Trending

Tuesday 15 April 2014

கோவையை நோக்கி வரும் கலாசார சூறாவளி



பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சென்னைக்கும் இப்போதிருக்கும் சென்னைக்கும் இருக்கும் பண்பாட்டு சீர்கேட்டை (சிலர் வளர்ச்சி என்கிறார்கள்!) அனைவரும் அறிவோம். எதோ படிக்காத காட்டு மிராண்டிகளால் ஏற்பட்டதல்ல இந்த மாற்றம். படித்த மக்களால், பண பேய்களின் வளர்ச்சிக்கு சாராயத்தையும், சதையையும் தீனியாக போட்டு உற்பத்தி பெருக்கத்தை மையமாக கொண்டு இயங்கியதால் நடக்கும் அவலங்களை காண்கிறோம். இதன் காரணாம வார இறுதிகளில் நடக்கும் கேளிக்கைகளும், மக்களின் உணவு, உடை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளில் வெறுக்கத்தக்க மாற்றங்களையும் பார்க்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தின் ஆணிவேரான பெண்களே குடிப்பது, புகைப்பது பல ஆண்களோடு ஊர் சுற்றுவது.. எது கேட்டாலும் “Whats wrong in that/So what?” என்ற ஒற்றை வார்த்தையால் முடிப்பதும் கொடுமையின் உச்சம். IT கலாசாரத்தில் இருக்கும் பெண் என்றால் யோசிக்கும் ஆண்களும், பெண் கிடைக்காத குறைக்கு விதியே என்று மனதை சமரசம் செய்து கொண்டு மணம் முடிப்பதும் காண்கிறோம்.

இதே கொடூரம் இப்போது நம் கொங்கு மண்ணை நோக்கியும் வந்துகொண்டுள்ளது. இந்த கால் சென்டர் மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிகராய் பப்களும், பார்களும் கேளிக்கை நிலையங்களும் முளைக்க துவங்கியுள்ளன. சென்னை பப்களில் பெண்களுக்கு இலவச அனுமதி, அவர்கள் குடிக்கும் பீர் ஒயின் இலவசம், சாப்பிடுவதும் இலவசம் என்று சலுகைகள் கொடுத்து பெண்களை வரவைத்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள். போதையில் பின் என்னவேண்டுமானாலும் நடக்கும். இதில் பள்ளி மாணவிகள் கூட தப்பவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. (http://www.aanthaireporter.com/?p=20169).

சில நாட்களுக்கு முன், கோவையில் ஒரு இளம் பெண் குடிபோதையில் நாடு ரோட்டில் கிடந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் கோவை கல்லூரி விடுதிகளில் பெண்களிடம் மதுபுட்டிகளும், ஆணுறைகளும் கிடைத்து அது ஜூ.வி யில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, நாம் இவ்வளவு காலம் பார்த்த கோவை வேறு இன்று இருக்கும் கோவை வேறு என்பதை மனதில் நிறுத்தி நம் வாரிசுகள் சரியான பாதையில் பயனிக்கிறார்களா என்று கவனிப்பது நம் கடமை. வார இறுதி, விடுமுறை நாட்கள், காதலர் தினம் போன்றவற்றில் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates