Trending

Sunday 9 November 2014

பழனி முருகனும் கொங்கப்பசுக்களும்

ஞான சொருபமாக, அன்பே வடிவாக, அருளை பொழியும் அப்பன் முருகனின் பேரருள் ஆற்றலை பெற உடலையும் மனதையும் ஆத்ம சுத்தியையும் நல்கும் அற்புத விரதமான கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் ஆறாம் நாள் இன்று. ஒரு பழம்பெரும் முருக பக்தர், அருளாற்றல் தேஜஸ் வெளிப்படும் ஞானமுள்ள யோகி பகிர்ந்த செய்திகள் கீழே,

பெற்றவர்களை விட்டு தண்டபாணியாக நின்ற முருகன் நாட்டுப்பசுக்களை மேய்த்து, அதன் பால் பொருட்கள் மூலம் பஞ்சாமிர்தம் செய்து உண்டுவந்தார். (பஞ்சாமிர்தம் என்றால் நாட்டுப்பசும்பால் (5 பங்கு), நாட்டுப்பசுவின் தயிர் (4 பங்கு), பனங்கல்கண்டு (3 பங்கு), பஞ்சீகரண சுத்தி மூலம் செய்த நாட்டுப்பசுவின் நெய் (2 பங்கு), தேன் (1 பங்கு) முதலான ஐந்து பொருட்கள் கொண்டு செய்யப்படுவதே.). இந்த பஞ்சாமிர்தத்தை பழநி மூலவர் சிலை மீது அபிஷேகம் செய்வதால் ஏராளமான மருத்துவ குணம் கொண்ட பிரசாதம் கிட்டும்).


அதன் சாணத்தை எரித்து திருநீறாக்கி உடம்பில் பூசி வெயில், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொண்டார். திருநீறு என்பது நாட்டுப்பசுவின் சாம்பல் முறையாக எடுத்து எரிக்கப்பட்ட பஸ்பமே (அதில் ஜவ்வாது வாசனைகள் இருக்கவேண்டிய அவசியமில்லை). கையில் இருக்கும் தண்டமே பசுவை மேய்ப்பதற்காக பயன்படுத்தியதுதான். இதனால் தான் பழநி ஸ்தலத்தை "திரு'ஆ'வினன் குடி" என்று சொல்கிறோம். பழநியாண்டவருக்கு மட்டுமல்ல எந்த ஒரு தெய்வத்துக்கும் அபிஷேக பால், தயிர், நெய் விளக்கு, விபூதி ஆகியவற்றிற்கு நாட்டுப்பசுவின் சாண பஸ்பம் (திருநீறு), பால், தயிர் நெய்தான் பயன்படுத்தணும். அவை பல நோய்களைத் தடுக்கக்கூடிய மருந்துகள். சீமை மாடுகளின் பொருட்களைப் பயன்படுத்துவது பெரும்தோஷம். ஏனென்றால் நம் சாஸ்திரங்கள், புராணங்கள், சித்த ஆயுர்வேத புஸ்தகங்களில் சொல்லியுள்ள பசுக்கள் என்பன நம் நாட்டுப்பசுக்களே, அக்காலத்தில் சீமை மாடுகள் இங்கே இல்லை. சீமை மாடுகளின் பால் தீமையானது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய நெருப்புச் சுடர்களை கங்கை தாங்கியதால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயரும் உண்டு. தற்போது உள்ள காங்கேயம் இன கொங்கப்பசுக்கள் கங்கைக் கரையில் இருந்து முருகனால் தென்னாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வர்க்கம் என்பர். (காங்கேயன்-கங்கையால் தாங்கப் பட்டவன்; கங்கையின் மைந்தன்) நாட்டுப்பசுக்கள் உள்ள இடம்தான் கோயில். அதனால்தான் ஒவ்வொரு கோயிலிலும் நாட்டுப்பசுவை வைத்து கோயில் பசு என வளர்த்தார்கள். அதற்காக கோசாலை மற்றும் மேய்ச்சல் நிலங்களை மானியமாக விட்டனர். பழநி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் செய்யவும், திருநீறு தயாரிக்கவும் வேண்டி மன்னர்கள் காலத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர நிலங்களை மானியமாக விட்டுள்ளனர். அத்தகைய நாட்டுபசுவின் மகத்துவத்தையும் பெருமையையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

(சுத்தமான திருநீறு, நாட்டுப்பசுவின் நெய் வேண்டுவோர் +91 88837 40013 அழைக்கவும். நாட்டுப்பசுவின் பொருட்கள், கோசாலை தகவல்கள் கூட தருவார்கள்)

2 comments:

  1. dear sir pls explain
    பஞ்சீகரண சுத்தி

    ReplyDelete
    Replies
    1. பஞ்சீகரன சுத்தி என்பது, பாலை பிறையூற்றி தயிராக்கி, வெண்ணெய் எடுத்து, அதே நாளில் உருக்கி நெய்யாக்குவது.. இதுவே முறையான நெய் செய்விக்கும் வழி.. இப்படி செய்யப்பட நெய் தான் மருந்துக்கும் பயன்படுத்தவேண்டும்...

      Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates