Trending

Thursday 13 August 2015

அமாவாசை-பித்ரு தர்ப்பணம்

முன்னோர் இறந்த திதி அன்றும், அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். இயலாதோர், தெரியாதோர் ஆடி-தை-புரட்டாசி அமாவாசைகளில் செய்யலாம். ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது. ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம். பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த செய்தி கொங்கு மண்டல சதகத்தில் வருகிறது. புறநானூறில் சேரன் பாரதப் போரில்
மாண்டவர்களுக்கு பெருஞ்சோறு (பிண்டம்) கொடுத்ததும், தென்புலத்தார் வழிபாடு என்று வள்ளுவர் சொன்னதும் சில உதராணங்கள். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் போர் பிரகடனத்தின் போது "தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்" (தென்புலத்தார் கடன் (பித்ரு காரியங்கள்) செய்ய மகனைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடதுக்குச் செல்லுங்கள் போரில் மாண்டுவிடாதீர்கள்) என்ற எச்சரிக்கை விடுப்பது அக்காலத்தில் பித்ரு காரியத்திருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை விளக்கும். காலப்போக்கில் இது படையல் போடுதல் என்னும் அளவில் சுருங்கிவிட்டது.

இன்று பித்ரு தோஷத்தால் தான் சரியான காலத்தில் கல்யாணமாகாமை, குழந்தையின்மை, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாரா விபத்துக்கள்-நஷ்டங்கள், குல விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவம் அறிந்து வெளிநாடுகளில் கூட பின்பற்ற துவங்கியுள்ளார்கள். நாமோ, அரைவேக்காடுகள் பேச்சை கேட்டு நல்ல காரியங்களை கைவிடுகிறோம்? பித்ரு பூஜைக்கு ஏராளமான அறிவியல் காரணங்களும் உள்ளன. பித்ரு தர்ப்பணம் என்பது ஒரு கடன். யஞ்யம். செய்யாதவர்களுக்கு பாவம் சேரும். அந்த கடனடைக்கும் சுமை பெண்களுக்கு இல்லை, ஆண்களுக்குத்தான். 



*அந்தணர்களைக் கொண்டு முறையாக எள்ளும் நீரும் விட்டு, பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்யலாம். நதிக்கரைகளில் செய்வது விசேஷம்.



*இயலாதோர், வீட்டில் முன்னோர்களுக்கு எளிமையான  படையலிட்டு வணங்கி காக்கைக்கு எள் நீரும் தயிர் அன்னமிட்டு, பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.



*அதுவும் முடியாதோர் பசுவுக்கு அகத்திக் கீரை கொடுத்து முன்னோராக பாவித்து வழிபடலாம். ஆற்றோரம் சென்று உடலில் மண்ணை பூசி, கங்கையை நினைத்து மூழ்கி எழுந்து வழிபடுவதும் ஒரு முறையாக சொல்லப்படுகிறது.



*இன்றைய தினம் குலதெய்வ வழிபாடு மாபெரும் புண்ணியம் தரும். முன்னோர்களுக்கு இந்த புண்ணியம் சேரட்டும் என்று ஏதாவது ஒரு நல்ல காரியம், தானம்  செய்தல் நலம்.



புகை மது அசைவம் எதுவுமின்றி, இன்று ஒரு வேளையாவது விரதம் இருந்து பித்ரு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் உங்களுக்கு மூத்த தலைமுறை (அப்பா தாத்தா) இருந்தால் அவர்களே செய்ய வேண்டும், நாம் செய்ய கூடாது. பெற்றோர்களை கவனிக்காது அவர்கள் மனம் நோகும்படி செய்துவிட்டு பித்ரு பூஜை செய்வதில் எந்த பலனும் இல்லை!

ஜாதி மாறி கலப்பு கல்யாணம் செய்தவர்களின் தர்ப்பணம் பித்ருக்களைச் சேராது (ஆதாரம்: பகவத் கீதை). அதனால்தான் ஜாதி மீறி கலப்பு கல்யாணம் செய்தவர்கள் விரைவில் குடிநாசமாவர் என்று சொல்கிறார்கள்.
(ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:)

ஒரு சம்பவத்தை கூற ஆசைப்படுறேன். கேரளத்தில் மிகப் புகழ் பெற்ற ஜோதிடர் ஒருவாய்க் காண நம்மூர் பெருந்தலை ஒருவர் சென்றார். அவர் ஜாதகத்தை ஆராய்ந்து அது இது என்று பயங்கரமாக அலசி கொண்டிருந்தார்களாம்.

வீட்டுக்குள் இருந்து வெளிவந்து அந்த ஜோதிடரின் குருவும், தந்தையுமான பெரியவர், "ஏப்பா! நீங்கல்லாம் கொங்கர்ஸ் தானே?" என்றாராம். "ஆமாம் சாமி!" என்று கூற, "உங்களை ஒரு தோஷமும் ஒன்னும் பண்ணாது; உங்க முன்னோர்கள் பல தலைமுறையா நாட்டு மாட்ட ஷ்ரத்தையோட பார்துண்டிருந்தா; நீங்கலாம் உங்காத்ல நாட்டு மாட்டையும், குலதேவதையும், பித்ருக்களையும் ஒழுங்கா காப்பாத்தி கும்பிடுங்க போதும். பெரிய ஆராய்ச்சிலாம் தேவையில்ல" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

7 comments:

  1. மிக மிக அருமையான வ்யாசம்.

    பித்ரு ருணம் (கடன்) ஒவ்வொரு மகனும் ஆற்ற வேண்டிய கடன்.

    சொந்த பந்தங்கள் நண்பர்கள் போன்ற அனைவருக்கும் இதைப்பற்றிய விபரத்தை அவச்யம் பகிருங்கள்.

    ஒவ்வொருமாதமும் வரும் அமாவாசை.

    மஹாலய பக்ஷம் (புரட்டாசி / ஐப்பசி) எனும் பதினைந்து நாட்கள்.

    இந்த சமயத்தில் நிச்சயமாக முறையாக தர்ப்பணம் செய்துவிக்கும் வேதவித்துக்கள் வாயிலாக தர்ப்பணம் செய்யவும். அது முடியாமற் போகுதல் என்ற நிலையில் ............ அடுத்த படியான ........ ஏழைகளுக்கு அன்னமிடல்.........மாட்டுக்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றை செய்யுங்கள். வேதவித்துக்கள் வாயிலாக தர்ப்பணம் செய்த போதும் அதையடுத்து பசித்தோருக்கு அன்னமிடுதலும் கூட நன்று.

    அவரவருடைய நிலை எப்படியானது என்பதற்கு சாக்ஷி அவரவர் மனசாக்ஷி.

    இதைத் தவிர எவருடைய தாயாரோ தந்தையோ அல்லது இருவருமோ சிவபதத்தை அடைந்து விட்டார்களானால் ஒவ்வொரு வருஷமும் வரும் அவருடைய திதியில் வார்ஷிக ச்ராத்தம் எனப்படும் தெவசத்தை / திதி கொடுப்பதை முறையாக வேதவித்துக்கள் வாயிலாக செய்வது மிகவும் அவச்யம்.

    இது முடியாதவர்கள் மட்டிலும் அடுத்தடுத்த படிக்கு அன்னதானம் செய்தல் அல்லது மாட்டுக்கு அகத்திக்கீரை அளித்தல் போன்ற படிக்கு தங்கள் நிலைமை மற்றும் சக்திக்கு தகுந்த படிக்கு இறந்து போன தங்கள் தாய் தந்தையரை நினைத்து அந்த நாளை முறையாகக் கழிக்கலாம்.

    ஒரு மாட்டுக்கு அகத்திக்கீரை கூட கொடுக்க இயலாத நிலை வந்து விட்டால் என்ன செய்வது?

    இப்படிப்பட்ட மிகவும் தைன்யமான நிலையில் இருக்கும் ஒரு க்ருஹஸ்தன் செய்ய வேண்டியதைக் கூட சாஸ்த்ரங்கள் பகிர்கின்றன.

    இப்படி ஏதும் செய்ய இயலாத ஒரு க்ருஹஸ்தன் தன்னுடைய தைன்ய நிலையை எண்ணி வருந்தி நாற்சந்தியில் நின்று என்னுடைய தாயாரே தந்தையாரே ............ உங்களுக்குத் திதி கொடுக்க வேண்டிய இன்றைய தினத்தில் என்னால் ஒரு மாட்டுக்கு ஒரு கட்டு புல் கூட கொடுக்க இயலாத நிலையில் நான் இருக்கிறேனே என்னை மன்னியுங்கள் என்று உளமாற வருந்திக் கண்ணீர் விட்டானானால்..............

    அந்தக் கண்ணீரே பித்ரு தேவதைகளுக்கு செய்யப்பட்ட வழிபாடாக எண்ணி ............

    பித்ரு தேவதைகள் அந்த க்ருஹஸ்தனை ஆசீர்வதித்து அவனுடைய வாழ்வு வளம் பெற வாழ்த்துவர்.

    நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.

    ReplyDelete
  2. புறநானூற்றில் புல் மேல் பிண்டம்
    நீத்தார் கடன் தீர்க்கும் தறுவாயில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது பிண்டமிட்டு கடனாற்றுதல் வைதிக வழக்கம். இந்த வழக்கம் இன்று நேற்றல்ல சங்ககாலம் முதலே தொடர்ந்து இருந்து வருகிறது. வெள்ளிருக்கிலையார் என்னும் ஒரு புலவர் இருந்தார். இவருடைய பெயர் வினாயகரைக் குறிப்பதாகவும் சங்ககாலத்தில் வினாயகரைப் பற்றிய குறிப்புக்கு இது ஆதாரமென்று சிலரும், இல்லை இது எந்தையைக் குறிப்பதுதான் என்று சிலரும் கச்சைக் கட்டும் சர்ச்சை தனிக்கதை. அவரை ஆதரித்த பெரும் புரவலன் வேள் எவ்வி. அவன் பலரோடுண்டு இறும்பூதெய்தும் மாண்புடைத்தவன். அவன் இறந்து பட்டான். அவனைக் காணச்சென்றார் வெள்ளிருக்கிலையார். அங்கு அவன் காதல்மனைவி கண்ணீரோடு புல்லின் மேல் பிண்டமிடக்கண்டார். புலவரல்லவா. கையறுநிலையில் பாடல் மலர்ந்தது.
    நோகோ யானே தேய்கமா காலை
    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
    தன்னமர் காதலி புன்மேல் வைத்த
    ன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயிற்
    பலரோ டுண்டன் மரீஇ யோனே.
    என்பது அவருடைய புறநானூற்றுப் பாடல் பலரோடும் பகுத்துண்டு வாழ்ந்த அவன் புல்லின் மேல் இடப்பெறும் இந்தத் தனிப்பிண்டம் கொண்டு மகிழ்வானா என்பது அவரது கேள்வி.
    புறநானூறு காலத்திலும் புல் மேல் பிண்டமே நீத்தார் கடனாக இருந்தது புலனாகிறதல்லவா.
    -சங்கர நாராயணன் முகப்புத்தகத்தில்

    ReplyDelete
  3. 1.எங்கள் ஜாதியில் திதி தர்பணம் பழக்கம் இல்லை.கணவர் அப்பா அண்ணன் இருந்தாலும் செய்வதில்லை.நான் பெண்ணாலும் வெள்ளை எள் கொண்டு நானே செய்து வருகிறேன்.சரியா?
    2.பித்ருகளுக்கு அசைவம், மது பிடித்திருந்தால் அதை படைப்பதுதான் திருப்தி ஏற்படுதத்தும் என்கிறார்களே.உண்மையா?
    எங்கள் ஜாதியில் காரியம் நாள் மகன் சைவமும் மகள் அசைவமும் படைத்து​ காக்கைக்கு வைக்கும் பழக்கம் உள்ளது.

    ReplyDelete
  4. கவுண்டர்.மேற்கண்டவை
    ஜோதிடர் ஒருவராலும் பரிந்துரைக்கப்பட்டது.

    ReplyDelete
  5. கவுண்டர் என்றால்? கொங்கு வெள்ளாள கவுண்டரா?? இல்லை வேறா?? இப்போ கண்டவனெல்லாம் கவுண்டன் என்று சொல்கிறான் அதுதான் கேட்கிறோம்..

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates