Trending

Sunday 12 January 2014

தீரன் சின்னமலை நினைவு மண்டபம் தேவையா?

தீரன் சின்னமலை வெள்ளையனை எதிர்த்து போராடியதன் நோக்கமென்ன..??

*வெள்ளையன் வந்தா நம்ப நாட்டை சீரழித்து, வளங்களை சுரண்டி, மரபுகளை அழித்து நம்மை அடிமைப்படுத்துவான் அதை விடக்கூடாது (ஆனால் இன்று நடப்பது, சினிமா டிவி பேப்பர் நாவல் என அனைத்திலும் நமக்கு விரோதமான போக்கு; பாரம்பரியத்துக்கு விரோதமான போக்கு; சத்திய நெறிக்கு விரோதமான போக்கு. நாம் நம் மரபுகள் படி வாழ விடுவதில்லை)

*வெள்ளையன் வந்தா நம்ப பசுக்களை கொன்று திண்பான்-அதை தடுக்க வேண்டும் (இன்று கேரளாவுக்கு வண்டி வண்டியாக நம் நாட்டுபசுக்கள் செல்கிறது. அங்கிருந்து வெள்ளைக்காரனுக்கு ஏற்றுமதியாகிறது. உள்ளூரிலேயே பசுக்களை வெட்டி திண்கிறார்கள்)

*வெள்ளையன் வந்தா நம்ப பொண்ணுகளை சீரழிப்பான் அதை தடுக்கணும். (இப்போது மேடை போட்டு நம்ப பொண்ணுகளை தூக்கணும் னு பேசறான்; காதல் (விபசாரம்) பேர்ல பொண்ண தூக்கிட்டு பணத்தை கோடு இல்ல பொண்ணை கோடு னு பேரம் பேசறான்)



*வெள்ளையன் வந்தா நம்ப கோயில்களை இடிச்சு கொள்ளையடிப்பான்-அதை தடுக்கணும் (ஆனா இப்போ, தமிழ் முறை, நவீனம், புதுப்பிப்பு னு பல காரணம் சொல்லி கோயில்களை இடித்துவிட்டு நவீன கட்டிடங்களை கட்டுகிறார்கள் கோயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கிறார்கள்)

*சொந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் இன்றி போகும். மெட்ராஸ் ல இருந்து நம்மை ஆட்டுவிப்பான், நாம சுயமரியாதை இல்லா பொம்மைகள் போல இருக்கணும்-எனவே வெள்ளையனை எதிர்கனும் (இப்போ நம்ம உள்ளூர் அதிகாரங்களை பிடுங்கிகொண்டு கண்டவனை எல்லாம் ஆபிசர் னு நம்மை அதிகாரம் செய்ய வைக்கிறான். மெட்ராஸ் நம்மை ஆளுது. கொங்கு நாட்ல இருந்து போற எவனுக்கும் அதிகாரம் இல்ல; கொங்கு மாநிலம் இன்னும் எட்டா கனியாகவே இருக்கு. நம்ப ஏரி குளம் குட்டை எதுவும் மிஞ்சவில்லை)

இப்படி சொந்த நாட்ல அகதியா வாழ்ற நமக்கு வெறும் பெருமை எதுக்கு...?? தீரன் சின்னமலை இந்த மணிமண்டபம் லாம் கேட்டரா..? அவர் இதை எல்லாம் விரும்பிருந்தா, அவர் ஆட்சி செஞ்ச காலத்துல ஊருக்கு ஊர் சிலை வச்சிருப்பார்.. ஆணா அவர் விரும்பியது இதுபோன்ற வெத்து பெருமைகளை இல்ல.. அவரின் விருப்பங்களை தெரிந்து அவற்றை நிறைவேத்த பாடுபடுவதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.. அதை விட்டு இப்போ இருக்கற சர்க்கார் வீசி எரியற இதுபோன்ற எலும்பு துண்டுகளை கண்டு புளங்காகிதம் அடைய வேண்டாம் சொந்தங்களே..!

நாம் செய்ய வேண்டியது, நம்ம பொண்ணுகளை காக்கனும், நம்ம கோயில்களை காக்கனும், நம்ம பசுக்களை காக்கனும், நம்ம எரி - குளம் - குட்டை என அனைத்தையும் காக்கனும், நம்மோட வாழ்ற நம்ம குடிகளான பிராமணர் முதல் சக்கிலியர் வரை அனைவரையும் ஆதரிக்கணும். இதுக்கெல்லாம் நமக்கு அதிகாரம் வேணும். அதுக்கு தனி கொங்குநாடு வேணும்.. அதை நோக்கி செயல்படுங்க..!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates