Trending

Friday 6 September 2013

மொளசி அன்னத்தியாகி வேலப்ப கவுண்டர்



கொங்குநாட்டின் விருந்து உபசரிப்பும், கொடைத்தன்மையும் அனைவரும் அறிந்தது. அந்நாளில் கவிச்சக்ரவர்த்தி கம்பர் முதல் இந்நாளைய எழுத்தாளர் ஜெயமோகன் வரை கொங்கு மக்களின் இந்த மேன்மை குணத்தை பாராட்டாதவர் கிடையாது. அதற்கு ஒரு சரித்திர உதாரணம் இங்கு காண்போம்.

கீழ்க்கரை பூந்துறை நாடு (திருச்செங்கோடு வட்டாரம்) பகுதியின் கிளை நாடாக மொளசி இருந்தது. மொளசி நாட்டை மோரூர் காங்கேயரின் பங்காளி வகையினர் ஆண்டு வந்தனர். அவர்கள் மரபில் வேலப்ப கவுண்டர் என்னும் உத்தம சீலர் உதித்தார். நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்லாது உணவளிப்பதில் சிறந்தவர். விருந்தோம்பல் குணத்தால் அவரின் புகழ் எங்கும் பரவியது.

பாண்டிய மன்னர்களோடு நெருங்கிய தொடர்பில் கீழ்க்கரை பூந்துறை நாட்டு ஆட்சியாளர்கள் இருந்தனர். ஒருமுறை மதுரையில் கடும் பஞ்சம் ஏற்படவே பாண்டிய மன்னன் தன் படைகளுக்கும் உணவளிக்க முடியாது வருந்தி இருந்தான். வேலப்ப கவுண்டரின் கொடைதன்மையை அறிந்த அவர், தனது படையின் ஒரு பகுதியை கொங்கு நாட்டிற்கு அடைக்கலமாக அனுப்பி வைத்தான். பஞ்ச காலம் முடியும் வரை பாண்டியன் படையையே உணவிட்டு பாதுகாத்து தந்தார் வேலைப்ப கவுண்டர். பஞ்சம் தீர்ந்து மீண்டும் மதுரை செழிப்புற துவங்கியவுடன் மதுரை சென்ற வீரர்கள் பாண்டியனிடம் வேலப்ப கவுண்டரின் உபசரிப்பை கூற, அவர் அகமகிழ்ந்து 'அன்னத்தியாகி' என்னும் பட்டத்தை கொடுத்து சிறப்பித்தார். 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates