Trending

Monday 2 September 2013

கொங்கு நாட்டு ஐயனார் - நாட்ராயன்

கொங்கு நாட்டு ஐயனார் - நாட்ராயன் 


ஐயன்-ஐயப்பன்-ஐயனார்-சாஸ்தா  


நாட்ராயன்-சாத்தையன் (சாஸ்தா)

ஐயன் என்றும் ஐயனார் என்றும் குறிக்கப்படும் கிராம தெய்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் தெய்வமாக வணங்கபடுகிறார். இவரே மலையாள தேசத்தில் ஐயப்பனாக வணங்கப்படுகிறார். மலையாள தேசத்தின் எல்லையில் (மலைகளில்) காவலின் பொருட்டு அந்நாட்டு ஆன்மீக பெரியவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஏழு ஐயன்களில் ஒருவர் தான் சபரிமலை ஐயப்பனாவார். பாண்டிய தேசத்தின் பிரிவான பந்தல தேச இளவரசன் நினைவாக ஐயப்பனை குறிக்கபடுகிறார்.

பொதுவாக ஐயனார் தேச எல்லைகளை காப்பவர். கருப்பனார், முனியப்பன் போன்ற தெய்வங்கள் கிராம, காணி எல்லைகளை காப்பவர்கள். பிற்காலத்தில் தென் தமிழக பகுதிகளில் கிராம எல்லைகள் வரை ஐயனார் வழிபாடு விரிந்தது. சபரிமலை அய்யப்பனும் கிராம தெய்வமான அய்யனாரும் ஒருவர்தான் என்று பலர் சொன்னாலும் மறுப்பவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பூர்ணா புஷ்கலா தேவியருடன் ஐயனார் 


பல்வேறு தேசங்களில் வணங்கபட்டாலும் அய்யனாருக்கு ஒரே வரலாறுதான். அதாவது மகாவிஷ்ணு மோகினி வடிவெடுத்த போது, மோகினியின் மேல் காதல் கொண்டதால் அவதரித்தவர் ஐயனாராவார்.



பொதுவாக கொங்க தேசத்தில் ஐயனார் என்ற பெயரோடு கோவில் இல்லை. ஆனால் ஐயனார் வழிபாட்டை நம்மில் பெரும்பாலானோர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆம், முத்தூர் வள்ளியரச்சல் பகுதியில் இருக்கும் நாட்ராயனே நம் கொங்கதேசத்து ஐயனாராவார். அதோடு ஐயன் சிற்பங்கள் கோவில் தூண்களிலும் சில இடங்களில் தனிக்கோவில்களும் ஆங்காங்கே இருப்பதையும் காணலாம்.
(கொங்க தேசம்)ஈங்கூரில் கிடைத்த ஐயனார் சிலை 

கிராதகாதி சாதிகள் கொங்கதேசத்துக்குள் குறும்பு செய்த போது அவர்களை அடக்க சேர மன்னரால் காளஹஸ்தியில் இருந்து கொண்டுவந்து வேட்டுவர்கள் குடிவைக்கப்பட்டார்கள். பின்னாளில் அவர்கள் குறும்பு அதிகரிக்கவே வேளாள பெருமக்கள் துணையோடு சேர மன்னர் மாந்தரஞ்சேரல் வேட்டுவர்களையும் அவர்கள் துணைக்கு வந்த பாண்டிய படைகளையும் அடக்கி முடுக்கினர். அந்த வெற்றியின் நினைவாகவும், கொங்கதேச எல்லையை காக்கும் பொருட்டும் சாத்தன்-சாத்தையன் எனப்படும் நாட்டராயனை சேர மன்னர் பிரதிஷ்டை செய்தார். அக்கோவில் இன்றளவும் உள்ளது. இக்கோவில் உள்ள பகுதிக்கு சேர மன்னர் மாந்தபுரி என்று பெயரிட்டு, மாந்தீஸ்வரர் என்ற சிவாலயமும் தனது பெயரால் கட்டினார். நாட்ராயன் மிகவும் சக்தியுள்ள தெய்வம். பொருள் களவு, பேய் பிசாசு கறுப்பு சக்திகள், எதிரிகள் தொல்லை போன்றவற்றிற்கு மிக சிறந்த தீர்வை தரும். சைவ சாமி. அங்குள்ள மகாமுனிக்கே கெடா வெட்டு, பலி பூசைகள் எல்லாம். மகாமுனியை மலையாள தேசத்தில் இருந்து அழைத்து வந்து அடக்கினர் என்றும் ஆடி மாதம் மகாமுனி கோரிக்கைக்கு சொன்ன வாக்கு தவறாமல் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுவதும் உண்டு.  

திருடு, வழக்கு, தீய சக்திகள் பிரச்சனைகளுக்கு இக்கோவிலில் வழிபாட்டு வந்தால் தேர்வு கிடைக்கிறது என்பது ஆழமான-நூற்றாண்டுகள் கடந்து நிலவி வரும் உண்மை.

(நாட்ராயன் நாச்சிமுத்து என்போர் சகோதரர்கள் எனவும், யாருக்கும் அடங்கா மகாமுனியை கேரளத்தில் இருந்து அடக்கி கொண்டு வந்து வல்லியரச்சலில் குடி வைத்ததாகவும், அதற்கு பலி பூசைகள் ஆடி மாதம் தருவதாக வாக்களித்ததாகவும் சிலர் கூறுகிறார்கள்)
 
சென்னிமலை கோவில் தூணில் சாஸ்தா (அய்யன்)

எனவே நம் கொங்கு தேசத்து ஐயனார் கோவிலை போற்றி பாதுகாப்போம். ஐயனாரின் சிற்பம் புராதன கோவில் சிற்பங்கள்-தூண்கள் பலவற்றிலும் இருப்பதை காணலாம். ஐயனாரின் உருவம் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் இருப்பது போலவோ, சபரிமலை ஐயப்பனை போல அமர்ந்த நிலையிலோ இருக்கும். நாட்ராயன் கோவில் நிர்வாகிகள் நாட்ராயன் உருவ படத்தை திறமையான ஓவியர்களை கொண்டு வரைந்து கோவில் காணியாளர் அனைவர் வீட்டிலும் இடம்பெற செய்ய வேண்டும்.

சாஸ்தா - ஐயனார் முறையாக பிரதிஷ்டை பூசைகள் செய்யப்பட்டு வழிபடும் ஊர்களில் தர்மம் நிலைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு

 வள்ளியரச்சல் நாட்ராயன் நாட்டராயன் பில்லன் குலம் அழகுநாச்சியம்மன் *

4 comments:

  1. கேரளமல்ல...மலையாளம் என்கிறது சரித்திரம்
    http://natrayar.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. மாத்தியாச்சுங்கோவ்..

      Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates