Trending

Tuesday 15 April 2014

உருமாலை ஏன்?


நம் மரபுகளை நன்கு உணர்ந்து பின்பற்றி வரும் கொங்கு நாட்டு இளைய சமூகம் பலர் இருந்தாலும், மேற்குநாட்டு கலாசாரம் மற்றும் திராவிட கம்யுனிச முற்போக்கு கிறுக்கு பிடித்த 'சிலர்' நம் நாட்டு மரபுகளையும் கலாசாரத்தையும் பிற்போக்கு என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றான உருமாலை கட்டை பற்றி பார்ப்போம். கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தலை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக்களும் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு.அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி)துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது. 



நம் கொங்கதேசத்தில் உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும். அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் (வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும இயல்புடையது). அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும். பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை/வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும். இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணன்களிலேயே வருகிறது.

எல்லாவற்றையும் விட, உருமாலை நமது பாரம்பரியம் சொல்லும். அந்நாளில் அருமைகாரர் முதல் மரியாதைக்குரிய அனைவரும் உருமாலை கட்டுவர். உருமாலை கட்டும்போது கிடைக்கும் பெருமித உணர்வுக்கென்றே கட்டலாம். இன்று நம் கொங்கதேசத்தில் இளைய தலைமுறையினர் பலர் உருமாலைக்கு மாறி வருகிறார்கள். நாமும் பயன்படுத்துவோம்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates