Trending

Monday 15 June 2015

சங்க காலத்தில் ஆகம வழிபாடு



சமணத்தின் எழுச்சிக்கு பிறகுதான் ஆகமங்கள் சிறப்பு பெற்றது என்று சில அறிஞர்கள் எழுதுகிறார்கள். இது அடிப்படையில் தவறு.

காரணம் இறைவனின் லட்சணங்கள் ஆகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தட்சிணாமூர்த்தி லட்சணம் சிவாகமத்தில் மட்டுமே கூறப்படுகிறது.


"ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்" புறம்-198
இதில் தட்சிணாமூர்த்தி கூறப்பெறுகிறார்.




"ஆல்மர செல்வன் அணிசால் பெறுவிறல்" கலித்தொகை-87
இதில் தட்சிணாமூர்த்தி லட்சணம் கூறப்பெறுகிறது

"ஆல்மர் செலவற் கமார்ந்தனன் கொடுத்தாய்" சிறுபணாற்றுபடை-96,97
இதில் தட்சிணாமூர்த்தி கூறப்படுகிறார்



"தணிவுற்த தாங்கிய தனிநிறை சலதாரி(கங்கையை சூடியவன்) மணி மிடற்றணணல்"- பரிபாடல் 9 6/7
இந்த பாடலில் கங்கையை சூடிய வடிவம் கூறப்பெறுகிறது

"கொன்றை தாரன்"-புறம் 1

"செவ்வன் அன்ன மேனி"அகம்-1

இன்னும் இருக்கு, அத்துடன் புறநானூறில் வேதத்தின் ஆறு அங்கமும் கூறப்பெற்று இறை லட்சணம் கூறப்படும்.

ஆக சங்க காலத்தில் அதாவது சமணத்தின் எழுச்சிக்கு முன்பு இங்கு ஆகம வழியில் வழிபாடுகள் மிகவும் சிறப்புற்று இருந்தது என்பதை அறியலாம்.

- கோ-நாட்டான் விக்கிரம சோழன் 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates