Trending

Monday 15 June 2015

எரு அள்ளிக் கொட்டும் சடங்கு

கல்யாணம் முடிந்து மாப்பிளை வீடு வரும் ஜோடி, மாலை கூட கழட்டாமல் செய்யும் வேலை இது. மாப்பிள்ளை மாட்டு சாண எரு வெட்டிக் கொடுக்க, மணப்பெண் அதை கொண்டு சென்று காட்டில் கொட்டுவது. முதலில் பெண் பார்க்கும்போதே வீட்டு எருக்குவியல் வைத்துதான் அவர்கள் குடும்ப வளத்தையே குடியானவர்கள் தீர்மானிப்பார்கள். 


கல்யாணம் முடித்ததும் எரு வெட்டிக் கொட்டும் சீர். இவற்றை வைத்துப் பார்க்கையில் நம் முன்னோர்கள் எருவுக்கு எவ்வளவு மதிப்பளித்தார்கள் என்பது விளங்கும். வேளாள புராணத்திலும் நாட்டுப் பசு மற்றும் எருவுக்கு அவ்வளவு சிறப்பான முக்கித்துவம் மற்றும் விளக்கங்களை கொடுத்துள்ளார்கள். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் அனைத்திலும் பசுவின் சாணம் லட்சுமி அம்சம் என்றும் லட்சுமி அருளிய செல்வம் என்றும் சொல்கிறார்கள். இந்த சீர் செய்வதன் மூலம், வாழ்க்கையின் துவக்கமே லட்சுமி கடாட்சத்துடன் துவங்குவதாக அர்த்தம். 

இன்று இயற்கை வேளாண்மைக்கு பிரச்சாரம் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் இங்கே பாலேக்கர் முதல் நம்மாழ்வார் குழு வரை நாட்டுப் பசுவின் எருவெ தாரக மந்திரம். இதன்மூலம் நாம் அறியவேண்டியது நம் சீர் சடங்குகள் மூலம் நமக்கு நம் முன்னோர் கற்று தரும் பாடம், வெள்ளைக்காரர்கள் வியந்த நம் முன்னோர்களின் அறிவு மற்றும் விவசாயத்தின் நுட்பங்களின் நிபுணத்துவம். சும்மாவா சொன்னாங்க, "கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்" னு.

பின்னாளில் மெக்காலே கல்வி, திராவிட விஷமேல்லாம் பரவி புத்தி பேதலித்துப் போனதால் இம்மரபுகளை நம்மவர்கள் பிற்போக்குத்தனம் என்ற பேரால் ஒதுக்கிவிட்டனர். படத்தில் உள்ள மணப்பெண் காராளும் கன்ன கூட்டம். அந்த மஞ்ச பூசுன மாப்ளை பாரம் சுமந்த பண்ண கூட்டம் 





இந்த வழக்கம் எந்தெந்த ஊர்களில் நடைமுறையில் இருக்கிறது?? நடைமுறையில் இல்லாத ஊர்களில் மீண்டும் இந்த பெருமையும், அர்த்தமும் நிரம்பிய சீரை செய்யத் துவங்க வேண்டும்.


சித்ரமேழி தர்ம சபை 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates