Trending

Sunday 23 August 2015

கம்பர்

நம் கல்யாணங்களில் குடிமகன் பாடும் மங்கள வாழ்த்து, புலவனார் பாடும் கம்பர் வாழ்த்து போன்றவற்றை எழுதியவர். கொங்கு மக்களின் வாழ்க்கை நெறியான ராமாயணத்தை தமிழில் எழுதியவர். நம் இனத்தின் மேன்மையை பற்றிய ஏர் எழுபது, திருக்கை வழக்கம். போன்ற அரிய பணிகளை செய்தவர்.

சோழனிடம் வெள்ளாளர்கள் புகழை விட்டுக்கொடுக்காது பேசியவர். கவுண்டர்களைப் பாடிய இந்த நாவால் எவரையும் பாட மாட்டேன் என்று கூறி சோழனைப் புகழ்ந்து பாட மறுத்தவர். கவுண்டர்கள் கொடுத்ததை பெற்ற இந்த கை யாரிடமும் ஏந்தாது என்று வலக்கையால் வாங்காது இடக்கையால் சோழனிடம் பரிசை வாங்கிக் கொண்டவர். சோழனின் நேரிமலை குடியானவர்களின் போர்பட்டரைக் கல்லுக்கு சமமாகாது என்றும், சோழனின் செங்கோல் கொங்கு மக்களின் உழவு மேழிக்கு ஒப்பாகாது என்றும் கூறியவர். காவேரியின் வெள்ளம் கொங்கதேசத்தில் கவுண்டர்கள் வீட்டில் மக்கள் விருந்துண்டு வாய் கொப்பளித்து துப்பிய நீர்தான் என்று நிறைந்த அவையில் கூறி அதை நிரூபித்தும் காட்டியவர். கொங்கதேசத்தை முழுக வந்த வெள்ளத்தை தன் தெய்வ சக்தி நிறைந்த பாடலால் தணிய செய்து அதற்கு கைமாறாக நம் கல்யாணங்களில் அவர் வழி வந்த புலவர்களுக்கு கல்யாண வரியை பெற செய்தவர்.

கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போனாளென் றிந்நீர்
உரைகிடக்க லாமோ உலகுடைய தாயே
கரை கடக்கலாகாது காண்.



கம்பருக்கு அடிமைபுகுந்த வேளாளரிற் சிலரை கொங்கு மண்டல சதகம் கூறுகின்றது. அவர்கள், செம்பகுலாதிபனாகிய அமராபதியும், வெண்டுவ கோத்திரத்துத் தீத்தனும், வண்ணக்க கோத்திரத்து நல்லவனுமாவர். இந்நூல் கூறும் கம்பரைப் பற்றிய செய்திகள் நூலாசிரியர் காலத்தில் நிகழ்ந்த 
நிகழ்ச்சிகளாதலின் முற்றும் உண்மையேயாம் என்பதில் ஐயமில்லை.

கொங்கில் குடியேற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் முந்தைய ஆத்திபநல்லூர் காணியின் காணியாளக் கவுண்டராகிய சாத்தந்தை கூட்டத்து வள்ளல் சடையப்ப கவுண்டரால் ஆதரிக்கப்பட்டவர்.

சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே
-கொங்கு மண்டல சதகப்பாடல் 

இவ்வளவு புகழ் மிக்க கம்பரின் உருவம், அவர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட கோயிலான மயிலாடுதுறை அருகே உள்ள தேரழுந்தூர் (கம்பர் பிறந்த ஊர்) ஆமருவியப்பன் கோயிலில், சிலை வடிவில் உள்ளது. நிச்சயம் இதுவே அவரது திருவுருவமாகும். நம் அனைவரின் தரிசனத்துக்கு.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates