Trending

Tuesday 15 April 2014

கவுண்டர்களை பற்றி அறிஞர்கள்


""...இன்னொரு விஷயமும் சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சாதி மேலாதிக்கத்துடன் இருக்கும். அப்பகுதியின் வளர்ச்சியில் அச்சாதியின் குணாதிசயம் முக்கியமான பங்கு வகிக்கும். அப்படிப் பார்த்தால் கொங்கு மண்டலத்தின் சாதியான கொங்கு கவுண்டர்கள் மிக மிக கடுமையான உழைப்பாளிகளாகவும் ஒற்றுமை கொண்டவர்களாகவும் இருக்கும் அதேநேரத்தில் பிற்சாதியினரிடம் மிக இணக்கமானவர்களாகவும் பண்பானவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழகச் சாதிகளிலேயே ‘நோபிள்’ என நான் கொங்குக் கவுண்டர்களை மட்டுமே சொல்லத்துணிவேன்""

ஆதாரம்: http://www.jeyamohan.in/?p=91

"ஓர் இனக்குழுவுக்கு அதற்கென சில நற்பண்புகளுண்டு. வெறிகொண்ட உழைப்பு, மரபின்மேல் பற்று, கல்விமேல் பெரும் ஈடுபாடு, கலையிலக்கியவாதிகள் மேல் பிரியம், அறிவியல் போன்றவற்றில் புதியன மீது மோகம், கடைசிப்பைசா வரை பணம் வைத்து ஆடுவதற்கான துணிவு ஆகியவை கவுண்டர்பண்புகள் என நான் அவதானித்திருக்கிறேன். அவற்றின் உச்சமென இருப்பது எங்கிருந்தாலும், எவராக இருந்தாலும் நீங்காத பெரும் பணிவு..."

ஆதாரம்: http://www.jeyamohan.in/?p=63131

கவுண்டர்கள் விருந்தோம்பல் பற்றி கண்ணதாசன்:



நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன். 


கவுண்டர்களின் உழைப்பை பொருளாதார மேதை குருமூர்த்தி:



கவுண்டர்கள் விவசாய உழைப்பை பற்றி உலக உணவுக் குழுவினர்:



இப்படி நம் சமூகத்தில் ஏராளமான பெரியவர்கள் தங்கள் நற்குணங்களால் "கவுண்டர்" என்ற சொல்லுக்கு காலம் காலமாக மரியாதை சேர்த்து வந்துள்ளனர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் "கவுண்டர்" சொல்லுக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறதே ஒழிய "கவுண்டர்" பட்டத்தின் மரியாதையால் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேர் பெற்றார்கள் என்பது சுத்த மடத்தனம். இன்று யார் முதலில் கவுண்டர் பட்டம் பெற்றார்கள், யாரெல்லாம் கவுண்டர்கள் பட்டத்திற்கு உரியவர்கள் என்ற வாக்குவாதங்கள் செய்கிறார்கள். யார் கவுண்டர் பட்டத்தை பயன்படுத்தினாலும், அதனால் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் பெறும் சிறப்பிலும், பெருமையிலும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பங்கு பெரும்பங்கு இருக்கும்.





No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates