Trending

Monday 31 December 2012

போதை நோயாளிகளை வெறுக்கும் கொங்கு பெண்கள்


போதை நோயாளிகளை வெறுக்கும் கொங்கு பெண்கள் 

இன்று எங்கள் ஊரில் நடந்தது.. என் தங்கைக்கு (சித்தப்பா மகள்) திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தார்கள்.  புரோக்கரும் பையனின் மாமாவும் சித்தப்பா வீட்டுக்கு வந்துள்ளனர்.

பேச்சின் போக்கில் பழக்க வழக்கம் பற்றி வந்தது. புரோக்கர் அப்போது “இந்த காலத்தில் இதெல்லாம்... “ என்று தொடங்கிய உடனே என் தங்கை, “குடிப்பவனை மணக்க எனக்கு விருப்பம் இல்லை. இதை பற்றி மேலும் பேச வேண்டாம், என்று ஒரே போடாக போட்டு விட்டாள். பையனின் மாமா கொஞ்சம் சங்கடபட்டாலும்,  இதுபோல கொங்கு பெண்கள் சொல்ல ஆரம்பித்தால் சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாக இருக்கும் என்பதால் என் தங்கையை நினைத்து நான் ரொம்பவும் பெருமை படுகிறேன்.  எதோ தெரியாமல் குடிப்பதை ஏன் பெரிது படுத்துகிறாய் என்று வீட்டிலுல்லோரே சொன்னபோது நாளை என்ன நடக்கும் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா..? என்றும் அதுவிமில்லாமல் தன் கொங்குதோழிகள் யாரும் சாராய போதை நோய் உள்ளவனை (ஜாலிக்கு குடிப்பவன் என்று தெரிந்தாலும்) மணக்க விரும்புவதில்லை என்னும் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினாள்.
இதை அலைபேசியில் கேட்டபோது, நல்ல சமூக மாற்றத்தின் தொடக்கமாக இருக்கவே “Sabbaash ! டா தங்கம் என்று மனதார பாராட்டினேன். 


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates