Trending

Tuesday 15 April 2014

கொங்கு கிராமிய விழாக்கள்


நம் கிராமங்களில் கோவில் நிகழ்ச்சிகளில் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக ஆடலுடன் பாடல் என்னும் பெயரில் கவர்ச்சி-விரச நடனம் நடக்கிறது. இது தமிழகம் முழுக்கவே நடக்கிறது. என்றாலும் நம் கொங்கு நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மிக பெரும்பாலும் நம் மக்களே பொருளுதவி செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அருவருப்பானது. 



அரைநிர்வாண உடை உடுத்தி, மேடையிலேயே சாராயம்-புகை அதுவும் பெண் குடிப்பது உட்பட மிக தவறான காம வேட்கையை தூண்டும் விதமான பல்வேறு நடவடிக்கைகள் நடக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்கள் பங்கேற்க முடியாது. தனது பண பலத்தை காட்ட சிலர் இந்த தவறை செய்கிறார்கள் இன்னும் சில கிராமங்களில் கோவில் காசிலோ-நண்பர்கள் இணைந்தோ செய்கிறார்கள். இது நம் சாதிக்கு மட்டும் அவமானம் அல்ல. அந்த கோவில்லுக்கும் தெய்வத்துக்கும் செய்யும் பாவம்-அவமானம். தெய்வமே மன்னிக்காது!

கொங்கு நாட்டுக்கே உரிய சலங்கையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பல உண்டு. பட்டிமன்றம், சொற்பொழிவு, மேடை பாடகர்கள், வானவேடிக்கை என எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு. அவற்றை விடுத்து மிக அசிங்கமான நிகழ்ச்சிகளை பாரம்பரியமும் கலாசார மேன்மையும் உடைய கொங்கு சமூகம் நடத்துவது மிகவும் கேவலமான செயல்பாடு. வருங்காலத்தில் நம்மவர்கள் இந்த தவறை செய்யகூடாது.


1 comment:

  1. சந்திரசேகர் கொடுமுடி22 October 2021 at 10:44

    சறுக்கும் அடவுகள்!

    சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை கொசுவம் வைத்த சேலைக்கட்டி, காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு, தலையில் கரகம் சுமந்து, தவில்/உறுமி மேளத்திற்குத் தக்கபடி பெண்கள் அளவாய் ஆடினார்கள். எந்த ஊரிலும் உடையைக் குறைத்து ஆடியதாய் இதுவரை புகைப்படங்கள் இல்லை. இத்தனைக்கும் சதிர் பாணியை அனுசரித்து ஆடினார்கள்.

    காலப்போக்கில் அதற்குத் தேவதாசியின் கலை என்ற முத்திரை விழுந்தது. சதிர் கச்சேரியானது பிற்பாடு பரத நாட்டியம் என்ற பெயரில் புனிதமாகி உயிர் பெற்று கண்ணியத்துடன் வாழ்கிறது.

    ஆனால் ஜிகினா ரவிக்கையும் விம்பிள்டன் ஷார்ட் ஸ்கர்ட்டும் போட்டுக்கொண்டு, கெண்டைக்கால் சாக்ஸ் அணிந்து, முக்கால் பாகம் உடலை வெளிப்படுத்தி, அடிவயிறு குலுக்கி அஜீரணம் ஆகாமல் இருக்கவும், இடுப்பில் சதை விழுந்து பிழைப்பு கெடாமல் இருக்கவும் ஆபாச அசைவுகளுடன் 'பெல்லி டான்ஸ்' ஆடும் ஆட்டக்காரிகளை கலைமாமணி ரேஞ்சுக்கு உயர்த்தி, திருவிழாவில் அம்மனுக்கு அடுத்தபடி உபசரித்து ஆதரிக்கும் நம் மக்களை என்ன சொல்ல? கலைஞர்களை வாழ வைக்கிறார்களாம்!

    - எஸ்.சந்திரசேகர்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates