Trending

Tuesday 15 April 2014

நம் வீட்டு பெரியவர்கள்


நம் அம்மாயி-அப்புச்சி & தாத்தா-பாட்டி சம்பாதித்தது மட்டும் அல்ல, அவர்கள் அனுபவம், பாசம், அரவணைப்பு எல்லாமே நமக்கு உரிய சொத்துக்கள் தான். வாழ்க்கை ஓட்டத்தில், வேலை சுமையால் மறந்து விட்ட அவர்களை அடிக்கடி அழைத்து பேசுவோம்.. சந்திப்போம்.. அவர்கள் மனதில் அவர்களுக்கு துணையாக ஆதரவாக கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவோம்..



(தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு) குலதெய்வ நிராகரிப்பு போல் நம் வீட்டு பெரியவர்கள் நிராகரிப்பும் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில்
பெரும்பாலான தமிழக குலதெய்வங்கள் வானில் இருந்து வந்தவர்கள் இல்லை, நம் முன்னோர்களே..! பெரியோர்/முன்னோர் ஆசி என்பதே 16 செல்வங்களுள் ஒன்றாக நினைக்க பட்டது. அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது.


உலக முதியோர் தினம்: ஒரு தினம் வைத்து நம் பெரியவர்களை நினைவூட்டும் நிலைக்கு நாம் வந்ததும் ஒரு சமூக சீரழிவே.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates