Trending

Tuesday 15 April 2014

கொங்கு சமூகத்தில் கற்பு நெறி



ஆண்-பெண் இருபாலரும் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த ஒழுக்கம்-கற்பு நெறி. ஆனால் நமது பாரத கலாசாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகள் பல்வேறு வடிவங்களில் முகமூடிகளில் நமது வாழ்வியல் வழக்கங்களை திரித்து, அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் நமது வரலாறு நமக்கு சொல்லும் படிப்பினைகளை பார்ப்போம்..!

• வெள்ளையம்மாள்
இன்று நாம் கற்பு நெறிக்கு உதாரணம் சொல்ல கண்ணகியையும், இன்னும் பிற கற்பரசிகளையும் தேடும் நேரத்தில் நமது கொங்கு சமூகத்தில் பிறந்து ரத்தமும் சதையுமாக வாழ்ந்து தனது கற்பு நெறியால் ஒரு குலதெய்வமாக வணங்கப்பட்டு வரும் வெள்ளையம்மாவை நினைக்க வேண்டும். சொத்தின் பொருட்டு தனது சகோதரர்களால் வஞ்சிக்கப்படும வெள்ளையம்மா, தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து தனது கற்பு நெறியை மெய்பிக்க பச்சை மண்ணில் பானை செய்து நீர் கொண்டுவந்து பட்ட மரத்திற்கு அந்நீரை விட்டு துளிர்க்க வைத்து, அதே நீரால் மண் குதிரையை கனைக்க செய்து, திரை மறைவில் வைக்கப்பட்ட தனது குழந்தை நினைத்து பால் சுரந்தது என சோதனைகளை கடந்து வென்றார். இது அவரின் மிக உயர்ந்த கற்பு நெறியின் அடையாளம். இன்றும் காடையூர் காடைஈஸ்வரர் ஆலயத்தில் வெள்ளையம்மன் சன்னதி காணலாம். முழுக்காதன் குலத்தின் குல முதல்வி.

• வீரமாத்தி 
கன்னிவாடி கன்னகோத்திர பட்டக்காரர் முத்துசாமி கவுண்டரின் மனைவிமார் மூவர் (வெண்டுவன், பூசன் மற்றும் ஆந்தை), கணவர் இறந்தவுடன் அவருடன் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவர் மற்றும் அவருடன் உடன்கட்டை ஏறிய அவரது குடிபடைகள் முதலானோரை உருவகப்படுத்தியதே வீரமாத்தி~தீப்பாய்ந்தம்மன் என்று நாம் வணங்கும் தெய்வங்கள். அன்றைய நாளில் உடன்கட்டை எருவோரை வீரமாத்தி எடுத்து வழிபடுவது மிகவும் போற்றப்பட்ட புண்ணிய காரியம். ஆனால் உடன்கட்டை ஏறுவது என்பது கட்டாயமில்லை. (வெள்ளையம்மா கூட தனது கணவன் இறந்த பின்னரே தனது கற்பு நெறியை மெய்ப்பித்து தனது மக்களை கொண்டு குடி தழைக்க வைத்தார்)

• எழுதிங்கள் சீர்
எழுதிங்கள் சீர் என்பது ஒரு பெண்ணின் கற்பு நெறியை சோதிக்க வைக்கும் பரீட்சை ஆகும். அந்த சீர் செய்யாது சீர் சடங்குகளில் அப்பெண முன்னிற்க பங்கேற்க இயலாது. அந்நாளில் நமது மேழியை (கலப்பை) எழுதிங்கள் செய்யா பெண்கள் தொடக்கூட கூடாது என்பது வாக்கு. இப்படி ஒரு சடங்கு வைத்து கற்பு நெறியை அனைத்துக்கும் முன்னிறுத்தியது கொங்கு சமூகம். 

அதே ஆண்களுக்கும் பொருந்தும். கற்பு~ஒழுக்கத்தில் தரம் தாழ்ந்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கோவில் மரியாதைகள், நாட்டு உரிமை, அதிகாரம் போன்றவை பறிக்கப்படும். நமது வாழ்வியல் நெறியில் பாரம்பரியத்துக்கும் ஒழுக்கத்துக்குமே முதலிடம். பணமும் பதவியும் பின்னர் தான்.

• நல்லம்மா 
கன்னிவாடி கன்ன கோத்திர நல்லம்மா பள்ளியர் சவாலை எதிர்த்து சவால்விட்டு அதை தனது இனமக்கள் துணையோடு வென்று பின்னர் ஊரை விட்டு வெளியேறுகையில் (முழு கதைக்கு கன்னிவாடி பட்டய இணைப்பை காண்க), அமராவதி ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. தனது கற்பின் மேல் சபதமிட்டு தெய்வ அனுகூலம் மூலம் அமராவதி வெள்ளம் கால் அளவு நீராக வடிந்து வழி விடுகிறது!

• முத்தாயி-பவளாயி 
அண்ணன்மார் வரலாற்றில், அண்ணன்மார் திருமணம் செய்து கொண்ட முத்தாயி மற்றும் பவளாயி ஆகியோர் கோட்டையில் இருக்கையில் வேட்டுவர் சூழ முர்ப்ப்படும்போது கற்புக்கு பங்கம் ஏற்படும் என்று பயந்து தங்காயி அவர்களை கோட்டையில் தீக்கிரையாக்குகிறார். உயிரை விடவும் கற்பு நெறியை மென்மையாக நினைத்தமைக்கு இதுவும் ஒரு சான்று. 

இந்நாளில் கற்பு – ஒழுக்கம் சாத்தியமாக தேவையான மாற்றம் என்ன..?

அந்நாளைய கற்பு நெறிக்கு காரணம் என்ன? மூன்றே காரணங்கள் தான்..

1.சரியான உணவு முறை: அன்றைய உணவுகள் நாட்டு மாட்டு பால் மூலம் பெறப்பட்டது. மாமிச உணவுகள் கிடையாது (“மேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது” காராளன் கறி உண்ண கூடாது”). அஸ்க்க சர்க்கரை கிடையாது-கருப்பட்டி/பனங்கல்கண்டு, கடலெண்ணெய்-ரீபைண்டு ஆயில் கிடையாது – செக்கு நல்லெண்ணெய்/நாட்டு மாட்டு நெய், போன்று உணவுகள் நல்ல குணங்களை வளர்ப்பவை. நம் மனமும் புத்தியும் நல்ல விசயங்களை உள்வாங்கி சரியான பாதையில் சென்றாலும் நமது உடல் அந்த கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் உடைத்து இன்பங்களுக்கு தூண்டும். எனவே ஒழுக்கமான வாழ்வுக்கு உடம்பை கட்டுப்படுத்துதல் அவசியம். அதற்க்கு சாத்வீகமான உணவுப்பழக்கம் அவசியம். அந்நாளில் உணவு கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட்டது. இன்றும் பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் உணவு கட்டுப்பாடு உண்டு.

2.பருவத்தில் திருமணம்: அந்நாளில் சரியான பருவம் வந்ததும் திருமணம் செய்யப்பட்டது. அதனால் மனம் தேவையற்ற எண்ணங்களில் அலைபாயவோ, கவனம் சிதரவோ வாய்ப்பளிக்காமல் தடுக்கப்பட்டது. பருவத்தின் தேவைகள் காலாகாலத்தில் நிறைவேற்றபட்டதால் கற்பு நெறி/ஒழுக்க நெறி என்பது சாத்தியமானது. இன்றும் நகரத்தார், மார்வாடிகள், பட்டேல் போன்ற முன்னேறிய சாதிகளில் பருவத்தில் திருமணம் என்பது கட்டாயம். பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் பாரம்பரிய வேர்களை காத்து நிற்கும் பல சமூகங்களிலும் பருவ திருமணம்தான் நடக்கிறது. இன்றும் உலகில் 96 கும் மேற்ப்பட்ட நாடுகளில் (அமெரிக்கா/ஐரோப்பிய நாடுகள் உட்பட!) ஆணுக்கு 18, பெண்ணுக்கு 16 வயதும்தான் திருமண வயது!. எனவே நமது கொங்கு சமூகமும் திருமணங்களை பருவத்தில் செய்திடல் நல்லது.
“திருமண பருவம் இயற்கை தீர்மானிப்பது! அரசாங்கம் அல்ல!!”

3. பாரம்பரிய வேர்கள் பற்றிய அறிவு: பெற்றோரும் வீட்டு பெரியவர்களும் குழந்தைகளுக்கு தமது சாதி குலம் பற்றி சொல்லி வளர்த்தார்கள். வீடு மட்டும் இன்றி, ஊரும சமூகமும் சேர்ந்து அந்த நடைமுறையை பின்பற்றியது. பின்பற்ற காரணம், அன்று குலகுருவுக்கு மிகுந்த மரியாதை இருந்தது, மடத்தின் பூஜைகள் சரிவர நடந்தது. அவர்களும் நம் மக்களுக்கு என்ன சரியான உபதேசங்கள் சரியான நேரத்தில் செய்து வந்தார்கள். அதேபோல காணியாச்சி வழிபாடு சரியாக நடந்தது. உறவுகளிடம் போட்டி பொறாமை இல்லாமையால் குழந்தைகள் உறவுகளின் முக்கியத்துவமும் அன்பும் சூழ வளர்ந்ததால் தவறுகள் செய்யவில்லை.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates