Trending

Tuesday 15 April 2014

பழனிமலை ஆண்டவர் மகிமை


கொங்கதேசத்தின் எல்லையான பழனியில் நம்மவர் வாய்மொழியாக கேட்ட செய்தி.

நம் கொங்கதேச பூந்துறை நாட்டில் முதல் தலைமுறையில் ஒரு பாட்டிக்கு ஏழு பெண்கள்.. இரண்டாம் தலைமுறையில் அந்த ஏழு பெண்களுக்கும் அனைத்தும் பெண்களே. அந்த ஏழு பெண்களுக்கும் அனைத்தும் பெண் குழந்தைகளே. அந்த ஏழு பெண்களில் ஒரு பெண்ணுக்கு மூன்றும் பெண்கள். மூன்று பெண்களின் தாய் பழனிக்கு சென்று இனிமேலாவது தனது பெண்களின் வாயிலாக ஆண் மகவு வேண்டி வந்தார். வந்த இடத்தில் பழனிக்கு வந்த முருக பக்தை தனது குழந்தையை தவற விட்டுவிட்டார். அந்த குழந்தை நம் இன பெண்ணின் கைக்கு கிடைக்கவே மூலவருக்கு எதிர்புறம் (மலை ரயில் அருக) நின்று வெகு நேரமாக போவோர் வருவோரிடம் குழந்தையை காட்டி கேட்டுகொண்டிருந்தார். குழந்தையின் தாய் கண்டு தனது குழந்தையை இவ்வளவு நேரம் காத்து நின்ற பெண்ணுக்கு நன்றி கூறி உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என்று கேட்டார். தனக்கு அனைத்தும் பெண்கள் என்றும் தனது மனக்குறையை வெளிப்படுத்தினார். 



மன நிறைவோடு தண்டபாணி தெய்வத்தின் முன்னால் நின்று, 'உங்கள் பெண்கள் அனைவருக்கும் ஆண் மகவு நிச்சயம் பிறக்கும் அம்மா' என்று வாழ்த்தி சென்றார். அந்த மூன்று பெண்களும் திருமணம் முடித்து அனைவருக்கும் ஆண் மகவு பிறந்து பேர் சொல்லும் படி வாழ்கிறார்கள்!


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates