Trending

Tuesday 11 November 2014

ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது?


  • நம் காணியாச்சி கோவில் எங்கு உள்ளதோ அங்குதான் நம் முன்னோர்கள் இருந்தனர்.. அதாவது சொந்த காணியில்... அருகிலேயே கோவிலை வைத்துக்கொண்டு ஏன் நம் முன்னோர் கோவிலில் திருமணம் செய்யவில்லை, மாறாக கல்யாண படி என்று திருமணத்தின் பின் கோவிலுக்கு போய்வருவார்கள், அது ஏன் சிந்திக்க வேண்டும்.

  • நம் கொங்கு திருமணங்களில் நம் 18 கொங்க குடிகளுக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கும்.. ஆனால் அதில் சிலர் நம் கோவில்களுக்குள் அனுமதியற்றவர்களாக இருப்பர்..

  • நம் திருமண சடங்குகளில் சவரம் செய்யபடுவது உண்டு.. அது கோவிலில் நடக்க கூடாது (முடிகாணிக்கை கடவுளுக்காக; சவரம் சுய அழகு, மருத்துவம், 'சாங்கியம்' வேண்டி)

  • கோவிலுக்குள் கடவுளுக்கும் இறை பணிக்குமே முன்னுரிமை முக்கியத்துவம் மாலை மரியாதை எல்லாம் இருக்க வேண்டும்.. மனிதர்களுக்கு அல்ல..

  • வீட்டில் நடந்த கல்யாணங்கள் சொந்தம் மட்டும் வைத்து நடக்கும். மூன்று நாள் நடந்தாலும் செலவு தெரியாது. சொந்த, பந்தம் பார்த்துக்கொள்ளும். இடைக்காலத்தில் நண்பர்கள் வட்டாரம் அதிகமான போதும மண்டபத்தில் கல்யாணம் வைக்கும் பழக்கம் வந்தது. மண்டப வாடகை, ஆர்கெஸ்ரா, மூன்று நாள் சாப்பாடு செலவு, கூலி ஆள் செலவு என்று கல்யாணம் செய்வது என்பது கடினமானது. சீர் செய்யாம கல்யாணம் செய்யறத கேவலமா முன்னர் பேசுவாங்க..... ஏழ்மையில் உள்ள சிலரால் மூன்று நாள் மண்டபத்தில் வைத்து இதனை முழுமையாக செய்ய இயலாது..செலவு கூடுதலாகும். பெருமைக்காக மண்டபங்களில் கல்யாணம் வைத்து செய்தவர்கள் கடனாளி ஆன காலம் உண்டு. இதனை பயன்படுத்தி சில கிறித்துவ கும்பல் கோயிலில் (சர்ச் மேரேஜ் போல ) கல்யாணம் செய்யும் கலாச்சாரத்தை முதலில் அறநிலையதுறை கோயில்களில் அறிமுகபடுத்தினார். பின்னர் டிகேட் போட்டு பிரபலபடுத்தினர். நம்மூரில் உள்ள சில பல பிரபலங்கள் (கவுண்டர் ஐகான்ஸ் ) இந்த கோயில் கல்யாணங்களை செய்து கிறித்துவ முறையில் ரிசப்சன் (வரவேற்பு) வைத்தார்கள். அதன் பிறகு நகர கவுண்டர்கள் , இதனை பிடித்துக்கொண்டனர். வசதி இருந்தும் சீர் செய்யாமல் கல்யாணம் செய்தனர். இதனால், நம்மூர் வண்ணான், நாவிதர், கொசவர், பறையர், மாதாரியர், கைகொளர், அருமைக்காரர், பங்காளிகள் என அனைவரும் ஒதுக்கப்பட்டனர். இந்த முறை கல்யாணம் காலத்தை சேமிப்பதாக நினைத்தனர், செலவை குறைப்பதாக நினைத்தனர், ஊர் சமுதாய உறவுகளை புறந்தள்ளினர். கோயிலிலும், வருமானம் வருவதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை வரவேற்றனர். மேலும், அரசு சோறு கல்யாணம், ஆயிரம் ஜோடிகளுக்கு கல்யாணம் என்று கோயிலில் கல்யாணம் செய்யும் பிரச்சாரத்தை பிரபலபடுத்தியது. ஆனால், உண்மையில் வீட்டில் சடங்குகளுடன் நடந்த கல்யாணங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்கள் பாரம்பரியத்தின் மேல் உள்ள பிடிப்புகள் உடையும், காலப்போக்கில் மறையும். இதுவே, அரசின் எண்ணமாக இருக்கிறது.

  • மேலும், கோயிலுக்குள் இருந்த கட்டுபாடுகளை குறைத்து கோயிலில் எப்படி வேண்டுமானாலும் போய் வரலாம் (சர்ச் போல) என்று மனப்பான்மையை வளர்க்க இந்த கல்யாணங்கள் உதவின. இன்றைய இளசுகள் கோயிலுக்குள் வரைமுறை இல்லாமல் போய் வருகின்றனர். பெரிசுகள் கோயிலை எப்படி திருப்பணி செய்ய வேண்டும் என்று தெரியாமல் இடிக்கின்றனர். இதெல்லாம் கோயிலின் மீது நமக்கு இருந்த பக்தியை, நாம் நம்மை ஆத்மார்த்தமாக வழிபடும் முறையை குறைத்துள்ளது.

  • கோயிலுக்குள் சக மனிதர் ஒருவரை கும்பிடகூடா கூடாது. அய்யரை கூட கும்பிடக்கூடாது. அங்கு அந்த தெய்வத்திற்கு மட்டும்தான் மரியாதை. தெய்வ சிந்தனை இருக்கும் இடத்தி ல்வேறேதுவுனம் இருக்ககூடாது. ஆனால், கோயிலுக்குள் இருவருக்கு கல்யாணம் என்றால் அவர்களுக்குள் என்ன சிந்தனை வரும். இறை சிந்தனை மட்டுமே இருக்குமா?

  • கோயிலுக்குள் கல்யாணத்தன்று பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் எப்படி கோயிலுக்குள் வர முடியும். கல்யாணத்திற்கு வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆனால் அவர்கள் எப்படி கோயிலுக்குள் வருவார்கள்.

  • காளியம்மன், செல்லாண்டியம்மன், சிவாலயம் போன்றவை சுடுகாட்டில் இருப்பவை. (முற்காலத்தில் சுடுகாடு இருந்த இடத்தில் தான் சிவன்-காளி கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும்) சுடுகாட்டிற்குள் சென்று கல்யாணம் செய்யகூடாது.

  • அவரவர் இல்லத்தில் கல்யாணம் (பெண் வீடு) செய்ய வேண்டும். கோவின் இல்லத்தில் (கோயில்) அல்ல. வீடுகளில் வசதி இல்லை என்றால் பெண் வீட்டு பங்காளிகளின் வீடுகளில் பெரிய வீடு இருந்தால் அங்கே கல்யாணம் செய்யலாம். நண்பர் வட்டங்களை கல்யாணத்திற்கு அழைக்காமல் வீட்டில் இருநூறு பேரை வைத்து சீர் சடங்குகளுடன் கல்யாணம் செய்வது முடியாத காரியமல்ல. மனம் வேண்டும். இன்றும் செட்டியார்கள் சில அய்யர்கள் முன்பு போல நெருங்கின பங்காளிகள், சொந்தங்கள் வைத்து மட்டுமே கல்யாணம் செய்கின்றனர். நண்பர்களை கல்யாணம் முடிந்து சில நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆசி கூரச்சொல்லலாம். அவர்களது அலுவலும் பாதிக்காது இழவு வீட்டில் கூட கூட்டம் அதிகமானால் இடம் போறாது. அதற்காக பிணத்தை மண்டபத்தில் வைத்து அனைவரையும் கூப்பிடுவதில்லையே. நெருங்கிய பங்காளிகள் பிணம் தூக்க அன்றே வந்து விடுவர். கருமாதி வரை இருப்பர். தெரிந்தவர்கள், நண்பர் வட்டங்கள், பக்கத்துக்கு ஊர் காரர்கள் மூன்று நாள் கழித்து ஒவ்வொருவராக வந்து செல்வர். இழவை வசதி குறைந்த சிறிய வீட்டில் சமாளிக்கும் போது கல்யாணத்தையும் சிறிய வீட்டில் வைக்க முடியும்.
  • வீட்டில் கல்யாணம், திரட்டி, எழுதீங்கள், காதுகுத்து, மங்கள காரியங்களும் நடைபெற வேண்டும். இழவை மட்டும் வீட்டில் வைத்து மங்கள காரியங்களை காசை விரயம் செய்து மண்டபங்களில் வைக்ககூடாது.

கல்யாணம் நடைபெறுவது பெற்றோர்களின் பிறவி பயன் மற்றும் செய்துகொள்பவரின் வாழ்க்கையின் முதல்படி. எனவே இவர்களின் ஆத்ம திருப்திக்கும், சந்தோசத்திற்கும் நடைபெறுவது . மாமன் ,மச்சான் ,பங்காளிகள் ஆகியோர் ஒன்றிணைந்து திருமண வேலைகள் செய்து திருமணத்தை நடத்தி அவர்களை மகிழ்விப்பது. ஆனால் , இங்கு திருமணம் நடப்பது தமது பகட்டு வாழ்க்கையை இந்த சமுதாயத்துக்கு காண்பிப்பதற்கும், உன்னைவிட நான் பெரியவன் என்ற அகந்தையை காட்டுவதற்கும்மான ஓட்ட பந்தையமாக நடகின்றது. இதில் தமது சமுதாய மற்றும் குடும்ப சொந்தங்களை ஒதுக்கிவிட்டு மேல்தட்டு மக்களை முன் நிறுத்தி அவர்கள் சௌகரியத்துக்காக கிராமத்தை விட்டுவிட்டு நக[நரக]ரத்திற்கு ஓடி பணத்தை இறைத்து மண்டபத்திலோ அல்லது கோவிலிலோ நடத்தும் நிலையுள்ளது. இதனால் தமது சந்தோஷதையும் தொலைத்து, போட்டி பொறாமை வளர்த்து, செல்வத்தை அழித்து, எதிர்கால சந்ததிகளையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட திருமணத்திற்கு செல்வதற்கு தயக்கமாக உள்ளது.

நன்றி: கொங்கு கல்யாணம்

தொடர்புடைய பதிவுகள்,

மரபு திருமணமா-விளம்பர திருமணமா ?

1 comment:

  1. பங்காளி பந்தல் போட
    மாமன் இலை போட
    அத்தை மொழுகிவிட
    சின்னம்மா சிங்காரிக்க
    நாங்கயா நகைபோட
    மச்சான் மாவிலைகட்ட
    பாசம்காட்டும் பாட்டனுடன்
    அமுச்சி அழைத்துவிட
    அப்புச்சி ஆசீகூற
    பொண்ணு ஊட்ல கலியாணம்
    பொட்டியிலே சீர் கொடுக்கும்
    பொறந்தவன் கைகோர்வை
    வாசலிலே தோரணைங்கள்
    பெருமையுடன் கைகூப்பும்
    பெரியம்மா பட்டுஉடுத்த
    குதிரைஏறி மங்கலனாய்
    கோமரன் மாப்பிள்ளையை
    சொந்தங்கள் எதிர்நின்று ......





    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates