Trending

Tuesday 15 April 2014

கொங்கு சமூகத்துக்குள் உறவுமுறை

அனைவரையும் அண்ணா - தம்பி, தங்கை-அக்கா என்பது இப்போது உள்ள சர்க்காரால், ஆங்கில வழியின் பாதிப்பால் உருவானது. நம் கொங்கு சமூகத்தை தவிர்த்து பிற சமூகங்களை உறவுமுறை சொல்லி முறைவைத்து அழைப்பதை தவிர்க்கவும். அனைவரையும் மரியாதையோடு அழைக்கலாம்; உறவுமுறை வைத்து அல்ல. பிற ஜாதியினரை அண்ணா-அக்கா, மாமா மச்சான் என்று அழைத்தால் அவன் நம் பெண்களை முறைப்பெண்ணாகத் தான் பார்ப்பான்.

கொங்கு சமூகத்துக்கென தனித்துவமான உறவு முறை வழக்கம் உண்டு. அனைவருக்கும் தெரிந்ததே. சொந்த கூட்டமெனில் அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை என்றும் பிற கூட்டமெனில் மாமன்-மச்சான்-மாப்பிள்ளை என்றும் அழைப்போம். நம் கொங்கு சமூகத்துக்குள் ஒருவர் அறிமுகமாகும் போது முதலில், கூட்டம் காணி தெரிந்து வயது கேட்டு உறவு முறையை அறிந்து கொள்ளுங்கள். அதை கொண்டு அவர்களை அழையுங்கள். இந்த உறவு முறை-திருமண உறவு என்பதை ஆராய்ச்சி செய்து இதையே உலகின் மிக சரியான உறவு-திருமண முறை என தெரிவித்துள்ளனர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள். அதன் பெயர் "Dravidian Kinship". இதன் பொருட்டு பல்வேறு விவாதங்கள் அறிவியல் உலகிலும் சமூக ஆய்வாளர்கள் மத்தியிலும் நடந்து வருகிறது. நமக்குத்தான் வெளிநாட்டுக்காரன் கோட் சூட பொட்டு வந்து சொன்னால்தான் நமது பெருமையை கூட நாம் ஒத்துகொள்வோம் என்று ஆகிவிட்டதே.



இதில் இன்னொரு விஷயம், கொங்கு சமூகம் பின்பற்றி வரும் இந்த முறை நாம் யாரிடமும் கற்றுகொண்டதல்ல. நாமே காலங்காலமாக பிழை திருத்த முறையில் நம் முன்னோர்களால் வழிநடத்தப்பட்டது. இதற்க்கு திராவிட பெயர் சூட்டியதே ஒரு சதிதான். 

பெண்கள் ஒருவரை மாமன் என்றாலே அழைத்தால் அதை தவறான கண்ணோட்டத்தில் நம் ஆண்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தாய்க்கு நிகரான தாய் மாமன் கூட மாமனே என்பதையும் உணர வேண்டும். எனவே நம் கொங்கு சமூகத்துக்குள் உறவு முறை அறிந்து உரிமையோடு அழைப்போம். நம் சமூகத்துக்குள் அனைவருமே உறவுகள என்பதை உணருவோம்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates