Trending

Thursday 4 September 2014

குரு உத்சவ்

வாழ்க்கைக்கு தேவையான பெரும்பாலான விசயங்களை பள்ளிக்கு வெளியேதான் கற்றோம். அப்படி கற்கும்போது பல நேரங்களில் பள்ளியில் தவறான செய்திகளால் ஏமாற்றப்பட்டது நம்மில் பலருக்கும் புரியும். அப்போது பாடபுத்தகங்கள் நினைவில் தோன்றி " ஏமாந்தியா! ஏமாந்தியா!!" என்று கிண்டல் செய்வது போல அனுபவம் பலருக்கும் இருக்கும். மெக்காலே கல்வி போதித்த நவீன இந்தியாவின் நாயகர்களை கொண்டாடுவதில் நல்லறிஞர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. பாரத வர்ஷத்தின் 56 தேசங்களிலும் கல்வியின் நிலை மிகவும் மேம்பட்டது. வெள்ளைக்காரர்கள் காட்டுமிராண்டிகளாக அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்த காலத்திலேயே நம் பாரத வர்ஷத்தில் பல்கலைக்கழகங்கள் இருந்தன. வெள்ளைக்காரன் வந்த பின்னால் தான் பாரத வர்ஷத்தின் பழமையான கல்விமுறை சீர்கெட்டது.


என்னவோ, வெள்ளைக்காரன் வந்த பின்னால் தான் நமக்கு அறிவு விளக்கை ஏற்றி வைத்தது போல ஒரு பிரம்மை ஏற்படுத்துவது தவறு. டாக்டர்.ராதாகிருஷ்ணன் பற்றி தாழ்வாகவோ விமர்சனமாகவோ சொல்வது நாமத்து நோக்கமல்ல. ஆனால், வெள்ளையன் வந்தபின்தான் நம் பாரதமே நாகரீகமடைன்தது என்பது போல, தேசத்தின் தினங்கள் எல்லாம் சுதந்திரத்தின் போது 19-20 நூற்றாண்டு தலைவர்களையே கொண்டாடுவது அதற்கு முன் நம் நாட்டில் யாருமே இல்லாத எண்ணத்தை உருவாக்குகிறது. அது தவறு.

கொங்கதேசத்தில், நம் கொங்கப்புலவனார்களே நமக்கு கல்வி போதித்து வந்துள்ளனர். திண்ணைப் பள்ளி நடத்தி வந்துள்ளனர். அதை பற்றிய பதிவு இங்கே. இக்கல்வி முறை மிகவும் தொன்மையானது. பல நூற்றாண்டுகள் பழமையானது. அதேபோல நமது உயர்கல்வியை குலகுருக்கள் நமக்கு போதித்தனர். 



கொங்க வெள்ளாள கவுண்டர்களின் ஆதி குருவான போதாயன மகரிஷியே நாம் குருவாகக் கொண்டாடப் பட வேண்டியவர். அவரே கங்கா குல வெள்ளாளர்களின் குல முதல்வர். அவருக்கு விவசாயம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும் போதித்தவர் போதாயன மகரிஷியாவார்.பித்தகோராஸ் தியரத்தை அன்றே கண்டறிந்து எழுதி வைத்தவர். அவருக்கான தினம் பங்குனி அமாவாசை எனப்படும் போதாயன அமாவாசை.

தற்போது குரு உத்சவ் என்ற பெயர் மாற்ற விவகாரத்தை வைத்து திராவிட இயக்கங்கள் மொழியரசியல் செய்யதுவங்கிவிட்டனர். பிற மாநில மக்களிடம் பேசும்போது டீச்சர்ஸ் டே என்று சொல்லாமல் இந்திய மொழியில் குரு உத்சவ் என்று சொல்வது நல்லதுதானே..? ஆங்கிலத்தில் சொன்னால் கசக்காதாம். இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர் தினம் என்ற இறு சொற்களுமே சம்ஸ்கிருத வார்த்தைகள். குரு உத்சவ் என்பதில் குரு என்பது தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் என்று அனைத்திலும் பயன்படுத்தப்பட்ட சொல்.உண்மையில் தமிழ் பற்றாளர்கள் என்று சொல்லிகொள்வோர் வரவேற்க வேண்டிய விஷயம். அறிவிலிகள் எதிர்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் அருமையான விளக்கத்தையும் விவாதத்தையும் வேத விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த திரு.பால.கௌதமன் அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார். அசடு வழிய திராவிட ஆசாமி கதறுவது, இனி திரு.பால.கௌதமன் விவாதத்துக்கு வருகிறார் என்றால் அரைகுறைகளுக்கு பேன்ட் நனைந்துவிடும் என்பதை மிக அழகாக உணர்த்துகிறது.

அதன் வீடியோ லிங்க்: http://www.youtube.com/watch?v=sGUjfuN-Go4

இந்த விவகாரத்தில் திராவிட இயக்கங்களுக்குத்தான் பலத்த அடி. மொழிவெறியைக் கொண்டு ஆட்சியை பிடித்த மண்ணில், பள்ளிப்பாடப் புத்தகங்களில் மொழிவெறியை திணித்தும், இன்று அவர்கள் குரலுக்கு சீண்டுவாரின்றி போனது மக்கள் எண்ண ஓட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம்.






No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates