Trending

Wednesday 12 August 2015

"ஈஞ்சனுக்கு எங்கும் காணி"-ரகுநாதசிங்க கவுண்டர்

ஈஞ்ச கூட்டம் மாவீரரை பெற்றெடுத்த கூட்டம்... ரகுநாதசிங்க கவுண்டர்.. கிழக்கே ராசிபுரம், அத்தனூர் வரை.. மேற்கே கோவை தொண்டாமுத்தூர், நீலாம்பூர் வரை.. வடக்கே செவியூர், சிறுவலூர் வரை.. தெற்கே பழனி வரை என கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர்... 







திருக்காம்புலியூரில் தோரணம் கட்டி, மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு பூசை போட்டு, கிராதகாதி ஜாதியரை போர் நடத்தி வென்று 88 காணிகளை வென்றவர்..!! "ஈஞ்சனுக்கு எங்கும் காணி" என்று பேர் பெற்றுத் தந்தவர். அந்த மாவீரருக்கு இன்று உருவ வரைபடம் கூட இல்லை. ஈங்கூரை ஆதியாகக் கொண்டவர். இன்று பல பட்டக்காரர்கள் உரிமை கொண்டாடும் நாடுகள் எல்லாம் இவர் முதன்முதலில் சத்ருக்களிடம் இருந்து வென்று சேரனிடம் காணியுரிமை வாங்கியவைதான். எனவே இந்த காணிகளில் இன்றளவும் முதல் உரிமை கொண்டாடும் தகுதி ஈஞ்ச கூட்டத்தாருக்கே உள்ளது!





தண்டிகை, சுருட்டி, தீவட்டி, சாமரம், குடை போன்ற ராஜ விருதுகளுடன் மரியாதையை வாழ்ந்தவர் ஈங்கூர் ஈஞ்ச கூட்ட ரகுநாதசிங்கையன்!




நீலம்பூரில் வேணாவுடையாரால் அடக்கமுடியாமல் இருந்த வேட்டுவர் விஜய காளிராய கவுண்டரை அடக்க ரகுநாத சிங்கக் கவுண்டரை வேண்டிக் கேட்டுக் கொண்டார் வேணாவுடையார். ரகுநாதசிங்க கவுண்டர் படைகளைச் சேர்த்து போர் தொடுத்து வெற்றி கொண்டார். அந்த நன்றிக்காக நீலம்பூர்க் காணியை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டருக்கு அளித்தார்.

ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டர் மீது பல தனிப்பாடல்கள் உள்ளன. இவற்றை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட பெரியவர்கள் பலர் வைத்திருக்கிறார்கள். ரகுநாதசிங்க கவுண்டர் வரலாற்றை சொல்லும் ஈங்கூர் ஈஞ்ச குல செப்பேடும் தற்போது அவர்களிடம் உள்ளது. வாய்மொழியாக இருந்த பாடல்கள் சில கீழே 




ரகுநாதசிங்ககவுண்டர் கொங்கு மக்களின் போற்றப்படாத ஹீரோ. அதிகம் அறியப்படாத மாவீரர். ஈங்கூர் கோயிலில் அவருக்கு ஒரு நினைவு சிலை, அவர் உருவ வரைபடம் போன்றவை வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைத்து கொங்கு நிகழ்ச்சிகளிலும் தீரன் சின்னமலை, காளிங்கராயர் போன்று வணக்கத்திற்குரியவராக கொங்கதேச வீரத்தின் வெற்றிச் சின்னமாக போற்றப்பட வேண்டும்.

தகவல் மூலங்கள் 

ஈஞ்ச குல செப்பேடு 
நீலம்பூர் காணி செப்பேடு 
கொங்கு வேளாளர் குல வரலாறு 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates