Trending

Tuesday 15 April 2014

உணர்ச்சிகள் அடக்கலாமா?

டெல்லி மருத்துவ மாணி தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது.
சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா?

நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் இப்படி உணர்ச்சிகளின் பட்டியலுக்கு எல்லையே இல்லை.

இவை எல்லாமே இருந்தால் தான் முழு மனிதன். எந்த நேரத்தில் இந்த குணங்களை வெளிப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல்தான் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள்.

காம உணர்வுகளை அடக்கலாமா?

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.

எனவே பணம் பணம் என்று பார்த்துகொண்டிராமல் பருவத்தில் திருமணம் முடிப்பது அவசியமாகும். திருமண வயதை இயற்கை தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் அல்ல. பருவத்தில் திருமணம் செய்யாமல் விடுவதால் உடலையும் கெடுத்து மனதையும் கெடுத்து, சமூகத்தையும்-ஒழுக்க நெறிகளையும் கெடுக்கவும் விட்டு கொடுக்கவும் வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இறுதியில் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வோடும், வாழ்வின் அர்த்தத்தை தொலைத்தும் வாழ வேண்டி வரும். எனவே பருவத்தில் திருமணம் செய்து விடுவது எப்போதுமே மிக சிறந்தது.

பருவத்தில் திருமணம் செய்யாமையால் சமூக அளவில் காதல் எனும் காம கள்ளத்தனம் நடக்கிறது. இதை புரிந்து கொண்டு (அதிக பட்சம் ஒரு டிகிரி)படித்து முடித்த உடனேயே திருமணம் செய்து விட வேண்டும். வேளைக்கு செல்வது எல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம். தனது மகளின் கல்விக்கு செலவிட்டதையும், திருமண செலவுகளையும் அவள் சம்பளத்தில் இருந்தே சரிகட்டிவிட சில பெற்றோர்கள் கணக்குபோடுவதும் கூட நடக்கிறது. பெண்களை எப்போதுமே முன்னிலை படுத்தும் கொங்கு சமூகம் பருவம் வந்ததும் திருமணம் செய்து வைப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பருவத்தில் திருமணம் நடைபெறுவதே தனக்கும் தன் குடும்பத்துக்கும் மரியாதை என்பதை பெண்கள் உணர்ந்து பெற்றோர் தங்கள் கடமையை செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

காம உணர்ச்சிகளை அடக்குவதால் என்ன நடக்கும்?

காம உணர்ச்சிகளை அடக்கினால் மன நோய் வரும். தலைவலி வரும், திடீர் ஜூரம், மூட்டுகளில் வீக்கம், இடுப்பு வலி, உடல்பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி, இறுதியில் இதயநோய் வந்தாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஆனால் காமம் என்பது நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டால் காம உணர்ச்சிகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

உணவும் காமமும்!

முருங்கைக்கீரை, முருங்கைகாய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய்விலும் அதை நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றிற்கு செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதாக சொல்கிறார்கள்.

எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.

இருபாலருக்குமே கற்பொழுக்கம் காக்க உணவை கட்டுப்பாடுதான் மிக முக்கியம். நாட்டு பசுவின் மோரும், நெய்யுமே கண்கண்ட உணவு. சீமை கலப்பின பன்றிகளை ஒழித்து ஒதுக்க வேண்டும். மாமிச உணவுகள் மிருக வெறியை தூண்டும் அவை தவிர்க்கப்பட வேண்டும். கண்ட எண்ணெய்களை பயன்படுத்தாமல் நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தல், அரிசி மட்டும் பயன்படுத்தாமல் கம்பு வரகு போன்ற சிறுதானியங்கள், வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி, பனங்கல்கண்டு போன்றவை சிறந்த மாற்று.

உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்:

பொதுநலத் தொண்டு: வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங்களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பாருங்கள். நோயாளிகளின் நிலையை கவனித்த எவருக்கும் காம இச்சை தலைதூக்காது. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.

சமூகப்பணி:கொங்கு சமூக நலன் குறித்து சிந்திப்பதும் அதற்காக சிறிது நேரம் செலவு செய்து செயல்படுவதும் நமது எண்ணங்களுக்கு மாற்று வடிகாலாக அமையும். சமூகத்தின் நல்லொழுக்கம் சிறக்கவும், ஒற்றுமை மேம்படவும், நமது வரலாறு கலாசாரம் தொடர்பான செய்திகள் படிப்பது, ஆராய்வது, எழுதுவது, தாம் அறிந்தவற்றை நம் உறவுகளுக்கு தெரிவிப்பது, குலதெய்வ கோவில்கள், குலகுரு மடங்கள், காணி புலவர்கள், நம் கொங்கின் சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது போன்ற செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை மனதளவிலும் சமூக அளவிலும் ஏற்ப்படுத்தும்.

உடற்பயிற்சி: காமத்தை உற்பத்தி செய்யும் ஹார்மோன்களை அடக்கி, உடலை இலகுவாக்கும் வேலையை உடற்பயிற்சி மூலமே செய்ய முடியும். விவசாயம், நாட்டு பசு வளர்ப்பு முறையாக செய்தாலே போதுமானது. சூரிய நமஸ்காரம், பிராணயாமம், யோகா போன்றவை சிறந்த வழிமுறைகள்.

வீட்டுத் தோட்டம் அமையுங்கள்: நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

குடும்பம்: குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். குடும்ப தொழில், உறவுகள் குறித்து மனம்விட்டு உரையாடுங்கள். பெரியவர்களை மதித்து சிறிது நேரம் பேசுங்கள். உடன்பிறந்தவர்களோடு விளையாடுங்கள். இரண்டு மூன்று உடன்பிறப்பு உள்ள குழந்தைகள் குண அளவிலும், அறிவு-சமூக நோக்கிலும் சிறப்பாக இருக்கும்.எனவே ஒற்றை குழந்தை கலாசாரம் என்னும் சாபத்தை வாங்கிக்கொள்ளாமல் இரண்டு-இரண்டுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பெற்றுகொள்ளுங்கள்.

புத்தகம் படித்தல்: ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலையும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.

பகிருங்கள்: அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாமல் நண்பர்கள், உறவினர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு இதில்தான் கிடைக்கும்.

புகை-போதை நோய்க்கு அடிமையாகாதீர்கள்: அது அப்போதைக்கு எல்லா உணர்வுகளையும் அதீதபடுத்தும், பின்னர் உணர்வுகளை நிரந்தரமாக மழுங்கடித்து சீரழித்து விடும். புகை நோய் & போதை நோய் உள்ளவர்களுக்கு பெண் கொடுப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

நினைவிருக்கட்டும் ! தரமான குடும்பம்! தரமான கலாசாரம்! தரமான சமூகம்!!

(ஒரு வாரப்பத்திரிக்கையில் வந்த கட்டுரை.. சில பகுதிகள் நீக்கப்பட்டு, கொங்கு சமூகத்துக்கு தேவையான சில கருத்துக்கள் சேர்க்கப்பட்டு வெளியிடபடுகிறது)

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates