Trending

Monday 29 December 2014

மாதொருபாகன் சர்ச்சை

திருச்செங்கோட்டில் எல்லா ஜாதிகளையும் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளும் பெருமாள் முருகனின் புத்தகத்தின் கருத்துக்கள் பொய் என்பதை வெளிப்படுத்தி, உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார்கள். இதுதான் எதார்த்தத்தில் நடந்தது. மக்களின் இந்த எதிர்ப்பை பதிவு செய்யாமல் செய்தியூடகங்கள் திரித்தும், திசை திருப்பியும் எழுதுகின்றன; அரசியல்வாதிகள் அந்த பொய் செய்தியை அடிப்படையாக வைத்து கருத்து சுதந்திர பறிப்பு, அடக்குமுறை, வெங்காய முறை என்றுகருத்துரிமை காவலர்கள்  கூவுகிறார்கள். (என்னவோ இவர்களுக்கு உண்மையை விசாரித்து சொல்ல திருச்செங்கோட்டில் ஆட்களே இல்லாததுபோல). முற்போக்கு-கம்யூனிச-கிறிஸ்தவ லாபி கூட்டு சேர்ந்து அரங்கேற்றும் இந்த கூச்சலில் உண்மை கரைந்துவிடக் கூடாதென்று சில தகவல்களை கூறுகிறோம்.

பெருமாள் முருகனைப் பற்றி முதலில் இந்த கட்டுரையை வாசித்துவிட்டு பின்னர் தொடரவும்.. http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html









ஏன் இவ்வளவு நாள் அமைதி?
திருச்செங்கோடு உட்பட கொங்கதேச மக்கள் பெரும்பான்மையானோருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக நவீன இலக்கியம் என்ற பேரில் வரும் ஆபாச புத்தகங்கள் அறிமுகமே கிடையாது. கொங்கதேச மக்கள் விவசாயம் தொழில் என்று காலம் காலமாக உழைத்தே பழக்கப்பட்டவர்கள். இவ்வளவு நாள் கழித்து சரியான நபர்களின் கவனத்துக்கு வந்தப்போது பிரச்னை துவங்கியிருக்கிறது. ஏன் இவ்வளவுநாள் கழித்து என்று கேட்பது அபத்தம். உங்களை பற்றி புத்தகம் எழுதறேன் னு சொல்லிட்டா புக் போட்டானுங்க?, இல்லை இவனுங்க எழுதற புக்கெல்லாம் படிச்சிட்டு உடனே கருத்து சொல்லியாகனும் னு சட்டமா??

போராட்டத்தின் பின்னணி உண்மை
போராட்டத்தை என்னமோ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க போன்றவர்கள் தான் ஆரம்பித்து ஒருங்கிணைத்து நடத்தியதாக 'தி ஹிந்து' பத்திரிகை போட்டுள்ளது. என்ன நோக்கமோ காரணமோ தெரியவில்லை. ஆனால், உண்மையில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை துவக்கியது கோயிலை சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் (மோரூர் நாட்டார்&காணியாளர்), முதலியார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுமே.எல்லா ஜாதி மக்களுமே போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குப் பதிவு செய்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் கட்சி-ஜாதி பேதமின்றி மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  எந்த ஒரு கட்சியின்-இயக்கத்தின் கொடியோ அங்கு கட்டப்படவில்லை. காரணம் திருசெங்கோட்டு கோயிலுக்கு கிட்டத்தட்ட எல்லா ஜாதி மக்களுக்குமே உரிமைகள், மண்டப கட்டளைகள் உண்டு. விழாவிற்கு எல்லா ஜாதி பெண்களுமே வருவார்கள். 






போராட்டக் குழு செய்த தவறு, பத்திரிகை செய்திகளை கண்டித்து உண்மையை பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதே.. திருசெங்கோட்டு மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் வெகுவாக மனதளவில் காயப்பட்டுள்ளார்கள். பெண்களை அவதூறு செய்தாலும் பிழையில்லை. ஏனெனில் இவர்களுக்கு எதையும் கரிக்கும் முற்போக்கு கருத்துரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு:
இந்த விஷயம் தெரிந்தபின்பு போராட்டம் கம்ளைன்ட் என்று போனது மிகப்பெரிய ஆச்சரியம். இப்படி மென்மையாக நடந்துகொண்டதன் பலன் என்ன கிடைத்தது? கருத்துரிமை பறிப்பு, அடக்குமுறை என்ற அலறலே. (பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத சீனாவையும் கம்யூனிச காட்டுமிராண்டி சித்தாந்தத்தையும் கொண்டுவர வக்காலத்து வாங்கும் முற்போக்கு ரத்தக் காட்டேரிகளுக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச என்ன யோக்கிதை உள்ளது, என்பது முதல் கேள்வி). ஓரிருவர் உணர்ச்சிவசப்பட்டு புத்தகத்தை எரித்ததையும் பெருமாள் முருகன் படத்தை செருப்பால் அடித்ததையும் பிழை என கூற வேண்டாம். தங்கள் கடவுள், பெண்கள் மரபுகள், முன்னோர் என அனைவர் மீதும் சேறு வாரி தூற்றியவனிடம் அன்பாக அமர்ந்து பேசும் நிதானமும் பக்குவமும் 100% மக்களிடம் எதிர்பார்க்க முடியாது; சிலராவது உணர்ச்சிவசப் படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தாலும் எடுக்கலாம்.

சினிமாக்காரி பின்னால் சுற்றிய அண்ணாத்துரை, தீ பரவட்டும் என்று புத்தகம் எழுதி பக்தி இலக்கிய புத்தகங்களை எரிப்பதை தூண்டிவிட்டா'ர்'; ஈவேரா மனுதர்மத்தை, ராமாயணத்தை போன்ற நூல்களை எரித்தா'ர்'; தெய்வங்களை செருப்பால் அடித்தா'ர்'. இவர்களை கொண்டாடும் முற்போக்கு கிருமிகளுக்கு கருத்துரிமை பற்றியும் புத்தகம் எரிப்பதைப் பற்றியும் வாயைத் திறக்க என்ன யோக்கிதை உண்டு?



முற்போக்கு, திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ லாபி பொறுக்கிகளே.. திருசெங்கோட்டு மக்கள் என்ன பெருமாள் முருகன் வீட்டில் குண்டு வீசினார்களா? அவர் மகன், மகள், மனைவியோடு சேர்ந்து கொளுத்தினார்களா? வெட்டி சாய்த்தார்களா? லாரியை விட்டு நசுக்கினார்களா? என்ன செய்தார்கள்..? ஊர்வலமாக சென்று வழக்கு தொடுத்தார்கள். தங்கள் மரபுகள் மீது, தெய்வத்தின் மீது, தங்கள் முன்னோர்கள மீது அவ்வளவு அவதூறாக எழுதியவனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளக் கூட ஜனநாயக நாட்டில் கிராமத்து எளிய மனிதர்களுக்கு உரிமையில்லையா??. இன்னொரு பக்கம், முற்போக்கு கம்யூனிச மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன. திருசெங்கோட்டு மண்ணின் மீதும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மீதும் மாறா பக்தி கொண்டவர்கள் உணர்வு மேலிட்டு பெருமாள் முருகனையொ அவர் குடும்பத்தையோ ஏதேனும் செய்தால் இவர்கள் வந்து துணை நிற்பார்களா??

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலோ, சில மதத்தவர்கள் பற்றியோ இப்படி எழுதியிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்?? குடும்பத்தோடு கருவருக்காம நாயம் பேசிக்கிட்டு இருக்கீங்களே என்றுதான் முதல் வார்த்தையே வரும். அப்படி எதுவும் செய்யாது, கிராமத்தவர்கள் பாஷையில் சொல்வதானால், "மொன்னத்தனமாக" நடந்து கொண்டதற்கு கிடைக்கும் பரிசு இந்த வசவுகள். 

வெளிநாட்டு சக்திகள் பின்னணி:
போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கள் தங்கள் அல்லக்கைகளின் மூலம் இந்த புத்தகத்தை எழுதத் தூண்டியுள்ளன. அதற்கு தாராளமான பண உதவியும் அளிக்கப் பட்டிருக்கிறது. இதை பெருமாள் முருகனே புத்தகத்தின் முன்னுரையில் ஒப்புக் கொண்டுள்ளார். ரோஜா முத்தையா நூலகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.



இந்த ரோஜா முத்தையா நூலகமும் போர்டு பவுண்டேசன் உட்பட பலரின் நிதியுதவி பெற்று செயல்படுவதை அவர்கள் தளத்தின் மூலமே அறியலாம். இந்த வள்ளல்கள் மற்றும் அமைப்புக்களிடம் ஒரு ஒற்றுமை உண்டு, அது என்ன என்று நீங்களே ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.


போர்டு பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் பாரம்பரியம் கலாசாரத்தை குலைக்கவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் பரப்பவும், உலகமயமாக்கலை துரிதப்படுத்தவும் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை தூற்றி அவர்களை நகரமாய-உலகமய சாக்கடை வெள்ளத்தோடு கலந்து ஓட பிடித்து தள்ளும் சூதுதான் இது. இதைப் பற்றி ஜெயமோகன் தனது கட்டுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஜெயமோகன் மட்டுமல்ல வினவு போன்ற இடதுசாரி பத்திரிக்கைகளே போர்டு பவுன்டேசன் போன்ற அமைப்புகளின் முகத்திரையை கிழித்து எழுதியுள்ளார்கள்!

ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த புத்தகம் கோயில் விழா மட்டுமின்றி இல்லாத பல பொய்களை உண்மையென சித்தரித்து கூறுகிறது. வாழ்க்கைமுறை, வரலாறு, மரபுகள் என்று பொய்கள் பலவாறு கலந்து - பெருமாள் முருகனின் எழுத்து திறமை என்னும் மாயையால் உண்மை போல சித்தரித்து சோடித்து அனுப்பப்பட்டுள்ளது.

உண்மை-பொய் பற்றிய விவாதத்துக்குள் செல்லும் முன் எளிமையாக ஒரு விஷயம், இந்த புத்தகத்தில் சொல்லியபடி ஆண்-பெண் இஷ்டத்துக்கு போவது மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அதுவும் வெறும் 75 ஆண்டுகளுக்கு முன் ( ஈவேரா உயிரோடு இருந்த காலம்). அந்த காலகட்டத்தில் திருசெங்கோட்டு கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள்தான் தென்னிந்திய மக்கள் சபை, திராவிட இயக்கம் மற்றும் கட்சிகளின் வேராகவும் இருந்தார்கள். சம்பவம் நிஜமெனில் இதை திராவிட இயக்கத்தினர் விட்டு வைத்திருப்பார்களா? ஊதி பெருக்கியிருக்க மாட்டார்கள்?? அதே புத்தகத்தில் இளைஞர்கள் பெண் மோகிகளாக திரிந்ததையும் சொல்லியுள்ளார். அப்படி இருந்திருந்தால் இன்று வாய்மொழியாக எவ்வளவு பரவியிருக்கும்? ஏன் யாருக்கும் தெரியவில்லை??

சரி, இதை பற்றி மேலும் ஆய்வோம். திருச்செங்கோடு பற்றியும், திருசெங்கோட்டு மன்னர்கள் பற்றியும், திருசெங்கோட்டை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் பட்டக்காரர்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுக்கள் செப்பேடுகள், கதைப்பாடல்கள், கும்மிப் பாடல்கள் என்று ஏராளமான ஆவணங்கள் உண்டு. ஒன்றில் கூட இதை பற்றி சொல்லப்படவில்லை.

கோயிலோடு தொடர்புடைய பல ஜாதிக்காரர்கள், பூஜை உரிமையாளர்கள், என்று ஏராளமான ஜாதிகளின் பிரதிநிதிகள், வயதானோர், முன்னாள் இந்நாள் கோயில் நிர்வாகிகள் யாருமே இப்படி சம்பவம் நடந்ததில்லை என்று கூறியுள்ளனர். திருசெங்கோட்டை சேர்த்த சேலம் ஜில்லா கெஜட், ஹ்டிருசெங்கோட்டு கோயில் பற்றிய வெள்ளையர் ஆவணங்கள், கடிதங்கள், ரிப்போர்ட்கள் எதிலுமே இதுகுறித்த பதிவுகள் கிடையாது. வாய்மொழியாகவும் இல்லை, ஆவணங்களிலும் இல்லை. அப்படியிருக்க திருவாளர் பெருமாள் முருகனுக்கு மட்டும் கனவு கண்டதையெல்லாம் வரலாற்று ஆவணமாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல உள்ளது.

ஆக, பல பொய்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்பது முதல் காரணம்; 14 நாள் கோயில் தேர் நோம்பிக்கு வரும் எல்லா பெண்களின் மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்க்க வேண்டியது இரண்டாம் காரணம். திருசெங்கோட்டின் சுற்று வட்டாரத்தில் ஏராளமான குடும்பங்களில் குழந்தையின்றி தெய்வ வேண்டுதல் காரணமாகவும், காலம் கடந்தும் பிறந்த குழந்தைகள் ஏராளமுண்டு. அனைவர் மனதும் வெந்நீர் கொட்டியது போல பதறிக்கொண்டிருக்கிறது.

திருச்செங்கோடு உட்பட கொங்கதேசத்தின் மரபுகள் ஆண்-பெண் இருவருக்குமே கற்புநெறியை வலியுறுத்துவதாகும். அந்த அடிப்படை மரபை இல்லாத பொய்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும் என்பது ஒரு காரணம். முற்போக்கு திருடர்கள் ஒரு பொய்யை கண்டுகொள்ளாமல் எதிர்ப்பை பதிவுசெய்யாமல் விட்டால் அதையே ஆதாரமெனக் கொண்டு அதன்மேல் இன்னும் ஆயிரம் பொய்களை அடுக்குவார்கள், அதை அனுமதிக்கக் கூடாது.

எத்தனையோ பெண்கள் கற்பை, உயிரை விட பெரிதாக எண்ணி வாழ்ந்துள்ளார்கள். கல்யானமாகியிருக்க வேண்டும் என்றில்லை; தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்தால் கூட வேறொருவனை மனத்தால் நினைக்கமாட்டேன் என்று கூறி உடன்கட்டை ஏறிய உத்தமப் பெண்கள் வாழ்ந்த பூமி திருசெங்கோடு. இங்கே கவுண்டர்கள், முதலியார், கருநீகர், செட்டியார், ஆண்டிகள், நாவிதர்கள், மாதாரியாகுள், நாய்க்கர்கள், பறையர்கள் என்று அணைத்து தரப்பு மக்களின் முன்னோர்களில் இதுபோன்ற கற்பரசி பெண் தெய்வங்கள் உள்ளன. இதை பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாடு புத்தகத்தில் உள்ளது. அவர்களுக்கு இன்றளவும் பூஜைகள் நடக்கின்றன. இப்படியான மண்ணில் இதுப்போன்ற அவதூறு வேல் பாய்ச்சியதாகவே இருக்கும். கற்பரசிகளின் சாபத்தை பெறுபவன்/அவனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள், எப்படி வாழ்வார்கள் என்று வருங்காலம் பதில் சொல்லும்.

அயோக்கியர்கள் அதர்ம பாதையில் செல்ல நினைத்த போதே அவனுக்கான ஆயுதத்தை ஆண்டவன் தயார் செய்திருப்பார். நிச்சயம் அந்த ஆயுதம் அவனையும் அவனது அல்லக்கைகளையும் அழிக்கும். பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் போதுமானது.

பெருமாள் முருகன் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் பிறந்து தற்போது நாமக்கல் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தாய் தந்தையர் மறைந்துவிட்டனர். மனைவி எழிலரசி, மகன் இளம்பரிதி, மகள் இளம்பிறை. அவரது படம், விலாசம் மற்றும் போன் நம்பர் உள்ள பக்கம் கீழே,






மாதொருபாகன் முக்கியஸ்தர்கள் கருத்து-மீடியாக்கள் மறைத்தவை
யார் இந்த பெருமாள் முருகன்?


7 comments:

  1. திருச்செங்கோட்டு மலையிலிருந்து , கற்புக்கரசி கண்ணகி வானுலகம் சென்றதாக கூறப்படுகிறது . அந்த ஊரைப்பற்றியா இப்படி ?

    ReplyDelete
  2. திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)

    * மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.

    * இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

    * திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

    *நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

    * மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

    புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.

    ReplyDelete
  3. திருச்செங்கோட்டில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் உயிரிலும் உணர்விலும் கலந்த ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரையும், கோயிலுக்கு வரும் அடியார்களையும், பெண்களையும், பண்டிகை மரபுகளையும் மிக கேவலமாக சித்தரித்து பெருமாள் முருகன் என்ற முற்போக்கு கம்யூனிச கைத்தடி (உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு என்று பொய்யைப் புளுகி) நாவல் எழுதினார்.

    ஹிந்துக்களுக்காக, என்று கூறிக்கொள்ளும் ஹிந்துத்வ சித்தாந்தம், இயக்கங்கள், கட்சிகள், எழுத்தாளர்கள், மீடியாக்கள் அனைவரும்தான் முதலில் இந்த சர்ச்சையை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். ஆனால், அதை தவறியது மட்டுமின்றி எதிர்த்த திருசெங்கோட்டு மக்களையும், சில இயக்கங்களையும் கண்டித்தும் கேவலப்படுத்தியும் ஹிந்துத்த்வர்களே எழுதிகிறார்கள். ஹிந்து தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள். பெருமாள் முருகனுக்கு சாமரம் வீசி பாராட்டு விழா எடுக்காததுதான் குறை.

    மாதொருபாகன் திருசெங்கோட்டு சம்பவம் பற்றி அறிய:
    http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

    இந்த சம்பவம் மூலம், ஹிந்துத்வதுக்கும், பாரதத்தின் கிராம மக்களுக்கும் எவ்வளாவு இடைவெளி (மட்டுமல்ல, துரோகிகள்) என்பதை உணர்ந்துவிட்டோம். எங்கள் தெய்வத்தையும், பெண்களையும், மரபுகளையும் சேறு வாரி தூற்றுபவர்களையும் சகித்துக் கொண்டுதான் இந்த வெக்கங்கெட்ட துரோகிகள் பின்னால் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதம் – அரசியல் பிழைப்பு, இவை அனைத்தைவிட தர்மமே பிரதானம். இதுவரை திருச்செங்கோட்டில் நாங்கள் செய்த எந்த வேலைக்கும் எந்த ஒரு ஹிந்துத்வ இயக்கங்களும் ஆள் பலம-அரசியல் பலம-சட்ட உதவி-பொருளாதார உதவி-மீடியா உதவி என்று எதுவும் செய்ததில்லை. நாங்க உயிரை பணயம் வைத்து செய்யும் வேலைகளின் அரசியல் பலனை அனுபவிக்க ஹிந்துத்வம் தவறவில்லை. எங்களை ரவுண்டு கட்டி வெட்ட வந்து நாளிதழ்களில் செய்தி வந்த போதும் எந்த ஹிந்து தலைவர்களும் ஏன் என்று கூட கேட்க வில்லை. இனியும் இந்த போலி இயக்கங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டுமா என்று பிற வட்டாரத்தில் வேலை செய்யும் உணர்வுள்ள ஹிந்துக்கள் சிந்திக்கவும்.. மனம் நொந்த நிலையில் எழுதிகிறேன் இதை..

    ReplyDelete
  4. கலைஞர் டிவி கபோதிகள் என்ற திமுக வினர் இன்று பெருமாள் முருகண் என்னும் எழுத்தாளருக்கு சுகந்திரம் இல்லையே எண்கின்றனர். ஆனால் இதே கலைஞர் டிவி அன்று நாடார் சமூதாய மக்களுக்காக மதம் கடந்து பகுத்தறிவு கடந்து பின் நின்றனர் என்பது எப்படி அங்கே சிபிஎசி க்கு மட்டும் கருத்து சுதந்திரம் இல்லையா.


    பெருமாள் முருகனை பற்றி சொல்ல வேண்டுமானால் அல்குல்(பெண்குறி) சங்க இலக்கியத்தில் வந்ததை பற்றி 300 பக்கம் உள்ள புத்தகத்தை எழுதியவர். யாராவது நினைத்து பார்க்க இயலுமா இந்த புத்தகத்தை எழுத 3 வருடத்துக்குமேல் தேடலில் இருந்தாராம் யோசிச்சு பாருங்க இவரின் புத்தி எப்படி இருக்கும்.

    இன்று பெருமாள் முருகனுக்கு பின் நிற்பவர்கக் தமுமுக,இமுக என முஸ்லீம் கட்சிகளின் எழுத்தாளர்கள் ஆதாவது சல்மான் ருஸ்டி,நஸ்லீமா போன்ற எழுத்தாளர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பணம் அறிவித்த புன்னியவாங்கள்.

    இதைப்போல் கம்யூனிச கிரிஸ்துவ பொரம்போக்குகளும் தங்களது ஆதரவை வழிமொழிகின்றனர்.

    ஏன் ஒரு முற்போக்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் வெளினாடுகளில் வேலைக்கு சென்றவரின் வீட்டின் பென் கள் அல்லது வேளாங்கன்னி மாதாகோயில் களியாட்டம் என்று நூல் எழுதி கிரிஸ்துவ எழுத்தாளர் எழுதி வெளிடட்டும் என்ன நடக்கும் என பார்க்கலாம்.

    திமுக,முஸ்லீம் தீவிரவாதிகள்,கம்யூனிஸ்டுகள்,கிரிஷ்டுவ பாதிரியார்களை தயவு செய்து மதச்சார்பின்மை என்னும் போர்வையில் யாரும் ஆதாரிக்க வேண்டாம் அதிலும் பெரும்பாண்மையான தமிழ் சாதியினர்கள் ஹிந்து மதத்தின் தர்மத்தை காக்க வேண்டும்.

    பெருமாள் முருகன் பகிரங்க மன்னிப்பு கேட்டு புத்தகத்தை தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  5. அட, தினமணியே!
    நேற்றைய தினம் (15-1-2015) தினமணி நாளிதழில் தலையங்கள் அட,பெருமாளே என்ற தலைப்பில் எழுதியிருக்கிறது. பெருமாள் முருகனுக்கு ஆதரவு என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக எழுதப்பட்டிருக்கிறது அந்த தலையங்கம்.
    \\காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத்தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.\\
    எழுத்தாளருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது. ஊரைவிட்டே செல்லுமாறு மிரட்டப்படுகிறார் என்றெல்லாம் விஷமத்தனம் பரப்பபடுகிறது. அதை தினமணியும் நம்பியிருக்கிறது. இதுவரை அப்படி ஒரு புகாரை அவர் ஏன் காவல்துறையில் தரவில்லை. தன் பின்னால் மிகப்பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது, விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது, தமிழர் அமைப்புகள் இருக்கின்றன, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் இருக்கிறது, மிகப்பெரிய பத்திரிகைகள் ஆதரவு இருக்கிறது. முஸ்லீம் அமைப்பு ஆதரவு தருகிறது. இவ்வளவுபேர், இவ்வளவு கட்சி இருந்தும் அவர் ஏன் மிரட்டியவர்கள் மீது புகார் தரவில்லை? இதற்கு இதுவரை பதில் இல்லை. காவல்துறை அவரை சற்று வெளியே இருக்க சொன்னது என்று சொன்னால் காவல்துறைக்கு யார் மிரட்டியவர்கள் என்று தெரிந்திருக்கிறது. ஏன் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை? அவர்களை அடையாளம் காட்ட காவல்துறை முன்வருமா?
    தினமணி மகாபாரத்தில் இருக்கிறது, வாசுதேவன்நாயர் எழுதியிருக்கிறார் என்று சொல்கிறது. அகநானுற்றில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறது. உண்மைதான். ஆனால் என் கேள்வி என்னவென்றால் திருச்செங்கோட்டில், அந்த கோயிலில் அந்த மரபு பின்பற்றப்பட்டிருக்கிறதா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்பதுதான். பெருமாள் முருகன் தி இந்துவில் அதற்கு ஆதாரம் இல்லை. வாய்மொழி பதிவுதான் அது. தியோடர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் போன்றவர்கள் சொன்னார்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார். சில இடங்களில் சில இனக்குழுக்களில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபை கடைபிடிக்காத ஒரு இடத்தில் நடந்ததாக சொல்வது சரியா? இதை ஆராய்ச்சி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? பெருமாள் முருகன் தன் புத்தக முன்னுரையில் இப்புத்தகம் ஆராய்ச்சியின், ஆதார த்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்று கூறிய பிறகு அந்த ஆதாரத்தை காட்ட வேண்டாமா? ஆதாரம் இருந்திருந்தால் அவர் மட்டுமல்ல அவரை ஆதரிக்கும் எல்லோருமே எப்போதே காட்டியிருப்பார்கள். திருச்செங்கோட்டில் அப்படி நடந்த தற்கான ஆதாரம் இல்லாத தால்தான் தினமணி உள்பட பல இடங்களில் இருந்த்தே என்று சொல்கிறார்கள். பல இடங்களில் இருந்திருக்கலாம். திருச்செங்கோட்டில் அந்த கோயிலில் இருந்த்தா என்பதுதான் என் கேள்வியே.

    ReplyDelete
  6. உதாரணத்திற்கு இப்படி ஒன்றை யோசிப்போம். தினமணி பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் அங்கு ஆசிரியராக இருப்பவருடன், முதலாளியாக இருப்பவருடன், துணை ஆசிரியர்களாக இருப்பவர்களுடன், பதிப்பாளருடன் உடலுறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல் இருந்தது, சில நேரங்களில் அங்கு பணிபுரிபவர்கள் இணங்கினார்கள், சிலபேர் எதிர்த்து வெளியேறினார்கள் என்று நான் எழுதினால் அதற்கு ஆதாரம் கேட்பார்களா? கேட்க மாட்டார்களா?
    அதற்கு ஆதாரமாக நான் பல அலுவலகத்தில் இப்படிதான் நடக்கிறது, செங்கல்பட்டில் ஒரு அலுவலகத்தில் அப்படிதான் நடந்தது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வார்களா? பல அலுவலகங்களில் நடப்பது இருக்கட்டும். நீங்கள் எழுதியது எங்கள் அலுவலகத்தைத்தானே! அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றுதானே அவர்கள் கேட்பார்கள். அதனால் தினமணி சொல்லும் இந்த காரணமும் கூட வலுவில்லாதது.
    \\இல்லாததையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்?\\ கற்பனை, சுதந்திரம் என்பது மற்றவர்களின் தன்மானத்தில் தலையீடு இல்லாததாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவர் கற்பனை என்று சொல்லியிருந்தால் அது விமர்சனத்திற்கு உட்பட்டிருக்காது. தனது முகவுரையில் ஆராய்ச்சி, ஆதாரம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட கோயில் பற்றி எழுதும்போது உண்மை இருக்க வேண்டும். கற்பனைகள் வரலாறுகளாக ஆகும்போதுதான் பல பிரச்சினைகளே உருவாகின்றன. பெருமாள்முருகன் ரத்தன் டாடா பௌண்டேஷனில் திருச்செங்கோட்டு மக்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து இதை எழுத இருக்கிறேன் என்று சொல்லிதான் பணம் வாங்கியிருக்கிறார். ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லி பணம் வாங்கிய பிறகு கற்பனையில் எழுதினேன் என்று சொல்வது எப்படி சரியாகும்? இதை பல்கலையில் பாடமாக வைக்கும்போது கற்பனை வரலாறாக மாறிவிடும் வழக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
    \\பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததேகூட மிகப்பெரிய தவறு.\\ மீண்டெழும் பாண்டிய வரலாறு நூலை தடை செய்ததே இந்த அரசுதான். அப்போது எந்த பத்திரிகையும் அந்நூலை எழுதிய ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்து தலையங்கள் எழுதியிருக்கிறதா? இப்போது போராடுகிறவர்கள் மேற்கண்ட நூலுக்கு ஆதாரவாக போராடியிருக்கிறார்களா? மக்களின் உணர்வுகளை ஆதாரமே இல்லாமல் கொச்சைபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றக்கொள்ளக்கூடியது அல்ல. சரி ஆதாரம் இருந்தால் கொச்சைப்படுத்தலாமா என்று கேட்டால் ஆராய்ச்சி செய்வது வேறு, கொச்சைப்படுத்துவது வேறு. ஆராய்ச்சி என்பது தரவுகளின் அடிப்படையில் தேடலின் கடைசியாக கண்டெடுக்கிற முடிவு. கொச்சைப்படுத்துவது என்பது இப்படித்தான் எழுத வேண்டும் என்று முன்முடிவெடுத்து அதை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவது.
    தினமணி பெருமாள்முருகனுக்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு பிதற்றியிருக்கிறது. எழுத்தாளருக்கு உரிமை உண்டு என்று சொன்னால் அதை எதிர்ப்பதற்கும் உரிமை உண்டு என்கிற புரிதலும் வேண்டும். எழுத்தாளர்கள் என்னவேண்டுமானாலும் எழுதலாம், கற்பனை கலந்து பொய் எழுதலாம், ஆனால் அதை எதிர்க்கவே கூடாது என்பது பாசிசமே தவிர வேறில்லை.
    \\தமிழனாய் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு!\\ நல்லவேளை அவர் இஸ்லாமிய மரபுகளை கற்பனை கலந்து பொய்யா எழுதவில்லை. சார்லி ஹெப்டோ நிலைமைதான் அவருக்கு ஏற்பட்டிருக்கும். அந்தவகையில் அவர் பெருமைபட்டுக் கொள்ளலாம். தினமணியும்கூட.

    -எழுதியவர் திரு.வெங்கடேசன், சமூகவியல் ஆய்வாளர்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates