Trending

Tuesday 23 December 2014

சாராயக்கடை ஏலம்

ஈரோடு தாலூக்கா வாய்ப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத்தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாளகுலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறாமல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லை.



கொங்க வெள்ளாள கவுண்டர்கள் சாராயம் குடிக்கவும் கூடாது, அந்த வியாபாரத்தில் ஈடுபடவும் கூடாது. அது அவமானம். சர்க்கார் பணத்தாசை காட்டி சாராயத்தை திணித்த போதும், அதை தடுக்க நம் முன்னோர்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் அறியலாம்.. "காட்ட வித்து கள்ளுக் குடுச்சாலும் கவுண்டன் கவுண்டந்தான்" என்பன போன்ற போதையில் உளறப்பட்ட நவீன பழமொழிகளை (திராவிட கட்சியினர் புகுத்தியது) புறக்கணிப்போம். ரைமிங்காக பஞ்ச் வசனங்கள் சொன்னால் நம் மக்கள் அதை திரும்ப திரும்ப சொல்வார்கள்-அதெல்லாம் நம் மரபாகிடாது.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates