Trending

Tuesday 15 April 2014

லுங்கி வேண்டாம்-வேஷ்டிக்கு மாறுங்க


லுங்கி அணியாதீர்கள். ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.லுங்கி என்பது இந்திய-தமிழ் கலாசாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டபடுவதால் (முனைகள் தைக்கபடுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.


மாறாக வெள்ளை வேஷ்டி, அதுவும் கைத்தறி வேஷ்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேஷ்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு போனஸ். வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ருபாய் செலவு செய்ய வேண்டும்!


நீங்களே முடிவு செய்யுங்கள். மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா..? இல்லை, விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும், பார்த்தால் மரியாதை தரக்கூடியதும், உடலுக்கும் நல்லதான வேட்டியை பயன்படுத்துவதா..??

1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates