Trending

Monday 17 March 2014

கொங்கதேச பஞ்சாயத்து நிர்வாக மீட்பு


உள்ளூர் பஞ்சாயத்து முறை மிகவும் போற்றி பாதுகாத்து வரவேற்க பட வேண்டியதாகும். அதில்தான் இன்னும் தர்மம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கொங்கதேச கிராமங்களில் எவ்வளவோ சாதி சண்டைகளும், மத மோதல்களும் இந்த உள்ளூர் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்க/தவிர்க்க பட்டிருக்கிறது. விவாகரத்துக்கள் பேச்சுவார்த்தையால் தவிர்க்கப்பட்டு இன்று மெச்சும் அளவு வாழ்கிறார்கள். கோர்ட்டுக்கு சட்டமும் சாட்சியும் தான் தெரியும்; வக்கீலுக்கு கட்சிக்காரன் சொல்லே வேதவாக்கு (மிகச்சிலரை தவிர). உள்ளாட்சி பிரதிநிதிகளோ, ஓட்டுக்காக எப்படியும் தாழ்ந்து போகும்-எதையும் செய்யும் 'உத்தமராசாக்கள்'. இந்த லட்சணத்தில் சர்க்காரின் நிர்வாக அமைப்புக்கள் இருக்கும்போது, ஒரு கெட்ட சொல் வந்தால் தாங்காத தன்மானமுடைய கிராமத்தார்களை மக்கள் நம்புவதில் எந்த வியப்பும் இல்லை. வட மாநிலங்களில் பாராட்டும் வண்ணம் காப் பஞ்சாயத்து போன்ற உள்ளூர் அமைப்புக்கள் மாநில அளவில் அதிகாரத்தோடு சிறப்பாக செயல்படுகின்றன. சிற்சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் கோர்ட் போலிஸ் ஸ்டேசன் போன்ற இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களின் எண்ணிக்கையைவிட விரல் விட்டு எண்ணும் அளவுதான் எனலாம். கொங்கதேச பகுதிகளில் கோயில்களில் முதல் மரியாதை இதுபோன்ற ஊர்கவுண்டர்/கொத்துக்காரர்/நாட்டாமை போன்றவர்களுக்கு இருக்கும். அவர்கள் முறை தவறி நடந்துவிட்டால் அதற்கு மேல் அவர்கள் அந்த மரியாதைக்கு தகுதி இழந்துவிடுவார்கள். காலகாலமாக வரும் இந்த பதவிக்கு வருபவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி மற்றும் பயம் இருக்கும். இங்கு ஒழுக்கம் மற்றும் நியாயதிற்கே முதலிடம். மக்களை ஓட்டுக்களாக மட்டும் பார்த்து, ஐந்து வருடங்களில் ஓடிப்போவோரிடம் எதிர்பார்க்க முடியாது.



கிறித்தவ மதவிபசார, முற்போக்கு திருட்டு பசங்க சொல்வது போல பெண்களை புறக்கணிக்கவோ ஒரு மண்ணாங்கட்டியோ கிடையாது. கொங்கதேசத்தில் பல பெரிய வழக்குகளை பெண்கள் தீர்த்து வைத்த வரலாறு உண்டு. இன்றளவும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. கட்டிபாளயத்து ஆத்தா, பஞ்சாயத்து இன்றளவும் பேமஸ். பூந்துறை தெய்வானையம்மா இரு நாடுகளுக்கு உண்டான வழக்கையே தீர்த்தவர். இதுபோல இன்னும் எவ்வளவோ உதாரணம் சொல்லலாம். நம் பண்பாட்டு மரபில் இருந்து பெண்களை மட்டும் பிரித்தெடுக்கும் சூழ்ச்சியை தான் பெண்ணியம் என்ற லேபிளில் இந்த திருட்டு மாபியா செய்கிறது.

அரசு/அரசியல் சாரா உள்ளூர் நிர்வாக அமைப்புக்களை கண்டறிந்து வலுப்படுத்தி அதற்கு அதிகாரமளிக்க வேண்டியது அடுத்த தலைமுறையின் இன்றியமையா செயலாகும். பாரம்பரியம்/பண்பாடு போன்றவற்றை சிதைக்க கம்யுனிஸ்ட், திராவிடம், வெளிநாட்டு கிறிஸ்தவ மதவிபசார சக்திகள் முற்போக்கு என்னும் முகமூடியோடு தீவிரமாக அலையும் வேளையில் இவ்வாறான அமைப்புக்களை வலுபடுத்தி வைப்பது பின்வரும் சந்ததிகளுக்கு சொத்தாக அமையும்.

குறிப்பு: நாட்டாமை படம், வெறும் கற்பனை கதை அல்ல. நம் முன்னோர்களின் உண்மையான வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய படம். இதுபோன்ற நாட்டாமைகள் நம்மூர்களில் ஏராளமானோர் வாழ்ந்தனர். நம்மவர்கள் இன்றளவும் வளமோடு வாழ காரணம் நாம் கடைபிடித்த சத்திய நெறியே. அதனால் தான் நம் குடிபடைகள் நம்மை நம்பி கட்டுப்பட்டார்கள். நம் அதிகாரத்துக்கு பயந்து அல்ல.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates