Trending

Tuesday 15 April 2014

கவர்ச்சியா? கண்ணியமா?

பெண்கள் தங்கள் உடை விஷயத்தை கவனிக்க வேண்டிய காலமிது. பாரம்பரிய உடைதான் உடுத்த வேண்டும் என்று எவரும் கட்டாயபடுத்தவில்லை. ஆனால் எந்த உடை உடுத்தினாலும் அதில் கண்ணியம் இருக்க வேண்டும்; கவர்ச்சி இருக்க கூடாது. 





ஆபாச நடன நிகழ்ச்சிகளில் ஆண்களின் ஆரவாரதுக்காக பெண்கள் லேசாக குனிவார்கள் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ப்பையும் தக்க வைப்பார்கள். அதற்கும் இக்கால ஆடை வடிவமைப்பாளர்கள செயலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஆண்கள் தங்களை கவனிக்க வேண்டும்; தங்களின் அழகை ரசிக்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்னும் பெரும்பான்மை பெண்களின் எண்ணம்தான் ஆடை வடிவமைப்பின் மையப்புள்ளியாக இருக்கிறது. இந்த கேடுகெட்ட வடிவமைப்பாளர்களின் இலவச விளம்பர தூதுவர்களாக சினிமா காரர்கள் இருக்கிறார்கள்.



உடலை கவ்வி அங்கங்களின் அளவுகளை எடுத்துக்காட்டும் ஆடைகளை மறந்துவிடுதல் நல்லது. தங்கள் தகப்பன்-சகோதரன் எதிரே வரவும், சகோதரன்-தகப்பன் கூச்சமின்றி உங்களை சமூக நிகழ்ச்சிகளுக்கு அழைத்துசெல்லும் விதமாகவும் உடை இருக்க வேண்டும். உடுத்த ஒரு உடையை தொடும்போது இது நமக்கு அழகாக இருக்குமா, ட்ரெண்டியாக இருக்குமா என்று கணக்கிடும் அதே நேரம் இதை அணிந்தால் கண்ணியமாக-மரியாதையாக இருக்குமா, பார்ப்பவர்களிடம் நம்மேல் மரியாதை ஏற்படுத்துமா, காமத்தை ஏற்படுத்துமா என்று எண்ணுவதும் மிக முக்கியம்.


இதைப்பற்றி பேசினால் சில ரெடிமேட் குறுக்கு பதில்களை முற்போக்கு கம்யூனிச களவாணிகள் தங்கள் மீடியா சக்தி மூலம் பரப்பி வைத்திருக்கிறார்கள்.


  1. என் ஆடை என் உரிமை - அப்படியானால், "உன் பாதுகாப்பு உன் பொறுப்பு" என்பதையும் நினைவில் வைத்துக் கொள். 
  2. என்ன சமூகம் இது? - காவல்துறை எப்படி சமூகத்தின் அங்கமோ அதுபோலவே குற்றவாளிகள் மற்றும் சபல புத்திக்காரர்களும் சமூகத்தின் அங்கம். சிறிதளவோ பெரிதளவோ  மனிதர்களிடமும் (பெண்கள் உட்பட) சபலம் நிச்சயம் உள்ளது. ஆண்களுக்கு வன்முறை ஆயுதம் என்றால் பெண்கள் வேறுவழியில் சபலத்தை-வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் உண்மையே. இதை நல்ல உணவு, பருவத்தில் கல்யாணம், மீடியாக்கள் கட்டுப்பாடு, ஒழுக்கக் கல்வி, பாரம்பரிய அமைப்புகள் மீட்பு போன்றவற்றால் தான் நிரந்தரமாக தீர்க்க முடியும்.
  3. வக்கிரம் உடையில் இல்லை, பார்க்கும் கண்களில் இருக்கிறது - கண்ணில் மிளகாய் போடி தூவிவிட்டு, காரம் மிளகாய்போடியில் இல்லை உன் கண்ணில் தான் இருக்கு என்றால் சரியா? (நன்றி டிமிட்ரி). 
  4. குழந்தைகளும் கற்பழிக்கப்படுகிறார்கள் அவர்களும் கவர்ச்சி உடை அணிந்தார்களா? - குழந்தைகளை கற்பழிப்பவர்களை தீர விசாரியுங்கள். அவர்கள் வக்கிரமான பெண்கள், சினிமாக்கள் போன்றவற்றால் காமவெறி தூண்டப்பட்டவர்களாக இருப்பார்கள். கோழைகளாக இருப்பார்கள். அவர்கள் வெறியை தீர்த்துக் கொள்ள குழந்தைகள் பலியாகிறார்கள். இதற்கு மூலவித்து யார் என்று பாருங்கள்.
  5. வயலில் வேலை செய்யும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உடைகள் முன்னபின்ன இருப்பது மட்டும் கவர்ச்சியில்லையா? - வயலில் வேலை செய்யும் உழைப்பாளிகளையும், தாய்மார்களையும் இதைவிடக் கேவலப்படுத்த முடியாது. அவர்களும், எல்லாரும் என்னை பார்த்து நாக்கை தொங்க போடணும் என்ற எண்ணத்தில் வெக்கமின்றி அரை நிர்வாணமாக திரியும் இந்த தொண்டுகளும் ஒன்றா?? அவர்கள் ஆடை தற்செயலாக விலகுகிறது; ஆனால் இவர்களோ இன்ன சைசில், இந்த உறுப்பு, இவ்வளவு தெரியணும் என்று கவர்சிக்காகவே திட்டமிட்டு வடிவமைக்கப்படுது. இரண்டையும் ஒப்பிடுவது அருவருப்பானது.


கூடப்பிறந்தவர்கள், பெற்றவர்கள் சொன்னால் கேட்காதவர்கள் துள்ளி குதித்தவர்கள், யாரோ ஒரு மனோதத்துவ டாக்டர் வந்து , நீயா நானா போன்ற சமூக நிராகரிப்புக்கு உண்டான நிகழ்ச்சியில் பேசினால் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள்.

இந்த கவர்ச்சி ஆடை கலாசாரத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டு பெண்களுக்கு இந்த ஆடையை உடுத்தசொல்லி அழகு பார்ப்பார்களா..?? குடும்பத்தோடு பேசன் டிவி பார்ப்பார்களா..?? இவர்கள் முஸ்லிம்களை மட்டும் வசதியாக மறந்துவிட்டு விமர்சனங்களை வைப்பது ஏன்?? முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லவா, இந்த சமூகத்தின் அங்கமில்லையா??



பெண்ணியம் என்பது கவர்ச்சி ஆடை அணிவதும்,போதையில் திரிவதும், கண்ட நேரங்களிலும், கண்டவரோடு, கண்ட இடங்களில் ஊர் சுற்றுவதும் அல்ல. பண்பட்ட சமூகத்தை வளர்த்தெடுக்கும் எண்ணத்தை முன்னெடுக்கும் அறிவு முதிர்ச்சியில் உள்ளது! தற்கால போலி பெண்ணியவாதிகளின் வார்த்தைகளில் மயங்க வேண்டாம். அவர்கள் நோக்கம் பெண் விடுதலை என்னும் பெயரால் கள்ள திருமணத்திற்கு பெண்களை தூண்டி கலாசார சீரழிவு, குடும்ப முறை உடைப்பு மற்றும் பிற சாதிகளின் சொத்து சேர்க்கும் சதி போன்றவைதான். கொங்கு சமூகம் பெண்ணியத்தை பொறுத்தவரை மிகவும் முன்னேறிய சமூகம். தற்கால மோசமான சமூக சூழல் காரணமாக தற்காப்பு குறித்து சில கட்டுபாடுகளை குடும்பத்தார் விதிப்பதை கண்ட வருந்த வேண்டாம். தொழில், குடும்பம், அரசியல் என அனைத்திலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் அளித்து வருவது அக்காலம் முதல் இக்காலம் வரை பாரதத்தில் கொங்கு சமூகமே!

மேலும் படிக்க,
௧. கொங்கு மக்களின் பெண்ணியம்
௨. தேசத்தை மூளை சலவை செய்வது
௩. பெரியார் என்பது ஈவேராவுக்கு பொருந்துமா?
௪. அழகுக்கலையா? அசிங்கப் பிழையா? - நவீன அழகுசாதன பொருட்களின் நிஜமுகம் மற்றும் அதற்கு மாற்று 
௫. பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன?
௬. தாலியின் வரலாறு
௭. சீதனம்

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates