Trending

Sunday 13 April 2014

கோயில் நந்தவனம்

கோயிலுக்கு நந்தவனங்கள் இருக்க வேண்டும். நந்தவனத்தில் பறவைகள், பூச்சிகள் நுகர்வதுக்கு முன் பூக்களை பறித்து விட வேண்டும். அன்றைக்கு மலர்ந்த பூக்களை மட்டுமே கோயிலில் உபயோகிக்க வேண்டும். கோயில் நந்தவனத்து பூக்களை தவிர கோயிலுக்கு வேறு யாரும் பூக்கள் கொண்டு வரகூடாது. (தீட்டில்லாமல் இருக்க வேண்டும்). சிலர் பெரிய வீட்டுக்காரர்கள் தோட்டத்தில் மட்டும் கோயில் ஆண்டி (பூவாண்டி) பறித்து செல்வார். கோயிலில் பூவாண்டிகளிடம் பூக்கள் வாங்கி தெய்வத்துக்கு சாற்றலாம். அதற்காகவே அவர்கள் கோயில் ஊழியம் செய்கிறார்கள். அந்த நந்தவனங்களை காப்பதற்கு கொங்கு தேசத்தில் - பூவிழியர் (வேட்டுவர் வகை) - பூளுவர், சிவ ஊழியம் செய்து வந்தனர். நந்தவனம் முக்கியமானது. நந்தவனத்திற்கு நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. மானியங்கள் உள்ளன.

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமியம்மன் நந்தவனம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ மதுரகவியாழ்வார் நந்தவனம் 

கோயில் நந்தவனங்கள் குறித்து ஹிந்து பத்திரிகையில் வந்த செய்தி

கோயில் நந்தவனத்து பூவை அரசன் எடுத்ததால் உறையூர் மண்மாரி பெய்து அழிந்தது. திருப்பாதிரி புலியூரில் - புலிப்பாணி (வியக்கியபாதர்) இறைவனிடம் வேண்டி புலிக்கால் பெற்று விடியற்காலையில் வண்டுகள் உலாவும் முன் நந்தவனத்தில் பூக்களை பறித்து இறைவனை அர்ச்சித்தார் என்பவற்றிலிருந்து நந்தவனத்து பூக்கள் மற்றும் அதன் புனிதம் விளங்கும். இன்றோ பூக்கள் வியாபாரமாகி விட்டது. எங்கோ? எப்போதோ? யாரோ? பறித்தவை இறைவனுக்கு சாற்றப்படுகிறது. கோயில் நந்தவனங்கள் எங்கே? பூவாண்டிகள் எங்கே? பூவிழியர் எங்கே? பக்தி எங்கே? இன்று அயல் நாட்டு பூக்கள் படையெடுப்பு வேறு நடத்து வருகிறது.


திருச்செங்கோடு ஸ்ரீ பணிமலைக்காவலர் கோயிலுக்கு 


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates