Trending

Thursday 31 October 2013

கொங்கு தீபாவளி



--தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி. பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்கள் அனவைரும் தான் இறந்த நாள் அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வதால் (அன்று மட்டும் வெந்நீர் கங்கையாகும்) கர்ம வினைகள் அகன்று போகும் என்று வரம் பெறுகிறார். (கங்கை பனிகட்டியோடு வெப்பம் சேர்வதால் நீராக மாறுகிறது, மற்ற ஆறுகள் நீர்மேகத்தொடு குளிர்ச்சி சேர்வதால் நீராகி ஓடி வருகிறது. கங்கை நீரில் எப்போதும் உள்ளே அக்னி உள்ளது). மேலும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் கங்கா குலத்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்தவும். கங்கா ஸ்நானம் மிக நல்லது.

-- நரகாசுரன் இறந்தது சதுர்த்தசி அன்று-அமாவாசைக்கு முந்தைய தினம். நரகசதுர்தசி. அதனால் தான் விடியும் முன்பே குளித்து வெள்ளை வேட்டி அணிந்து 'வீட்டில் செய்த'  பலகாரங்களை படைத்து தர்ப்பண கடனை முடிக்கிறோம். 

--நல்லெண்ணெய் கொண்டு தீபங்கள் அதிகாலை நேரம் ஏற்றப்பட வேண்டும்.

-- கைத்தறியில் நெய்த வெள்ளை வேட்டி அணிவதே பண்டிகையின் சரியான முறையாகும். ஏனெனில் அதுதான் திதியின்போது உடுத்துவேண்டிய உடை. அதை விட்டுவிட்டு Louis Phillippe போட ஓட கூடாது. நரகாசுரன் அதை கேட்கவில்லை.

-- தீபாவளி அன்று இறைவனுக்கு படைக்கும் பலகாரங்கள் வீட்டில் செய்ய வேண்டும். கடையில் விற்பதை படைக்க கூடாது.

-- தீபாவளி பட்டாசு வெடிப்பது, பாரம்பரியமாக நம் காணியாச்சி கோவில்களில் தான். உள்ளூர் கொங்கு உப்பிளியர் தான் அன்றைய கெமிஸ்ட்ரி. அவர்கள் குலத்தொழில் சாரை மண்ணில் இருந்து உப்பு காய்ச்சுவது; அப்படி காய்ச்சும் போது உப பொருளாக வேடியுப்பும் கிடைக்கும். அதை கொண்டு வான வெடி-கல் உடைக்கும் வெடி-போருக்கு குண்டுகள் செய்வது அன்றைய வழக்கம். வெள்ளைக்காரன் காலத்தில் இது பெரிய வணிகம் ஆனால் அவனாலேயே முடக்கப்பட்டது. அமாவாசை தினமான தீபாவளி அன்று காணியாச்சி கோவில் சென்று நாட்டு வெடிகள் வெடிப்பார்கள். அந்த வெடிகள் சுற்று சூழலை பாதிக்காது. மாறாக மழை பெய்ய வழி வகை செய்யும்.

-- கொங்கு சமூகத்தில் அசைவ உணவு பழக்கம் கிடையவே கிடையாது. ஏன் எந்த வெள்ளாளர் சாதிக்கும் இருக்காது. இது இடையில் செயற்கையாக நுழைந்தது/திணிக்கபட்டது; இனி கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். அசைவ உணவால் நம் குணமும் அதனால் அனைத்தும் மாறும். அசைவ உணவுகளை நாம் பொதுவாகவே உண்ண கூடாது. அதிலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகும். எனவே நிச்சயம் அசைவம் தவிர்க்க வேண்டிய பண்டிகையாகும். 


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates