க் வாங்குவாய்ங்க. முதல்ல இந்த சிஸ்டத்த மாத்தணும். அதனால்தான் எம்புள்ளைகள CBSEல சேர்த்து விட்டிருக்கேன்" என்றார்.
    பெரும்பாலான பெற்றோர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கல்வி என்பது கடினமானதாகத்தான் இருக்க வேண்டும். நிறைய ஹோம்-வொர்க் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது தரமான கல்வி. மிக எளிமையாக, குழந்தைகளின் மனநிலைக்கும் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றார் போல் கல்வி இருந்தால் அது தரமற்ற கல்வி.
    பாரதியை பள்ளியில் சேர்த்தவுடன் அவன் ஆசிரியரிடம் நான் சொன்னது "தினமும் இரண்டு subject மட்டும்தான் ஹோம்-வொர்க் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கொடுத்தால் அவன் செய்ய மாட்டான்". இப்போ அவன் எட்டாம் வகுப்பு படிப்பதால் கூடுதலாக ஒரு subject. அதாவது math + any 2 subject.
    அதேபோல் விடுமுறை நாட்களில் ஹோம்-வொர்க் கொடுத்தால் செய்ய விட மாட்டேன். ப்ராஜக்ட்-வொர்க் என்றால் ஓகே. அதுவும் அவனே செய்வதாக இருக்க வேண்டும். அவ்வப்போது சின்ன சின்ன உதவி வேண்டுமானால் செய்வேன். அவனால் செய்ய முடியாத இயலாத ப்ராஜக்ட் என்றால் அவனால் இயலவில்லை என்று அவன் ஆசிரியரிடம் தெரிவித்து விடுவேன்.
    கல்வியை குழந்தைகள் விரும்பி கற்க வேண்டுமே தவிர, அதை திணிக்கும் அதிகாரம், உரிமை பெற்றோர்களுக்கு கூட கிடையாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  6. இன்று நம் சமுதாயத்தின் சராசரி வருமானம் போன தலைமுறையை ஒப்பிடுகையில் பெரிய அளவில் வளரவில்லை. ஆனால் செலவுகள் பெருமளவு கூடியுள்ளன. இதனால் நம் சமுதாயத்தின் செல்வம் கரைந்துகொண்டே செல்கிறது. இந்த செலவுகள் பெரும்பாலும் பிறரோடு ஒப்பிட்டுக் கொள்வதும் தற்காலத்தின் தவிர்க்க இயலா சூழல்களாலும் ஏற்படுகிறது.

    நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த உழைப்பு, சேமிப்பு, கவனம், பல்நோக்கு சிந்தனை போன்ற எல்லாமே நம் விவசாய பணியில் இருந்தும் நம் வீட்டு பெண்களிடம் இருந்தும் கற்றவைதான். போன தலைமுறைப் பெண்கள் பசு, காய்கறிகள் போன்றவற்றால் வீட்டு செலவை குறைத்ததொடு மட்டை பின்னுவது, தையல், கூடை, பால், தயிர், மோர், பழம் விற்பது அது இது என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள், அதனால் பணத்தை மிச்சப்படுத்துவதொடு சேமித்தும் விடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஓயாது வேலைகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்கவில்லை; இயற்கையை சேதப்படுத்தவில்லை. குழந்தைகளும் பொறுப்புணர்வோடு ஆரோக்கியமாக வளர்ந்தார்கள்.

    நகரத்தில் வாழ்ந்தவர்கள்/விவசாயத்தை விட்டவர்கள்/ஒற்றைக் குழந்தைகள்-போன தலைமுறை குழந்தை வளர்ப்பில் சிறிது கோட்டை விட்டுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் குழந்தைகளை படிப்பு என்றும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தாலும் வேலைக்கு பழக்காமல் விட்டுவிட்டனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு குடும்பத்தையே பாதிக்கிறது. இதே நிலை நீடித்தால் முன்னோர்கள் சேர்த்த சொத்தை விட்ரு திண்ணும் நிலை நிற்பது கடினம்.

    செல்வத்தை சேர்க்க, சேமிக்க அதிகம் வருமானம் வர வைக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது மறுபுறம். ஒவ்வொரு செலவை செய்யும் முன் இது "தேவையா" என்று பலமுறை சிந்தித்து, தேவைதான் என்றால் அதை சிக்கநமாக செய்வது எப்படி என்று சிந்தித்து, செலவு செய்யவேனும். குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பை உணர்த வேண்டும்; பொறுப்புணர்வு வரவைக்க வேண்டும். குடும்ப பற்றை வளர்க்க வேண்டும். குடும்பத்தின் வளர்ச்சியில் தனக்கும் பங்குண்டு பொறுப்புண்டு என்ற எண்ணம் சிறுவயதிலேயே வரணும். கல்விக்கு செய்யும் செலவைப் பற்றி சிந்திக்க வேண்டும். பெரிய பள்ளியில் சேர்த்தாலே போதும் பெரிய ஆளாக வந்துவிடுவான் என்பது மூட நம்பிக்கை. நம் சமுதாயத்தில் படிக்காமல் விட்டு/தோல்வி அடைந்தவர்களில் 90% மேல் மிக நல்ல நிலையில் தொழிலதிபர்களாக உள்ளனர். படித்தவர்களில் 5% கூட தொளிலதிபர்காக இல்லை; கூலிகளாக மட்டுமே உள்ளோம். என்ன கூலி கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். கல்வி எதற்காக என்பதிலேயே முதலில் ஒரு ஆழ்ந்த சிந்தனை வேண்டும்.

    ஒரு குடும்பத்துக்கு சாதாரணமாக பால் செலவு மட்டுமே சுலபமாக ரூ.1,500.00 (நாட்டுமாட்டு பால்) வந்துவிடுகிறது.முற்காலத்தில் இது குடும்பத்தின் ஒரு மாத மொத்த உணவு செலவு. இதுவே அரை ஏக்கர நிலம் இருந்தாலே போதும் பால் செலவு, காய்கறி செலவு, சிறுதானியங்கள் மூலம் ஒரு வேளை அரிசி செலவு போன்றவற்றை தாண்டி சேமிக்கவும் முடியும். வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போட்டால் கூட போதும். ஆனால் பலருக்கும் வளைவதில்லை. கல்விச் செலவுகள் அப்ற்றி இன்று வீட்டிலிருக்கும் பெண்கள் சம்பாதிக்கக் கூட ஏராளமான கைத்தொழில்கள் உள்ளன. சந்தைப்படுத்தவும் இணையம் முதல்கொண்டு பல வழிகள் வந்துவிட்டன. இன்று ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற நோகாது நோம்பி கும்பிடும் தொழில்களை (!!) மட்டுமே செய்ய துணிகிறார்கள். உழைப்பைப் போடும் தொழில்களை செய்ய தொழிலாளர்கள் மட்டுமல்ல தொழில் முனைவோர் கூட குறைந்துவிட்டனர் என்பதே எதார்த்தம். எளிமையான தொழில்களில் கால் வைத்தால்கூட எளிதாக வெல்ல முடியும். தேடல் வேண்டும். நம் சமுதாய தொழில் முனைவோர் நம் சமூக பெண்களுக்கு வீட்டில் இருந்து அவர்கள் நேரத்திற்கு தக்க சம்பாதிக்க உரிய வழிகளை உருவாக்க வேண்டும்.

    வருங்காலத்தில் நல்ல மாற்றங்கள் உருவாகட்டும்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates