Trending

Thursday 21 May 2015

தேங்காய் சுடும் நோம்பி

ஆடி முதல் நாள் தேங்காய் சுட்டு சாமி கும்பிடுவது, கொங்கதேசத்தில் பரவலாக கொண்டாடப் படும் நோம்பி. தேங்காயை நன்கு தரையில் உரைத்து அதன் னார்கள் நீக்கி, மஞ்சள் பூசி, அதன் கண்ணில் துளையிட்டு பாதி நீரை வடித்துவிட்டு வெல்லம், பாசிபயறு போன்றவற்றை போட்டு, தோலுரித்து மஞ்சள் பூசிய குச்சியில் குத்தி, தீயில் வாட்டுவார்கள். தேங்காய் ஓடு கருகி அல்லது வெடித்த பின் அதை கோயிலுக்கு கொண்டு சென்று உடைத்து கொஞ்சம் தேங்காயை அங்கே வைத்துவிட்டு மீதி தேங்காயை கொண்டுவந்து சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மிகவும் ஆர்வமுடன் கொண்டாடும் பண்டிகையாகும். ஊரில் உள்ள சிறுவர்கள் ஒன்றுகூடி சுடுவார்கள்.

பாரதப் போர் ஆடி ஒன்று துவங்கி பதினெட்டு நாட்கள் நடந்து ஆடி 18 அன்று முடிந்தது. ஆடி 18 அன்றுதான் போர் முடித்து ஆற்றில் கத்தி கழுவி குளித்தார்கள் என்பது இன்றுவரை தொடரும் செய்தி; அதை ஒட்டியே ஆடி பேருக்கு அன்று ஆற்றில் குளிக்கிறோம். போர் துவங்கிய அன்று களப்பலி கொடுப்பது வழக்கம். கலப்பளியாக பாண்டவர்கள் பக்கமிருந்து அரவானை பலி கொடுத்தார்கள். தேங்காய் எப்போதுமே ஒரு உயிருக்கு நிகராக மதிக்கப்பட்ட பொருள். தேங்காய் உடைப்பது கூட ஒரு பலி கொடுப்பதற்கு சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் சர்க்கரை, பயறுகள் போட்டு மூடி சுடுகிறார்கள். தேங்காய் ஓடு வெடிப்பது கபால மோட்சத்தொடு ஒப்பு நோக்கலாம். ஆக, தேங்காய் சுடுவதை போர் துவக்கம் மற்றும் களப்பலி கொடுத்த நினைவாக கொண்டாடுகிறார்கள் என்றே கருத இடமுண்டு.தேங்காய் சுடும் நோம்பி பற்றிய அபிப்பிராயம்.



சிலர் தேங்காய் சுடுவதை பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடித்து ஆயுதங்களை எடுத்து சுத்தம் செய்த நாள் என்றும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates