Trending

Friday 30 January 2015

திருக்குறள்-ஜாதி-வேதம்

வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார். அதோடு நற்குடியிலும் அரிதாக குடி ஒழுக்கத்துக்கு கேடாக நடப்பவரும் பிறப்பது இயல்பேன்பதையும் சுட்டுகிறார். 



குணமும் குடிமையும் குற்றமும் குன்றா 
இனனும் அறிந்தியாக்க நட்பு.
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.சாலமன் பாப்பையா
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.கலைஞர்
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.மு.வரதராசன்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.சாலமன் பாப்பையா
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.கலைஞர்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.மு.வரதராசன்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.சாலமன் பாப்பையா
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.கலைஞர்
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.மு.வரதராசன்
 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.கலைஞர்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.மு.வரதராசன்
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் 
இன்னான் எனப்படுஞ் சொல்
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.கலைஞர்
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.மு.வரதராசன்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.சாலமன் பாப்பையா
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.கலைஞர்
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நேக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.மு.வரதராசன் 
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசம் சொல் காட்டும்.சாலமன் பாப்பையா
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.கலைஞர்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.மு.வரதராசன்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.சாலமன் பாப்பையா
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.கலைஞர்
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.மு.வரதராசன்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.சாலமன் பாப்பையா
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.கலைஞர்
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்க்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.மு.வரதராசன்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.சாலமன் பாப்பையா
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.கலைஞர்
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.மு.வரதராசன் 
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்ததைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.சாலமன் பாப்பையா
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.கலைஞர்
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.மு.வரதராசன்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.சாலமன் பாப்பையா
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.கலைஞர்
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.மு.வரதராசன்


இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...


இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்




1 comment:

  1. சிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்

    சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;-
    நடையும் நடைப்பழக்கம்; நட்பும்
    தயையும் கொடையும் பிறவிக்குணம்.

    இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.

    நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
    தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
    குலத்தளவே ஆகுமாம் குணம்.

    இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.

    அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ

    அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
    நட்டாலும நண்பல்லர் நண்பல்லர்
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)

    (பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)

    ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
    ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
    நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து.

    (ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)


    http://tamizhamudam.blogspot.in/2009/01/blog-post_23.html

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates