Trending

Tuesday 15 April 2014

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொங்கதேச தங்கம்

கீழ்கரைப் பூந்துறை நாட்டின் இணைநாடு பருத்திப் பள்ளிநாடு ஆம். அந்நாட்டில் உள்ள கஞ்சமலையில் ஒரு சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அத மகடஞ்சாவடி ரைல்வே ஸ்டேஷன் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்கின்றது. அதனைப் பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன் சன்னமெடுக்கிறார்கள். எட்டரை மாற்றுண்டு. இது போற் கொங்கு மண்டலத்தும் பொற்கனி உள்ள இடங்களிருக்கின்றன. ஆதித்த சோழன் தில்லையை கனக சபையாக்கப் பிரயத்தனப்பட்ட சமயத்தில் கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே பொன் ஓடு பாவினன். (இக்காலத்தில் ஆய்வாளர்கள் தங்கம் இல்லை என்றும் பொன்னி ஆறு கால மாற்றத்தால் இயற்கையால் அழிந்துவிட்டதேன்றும் கூறிவிட்டனர்)

இந்த செய்தியை சிதம்பர கோவில் கல்வெட்டுகளும் நம்பியாண்டார் நம்பியின் திருவந்தாதியும், சேக்கிழார வாக்கும் உறுதி செய்கிறது.




சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வமெ னப்பறைபோக்
கெட்கட் கிறைவ னிருக்கும் வேளூர்மன் னிடங்கழியே
                         (நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி)
கொங்கு மண்டல சதகப்பாடல்
பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே.



1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates