Trending

Wednesday 23 August 2017

சிவகிரி வண்ணார கருப்பண்ண சாமி

சிவகிரியில் (தலையநல்லூர்) காணியுரிமை கூரை கூட்டமும் மச்சினன் கூட்டமான விளையன் கூட்டமும். பெருமளவு தங்கத்தைக் (5,000 பொன்) கொடுத்து கூரை கூட்ட காளியண்ண கவுண்டர் என்போர் வேட்டுவரின் காணியுரிமையையும் சேர்த்து வாங்கினர். பின்னரும் கோயில் உரிமையில் விற்றவர்கள் சிலர் தலையிட்டனர், எதிர்த்தனர். நோம்பியில் சுவாமி ஊர்வலத்தில் ஊஞ்ச மரத்தால் தாக்கலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.


Image may contain: one or more people, crowd and text


தென்னிலை பட்டக்காரர் செப்பேடு வரிகள்

எதிரிகள் திட்டத்தை அறிந்த கவுண்டர்கள், என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தபோது காணி வண்ணார், கருப்பன் தீப்பந்தங்களை தயார் செய்து வைத்து எதிரிகள் தாக்க வரும்போது திருப்பி தாக்கலாம் என்று கூறியபடி எல்லாருக்கும் தீப்பந்தங்களை வண்ணார் மற்றும் உறவினர் செய்து கொடுத்தனர். கொங்கு கவுண்டர்கள் விளக்கெண்ணெய் கொடுத்தனர். திட்டப்படியே எதிரிகள் தீப்பந்தத்தில் அடிவாங்கி ஓடி விட்டனர். போகும்போது, இந்த சம்பவத்துக்குக் காரணம் வண்ணான் தான் என்று வண்ணான் கருப்பனை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுகிறார்கள். குத்துப்பட்ட கருப்பன் பொன்காளியம்மன் சந்நிதியில் வந்து முறையிட்டவாறே விழுகிறார். 



காளிதேவி பிரசன்னமாகி, "இனி நீ என் கோயில் காவலனாக இங்கேயே இரு, உனக்கு பூஜையும் பலியும் கோயிலில் முறையாக நடைபெறும்" என்று உத்தரவு தந்து அருளினார்.

அதன்படி இன்றளவும் சக்தியுள்ள சாமியான வண்ணார கருப்பண்ண சாமிக்கு பூஜையும் பலியும் நடந்துவருகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்கள் நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடாகவும், அம்மன் வாக்குக்கினங்கவும், இன்றும் வண்ணார கருப்பண்ண சாமிக்கு பூஜைகளை முறையாக செய்து வழிபட்டுவருகிறார்கள். தீப்பந்தந்திற்கு ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

இக்கோயிலுக்கு வண்ணார் சமூகமும் குலதெய்வ வழிபாட்டுக்கு வருகிறார்கள். சாணார்கள் முதல் தீப்பந்தம் ஏந்தும் உரிமை. நாவிதர்களுக்கு நோம்பி செய்தி சொல்லிவருதல், சேவல், கெடா வெட்டுதல் ( மேலிருந்து கீழாக வெட்டுதல், அறுத்தல் நம் வழக்கமில்லை!). ஆசாரிகளுக்கு தேர் கட்டுதல், பறையருக்கு பறை கொட்டுதல், காப்பு கட்டுவது, விருந்தாவளி பாடுதல் உரிமை. இவர்கள் அனைவருக்கும் பொன்காளியம்மன் குலதெய்வம்.



அந்த சம்பவத்தின் நினைவாக, விளக்கெண்ணெய் ஊற்றிய தீப்பந்தம் சூழ தேர்பவனி திருவிழாவில் வைக்கப்படும் வேண்டுதல்கள் நிறைவேறி அம்மனருள் சித்திக்கிறது. இந்த தேர்நோம்பி கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தகவல் - கோயில் மரபுவழி.. முனைவர் ஆய்வேடு.
படங்கள் நன்றி: இணையம், கூரை குல பிரபு ரஞ்சித் 

6 comments:

  1. Keerambur Etikaiamman kovil varalaarum pathi vidavedukiren

    ReplyDelete
  2. சுரேஷ்25 September 2017 at 01:43

    சேட குல வரலாறு குலதெய்வம்,ஆதி காணி,கோயில் பற்றி பதிவிட வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. Thank you so much for posting wonderful information about our kula deivam Sree PonkaliAmman Temple!!!

    ReplyDelete
  4. என்ன காரணத்துக்காக நீங்க எழுதறத நிறுத்தியிருந்தாலும் மறுபடியும் எழுத ஆரம்பிங்க 🙏🙏🙏

    ReplyDelete
  5. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சகோ இந்த சூர்யகாங்கேயன் வரலாறை பள்ளிசாதியினர் கொச்சைப்படுத்தி வருகிறான் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates