Trending

Tuesday 15 April 2014

சென்னிமலைக்கோயில் திருப்பணி




இந்த திருப்பணியில் ஐம்பது லட்சம் கோயில் பணம் (அதாவது, பொதுமக்களின் பணம்) மீதி பத்து லட்சம் உபயதாரர்கள் கொடுத்தது (அதுவும் பொதுமக்களின் பணம்). 

அப்படியிருக்க இதில் கருணாநிதி, மற்றும் இத்யாதி அல்லக்கைகள் பேரை போட என்ன காரணம்? இவங்க அப்பா முத்துவேலும் அப்பா அஞ்சுகமும் கல் ஒடச்சு காட்ல களை எடுத்து சம்பாரிச்ச பணத்தில் கோயில் வேலைகள் நடக்கவில்லை. கடவுள்களை கேவலப்படுத்தும் இவர்கள் பேரை கோயில்களில் போடலாமா..?? ஒருவேளை அரசாங்க நிதி ஒதுக்கினாலும் அதுவும் மக்கள் பணமே, அதிலும் அந்த அரசாங்க பேரைத்தான் போட வேண்டுமே தவிர அந்த பதவியில் வந்து அமரும் பூச்சி புழுக்கள் பேரை அல்ல.

அறநிலையத்துறை னாலும், அறநிலையத்துறை என்பது கோயில் நிர்வாகத்துக்காக வைக்கப்பட்ட பணியாள்.. அவங்களுக்கு கோயில் வேலைகளை நிர்வகிக்கிற வேலை மட்டுமே.. உரிமைகளில் தலையிட கூடாது.. சிதம்பரம் கோயில் வழக்கில் குட்டு வாங்கியது நினைவிருக்கும்..

ஆகவே மக்களே, எந்த கோயில் என்றாலும் அங்கே அறநிலையத்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் சட்டப்பூர்வமானது என்ற அர்த்தம் அல்ல. அவர்கள் கோயிலில் அன்றாட வேலைகள் நிதி நிர்வாகம் மட்டுமே செய்யலாமே ஒழிய, கோயில் உரிமைகளில் தலையிடுவதோ பக்தர்களை அதிகாரம் செய்வதோ முடியாது கூடாது. உங்கள் பூர்வீக கோயிலில் திடீர் என்று அறநிலையத்துறை என்ற ஆமை புகுந்து கொள்ள பார்த்தால் அதை எப்படி தவிர்ப்பதுஎ ன்று பாருங்கள். அப்படியே வந்தாலும் உங்கள் உரிமைகளை அணுவளவும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

சென்னிமலைக் கோயில் காலம் காலமாக இந்த கொங்கதேசத்தின் அனைத்து சாதி மக்களும் ஒவ்வொரு பணிகளை பிரித்து செயல்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். கோயில் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்/அரசாங்க வேலைகளுக்கு செலவிட்டுக்கொள்ளும் வேலைகளை செய்தவர்களல்ல..

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates