Trending

Tuesday 25 March 2014

ஈரோடு பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி

ஈரோடு என்பது சேர (கொங்க) தேசத்தின் பிரிவுகளான 24 நாடுகளில் பூந்துறை நாட்டை சேர்ந்த காணியாகும். காடாய் கிடந்த சேர தேசத்தை, வேளாண்மை தொழில் செய்பவர்களும், வெள்ளத்தை (நீரினை) வழிப்படுத்தி பயன்படுத்துபவர்க்களுமான வெள்ளாளர் குடி மக்கள், சிறிது சிறிதாக திருத்தி வளப்படுத்தி நீர்நிலைகள் உருவாக்கி மக்கள் வாழ்வதற்கு உரிய ஊர் பகுதிகளாக மாற்றினர். அவ்வாறு இந்த ஈரோடு பகுதியில் வெட்டப்பட்ட பழமையான ஏரி பொய்யேரி யாகும். கோயில்கள், குளங்கள், விவசாய நிலங்கள், அணைகள் போன்ற இடங்களில் காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வருடந்தோறும் பலிகள் கொடுத்து பூஜைகள் செய்வது பழமையான மரபாகும். அவ்வாறு நிறுவப்பட்ட கோயில் தான் இந்த கருப்பண்ணசாமி கோயில்.


இந்த பகுதியே முதலில் ஏரியாக இருந்திருக்கிறது. ஆனால் பின்னாளில் சர்க்கார் இதை வாழ்விடமாக மாற்றி அதற்கு இந்த பகுதியின் பழமையான பேரை மறைத்து 'பெரியார் நகர' என்ற போலிபெயரை வைத்தனர். ஈரோட்டு மக்கள் பலரும், மாநகரின் இந்த பகுதி மற்றும் மாவட்டத்தின் பெயராக ஈவெரா வின் பெயரை வைத்ததை விரும்பாத போதும், திராவிட ஆட்சியாளர்கள இந்த பேரை திணித்தனர். 



இந்த கோயில் ஈரோடு மாநகரப்பகுதியில் மிகவும் பசுமையான பழமையான பகுதியாகும். இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் வெள்ளை வேலா மரம். ஐநூறு ஆண்டுகள் பழமையான கோயில். துரதிர்ஷ்ட வசமாக அறநிலையத்துறையின் பிடியில் இந்த கோயில் சிக்கிக்கொண்டுள்ளது.

தினமலர் கோயில்கள் பக்கம் தந்துள்ள செய்தி:

ஈரோடு நகரின் காவல் தெய்வமாக விளங்குவது பொய்யேரிக்கரை கருப்பண்ணசாமி. ஈரோடு பெரியார் நகரில் இவருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் உயரமான திட்டில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட ஈரோடு நகரம் மாபெரும் மன்னர்கள் கோட்டை கட்டி கொற்றம் செலுத்திய ஊர்.ஈரோடை ஆண்ட கலியுக மன்னர் காலத்தில் பெரிய ஏரி அமைத்து நீரை தேக்கி வைத்தனர். விவசாயிகள் மதகு வழியாக நீரை பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் வேளாளர்கள் ஏரியை பாதுகாக்க வேண்டி ஏரிக்கரையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், மகாமுனி மற்றும் பல மூர்த்திகளை ஏற்படுத்தி தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இந்த ஏரியானது பொய்யேரிக்கரை என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தல விருட்சமான வெள்ளை வேலாமரம் கருப்பண்ணசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு பின்னால் உயரமான திட்டில் இருக்கிறது.


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates