Trending

Thursday 20 July 2017

சேரனின் சிற்றரசர்கள் சிலர்

சேரர் காலத்தில் கொங்கின் ஆட்சியாளர்களாக இருந்தனர் சிலர்.. பின்னால் வந்த சோழர், பாண்டியர், நாயக்கர், சுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில்.. ஒவ்வொரு ஆட்சியின்போதும் சிலர் பதவி பெற்றனர் சிலர் பதவி இழந்தனர்.. கல்வெட்டு மற்றும் செப்பேடு ஆவணங்கள் மூலம் அறியப்படும் சில சேரர் கால கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆட்சியாளர்கள்..


தூரர்- சேரர் மந்திரிகள், மாந்தரஞ்சேரல் மெய்கீர்த்தி மூலம் அறியப்படும் செய்தி. சேரனுக்கு மந்திரிகளாக இருந்து, வேட்டுவர்+பாண்டியனுடனான போரில் வெல்லவும், நாம் கொங்கில் ஆட்சியமைக்கவும் ஆதாரமாகவும் இருந்தோர். சேரனுக்கு பெரும்படைகளையும் கொடுத்தவர்கள். தலையளி கொடுத்தோர் என்று குறிப்பிடப்படும்.

கன்னன் கூட்டம் - சேரர் முதல் மூவேந்தர்களுக்கும் எல்லை பிரித்து, மூவேந்தர் கையால் கன்னிவாடி அதிகாரம் பெற்றோர். (அதற்குமுன்னரே கன்னிவாடியில் வேறு ஆட்சி இருந்துள்ளது)





சாத்தந்தை/ஆதி கூட்டம் -உலகுடையார், சேரன் ஆதன் வழி வந்தோர் என நாகம்பள்ளி ஆதிகள் சொல்கிறார்கள்.

வஞ்சிவேள் - அந்துவ கூட்டம். மூன்று கல்வெட்டுகள் அந்துவனை வஞ்சிவேள் என குறிக்கிறது. சில அந்துவ குலத்தோர் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் வாரிசுகளில் பட்டம் பெற்றவரின் தம்பிகளின் வாரிசுகள் அந்துவன் கூட்டத்தினர் என்றும் கூறுகிறார்கள்.

பூச்சந்தை கூட்டம் - வஞ்சிவேளான். பல்லவரையன் பட்டம். பொள்ளாச்சி பகுதி.

மயில கூட்டம் - வஞ்சி ராயர் - கவுண்டர்களில் வீரத்துக்குப் பேர் போன குலங்களில் ஒன்று மயில கூட்டம். வஞ்சிராயர் பட்டம் பெற்றோர். பட்டத்தின் மூலமே சேரர் தலைநகரில்-ஆட்சியில் அவர்கள் வீச்சு தெரிந்திருக்கும்.
சேரன் கூட்டம் - மூலனூர் (வஞ்சி நகர்) வட்டாரத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தோர். வஞ்சியம்மன் கோயில் குடிப்பாடு.

பில்ல கூட்டம் - சோமயரையன் (கோரவிகோதை காலம்), ராஜநாராயண காமிண்டர் (வீர ராஜநாராயணன் காலம்)

வில்லி கூட்டம் - சேரனின் வில் குறியால் குறிப்பிடப்படும் கூட்டம். ஓய்மான் வில்லியாதன் என்ற சேரமன்னர் கால்வழியினர் என்றும் கூறுகிறார்கள். வள்ளியரச்சல் முதல் காணியாளர்கள். முற்காலத்தில் மிக செல்வாக்கோடு இருந்தவர்கள். சிவமலை குறவஞ்சி மற்றும் வள்ளியரச்சல் கல்வெட்டு இவர்களை நாட்டாக்கவுண்டர் (ஜாதி நிர்வாக தேர்வுமுறைப் பதவி) என்று கூறுவதன் மூலம் காங்கேய நாட்டு கொங்கு வெள்ளாளர் ஜாதி நிர்வாக அதிகாரம் பெற்றவர் என்பது தெளிவு.



மூலனூர் - மூல கூட்டம் உருவாக்கிய ஊர். வஞ்சி நகர்களில் ஒன்றாக கருதப்படுவது மூலனூர். சேரர் காலம் முதல் பிற்காலம் வரை செல்வாக்கோடு இருந்தவர்கள். சோழர் தலையெடுத்த போது, தென்கரை வட்டாரம் பெரிய கூட்டத்துக்கு வந்தது என்றும் அப்போது அவர்களை எதிர்க்கும் வல்லமை படைத்தவர்களாக மூலன் கூட்டத்தார் இருந்தனர் என்றும் கூறுவர். சேரன், குழாயர் துணையோடு அணை கட்டுவதை எதிர்த்தார்கலாம். பின்னர் பூசன் கூட்டம் வலிமை பெற்றபோது மூலனுரின் அதிகாரம் கைமாறியது.

முத்தன் கூட்டம் / மாடை கூட்டம் - மழவராயர் பட்டம் பெற்றோர். மழவர் என்பது சேரர் காலத்தில் இளம் மாவீரர்களை குறிக்க அதிகம் புழங்கிய சொல். மழவராயர் என்போர் மாவீரர்கள் நிரம்பிய பெரும்படை நடத்தி வெற்றி கண்டதால் பெற்ற பட்டப்பெயர் என கூறுவர்.

ஈஞ்ச கூட்டம் - ரகுநாதசிங்க காமிண்டர். எண்பத்தெட்டு காணிகளை போர்தொடுத்து கைக்கொண்ட மாவீரர். இவருக்கு சேரர் கொடுத்த செப்பேடு இன்றுமுளது. 

3 comments:

  1. தங்களுடைய தொடர்பு என் தேவை தீரன் சின்னமலை கவுண்டர் அறக்கட்டளை

    ReplyDelete
  2. மாப்ள முதலிகாமிண்டனாகிய எங்கள விட்டுட்டிங்க...

    ReplyDelete
  3. 👌🙏muthukrishnan advocate supreme Court of India 8800153877

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates