Trending

Friday 17 July 2015

பேர் சூட்டுதல்


சமீபத்தில் சொந்தம் ஒருவர் குழந்தைக்குப் பெயர் சூட்டியிருந்தார். பெயர் தீனா என்றார். என்ன அர்த்தம் என்றேன். சினிமாக்களில் வருகிறதே, பலர் சுருக்கமாக வைத்துள்ளார்கள். அழகாக இருக்கு என்றார். தீனா என்றால் 'ஏழை' என்ற பொருளை எடுத்துக் காட்டினேன். முகம் மாறிவிட்டது. இறைவன் பெயர்களில் தீனதயாளன் என்றுண்டு, அதாவது ஏழைகளின் மீது தயாள குணம் காட்டுபவன் என்பதே பொருள். அதை வெட்டி இப்படி அநர்த்தம் பண்ணி வைத்துள்ளார்கள்.


கோவை நித்தி மாமா கூறியிருந்தார், நண்பர் மத்யா என்ற பேரை சூட்டி லலிதா சஹஸ்ரநாமத்தில், இருப்பதாக சொன்னாராம். உண்மையில் அது மித்த்யாஜகததிஷ்டானா என்கிற நாமமென்றும் அதற்கு பொய்யாக இருக்கும் ஜகத்தின் அதிஷ்டானமானவள் எனப் பொருள், அதாவது மத்யா என்றால் பொய் என அர்த்தம். சமஸ்கிருத அறிஞர் சங்கரநாராயணன் 'மேகனா என்று பேருக்கு சிறுநீர் கழிப்பது என அர்த்தம். பொருள் தெரிந்து பேர் வையுங்க, இல்லையேல் தமிழில் வையுங்க'.

Image result for kamakshi

இதுபோலவே ஸ்டைல் என்றும் நியூமராலஜி என்றும் செல்வத்தை அழிப்பவன், வம்சமில்லாதவன், நோய் விலகாதவன், நாட்டியக்காரி, பிறர் ஆசைகளை நிறைவேற்றுபவள், அழுக்கு நிறைந்தவன்.. போன்ற பொருள் கொண்ட பல பெயர்களை மக்கள் சூட்டிவிடுகிறார்கள்.

குழந்தைகளின் பேர் சூட்டுவதில் நாம் முட்டாள்தனம் மற்றும் அடிமைத்தனத்தின் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். என்ன, ஏது என்று எதுவும் வேண்டாம்.. ஜஸ், புஷ், ஜித்,பத் என்று பிரேக் அடிப்பதுபோல பேர் இருக்கணும். அதுக்கு பேர் ஸ்டைல். சூட்டப்படும் பெயர்கள் எப்போதும் காற்றை உள்ளே அடக்காமல் வெளிஎற்றும்படியாக இருக்கவேண்டும். தமிழில் விளிசொற்கள என்பார்கள். முருகா.. வேலா.. ராஜா..வேணி.. என்று இறுதியில் இழுக்கவேண்டும். புள்ளி கொண்ட சொற்களால் முடியும்போது காற்றை உள்ளே அழுத்தும். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல.

முன்னோர் பேரை வைப்பதால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் நம் மரபுத் தொடர்ச்சியைப் பின்பற்றி நிற்கிறோம். இன்றும் நகரத்தார், படேல மற்றும் பல முன்னேறிய மரியாதைமிக்க ஜாதிகள் இவ்வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். நமக்குதான் ஏனோ தாழ்வு மனப்பான்மை. கவுண்டர் என்ற பட்டதை போடுவதால் நம் முன்னோர் வழியில் மீண்டும் சேர்கிறோம். பல வெளிமாநிலத்தார்கள் அவரவர ஜாதி பெயர்களைப்போடும்போது நமக்கு மட்டும் ஏன் இந்த பயம்? சினிமாக்காரன் பேரை வைக்கும்போது பெருமை, பல ஊர்களை கட்டி ஆண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, பலரையும் வாழவைத்து, நமக்கு வழிகாட்டியாக, தெய்வமாக, நமக்காகவே வாழ்ந்த நம் முன்னோர் பேர் கசக்குமா?



சிலர் கருத்து ஜாதகப்படி நட்சத்திர எழுத்து பொருந்தாமையால் முன்னோர் பெயர் வைக்கவில்லை என்பது. இது கடந்த சில வருஷங்களாக நம்மிடம் திணிக்கப்பட்டிருக்கும் சூழ்ச்சி. சாஸ்திரப்படியே பார்த்தாலும் குழந்தை பிறந்து பதினாறாம் நாள் பெயர் வைக்க வேண்டும் (நாமகரணம்), ஆனால் ஜாதகம் ஒருவருஷம் பூர்த்தியான பின்பே எழுதப்படவேண்டும். ஜாதகமே எழுதாமல் எப்படி ஜாதகப்படி முன்னோர்கள் பேர் சூட்டியிருப்பார்கள்? ஸ்ரீராமனின் பேர்தான் இருப்பதிலேயே மிகவும் சக்திமிக்க பெயர். அந்த பெயரின் மகத்துவத்தாலேயே ஹனுமான் பல சக்திகளையும் செயற்கரிய காரியங்களையும் முடித்தார். ஆனால் ராமர் பிறந்தது புனர்பூச நட்சத்திரம், நட்சத்திர பெயர் எழுத்துக்கும் அவர் பேருக்கும் தொடர்பே இல்லை. பேரை சூட்டியவர் குலகுருவும் மகா ரிஷியும் ஆன வசிஷ்டர். அவர் தவறு செய்திருப்பாரா?

Image result for sri ramar birth

மேலும் நியூமராலஜி. சம்ஸ்கிருத கல்லூரி முதல்வரும், வேத சாஸ்திர பண்டிதருமான சேஷாத்ரி சுவாமிகள் சொல்கிறார் 'நியூமராலஜிக்கும் நம் பாரம்பரியத்துக்கும், வேதம் சாஸ்திரம் எதற்கும் எந்த தொடர்பும் இல்லை'. பேரால் நன்மை தீமை மாறும் என்றல அதன் ஒலி அமைப்பில் வேறுபாடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் ஸ்பெல்லிங் கேவலமாக தாறுமாறாக எழுதுவதால் என்ன மாற்றம் வரும்??




சரி நம் முன்னோர்கள் எப்படி பேர் சூட்டினார்கள்? தங்கள் முன்னோர் பெயரையோ, தங்களுக்கு பெரிய உதவிகள் செய்தவர்களின் நினைவாகவோ, குலதெய்வ பேரையோ, இஷ்ட தெய்வத்தின் பெயர்களையோ சூட்டினார்கள். நமசிவாயம், சென்னியப்பன், 'கந்த' 'ராம' 'கோவிந்த' உட்பட பல அற்புத மந்திர சக்திகள் நிறைந்த சொற்களோடு பெயர்கள். ஒவ்வொரு முறையும் அந்த பேர்களைச் சொல்லும்போது உடலிலும் மனதிலும் நன்றியுணர்வு, நுண்ணதிர்வுகள், ஆக்கபூர்வ எண்ணம், போன்றவை தோன்றும்.

குறைந்தபட்சம் சர்டிபிகேட்கு ஒரு பேர் நம் மரபுப்பேர் என்று ஒன்று வைத்து அதை சர்டிபிகேட் அல்லாத கோயில் அர்ச்சனை, பத்திரிகைகள் போன்றவற்றில் போட பயன்படுத்தலாம். உதாரணமாக கன்ன கூட்டத்தில் நல்லசாமி கவுண்டர், நல்லதம்பி கவுண்டர், அத்தப்பகவுண்டர் பேர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். செங்கன்ன கூட்டத்தில் சிதம்பர கவுண்டர், முழுக்காதன் கூட்டத்தில் அமராபதி கவுண்டர், சரவண கவுண்டர் போன்ற பேர்கள், சாகாடை கூட்டத்தில் வாரணவாசி கவுண்டர், பயிர கூட்டத்தில் விஸ்வராய கவுண்டர் பெரியண்ண கவுண்டர், ஈஞ்ச கூட்டத்தில் ரகுநாதசிங்க கவுண்டர், மங்கள கவுண்டர், மணியன் கூட்டத்தில் செல்வக்குமார கவுண்டர் செல்லமுத்து கவுண்டர் , குப்பண்ண கவுண்டர் போன்ற பேர்கள்.. குறைந்தபட்சம் நினைவில் அழியாமல் இருக்கும். வெளிநாட்டு கொங்கு உறவுகள், சர்நேம் பயன்படுத்தும் இடத்தில தந்தை பேருக்குப் பதில் கவுண்டர் பட்டதை பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய சொந்தம் ஒருவர் கூறினார். மகிழ்ச்சி. கவுண்டர் பட்டதை பிற சாதிகள் களவாடிவருகின்றன என்பது கூடுதல் தகவல்.

கன்ன கூட்டத்தின் ஆதி பாட்டன் கன்னிவாடி ஸ்ரீ நல்லதம்பி கவுண்டர் 
நாம் சமஸ்கிருதத்திற்கு விரோதிகள் இல்லை, ஆனால் நம்மிடம் இருப்பதில் ஏதேனும் குறை என்றால் மாற்றத்திற்கு போகலாம். அப்படியே புதிது வேண்டும் என்று மாற்றம் காண விரும்பினால் தவறில்லை. பொருள் தெரிந்து உச்சரிப்பு மாறாமல் நல்லெண்ணம் பக்தி பாசிடிவ் சக்தி போன்றவற்றிக்கு முக்கியத்துவம்கொடுது, பேரை தேவு செய்யுங்க.

இன்று தமிழ் கலாசாரம்னு மார்தட்டிக்கிற கலாசாரம் எல்லாம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வகுத்த வாழ்வியல் தான். அப்படி, உலகத்துல இருக்கறவன் எல்லாம் பார்த்து வாழும்படியா, வாழ்வாங்கு வாழ்ந்த நம்ம பாட்டன் பூட்டன் பேரை வைப்பதில் நமக்கென்ன கூச்சம், தாழ்வு மனப்பான்மை..?

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates