Trending

Thursday 24 April 2014

கவுண்டரா? தமிழரா? மொழிப்பற்றா?

கவுண்டரா? தமிழரா? மொழிப்பற்றா?

மொழிப்பற்றை பற்றி பேசும் முன்னர் மொழி என்றால் என்னவென்று பாக்கனும். கொங்கு மக்களின் பாசை கொங்காளம் என்கிற காங்கி யாகும். இம்மொழி பற்றி வெள்ளைக்காரர்கள்கூட அவர்களின் குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். காங்கிக்கென தனி இலக்கணமே இருந்துள்ளது. காங்கி இன்றும் கொஞ்ச நஞ்ச உயிர்ப்போடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. காங்கி என்பது வேறொன்றுமில்லை, நாம் பேசும் கொங்கப்பாஷை எனும் கொங்குத்தமிழ் தான். சரி, இதுவும் தமிழ் தானே, என்று கேட்கலாம். அப்படிப்பார்த்தால் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று எதையும் தனி மொழி என்று கூறிவிட இயலாது. அவை எல்லாமே தமிழ், சமஸ்கிருதம் மற்றும் அவ்வட்டாரத்தின் தனி சொற்கள் என சொற்களின் கலவையே. அதுபோலத்தான் காங்கியும்.



முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலம்தொட்டே இங்கிருந்த கிறிஸ்தவ பாதிரியார்கள்,
கொஞ்சம் கொஞ்சமாக நம் மொழியை உள்வாங்கி வட்டார வழக்குகளை பொதுமைப்படுத்தி; கல்வி மையங்களை ஆக்கிரமித்து, மக்கள் மனதில் சுத்தத்தமிழ் என்று எங்கும் இல்லாத துபாஷி தமிழ் திணிக்கப்பட்டது. நம் சொந்த மொழி கிராமத்து காட்டான்களின் பாசை என முத்திரை குத்தப்பட்டு நமக்கு அந்நியப் படுத்தப்பட்டது. அவர்கள் கைங்கர்யத்தால் இன்று நாம் பேசும் துபாஷி தமிழை சுத்தத்தமிழ் என்று பேரிட்டு பேசுகிறோம். ஆனால் இந்த சுத்தத்தமிழை சங்க இலக்கியங்களில் காண முடியாது; இதை கொண்டு சங்க இலக்கிய பாடல்களையும் புரிந்துகொள்ள இயலாது; இந்த தமிழை நம் கல்வெட்டுக்களிலோ, செப்பேடு பட்டயங்களிலோ காண இயலாது. இப்போது நாம் பேசுவது டூப் தமிழ் – டுமீல்.



அதற்காக கவுண்டர்கள் மொழிப்பற்று இல்லாதவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். பிற சாதிகளும், (சோழ-பாண்டிய)தேசங்களிலும் பிரபுக்களும் அரசர்களுமே மொழி வளர்த்தார்கள். ஆனால் கொங்கதேசத்தில் மட்டுமே ஒவ்வொரு கவுண்டனும் வரி கொடுத்து மொழி வளர்த்தார். கொங்கப்புலவனார் என்ற சாதியே கொங்க தேசத்திற்கு தனித்துவமாக உண்டு. அப்படி ஒரு சாதியையே வைத்து காத்து மொழி வளர்த்தோர் நாம். கம்பரை கொண்டு ராமாயணத்தையும், வில்லிப்புத்தூராரை கொண்டு பாரதமும் தமிழுக்கு கொண்டு வந்தது நம் முன்னோர்களே. மோரூர் காங்கேய மன்றாடியார் உரிச்சொல் நிகண்டு என்று அக்காலத்திலேயே உரிசொர்களுக்கு டிக்ஷனரியே எழுதியுள்ளார்.அதுபோல பல கொங்கு மக்களும், பெண்களும் இலக்கியங்கள் பல வடித்துள்ளனர். புலவர்பாளையம், புலவநல்லூர், புலவனூர் என பல ஊர்களையே புலவர்களுக்கு தானமாக அளித்துள்ளனர். புலவர்களுக்காக கவுண்டர்கள் செய்த தொண்டு, கொடைகள் ஏராளம். இன்றும் கொங்கப் புலவனாரின் படிக்காரர் சபை மாமாங்கதிற்கு ஒரு முறை கூடும். இதனால் தான் கொங்கதேச பகுதியில் கிராம கோயில்களுக்கு கூட குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் என ஏதாவது ஒரு சில இலக்கியமாவது இருக்கும். அள்ள அள்ள குறையாத அளவு இலக்கிய வளம் கொங்கில் உண்டு.

ஆக, இப்போது யாருமே நமது சொந்த பாஷையை பேசுவதில்லை. கிறிஸ்தவ வெள்ளையன் நம்மை நம் பாரம்பரியத்தில் இருந்து வெளியேற்ற மேற்கொண்ட நரி வேளைகளில் இதுவும் ஒன்று. இயற்கை ஒட்டிய தேச பிரிவுகளாக இருந்த வட்டார மக்களை அவர்களின் சொந்த அடையாளங்களை மறந்து மொழி ரீதியான அடையாளத்தை பின்பற்ற திடாவிடம்-தமிழினம் போப்ன்ற புதிய வஸ்துக்களை உருவாக்கினான். மாவை பின்னர் மொழிவாரி மாநில பிரிப்பின் பின்னர் மிகவும் சூடு பிடித்தது.

முற்காலத்தில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்தன. அவற்றிற்கான தேச வழக்கங்கள் இருந்தன. உதாரணம் கொங்கதேச வழக்கம் பெண் வீட்டில் கலியாணம் செய்வது கொங்க தேச குடிகள் அனைவருக்கும் பொதுவானது. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என திணை ஒழுக்கங்கள் இருந்தன. பல்வேறு சாதிகளுக்கான கலாசாரங்கள் இருந்தன. உதாரணம்: நம் கொங்க வெள்ளாள கவுண்டர்களிடம் புருஷன் செத்தால் மறுக்கா கலியாணம் பண்ண கூடாது;ஆனா இன்னிக்கிருக்கற மத்த பெரும்பான்மை சாதி சிலதுகள் ள அப்பவிருந்தே மறுகலியாணம் உண்டு. அதை கட்டுப்பொண் சாதி னு சொல்லுவாங்க. மொழி ரீதியான பண்பாடு கலாசாரம் இல்லை. இனமும் இல்லை. தமிழினம் என்றோ தமிழ் கலாசாரம் என்றோ தமிழன் என்றோ ஒரு வார்த்தை கூட சங்க இலக்கியத்தில் இல்லை. இன்று தமிழ் கலாசாரம் என்று தம்பட்டம் அடிக்கும் அனைத்தும் கொங்க தேச-கொங்கு வெள்ளாளர்களது கலாசாரமே. இன்று தமிழன்-தமிழர் என்ற அடையாளத்தை கிறிஸ்தவ மாபியாவும் சில சாதிகளும் ஆக்கிரமித்து வைத்துள்ளன. அவர்கள் தமிழன் என்பதற்கு பல வரையரைகளை அரைவேக்காட்டு ஆய்வுகளை கொண்டு சொல்கிறார்கள். தமிழர்களுக்கு-சாதி இல்லை என்பதும், பாரத மக்களின் பாரம்பரிய சனாதன தர்மமும் இல்லை என்பதும், அதே சமயம் முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தமிழன் என்பதும், அவர்களது லொள்ளுக்கு எல்லையே இல்லை.

இவர்கள் சொல்லும் தமிழன் என்ற அடையாளத்துக்குள் நம்மை பொருத்திக்கொள்ள நம்மின் நல்ல விசயங்களை கத்தரிக்கவும், பல முட்டாள்தனங்களையும், அசிங்கங்களையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டிவரும். இதில் கூத்து என்னவென்றால் இவர்கள்  விவரிக்கும் தமிழ் சாதிகளில் நாமும் உள்ளோம். கூட்டத்திற்காக. அதாவது நாமும் இவர்கள் சொல்லும் வரையறைக்குள் ஒடுங்கி இருக்க வேண்டுமாம். இப்படி மொழி அடிப்படையில் ஒரு இனத்தை உருவாக்கி அதை அவர்களின் கூலிக்கார மீடியாக்களை உதவியோடு பெருமிதப்படுத்தியும் அதை எதிர்ப்போருக்கு துரோகி பட்டமும் கட்டி வருகிறார்கள். நாம் என்ன அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதை எவன் முடிவு செய்வது பாருங்கள்..?


ஆக, நமக்கு கொங்கதேசத்தின் கொங்கவெள்ளாள கவுண்டன் என்ற மிக உயரிய அடையாளம் இருக்கும்போது தமிழன் என்ற அடையாளத்துக்குள் ஒடுங்க நினைப்பது சிங்கம் சிறுபூனை வேடம் போட்டு அதற்கு பெருமையும் பட்டுகொள்வதை போன்றது. முதலில் நாம் கவுண்டர்கள். பின்னால் தான் பிற அடையாளங்கள் எல்லாம். அதிலும் தமிழன் என்ற அடையாளம் இந்த கிறிஸ்தவ மாபியாவின் பிடியில் இருந்து விடுபடும்வரை அந்த அடையாளத்தை தரிப்பது நல்லது. ஏனெனில் நாம் யார் என்பதையும் நமக்கும் மொழிக்குமான உறவு பற்றியும் இவர்கள் சொல்லி தெரிந்து கொள்ளும் இழிவான நிலையில் நாம் இல்லை. அடையாளம் தேடி அலையும் தாழ்வு மனப்பான்மை கவுண்டர்களுக்கில்லை..!

1 comment:

  1. உங்க முயற்சியின் உண்மையான வெற்றி இந்த பதிவின் நோக்கம் பலரை சென்றடைவதிலேயே உள்ளது... இது போன்ற தகவல்களை மேலும் வழங்குங்கள் உறவே... காத்திருக்கிறோம்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates